திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/007.அண்ணல் அலங்கார பஞ்சகம்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



7. அலங்கார பஞ்சகம் தொகு

ஆதியே துணை

இலக்கணம்:-

மலர் பல கொண்டு மாலை மிடையும் கைவன்மைமிக்க காரிகையொருத்தி நிறத்தானும், மணத்தானும் வேறுபட்ட நல்லினப் பூக்களைத்திரட்டி கவின்மிகு கதம்பமாலை தொடுத்தல் போலும் ஐந்து வெவ்வேறு யாப்புகளைக் கொண்டு முறைமை வகுத்து அலங்காரமாகப் பாடப்பெறுவது அலங்கார பஞ்சகம் எனப்பெறும்.

வெண்பா, கலித்துறை, ஆசிரியம், ஆசிரிய விருத்தம், வண்ணம் (சந்தவிருத்தம்) ஆகிய இந்த ஐந்து யாப்புகளும் முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருமாறு பாடப்பெறுவது அலங்கார பஞ்சகம் எனலாகும்.

ஆதிப்பாக் கலித்துறை ஆசிரியம் வஞ்சி
மனவிருத்தத்தோடு வண்ணம் இசையஈர்
ஐந்தின் அலங்காரத் தந்தாதித்துப்
பாடுவது அலங்காரப் பஞ்சக மென்ப
- பிரபந்த மரபியல்  - 11
அத்தகு ஆசிரிய விருத்தங் கலித்துறை
யகவல் சந்த விருத்தம்
ஆம் வெள்ளையுமாறி யந்தாதி செயுனூ
றலங்கார பஞ்சகம்மே
- பிரபந்த தீபிகை 24
எத்திறத்தும் இனம்பாவினம் மாறியைம்பான் கவிதை
இயம்புவதே அலங்கார பஞ்சக மாமென் றாரே 
- சுவாமி நாதம் 168

என்னை ஆண்டுகொண்ட குருபரர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் புகழைப் பலபட விதந்தோது முகத்தான் இஃது இயற்றப்பெற்றதாமென்க.

அண்ணல் அலங்கார பஞ்சகம்

காப்பு

கட்டளைக் கலித்துறை

நலங்கோடு கண்ட நாயகர் நன்மார்க்க ராஜரிஷி
கலங்காத ஏமன் கலங்கத் தமர்க்கருள் பாலித்தனர்
அலங்கார பஞ்சகத் தாலே புகழ்ந்தேத்தும் ஆவலினேன்
இலங்கார் எழில்பதம் என்றும் துணைதரும் காப்பெமக்கே.

நூல்

நேரிசை வெண்பா

இருட்கோள மாயன் றிருந்தார் இறைவர்
அருட்கோல மானார் தவமெய்க் - குருக்கோலம்
கொண்டகுறி மெய்வரங்கள் தந்தருளும் மெய்மாட்சி
விண்டுரைக்க வல்லார் எவர்? (1)

கட்டளைக் கலித்துறை

எவரா லும்மிய லாமெய்த் திறமே மிகவுடையார்
தவமே ரிவர்கள் தயவால் வினைதீர்ந் துயிருய்ந்தோம்
சிவமே பொருளாய் திருநீ றணிவித் தருள்செய்தார்
நவநீ தரெனும் நலமார் துணையே நன்னிலமே! (2)

நேரிசைஆசிரியப்பா

நிலத்திற் கணியாம் நெல்கரும் பென்பர்
குலத்திற் கணிநற் குலமகள் அரசி
நலத்திற் கணியது வல்பிணி யின்மை
பலத்திற் கணிபிறன் மனைநோக் காமை
தலத்திற் கணிஇறை தானெழுந் தருளல்
வலத்திற் கணிபிறர் தமைமதித் தொழுகல்
கலைகற் றற்கணி கற்றுணர்ந் தடங்கல்
குலகுரு வுக்கணி கூற்றைவெல் ஆற்றல்
வலமிகு தவத்திற் கணிதான்
இலகெழில் சன்னதம் ஏற்றலென் றறிமினே! (3)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறிவறம் அன்பு யாவும்
அழகிய உருவ மேற்று
வெறிமிகு கலியை மாய்த்து
மெய்யுகம் உற்பவித்து
நெறியினில் உலகென் றென்றும்
நீதமாய் நிலவ வேண்டி
செறிதரு பிரம்மம் இந்தச்
செகமுற்றார் அறிமின் மன்னோ!
(4)

