திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/027.திரு ஒலியந்தாதி


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



27. ஒலியந்தாதி

தொகு

இலக்கணம்:-

அந்தாதி என்பது முன்னின்ற செய்யுளின் ஈற்றில் வரும் எழுத்தோ சீரோ அடுத்த பாடலின் தொடக்கமாக அமையுமாறு பாடுவது. ஓசை நயமுடைய பாடல்கள் அந்தாதித் தொடை நலத்துடன் வரப் பாடப்பெறும் இலக்கிய வகை இஃது.

தத்தம் இனத்தில் ஒப்புமுறை பிறழாது
நாலடி ஈரெண் கலையொரு முப்பது
கோலிய தொலியந்தாதி ஆகும். 
- பன்னிரு பாட்டியல்  -159
ஈண்டிய முப்பதாய் ஈரெண்கலைவண்ணம்
மூண்டது ஒலியந்தாதி முப்பதாம்
- வெண்பாப் பாட்டியல்  - 35

வகுப்பின் ஈரெண் வண்ணச் செய்யுளுள்
ஓங்கிய முப்பான் ஒலியந்தாதி 
- பிரபந்த மரபியல் 8
மூவெட்டி ரண்டெழுத்தாய் முற்றடிநான் காஞ்சந்தப்
பாவதன்மீத் தாண்டகமுப் பானாக - மேவலொலி
யந்தாதி யொன்றுக்கொன் றார்வியப்பாப் பாடிதுவு
மந்தாதியிற் பிறிவே யாம் 
- பிரபந்த திரட்டு  - 75

ஒலியந்தாதி என்னும் பாவகை திருப்புகழ்ச் சந்தத்தில் அந்தாதித் தொடையில் இயற்றப் பெறுவது. ஒரு சந்தக் குழிப்புக்கு 8 பாகம்; ஒரு பாகத்திற்கு 8 பாசுரங்கள். ஒரு சந்தக் குழிப்பு மூவடியாக விளங்கினால் 192 வரிகளும் ஈரடியாக விளங்கினால் 128 வரிகளும் இயற்றப் பெறல் வேண்டும். இஃது எம்பெருமான் மெய்வழி சாலை ஆண்டவர்களைப் புகழுமுகத்தான் இயற்றப்பெற்றது.

திரு ஒலியந்தாதி

காப்பு

நேரிசை வெண்பா

ஒலியதுவும் ஓசையதும் ஆனீரே! நாத
ஒலியால் உலகுபுரந் தாளும் - ஒலியந்த
ஆதி பனுவல் அதுயியற்றச் சொல்பொருளும்
நீதசந்த மும்அருள்க வே!

நூல்

சந்தக்குழிப்பு 1

தான தந்தன தானா தனானன
தான தந்தன தானா தனானன
தான தந்தன தானா தனானன தனனான

ஆதி யந்தமும் ஆனீர்! நமோநம!

ஆக மம்மறை ஆனீர் நமோ நம!
ஆரு யிர்க்குயிர் ஆனீர்! நமோ நம! அருளாளா! (1)

ஆர னந்தர்தம் கோவே! நமோ நம!
ஆமனு எனும் ஆசீர்! நமோ நம!
ஆர்பு விதனில் போந்தீர்! நமோ நம! அறவாழி! (2)

ஆல முண்டவர் நீரே! நமோ நம!
ஆதி நாயகர் நீரே! நமோ நம!
ஆண்ட ருள்புரி வேந்தே! நமோ நம! அமலேசா! (3)

ஆடும் பொன்மலர்ப் பாதா! நமோ நம!
ஆரணக் கிளி நீரே! நமோ நம!
ஆகமக் குயில் நீரே! நமோ நம! அயில்வேலோய்! (4)

ஆசீர் பாதம் அருள்வீர்! நமோ நம!
ஆழி சூழ்புவி போந்தீர்! நமோ நம!
ஆரு மெய்வழி தந்தீர்! நமோ நம! அருள்மேரே! (5)

ஆன்ற மெய்ம்மண ஞானா! நமோ நம!
ஆன நன்கண நாதா! நமோ நம!
ஆறு சீர்முகத் தோனே! நமோ நம! அமரேசா! (6)

ஆழி கைத்தரித் தாண்டீர்! நமோ நம!
ஆவி னம்மறி மேய்த்தீர்! நமோ நம!
ஆகும் செய்வழி காட்டும் நமோ நம! அடலேறே! (7)

ஆய்க லைகளின் தாயே! நமோ நம!
ஆர் பராபரை நீரே! நமோ நம!
ஆதி யாம்மகம் மாயி! நமோ நம! குருநாதா! (8)

2. நீதி யும்நிலை யும்நீர்! நமோ நம!

