திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/061.அருள் நயனப் பத்து


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 61. நயனப் பத்து தொகு

இலக்கணம்:-

நயனம் என்பது கண். தலைவரின் கண்களின் அழகைச் சிறப்பித்துப் பாடும் பொருண்மையுடையது; பத்துப் பாடல்களாற் பாடப் பெறுவது நயனப் பத்தாம் என்க.

நாட்டந் தனைத்தசச் செய்யுளாற் கூறல்
நயனப் பத்தெனப்புகலு வர்
- பிரபந்த தீபிகை 23
பார்வையைப் பத்து பாட்டா லுரைப்பது
நயனப் பத்தென நவிலப் படுமே
- முத்துவீரியம் 1104
நயனப்பத்தே நாட்டம் இரண்டையும்
பத்துப் பாடலில் பகர்வர் பாவலரே
- பிரபந்ததீபம் 70
நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தர்க்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் 
- தொல்காப்பியம் பொருளதிகாரம் 93

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அருளடை படுத்த இரு திருவிழிகளின் அற்புதப் பேரழகுத் தன்மையைச் சிறப்பித்துப் பாடப் பெற்றது இந்த திருநயனப் பத்து என்னும் சிற்றிலக்கியம்.

அருள் நயனப் பத்து

காப்பு

கட்டளைக் கலித்துறை

அந்தாதித் தொடை

இமையோர் தலைவர்காண் ஈடிணை யில்மெய் வழித்தெய்வமே!
எமையோர் பொருளாய் அருளாலே ஏன்ற அறவாழியின்
இமையாத நாட்டம் இரண்டின் எழிலை விதந்தோதவே
அமரா பதியுங்கள் அம்புயத் தாள்மலர் காப்பாகுமே

நூல்

ஆகும் திருநெறிக் காக்கவந்தா ரிந்த அம்புவிமேல்
மாகயி லாயர் வரோதயர் ஏரார் திருவிழிகள்
மாகதி ஈவன செந்தா மரைமலர் போல்வனவாம்
சேகரர் சிந்தா குலம்தவிர் நோக்கம் திகழ்வனவே! (1)

வேதம் உருவெடுத் தேவந்த வேதியர் மென்விழிபூம்
போதிதழ் போல்வன மெல்லிமை பேரெழி லார்வனவாம்
மாதவர் நோக்கில் வல்வினை தீய்ந்திடும் வையகத்தீர்
கோதிலார் மெய்வழி தெய்வத் திருக்கண்கள் காண்மின்களே! (2)

காண்மின்க ளோர்நோக்கி னால்முப் புரமெரித் தார்கண்களை
பூண்மின்கள் பேர்வரம் பொன்னரங் கர்தயை பூதலத்தே
ஆண்மையர் நோக்கால் பிறவிப் பிணியே அறுந்திடுமால்
மாண்போங்கச் சன்னிதி முன்னே பணிந்து வணங்குமினே! (3)

வணங்குமின் வானவர் நோக்கத் திருமுன்னர் நின்றிடுமின்
குணங்குடி கொள்திருப் பார்வை எரிதழல் போல்வதுண்டு
இணங்குமுன் ஏறிட்டு நோக்கில் இருவினை ஏகிடுங்காண்
மணங்கமழ் செண்பக மேனிகொண் டார்மெய் வழிதெய்வமே! (4)

தெய்வம்ஓர் நோக்கினால் ஜீவர்கள் ஏழுல கும்தாண்டவே
செய்குவர் என்னில் அதன்திறம் என்னென்று செப்புவனே
வையக மாந்தரை வானவர் ஆக்கும் மலர்நயனத்(து)|r}}
ஐயரை நோக்குமின் நோக்கிற்கு ஆட்பட்டு வாழ்ந்துய்மினே! (5)

உய்ம்மின் குவளை மலரார் விழியழ குத்தமரைச்
செய்ம்மின் வணக்கம் திருமுன்னர் நின்றுகை யேந்துமினே
நைவழி நீக்கி நலந்தரு வார்உமை நோக்குவரேல்
செய்வழி காட்டியே சீர்தரு மெய்வழிக் காக்குவரே (6)

ஆக்கும் கயல்போன்ம் அழகிய நோக்கினர் ஆண்டவரின்
நோக்கம் உயிர்பால் படிந்திடில் ஏழேழ் பிறவிக்குமே
ஆக்கம் நிறையும் அதுவெண்ணி அம்புவி மாந்தர்களே
தூக்கமும் தொல்வினை யும்அறச் செய்மின் தரிசனமே (7)

தரிசித்த பேரும் திருநாமம் வாயிலெந் நேரமுமே
வருஷித்த பேர்கள் மறலிகை தீண்டாத வாழ்வுற்றனர்
பெருசித்தர் கோமான் திருநோக்கிற் காட்பட்ட-:பேர்களெல்லாம்
பெருசித்தர் ஆவர் பணிந்துய்ய வேண்டுவோர் வம்மின்களே (8)

வம்மின் வளர்கயி லாயமெய்ச் சாலைத் திருப்பதிக்கே
எம்மான் இரக்கம் எழிலார்ந்த நோக்கிற் கிணங்குமினே
பெம்மான் பெருந்துறை மேவு தடங்கண்கள் பார்வை பட்டோர்
தம்மா ருயிருய்யும் சர்வ வரங்களும் தாம்பெறுமே (9)

தாம்பெறும் தண்ணார் பொழில்மெய் வழிதெய்வச் சீர்வரமே
தீம்பறும் சீரார் தடங்கண்கள் பார்வைக்கு ஆட்பட்டபேர்
வான்பெறும் மெய்ம்மை வளம்பெறும் வைகுந்தர் மென்பதங்கள்
ஓம்புவர் உத்தமர் நித்தியர் மெய்வழி ஓங்கோங்கவே! (10)

அருள் நயனப் பத்து இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!