எண்சீர்ச் சந்த (வண்ண) விருத்தம்

அறிவென்றது குருவென்றறி அன்பென்பது சிவமே!
அழகென்பது குருசன்னிதி தனில்தீங்கற நிற்றல்
நெறியென்பது அழியாநிலை உயிர்வாழ்வுறு வழியே
நீதம்மது வேதன்துறை நன்றேபணிந் திருத்தல்
குறியென்பது கோள்வென்றிடல் கருவிக்குலம் யாவும்
குறைவில்நெறி படிந்தேயுறல் குருகொண்டலின்துணையால்
வெறிகொண்டலை யாதீர்இறை மேல்மிக்குயர் அன்பு
மிகவைம்மினே மெய்யாம்வழி தனிலுய்ந்திடு வீரே!
(5)

நேரிசை வெண்பா

வீரம் மிகுந்த மெய்யலங்கா ரர்பதியைச்
சாரும் உயிர்உய்யும் சற்சனராய்ப் - பாருலகீர்
தன்னையறிந் தின்பமுறு சான்றோர் அனந்தர்பதி
பொன்னரங்கர் சாலை இது. (6)

கட்டளைக் கலித்துறை

இதமிக்(கு) உயிர்க்கே அணியாய் இலங்கும் எம்பெருமான்
பதமே கதிகாண் பரமர் உழவர் உயிர்ப்பயிர்செய்
நிதமே புதியர் நித்யம் வழங்கும் நவநீதர்
அதம்செய் தவலக் கலிதீர் அரசைப் பணிமின்களே! (7)

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பணிந்தவர் பவமே கடந்திட அருள்செய்
பற்றலர் பதமலர் சிரமேல்
அணிந்தவர் என்றும் அழிவிலா நிதியை
அகந்தனில் அலங்கரித் துய்யும்
மணிமதி வாணர் மெய்வழி தெய்வம்
மக்களை அழகொளிர் வடிவாய்
அணிந்திடப் பாகை பஞ்சகச் சமிடை
கச்சணிவித் தருள் கனிந்தார்
(8)

நேரிசை ஆசிரியப்பா

கனிவொடு இரக்கம் கண்ணினுக் கணியாம்
முனிவிலாப் பொறுமை மூதுரை மாந்தர்க்(கு)
இனிநல் அணியாய் இலங்கிடும் கேண்மின்
நனியுயர் நற்சொல் நாவினுக் கணியாம்
பணிவொடு இன்சொல் பாரகர்க் கினிய
அணியென ஆன்றோர் வகுத்தனர் காண்மின்
தனிமுதல் இறைவர் தருமறை வேதம்
நனிபடித் திடக்கேட் டிடல்செவிக் கணியாம்
ஞானேந் திரியம்கண் செவிவாய்
வானோர் நெறிபடிந் திடஇனிதார்க்கும் (9)

கலித்தாழிசை

ஆர்க்கும்அழ கணிபூணுநூல்
அனந்தாதியர் பூணும்
அறமேஇனி துளமார்ந்திட
அவர்நீதியர் காணும்
கார்க்கும்தீ கைகொண்டவர்
கர்த்தாதியர் தெய்வம்
கமலம்மலர்க் கண்கள்உயர்
கருணையது பூணும்
(10)
சீர்கொள்திரு மலர்வாயது
செம்பாகினை விஞ்சும்
திருவார்மறை மணி வாக்கியம்
சீரோங்கிட அணியும்
நேர்கொள்உயர் குணவானெனும்
அனந்தாதியர் எல்லாம்
நாதாந்தர்மெய் வழிஆண்டவர்
பதமேசிரம் அணியும்
(11)