நித்யதத்துவ மானீர்! நமோ நம!
நின்னைத் தந்தெனைக் கொண்டீர்! நமோ நம! நிலையோனே! (1)

நீடு லகினில் நீன்மெய் வழிதரு
நேர்நி கரிலா நாதா! நமோ நம!
நிர்ம லசொரூபா! நமோ நம! நிஜமோன! (2)

நீள்வ ரந்தரு நாதா! நமோ நம!
நேச நாயக தேவே! நமோ நம!
நீள்கொ டைக்கர வள்ளால்! நமோ நம! நலவாழ்வே! (3)

நீச வெங்கலி வென்றீர்! நமோ நம!
நெடுந்து யர்தவிர்த் தீரே! நமோ நம!
நீணெ றிக்கொரு நேசா! நமோ நம! நிறைசீரே! (4)

நெடுவழித்துணை நீரே! நமோ நம!
நெஞ்சம் அஞ்சிடேல் என்றீர்! நமோ நம!
நினைவில் என்றும்நி லைத்தீர் நமோ நம! நடராஜா! (5)

நீலி மாய்கையை வென்றீர்! நமோ நம!
நல்ய தார்த்தத்தில் நிற்பீர்! நமோ நம!
நித்தி யப்பெரும் செல்வம் நமோ நம! நவநீதா! (6)

நீறு பூசுநு தலோய்! நமோ நம!
நிற்கு ணாகர வள்ளால்! நமோ நம!
நேமி யர்எனும் தேவே! நமோ நம! பரமேசா! (7)

நீதி மெய்வழி தந்தீர்! நமோ நம!
நின்னுள் நானுளன் என்றீர்! நமோ நம!
நேர் மைக் காதர வானீர்! நமோ நம! பெருமாளே! (8)

3. பாத பங்கயம் தந்தீர்! நமோ நம!

பாப கன்மங்கள் தீர்த்தீர்! நமோ நம!
பரசுகந்தரு தேவே! நமோ நம! பதிநீரே! (1)

பாழ்கலித் துயர் தீர்த்தீர்! நமோ நம!
பண்டை வேதியர் நீரே! நமோ நம!
பரமரே உருவானீர்! நமோ நம! பசுவேசா! (2)

பாடெ லாம்தமர் ஏற்றீர்! நமோ நம!
பலனெ லாம்எமக் கீந்நீர்! நமோ நம!
பண்பெ லாம்திகழ் ரூபா! நமோ நம! பகவானே! (3)

பாகு தேன்மொழி நாதா! நமோ நம!
பைந்த மிழ்ச்சுவை நீரே! நமோ நம!
பணிப வர்க்கணி ஆனீர்! நமோ நம! பரந்தாமா! (4)

பாட லும் பொரு ளும்நீர்! நமோ நம!
பண்ணி சைச்சுகம் நீரே! நமோ நம!
பங்ங மானிதம் தந்தீர்! நமோ நம! பரஞ்சோதி! (5)

பாரெ லாம்உய்ய வந்தீர்! நமோ நம!
பன்னெ டுங்காலம் கண்டீர்! நமோ நம!
பாட்டி னுக்கிசை யானீர்! நமோ நம! பகலோனே! (6)

பாது காத்தருள் பாலிக்கும் தெய்வமே!
படைத்தல் நீக்கலும் நீரே! நமோ நம!
பணிப வர்க்கணி ஆனீர்! நமோ நம! பொருள்நீரே! (7)
பார தத்தின்நற் பாக்யம்! நமோ நம!
பொற்ற மிழ்ப்பெரும் பேறே! நமோ நம!
பழமை யாம்புது மைநீர்! நமோ நம! பணிந்தேனே! (8)

4. சீத னம்தரு செல்வா! நமோ நம!

சிந்தை யில்நிறை இன்பம்! நமோ நம!
செப்ப ருந்தவத் தரசே! நமோ நம! திகழ்மேரே! (1)

சீரெ லாம்நிறை செல்வம் வழங்கினீர்!
தெய்வ நாயகத் தேவே! நமோ நம!
திருவெலாம் தரு துரையே! நமோ நம! திருவாளா! (2)

சீலம் கொண்டறி சிவமே! நமோ நம!
சேதமில்தவம் செய்தீர்! நமோ நம!
தென்னன் பாண்டியர் நீரே! நமோ நம! ஜெயகண்டி! (3)

சீரெலாம் திகழ் திருவே! நமோ நம!
சேவித் தோருயிர் காப்பீர்! நமோ நம!
சேவ டிதந்து ஆள்வீர்! நமோ நம! திருநீரே! (4)

