திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/101.அருள் வாதோரண மஞ்சரி
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 101.வாதோரண மஞ்சரி
தொகுஇலக்கணம்:-
யானையை வயப்படுத்தி அடக்கியவரையும், அன்றி யானையொடு போரிட்டு அவ்யானையை வெட்டி வீழ்த்தியவரையும் மற்றும் யானையைத் தன் பெருங்குரலால் அதட்டி அதன் வீரம் கெட்டொழியுமாறு அடக்கினவரையும் புகழும் பொருண்மையின் வஞ்சிப் பாவால் பாடுவது வாதோரண மஞ்சரி என்னும் இவ்விலக்கிய வகையாகும்.
யானைவயப் படுத்தி யடக்கின வருக்கும் எதிர்பொரு மியானையை யீர வெட்டி அடக்கின வருக்கு மதட்டிப் பிடித்துச் சேர்த்த வர்க்கும் வீரச் சிறப்பை வஞ்சியாற் பாடுவ ததுவா தோரண மஞ்சரி யெனப்பெயர் வைக்கப் படுமே - முத்து வீரியம் 1079
.....................வாதோரண மஞ்சரி வழுத்துங் காலை மதங்கொண்ட களிற்றை வயப்படுத் தினர்க்கும் எதிர்பொருது களிற்றை எறிந்தவர் தமக்கும் வீரப்பாட்டை வஞ்சியால் விளம்பல் - பிரபந்ததீபம் 50
ஐயறிவுடைய மிகு வலிமை கொண்ட யானையை வலிமையால் வெல்லல், அதட்டியடக்குதல், இசையால் மயக்குதல் எனும் வகையான் வென்றவரைப் போற்றிப் புகழ்தல் இவ்விலக்கியம். ஆயின் ஆறறிவுடலெடுத்து ஐயறிவுநுகர்ச்சியிலேயே கிடந்து பிறப்பு, இறப்பு என்னும் இருவினைகள், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலம், காமம், குரோதம, லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் அறுவகைத் தீக்குணங்கள், ஜாதி வெறி, மதவெறி, மொழிவெறி, இனவெறி என்னும் வெறிகளாகிய யானைகள்; மேலும், என்றும் எவராலும் எக்காலத்தும் வென்றடக்க முடியாத மிகுந்த வலிமையுடைய எமனென்னும் காட்டானை ஆகிய இவற்றை, எல்லாம் வல்ல முழுமுதற்பொருள் சர்வலோக ரட்சகர், ஜகத்குரு பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தங்களின் இரக்கம் அடைபடுத்துக் கிடக்கும் செவ்வரி படர்ந்த அழகிய இரு திருவிழிகளின் அருள் நோக்காலும் சர்க்கரைப் பந்தலில் தேன்மழைபொழிந்தது போலும் மறை தெளிவு நிறை மொழியெனும் விண்மாரி போலும் சொன்மாரி என்னும் திருவருள் அமுதவாக்காலும் இதுகாறும் எவரும் செய்தறியாத மகாதவோன்னத சர்வ சன்னதாலங்கிர்த பரமான்ம தெய்வ பலத்தாலும் தனிப்பெருங்கருணைத் தயவாலும் அடக்கி, நெறிப்படுத்தி, நரர்களை மனுவாக்கி மனிதர்களை தேவர்களாக்கி மகன்களாக ஏற்று மகான்களாக்கினார்கள், ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள், ஆக்குவார்கள்! இவ்விலக்கியம் வஞ்சிப்பாவானும் வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம் என்னும் அதன் இனத்தாலும் பாடப்பெற்றுள்ளது.