நேரிசை வெண்பா

புனைந்தார்பொற் றாள்மலரைத் தம்சிரமேல் நன்றே
நனைந்தார் அருள்மாரி தன்னில் - அனைத்துமாய்
நின்றிலங்கும் நிர்மலரின் செஞ்சொலணி நெஞ்சினர்கள்
என்றும் நிலைப்பர் இனிது. (12)

கட்டளைக் கலித்துறை

இனிய உயிர்க்குத் துணையாய் அணியாய் இலங்குமிறை
தனிமெய் உலகம் தனில்வந் தணைவோர்க் கருள்செய்து
கனிபே ரின்ப நலவாழ் வளிக்கும் கருணைநிதி
தனிப்பெரு மெய்யாம் வழியுயிர் உய்ந்தனர் ஆருயிரே! (13)

நேரிசை ஆசிரியப்பா

உயிருக்(கு) அணியாய் உவந்த இறைக்கு
இயல்மெய் அனந்தா தியர்கள் இனிதே
தயவே வடிவர் திருவார் சிரத்தில்
நயமார் நவரத் னமிழை பொன்னார்
மகுடம் சூட்டி மணியார் மிடற்றில்
தகும்பொற் காரை முத்தா ரங்கள்
மகர கண்டிகை மணிமா லைகளும்
திகழும் இடையில் ஊப்பாஸ்தங்கக்
கச்சும் இலங்கும் எழிலாய்
மெச்சு பதியர் மெய்யாண் டவர்க்கே! (14)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆண்டவர்கள் அருளார்ந்த திருக்க ரங்கட்(கு)
அழகாரும் பொற்கடகம் அணிவித் தார்கள்
வேண்டுவார் நன்கருளும் திருவி ரல்கட்(கு)
மிக்கெழிலார் உங்கரங்கள் பூட்டி னார்கள்
ஈண்டினிது மண்படிந்து உலவும் பொற்றாள்
இணைகட்குப் பொற்காரை அணிவித் தார்கள்
தாண்டவர்க்குப் பொற்சிலம்பும் பூட்டினார்கள்
தாள்மலர்கள் சிரம்படியப் பணிந்தார் மன்னோ
(15)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

பணிவார்கள் இறைமுன்னர் வரம்யாவும் பெற்று
பரபோக சுகம்மேவ பார்மீது வாழ்வர்
அணிவார்கள் இறைதாள்கள் சிரமீ தனந்தர்
அருட்செல்வம் பொருட்செல்வம் அனைத்தும் பெற்றுய்வர்
மணிவாணி மன்னாதி மன்னர்எம் தெய்வம்
மகிதலத்து உயிர்க்கெல்லாம் அணியாவும் பூட்டும்
கணித்தற்கு அரியார்தம் கழலார விந்தம்
கதியாகும் உயர்சாலைப் பதிமேவி வாழ்வீர்!
(16)

நேரிசை வெண்பா

வாழ்வாங்கு வாழ வரமருள் வள்ளல்முன்
தாழ்ந்து பணிந்தோர் தளர்வுறார் - ஆழ்ந்து
பத்திசெய் தோர்கள் பரமாம் பதமடைந்து
முத்திவீ டெய்தும் மகிழ்ந்து. (17)

கட்டளைக் கலித்துறை

மகிழ்ந்து வழிபட்டு வாழ்த்திமெய் தெய்வத் திருவடிகள்
நெகிழ்ந்து சீரோமகு டம்மெனத் தாமணிந் தோர்கள்என்றும்
இகழ்வுறார் ஏமனின் கைப்படார் சீர்உல கெய்திடு வார்
புகழ்ந்தினி தேற்றுதல் ஒன்றே நாமும் புரிசெயலே! (18)

நேரிசை ஆசிரியப்பா

செயலொன் றேயினிச் செய்வது தெய்வம்
அயலென் றெண்ணா அனன்யச் சிந்தை
நம்முயிர் தெய்வம் நாமதன் நிழலே
செம்மை நெறிமெய் வழியென் றறிமின்
ஓயா வணக்கம் உளம்மிக் கிணக்கம்
மாயா நான்கும் வயங்கிடப் பெறுதல்
தூய சிந்தையும் தோத்திரம் செய்தலும்
ஆயநற் றிருப்பணி ஆற்றல் சுகோதயம்
தயவினுக் காட்படல் தாமே
நயமிக நல்லுல கெய்திடத் துணையே! (19)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