சீரக த்தினில் திகழ்வீர்! நமோ நம!
சீயம் ஏமனுக் கானீர்! நமோ நம!
சீர்த்தி மிக்கவர் நீரே! நமோ நம! சிவராஜா! (5)

சீவர்க் குய்கதி தருவீர்! நமோ நம!
சேக ரர்க்குயர் நிதியே! நமோ நம!
சேம மேதரு தேவே! நமோ நம! திகழ்வானே! (6)

சீதள பத்ம பாதா! நமோ நம!
செங்கம லம்உறை திருவே! நமோ நம!
சிந்தனைக் கொரு பொருளே! நமோ நம! தேனாறே! (7)

சீவனில்சிம் மாசன மேறினீர்!
தேவ தேவரும் நீரே! நமோ நம!
செந்தமிழ்ப் புவி வந்தீர்! நமோ நம! சுகம்நீரே! (8)

5. வேதத் தின்முதல் ஆனீர்! நமோ நம!

வேத அந்தமும் ஆனீர்! நமோ நம!
வெவ்வி னைதவிர் வேலோய்! நமோ நம! மேலோனே! (1)

வேங்கை வாகனர் நீரே! நமோ நம!
வேற்க ரத்தினர் நீரே! நமோ நம!
வெற்றி கைத்தரு வோரே! நமோ நம! வினைதீர்ப்பீர்! (2)

வேலை சூழ்புவி போந்தீர்! நமோ நம!
வெய்ய ஏமனை வென்றீர்! நமோ நம!
வேண்டும் யாவையும் அருள்வீர்! நமோ நம! விறல்வேந்தே! (3)

வேத னைதவிர் மேலாய்! நமோ நம!
வித்து நாயகம் நீரே! நமோ நம!
வெள்ளை யானையூர் வேந்தே! நமோ நம! மாவீரா! (4)

வேத வேதியர் நீரே! நமோ நம!
மேனி லைக்கெமை ஆக்கும் வித்யோதயா!
வெல்திறன் மிகு வல்லோய்! நமோ நம! மாமேரே! (5)

வேதமோர் திரு மேனியு மாயினீர்!
விஞ்சை மந்திர ரூபா! நமோ நம!
விந்தை யார்வரம் ஈவீர்! நமோ நம! விமலேசா! (6)

வேத காருண்யர் நீரே! நமோ நம!
வெண்ட ரளமெனும் வாசிச வாரி செய்
வித்த கர்திருத் தாளே! நமோ நம! மறையோரே!
     (7)
வேதித் தெம்மைப் பொன்னாக்கிய வேதியர்
மேன்மை யோங்கிடு தேவே! நமோ நம!
வெங்கலிதவிர் வேலோய! நமோ நம! வான்மேரே! (8)

6. மாத வாதவ வானே! நமோ நம!

வாய்மை யோங்கிடு தேவே! நமோ நம!
வாடிடா மணமலரே! நமோ நம! மணவாளா! (1)

மாமணிச்சுடர் ஒளியே! நமோ நம!
வானகத் திருமன்னே! நமோ நம!
மாகதர் புகழ் மதியே! நமோ நம! மணிவாணி! (2)

மாசிலாத்தவ ராஜா! நமோ நம!
வான்செல் வம் தரும் வள்ளால்! நமோ நம!
வால மெய்க்குரு வானீர்! நமோ நம! வடிவேலோய்! (3)

மாட்சிமைமிகு மன்னே! நமோ நம!
வால மெய்க்குரு பரரே! நமோ நம!
வான்ப தமருள் வள்ளால்! நமோ நம! மணிமார்பா! (4)

மானி லம்தனில் வந்த வரோதயா!
மக்கள் வெந்நோயைத் தீர்த்தீர்! நமோ நம!
மகதி ஆண்டவர் நீரே! நமோ நம! மன்னாவே! (5)

மாண்டிடா வரம் அருள்வீர்! நமோ நம!
வல்ல வர்எங்கோன் மாட்சி நமோ நம!

மாத வதபோ தனரே! நமோ நம! மணவாளா! (6)
மாடி யேர்மக ரந்தர் தலைவரே!
மாகதி தரு வல்லோய்! நமோ நம!
மாட்சி மைமிகு வேதா! நமோ நம! மறைவேந்தே! (7)

மாலயன் சிவன் நீரே! நமோ நம!
வான வர்தலை வர்நீர் நமோ நம!
வையம் உயர்ந்திட வந்தீர் நமோ நம! குருநாதா! (8)

7.:சேதமில்தவச் செல்வா! நமோ நம!