அருள் வாதோரண மஞ்சரி
காப்பு
ஒன்றிய வஞ்சித்தளையான் வந்த குறளடி வஞ்சிப்பா
உலகேஉய ஒருமெய்வழி
நலமேதரு உயிர்உய்வழி
இறையேஉம திருத்தாள்மலர்
நிறைவேதரு கதியானது
வேதாநினின் புகழ்பாடிடு
வாதோரண மெனுமஞ்சரி
தோதாகவே கவிபாடிட
நாதாதுணை தரவேண்டினன்
யாண்டும்
தெய்வமே உமதடி காப்பு
ஐயனின் பதமலர் சிரமணிந் தனனே
நூல்
ஒன்றிய வஞ்சித்தளையான் வந்த சிந்தடி வஞ்சிப்பா
வனந்தனிலுறை களிறதன்குல மதமடங்கிட
தினவுடைபுய வலியுடைமிகு திறமறவனும்
கொலைபுரிசிலை சரமதுவிட அதுவெருள்தலும்
நிலைகுலைந்திட கொடுபடையதான் எறிந்தடக்கலும்
யாழிசைகொடு மயக்கிடுதலும் கடும்ஒலிசெய
வாழ்கரியது வெருண்டங்கலும் இதுவகையின
கரிதனை
அடக்கிடு முறையது நடைபெறல்
இடமகல் உலகினில் திறமெனப் புகல்வர்
ஒன்றிய வஞ்சித்தளையான் வந்த குறளடி வஞ்சிப்பா
தேவுலகினில் அறமிளிர்ந்தது
பூவுலகினில் கலிமுதிர்ந்தது
பாவமென்பது பெருகிநின்றது
ஜீவநன்னெறி நலிந்திருந்தது
நாடு என்பது நலம்குலைந்தது
காடெனும்நிலை கடுகிவந்தது
மதவெறியெனும் கொலைநிலைகளும்
இதமிலாகுல பிரிவிடர்களும்
கொடும் எமனெனும் களிறதுமிகு
அடர்சினமொடு பிளிறுகின்றது
மதகரியது எதிர்வதுஎன
நிதமுலகினில் நிகழ்வுறுகிற(து)
இங்ஙனம்
புவனம் அமைதியுற் றாகிட
தவனெம் பெருமான் அவதரித் தருளினார்
ஒன்றிய வஞ்சித் தளையான் வந்த சிந்தடி வஞ்சிப்பா
ஐயறிவின களிறடக்குதல் திறமதுஎனின்
மெய்யறிவெனும் ஆறறிவுடை மனுவினமது
காமமும்பெருங் குரோதமுமத மெனும்குணங்களும்
தீமை மும்மல மிருவினைகளும் களிறென அவை
வாழ்வதிலுற மயக்குறுநிலை துயரடைந்திட
தாழ்வடைவதைத் தவிர்த்தவரசின் விடுதலைபெற
சாலைவந்துற இறைகுருபரர் அருள்வழங்கிட
சீலமிக்குயர் திருவிழியதன் ஒளிக்கதிர்திரு
வாய்அருள்மறை பொழிவதனருள் பெருகிவந்துற
தாய்மை மிக்குறு தண்ணளியதான் மனுவினமுயும்
மதம்பெரிதெம தெனும்கொடியவெம் மனமுடையவர்
இதம் கனிந்திட அருள்பொழிந்தவர் சமமனமுற
குலமுயர்ந்தவர் எனும்வெறியுறு குணமுடையவர்
நலமுணர்ந்தினம் ஒருங்கியைந்திட நிறைஅருள்தரும்
இறைதரிசன மதுவழங்கவும் இமையவரென
மறை தெளிவுற நிறைநிதியராய் உயர்மதியராய்
நிதம்புதியவர் பதம்பணிபவர் நிலைபெறுபவர்
இதமிகு நலம் சுவனவாழ்வுறும் என்றறிமினே
நன்றே
ஒன்றே குலமினி என்றும்
ஒன்றே இறைவனென் உலகில் நிலைக்கும்
ஒன்றாத வஞ்சித்தளையான் வந்த குறளடி வஞ்சிப்பா
கானகந்தனி லேயெழுந்தருள்
வானவர்புகழ் மாதவமுனி
பாதமேபிடி வாழ்வுறுங்குடி
நாதர்பொன்னடி தான்கதிபிடி
மெய்வழிமனு உய்வழியது
செய்வழியெனத் தேர்ந்துகொள்ளடி
நாடி
புகழும் திருவார் நெறியில்
மகிழ்வார் நித்திய வாழ்வில் வாழ்கவே
ஒன்றிய வஞ்சித்தளையான் வந்த சிந்தடி வஞ்சிப்பா
எமதிறை தரும் அருளமுதுண இருவினையறும்
எமபடர்பயம் இடர்துயர்கெடும் இனியவாழ்வுறும்
அழிவிலாப்பதி அதுநிலைபெறும் மதிதெளிவுறும்
வழியிதற்கெலாம் வளருமெய்வழி வழிப்படுவதே
அறுவகைப்பிழை அறவொழிந்திடு நெறிதனிலிரு
மறுபிறப்பது குருதிருமணி வயிறதனிலே
பிறப்புறில்
துறக்கமே திறக்குமே தரணியீர்
சிறக்கவே திருநெறி தனிலிணைந் துய்கவே.