துணைகொண்டே நெடுவழியிற் செல்க என்று
செல்வழியின் முறையுரைத்தார் ஆன்றோர் அன்று
இணந்தேசற் குருகொண்டல் துணைகொண் டேகல்
இனியதொரு ஜீவப்பிர யாணம் செய்தல்
புணைகொண்டு பெருங்கடலைக் கடத்தல் போலும்
பிறவியதன் கடல்கடக்கும் துணைபொற் றாள்கள்
அணையாத பெருஞ்சோதி ஒளிரும் மாட்சி
அகம்கனிந்து நலம்பெறவே இறைபால் அன்பே
(20)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

அன்பால லங்கிர்தம் செய்வார்கள் எம்மான்
அருள்மாட்சிக் கிணையில்லை அகிலத்தி லெங்கும்
தன்பால்வந் தோர்க்கெல்லாம் தருவார்கள் வரமே!
சாகாத தலையோடு வேகாத காலாம்
இன்பாலு லகத்தோர்க்(கு) இறவாமெய் வரமும்
ஈகின்ற வான்வள்ளல் எம்சாலை ஐயர்
பொன்போற் பொதிந்தெம்மைக் காத்தாளும் அம்மை!
புகழ்பாடிப் போற்றுவோர்க் கென்றுமே செம்மை!
(21)

அந்தாதித் தொடை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தமிழமுதம் பொங்கிவளர் தண்டமிழ்நா
டதில்புதுமைக் கோட்டை சார்ந்த
கமழ்மலரார் ஊறல்மலைக் கனிகுலுங்குத்
யோவனமெய்ச் சாலை நாட்டில்
சமரசமெய் வேதநெறி தழைத்தோங்க
தவஞானச் செங்கோ லோச்சும்
இமையவர்கோன் எம்சாலை ஆண்டவர்கள்
எழில்மலரார் இருதாள் போற்றி
(22)

போற்றிமல ரடிபணிந்த பூதலத்தோர்
மேதலத்தோர் ஆகி உய்ய
ஏற்றுஎம படர்கடத்தி இனிப்பிறவா
நெறிதுலங்க இன்பம் ஓங்க
மாற்றறியாப் பொன்மேனி மாதவர்மெய்ச்
சாலையண்ணல் வரங்கள் ஈந்து
ஆற்றிடுமெய்த் திருவாட்சி அனந்தர்குலம்
புரந்தருளும் அருட்தாள் போற்றி
(23)

அருட்கொடைவான் அமுதருள்மெய் வழிச்சாலை
ஆண்டவர்கள் தயவால் ஞாலம்
இருட்கெடமெய் ஞானஒளி எழில்விரிக்க
இறைமாட்சி இனிது ஓங்க
திருக்கிளரும் மதம்சாதி வெறியொழியும்
சமரசமே எங்கும் என்றும்
பெருக்கமுறப் புரியெங்கோன் பொன்மலரார்
திருவடிகள் போற்றி! போற்றி!
(24)

திருவடிகள் மண்படியத் திருநடனம்
பயின்றெமையாள் தேவ தேவே!
குருவடிவ முற்றிந்தக் குவலயமே
கடைத்தேறக் கோதில் ஞான
அருளமுத மழைபொழிய அனந்தர்குடி
தழைத்தோங்க அருள்செய் அன்னாய்
பெருகொளிசேர் பெருந்தவமே! பெம்மானே!
பொற்பதும மலர்த்தாள் போற்றி!
(25)

மலரடிகள் சிரமணிந்து வான்புகழை
விதந்தோதும் மறுவில் மெய்யர்
குலமுழுதும் கடைத்தேறக் குலமொன்றே
இறையொன்றே என்ற நீதம்
உலகமெலாம் பரவிடச்செய் ஒருபணிக்கே
ஆளாக உவந்தோம் தேவே
நலமருள்வீர் நாவிலுரை வளமருள்வீர்
நற்றாள்கள் போற்றி! போற்றி!
(26)

அண்ணல் அலங்கார பஞ்சகம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!