சிந்தை மந்திரத் தேவே! நமோ நம!
செங்கரத் திரு வேலோய்! நமோ நம! திகழ்வானே! (1)

சேவை செய்பவர்க் கெளிதாம் நமோ நம!
செந்தமிழ்ச் சுவை நீரே! நமோ நம!
சீரியர்க் கருள் ஞானம்! நமோ நம! திறல்வேந்தே! (2)

சேகரர்க்கருட் செல்வம்! நமோ நம!
செல்வ ழித்துணைச் சீரே! நமோ நம!
தென்னன் பூழியர் நீரே! நமோ நம! சிவகொண்டல்! (3)

சேதி செப்பியே போந்தீர்! நமோ நம!
தீர்க்கமார்தரி சனமே! நமோ நம!
செயலு டைச்சம ரசமே! நமோ நம! தேவேசா! (4)

சேரு நற்கதி நீரே! நமோ நம!
செல்வ மெய்ப்பதி நீரே! நமோ நம!
ஜீவனின்புகல் நீரே! நமோ நம! கதிரோனே! (5)

சேர னந்த ருயிரானீர்! நமோ நம!
சொர்க்கச் சந்ததிக்கரசே! நமோ நம!
சொந்த பந்தமும் நீரே! நமோ நம! சுகவாரி! (6)

சேல்வி ழிக்கன்னி நீரே! நமோ நம!
சீர் அகவைஈ ரைந்தே! நமோ நம!
சீறு காமம் தணித்தீர்! நமோ நம! சிவகாமி! (7)

சேரகம்பிர் ம்மாஸ்மி! நமோ நம!
தென்றலூர் மதன் நீரே! நமோ நம!
தெய்வ மாமணி நீரே! நமோ நம! தவவானே! (8)

8.கோதில் சீருரைக் கோவே! நமோ நம!

கோப ரத்னக் குடையோய்! நமோ நம!
கோடி கள்கடந் தீரே! நமோ நம! குருதேவே! (1)

கோமகன் சிவக் கொண்டல்! நமோ நம!
கோவி லுள்ளுறை நீரே! நமோ நம!
கோலம் கொள்சுவர்க் கம்நீர்! நமோ நம! குணமேரே! (2)

கோமு கிமெய் கொண்டீர்! நமோ நம!
கொள் அமுத சுரபி! நமோ நம!
கொற்ற வர்க்குடி நீரே! நமோ நம! குலமானே! (3)

கோத் திரர்தலை வர்நீர்! நமோ நம!
கொழி தமிழ்ச்சுவை நீரே! நமோ நம!
கொத்து கற்பக மலரே! நமோ நம! குருநாடே! (4)
கோணிலா நெறிதந்தீர்! நமோ நம!
கோண மூன்றுறை கோவே! நமோ நம!
கோதை என்மண வாளர்! நமோ நம! கனவானே! (5)

கோமதிமணி கோனே! நமோ நம!
கோடி தாண்டைஸ் வரீயர்! நமோ நம!
கோனகர் சாலை ஆண்டே! நமோ நம! அருள்தாராய்! (6)

கோத றுங்குடிக் கோனே! நமோ நம!
கோகு லர்த்தவ மேரே! நமோ நம!
கூர்மம் போல் தவம் செய்தீர்! நமோ நம! கோபாலா! (7)

கோலம் காட்டி ஏற்கொண்டீர்! நமோ நம!
கோவில் காட்டியே ஆண்டீர்! நமோ நம!
கொடியை நாட்டி அழைத்தீர்! நமோ நம! இறையோனே! (8)

சந்தக்குழிப்பு 2

தனதனன தான தான
தனதனன தான தான
தனதனன தான தான தனனான

இறைவ ரொரு உருவு கொண்டு

இவ்வுலகம் உய்ய வென்று
இனிது அவதாரம் செய்தீர் குருகோவே! (1)

இலகுஎழில் மார்க்க நகர்
ஏந்தல் ஜமா லுசேன் பேர்
இனிய தாயும் ஆண் மகவுக் கெனநோன்பு! (2)

இயற்றி இறை வேண்டி நிற்க
இவர்கருவில் ஊறி நின்று
எங்களுயிர்க் குயிரானீர்! அவதாரம்! (3)

இதமிகுந்த தீர்க்கவுரை
இயற்றி வைத்த ஞானியர்கள்
ஏரார்ந்த வானவர்கள் எதிர்நோக்க! (4)

இன்பமிகு காந்தருவர்
ஈடில் சித்தர் முத்தர்களும்
இங்கிதமாய்க் காத்திருந்து மலர்தூவ! (5)