ஏந்திசைத் தூங்கல் ஓசையான் வந்த குறளடி வஞ்சிப்பா
கூடன்பிறையணி குருஇறையாம்
வான்கொடைதவ முனிதிருவாய்
தான் வழங்கிடு அருள் அமிழ்தாய்
வான் கனிதரும் மரணமும்போம்
பணிமின்
மெய்வழி இறையடி போற்றி
வணங்குமின் சிரமேல் சூடுமின் மனனே
ஒன்றிய வஞ்சித்தளையான் வந்த சிந்தடி வஞ்சிப்பா
அருள்வான்புனல் அனைத்துயிர்களும் அகமகிழ்ந்திட
இருள்தான்கெட இனிதுயர்ந்திட இறப்பொழிந்திட
திருவோங்கிடும் உருவடைந்தது தரணியுய்ந்தது
மருள்மாய்ந்தது மறலிசெயிடர் மதமொழிந்தது
வரந்தருதிரு நிரந்தரம்தரும் வளமுயர்ந்தது
சிரந்தனிலணி திகழ்ந்திலங்கிட சிறப்புயர்ந்தது
உயர்நெறி
ஒருதனிமுதல் அருள்வழங்கிடும்
அருள்தர வான்பதம் விளைந்து
குருதிசை தொழஉயர் கதிசிறந்திடுமே'
வஞ்சித்துறை
நான்கெழுத்தடி அளவியற் சந்தம்
மெய்யார் ஐயர்
வையம் உய்யச்
செய்யும் நீதம்
துய்ய மார்க்கம்
ஐந்தெழுத்தடி அளவியற் சந்தம்
தெய்வ மெய்வழி
வையம் உய்வழி
ஐயன் சொல்மொழி
துய்யர் செல்வழி
ஆறெழுத்தடி அளவியற்சந்தம்
உலகில் ஆதியர்
அலகில் சோதியர்
நலங்கொள் நீதியர்
வலங்கொள் சேதியே
ஏழெழுத்தடி அளவியற்சந்தம்
தேவன் வந்து தோன்றினார்
ஜீவர் கண்டு போற்றினார்
நாவன் பாதம் ஏற்றினார்
சாவின் நின்று மீட்டனார்
எட்டெழுத்தடி அளவியற்சந்தம்
உலகில் பாவம் எங்குமே
கலகம் துன்பம் தங்குமே
அலகில் தெய்வம் வந்ததும்
நலங்கொள் இன்பம் பொங்குமே
ஒன்பதெழுத்தடி அளவியற்சந்தம்
நன்றே மெய்வழி நண்ணியதே
ஒன்றே குலமாய் ஆனதுவே
வென்றார் மறலி தன்னமலை
என்றும் உள்ளார் எமதிறையே
பத்தெழுத்தடி அளவியற் சந்தம்
எமனின் அமலை மிதித்தேறி
தமரின் உயிரைக் கடைத்தேற்றி
சமமே குலமும் மதமென்னும்
இமையவர் தெய்வம் எமதையர்
வஞ்சி நிலைத்துறை
கற்றுளோம் எனுமாந்தர்
கற்றிலாப் பெருகதியே
பெற்றுளோம் எனும்பேரும்
பெற்றிலாப் பெரும் பொருளே
கண்டுளோம் எனுமெளியர்
காண்கிலாக் கலைநிதியே
விண்டிடும் எனுமவரால்
விண்டிடா வியன்கலையே
வஞ்சி நிலைத் தாழிசை (குறளடி)
வருமறலி செயுமிடரை
அருள் திருநோக் ககல்விக்கும்
குருவடிவம் பெருங்கருணை
திருவுயரப் பதம் பிடிமின்
கொடுமறலி இடர்தவிர
திடமுயர்மெய் வழியிறைவர்
தடகமலப் பதமலர்கள்
படிமிசை வான் பரிசறிமின்
மறலியமல் மடிந்தோட
அறஞ்செயுமோர் திருவுருவம்
அறவாழி குருநாதா
மறைபுகழும் பதம் கதிகாண்
ஒரு பொருண்மேல் மூன்றாய் அடிமறி ஆகாதே வந்த குறளடி வஞ்சி நிலைத்தாழிசை வஞ்சி நிலை விருத்தம்
தேனார் சாலைத் தேம்பொழில்
வானோர் கூடும் சீர்பதி
கோனார் தெய்வத் தாள்மலர்
ஆனோர் எய்தும் வான்கதி
சிந்தடி நான்காய் அடிமறி ஆகாதே வந்தது
வஞ்சிமண்டில விருத்தம்
உய்யப் பற்றுமின் மெய்வழி
தெய்வ நற்பதி மெய்வழி
வையம் உய்வழி மெய்வழி
மெய்யர் சார்நெறி மெய்வழி