இன்னிசைகள் கிளி குயில்கள்
இசைத்திடவே தென்றல் வந்து
இறைவர் பதம் தனைத்தழுவ இதமாக! (6)

இன்னுயிர்கள் வாழி வாழி
என்றுசோப னம்இ சைக்க
எம்முயிரின் நாயகரே! அறவாழி! (7)

இதயமதின் மணமலரே
இன்பச்சுவைக் கனியமுதே
எங்களுயிர்ப் பொங்கெழிலே! சுகவாரி! (8)

2. நிறைமதியர் நீடுபுகழ்

நித்தியமெய்ச் சத்தியரே
நிலமிசைவருகு த்தமரே! தாலேலோ! (1)

நெஞ்சமெனும் ஊஞ்சலிலே
நின்னை வைத்துத் தாலாட்டும்
நேமியரே கண்வளராய்! தாலேலோ! (2)

நீடுலகில் நீயுறங்கா
நித்ய தவம் செய்திடுவாய்
நிபுணமணி நீயுறங்கு தாலேலோ! (3)

நிதம்புதியர் நீரலவோ
நேரியரே ஆரியரே
நீயுறங்கி ஓய்வுகொள்வாய் தாலேலோ! (4)

நெடுந்தவமும் விரதமதும்
நேர்த்திமிகச் செய்திடவே
நீரேவந் தவதரித்தீர் தாலேலோ! (5)

நித்திலமே! புத்தமுதே!
நன்மணியே! விண்மணியே!
நேயமிகு வானவரே! தாலேலோ! (6)

நீண்டவழி அகிலவலம்
நேசமிகு தாதை யொடு
நீர்செயற்கு ஓய்வு கொள்வீர்! தாலேலோ! (7)

நீட்டூரர் தருமிடர்கள்
நெஞ்சுபொறா துயர்பொறுக்க
நீர்தயைசெய் தோய்வுகொள்வாய்! தாலேலோ! (8)

3. உறுவயது ஏழதனில்

ஓதாது ணர்பவர்க்கு
உலகியல்கல் விபயிலச் சேர்த்தாரே! (1)

ஒளிரும்தங்கத் தேரதுவே
ஊர்வலமாய் வருகுதல்போல்
ஓலைச் சுவடிக்கட்டொடு ஊர்ந்தீரே! (2)

உயரறமும் நிகண்டுகளும்
உற்றஞான நூல்கள்பல
ஓதிமிக உணர்ந்தீரே! கலைவாணி! (3)

உழவர்குடிப் பண்பதுவாம்
ஓங்குமறி பரிபலித்தல்
ஒன்பதில்கோ குலமேய்ப்பு யேற்றீரே! (4)

உழவியற்றி விளைவுயர்த்தி
உயரும்பண்ணைத் தொழில்புரிந்தீர்
உயிர்ப்பயிர்செய் உத்தமர்பின் வருநாளில்! (5)

உடல்திறனார் விளைவாடல்
ஒருவர்நிக ரிலாவண்ணம்
ஓங்குபுகழ் பரவிடவாற் றினிர்நீரே! (6)

உத்தமரை ஊருலகோர்
உள்ளன்பொடு தம்பியென
உவந்தழைத்துப் போற்றிடவே உயர்ந்தீரே! (7)

உலகப்பொருள்த் தேட்டமுற்று
உயர்வணிகம் செய்யவென்று
உத்தமரும் சிந்தைதனில் உவந்தீரே! (8)

4.அறவுரைசெய் ஒரு ஆலிம்

அங்குபள்ளி வாசலினில்
அன்புரைஒன் றழகாகப் பொழிந்தாரே! (1)

அரிதரிது மனுவாழ்வு
அவனிறுதி நாளதனில்
அல்லவரை நல்லவரை அறிவீரே! (2)

அவன்கசப்பு வெளியேறில்
அருநரகு புகுவானே
அக்கொடுமைக் காளாகா நெறிதேடும்! (3)

அரண்பதத்தில் அன்புகொண்டு
அருட்பெறவே தொழுகைசெய்து
ஆண்டவரின் தயவுபெற்றே உய்வோமே! (4)

அவனியதில் வாழ்காலம்
அவ்விறைவர் அருள்பெற்றால்
அற்புதசு வர்க்கமது அணித்தாகும்! (5)

ஆதலினால் தொழுகைசெய்மின்
அறநெறியில் நடந்திடுமின்
அருட்குருசார்ந் தருள்ஞானம் பெறுவீரே! (6)

அருமறைதம் முடிவிதென
அண்ணலது உணர்ந்ததனால்
அருட்குருவை தேடலுற்றார் அறிவோடே! (7)

அருட்குருக்கள் தாங்களென
அஞ்ஞானப் புலையர்பலர்
அண்ணலினை ஏய்த்த துண்டு அதுகாலே! (8)

5.அறவாழி தான்தனையே

அதுகாலம் தேடுகையில்
அல்லல்பல நேருறும மிகுவாதை! (1)

அஞ்ஞான நெறிசெலுநாள்
அரிதெனரா ஜயோகம்
அதுநலமென் றெண்ணியதைத் தொடர்ந்தீரே! (2)

அண்டர்கோன்நீர் இங்ஙனமே
அலைகாலம் திருமணமும்
அற்புதமாய் நிகழ்ந்ததுவே அரிதாக!. (3)

அழகான மனையோ(டு)
அன்பறமும் நிகழ்காலம்
அழகோவிய மகவும் உதயம்காண்! (4)

அண்ணல்உல கத்தேட்டின்
ஆவல்மிக நெல்வணிகம்
அதுபுரிய பூந்துறைநா டதுசேரும்! (5)

அற்புதரின் சொற்றிறமும்
ஆற்றலதும் ஓங்கிடலால்
அரும்பொருளின் செல்வமது பெருக்காகும்! (6)

அகிலமிதின் சுகவிளைவு
ஆடலது நிறைவாகி
ஐயர்மகிழ்ந் திருந்தார்கள் அதுநாளில்! (7)

ஆண்டவரின் அவதாரத்(து)
அருள் நோக்கம் நிறைவேறும்
அற்புதநன் நேரமதும் வருங்காணே (8)

6. குறைவிலதோர் நிதியருள

கோதறுமெய்ஞ் ஞானவள்ளல்
குருதனிகை வள்ளல்பிரான் இதுநாளில்! (1)

குனைன் நகரி னிருந்துயிங்கண்
கொண்டுபல இன்னலுற்றும்
குமரர்தமை கண்டெடுக்க வரலானார்! (2)

குணமிகுந்த சீடர்மூவர்
கொண்டவருள் இருவர்மௌனி
கோதில்வள்ள லார்வாக்மி அதுவானார்! (3)

கொடியவர்கள் இடரதனால்
கோதில்வள்ளற் பெருமானார்
ஜோதியினுள் ளேகலந்தார் அடலேறு! (4)

குமரரெங்கள் கோமானை
கொண்டலவர் ஆட்கொளவே
குடிபதிக்கே போந்தருளி இணைந்தாரே! (5)

கொற்றவர்க்கு முற்றுணர்த்தி
குருமணியர் தனிகைவள்ளல்
கொண்டேகும் குமரர்தமைத் துறவேற்றே! (6)

குஞ்சுதனைப் பருந்தெடுத்துக்
கொண்டேகல் போல்மகவைக்
கொண்டலவர் தானழைத்துச் சென்றாரே! (7)

குருமணியர் செய்தசெயல்
குவலயத்தை உய்விக்கவே
கோமகனார் திட்டம்உல(கு) அறியாதே! (8)

7.பெறற்கரிய நன்மனையாள்

பேறுயர்ந்த நற்குழவி
பெரிதுழைத்துப் பெற்றசெல்வம் துறந்தேகும்! (1)

பெரியரொடு அருண்மணியும்
பழகிப்பழகாத ஊர்கள்
பெருவளங்கள் கடந்தகில வலமேகும்! (2)

பெருமகனார் தனிகை வள்ளல்
பெற்றமக வுக்குவைத்த
பொறுக்கரிய சோதனைகள் பலவாகும்! (3)

பசிகுளிரை வெயிலிருளை
பயங்கரம் வெங்காமமதை
பண்டிதரும் வென்றுவெற்றி மேடேறும்! (4)

பெற்றவர்கள் உற்றவர்கள்
பேணுநட்பு சுற்றமெலாம்
பெருமகனார் விட்டுவிட்டுக் கடிதேகும்! (5)

பெருமானும் குருமகவும்
பறவைஅன்றில் போல்பிரியார்
பாரகத்தில் அகிலவலம் பெரிதேகும்! (6)

பெரிதுசெயத் தாழ்மைத்தகை
பண்புவரப் பிரிந்துசெல
மறிமேய்க்கும் பணிசெயென குருஆணை! (7)

பேர்பெரிய குருமகனார்
பெறற்கரிய ஆபரணம்
பரிசுஎன எண்ணிஅதை நிறைவேற்றும்! (8)

8. மறைமணியைக் குருபரரும்

மறிமேய்ப்புப் பணிமுடித்து
மாதவமிக் கியற்றவென அருள்கூறும்! (1)

மகிதலத்தில் எவரும்செயா
மாதவம்எம் மானியற்றம்
மந்த்ரகிரி குருபரரை நனிபோற்றி! (2)

மழைபனிநாள் வெயில்காலம்
மற்றெதுவும் கருதாதே
மணிவாணி மன்னருமே தவத்தேறும்! (3)

மலையடியில் வளர்நாக
தாளியெனும் கற்றாழை
மடலைதனைப் பசியாறும் சிலவேளை! (4)

மடியிலதோர் பெருந்தவத்தால்
வையகத்தும் வானகத்தும்
மாந்தர்பெறா சன்னதங்கள் பெறலானார்! (5)

மென்கரத்தில் பன்னிரண்டு
மிக்கெழிலார் சன்னதங்கள்
வானரசர் பெற்றுயர்ந்து சிறந்தார்கள்! (6)

மகவுபெறு பெரும்பேற்றை
வான்தனிகை கண்டுவந்து
வாழ்த்திஆசீர் பதித்தாரே குருதேவர்! (7)

மார்க்கமணி நாதரென்று
வள்ளலுக்குத் திருநாமம்
வான்தனிகை சூட்டும்குரு மணியோனே! (8)

சந்தக்குழிப்பு 3

தனதன தந்த தனத்தானா தன
தனதன தந்த தனத்தானா தன
தனதன தந்த தனத்தானா தன தனதான

1.குருமணி மெத்தக் கனிவோடு - மகன்

கரமதிற் பெற்ற பெரும்பேறு எழில்
சனதமி லங்கிடக் கண்டுள்ளம் மிக களிகூர்ந்து! (1)

குலதில கத்தை மிகவாழ்த்தி இனி
குவலய மித்தில் இதுகாலம் - உறு
குலமொன் றிறையொன் றென்றேயவர் நிலைநாட்டும்! (2)

கொடுங்கலி தனையே வென்றேறு நீ
கிருதயுகம் தன்னைக் கொணர்வாயே உயர்
கண்மணி நீசெய் என்றேதான்குரு மணியாக்ஞை! (3)

குருதிரு வாயுரை கேட்டாரே உளம்
குருபத மாட்சிமை மிகஎண்ணி எம்
குலமனு மகன்துடி துடித்தாரே குருபிரிவெண்ணி! (4)

குருமணி யேஎனைப் பிரியேலே இன்னும்
ஒருசிறு காலம் உடனிரு மின்நான்
குவலய மிதனில் எதுசெய் வேனென அறியேனே! (5)

குமரரு மிங்ஙன் கசிந்தாரே சிவ
கொண்டலும் அன்பொடு உரைசெய்து - அறம்
கொள்திரு மகவே கலங்காதே எனப் பரிவோடு! (6)

குரம்பை சுமந்தறு நூறாண்டு அது
கழிந்தது நெஞ்சம் அலுத்தேனே விடை
கொடுத்திட வேநீ இரங்காயோ என குருவேண்டும் (7)

குமரரும் குருபரர் மொழிகேட்டே உளம்
கனல்மெழு காயினர் துயரோங்க அந்தக்
கோதகல் மாமணி தனித்தங் கம்உரை:தனையேற்கும் (8)

2.குகைதனில் கொண்டல் தனைவிட்டே உயர்

கோமகன் உளமது பொடியாகி அந்தக்
குகையைத் திரும்பி நோக்கியவாறிரங் கடிவாரம் (1)

கொளுநகம் சதையைப்பிரிந் ததுபோல் விழி
குளிரொளி பிரிந்த தன்மைபோல் உணர்
கொளுஉடல் உயிரைப் பிரிந்ததுபோன்ம்உரை தனைஏற்கும் (2)

கட்டளை குருபரர் இட்டதுவே தன்
கடமை அதனை நிறைவேற்றல் எனக்
குமரரும் உணர்ந்து ஆசான்தன்னைப் பிரிந்தேகும் (3)

கோதை குழவியைப் பிரிதுயர்போல் அந்தக்
கோமகன் குன்றினை விட்டிறங்கி - குரு
கொண்டலைப் பிரிந்தே தனித்தேகும் உயிர் துடித்தேகும் (4)

குகை பார்வைக்கு மறைந்ததுவும் உடல்
கொளு சதைபிய்த்துப் புலிமுன்னே அதைக்
கொடுத்தது போலும் உணர்வுற்றார் எங்ஙள் குமரேசர் (5)

கண்டவ ரனைவரும் அறியாதோர் கண்
கட்டிக் காட்டில் விட்டாற்போல் எம்
காளையர் நெஞ்சும் கசிந்தாரே கண்ணீர் உகுத்தாரே! (6)

கனியது சுவையை இழந்தாற்போல் சுவைக்
கரும்பது ரசமதைப் பிழிந்ததுபோல் எழில்
கமலமும் மணமதை இழந்தது போன்ம்உணர் வதுவேறும் (7)

கண்ணிலன் கண்பெற் றிழந்தது போல் தீப்
புண்ணில் கூர்வேல் பாய்ந்தது போல் நம்
கண்மணி நாயகம் உணர்ந்தாரே உளம் நெகிழ்ந்தாரே! (8)

3.கமலம லர்குளம் தனைப் பிரிந்து அடும்

கதிரவன் முன்னே கிடந்தாற் போல் உளம்
கடிதே வாடிடும் நிலைபோலும் உணர் கலைநேசர் (1)

கண்மணி நாயகம் வந்தாரே தனி
கைமணி வள்ளலைப் பிரிந்தாரே - எங்கு
ஏகுவதென்றே அறியாதே உளம் தடுமாறும்! (2)

கனிதமிழ் வான்மது ரைசென்றே எம்
கலையரச முதர் கற்பூரம் கமழ்
மலர்வாய் திறந்தே பிரசங்கம்அது பொழிந்தாரே! (3)

கோவில் மேலக் கோபுரம்சார் - எழில்
கொழுமலர் மகிழமரத்தடி யில்நம்
கோமான் அற்புதமாய்ச் சொற்பொழி வதுஆற்றும் (4)

கூடிவந் தவர்கற் றோர்கள் கன
பாடிகள் வித்துவச் சான்றோர் கள் இறை
நாடும்பக் தர்கள் என கேட்டோர்தாம் பலபேர்கள் (5)
காணும் உயிர்கள் பலவற்றுள் மனு
தனியன் அனைத்தும் மனுவிற்கே அக்
கடவுள் படைப்பில் சிறப்பானோன் என மொழிகூறும் (6)

கொள்ளும் அறுசுவை பயனென்ன அது
கூடும் இடமும் தரமென்ன என
கனிவாய் எங்கோன் கழறக் கேட்டோர் வியந்தார்கள் (7)

கைகளைத் தட்டியார வாரம் மிக
கூறும் சபாஷ் சபாஷ் என்று இன்று
காலச்சேபம் நன்றென்றே அவர் உரைகூறும் (8)

4. அன்னவர் கலைந்தே சென்றார் தமக்(கு)

இதுவேண்டும் என முன்வாரார் அது
அறிந்தெங்கோமான் திருவுள் ளம்மிக ஏமாந்தார் (1)

அப்பேர் நகரில் ஓரிடமாம் அது
அந்திக்கடைப் பொட்டல் என்பார் அதில்
உறைவோர் துறவோர் என்றார்கள் இறை அங்கேகும் (2)

அத்தகை யோர்க்கிது எளிதாகும் என
அண்ணல் எண்ணி அவர்பாலே உயர்
அறமுதல் தன்னை உரைத்தார்கள் அதை அவர்கேளார் (3)

அன்னோர் பிச்சை யேற்றுண்ணும் கொடும்
அவலர் பேதையர் கஞ்சா வுக்(கு)
அடிமைப் போதையர் எனக்கண்டு உளம் வெறுத்தார்கள் (4)
அகிலம் முழுதும் உய்ந்தாலும் இந்த
அநியா யர்கள் திருந்தார்கள் என
அய்யன் காவி ஆடை கள்தமைத் துறந்தாரே (5)

அணிவோர் துறவோர் துவராடை அது
அற்பர் பதுங்கும் மறைவாடை என
அண்ணல் தெளிந்து அணியும் எழில் வெள்ளாடை (6)


ஆர வாரம் மிகுநகர் தனில்
ஆரும் விழையார் மெய்ஞ்ஞானம் இனி
அடைவோம் சிற்றூர் எனவே இறை நினைந்தேகும் (7)

ஆங்காங்கே பல சிற்றூர்கள் கடந்(து)
ஐயன் நடவா நடை நடந்து இனி(து)
அடைந்தார் திருப் புத்தூருக்கு இறைதனியாக (8)

5.அறுபத்து மூவர் கோவில் மடம் மற்(று)

ஆங்காங்கே தங்கித்தங்கி எம(து)
அமுதர் மெய்ம்மை உரைசெய்ய மிக முனைந்தாரே! (1)

மக்கள் கூடும் முச்சந்தி எழில்
மரநிழலும் பள் ளிவாசல்களில்
மணிநா வேந்தர் ஆங்காங்கே சொற் பெருக்காற்றும் (2)

வண்டிக் கூண்டு மேடைகளில் எழில்
மலரார் பொய்கைப் படித்துறையில்
மடங்கள் தளங்கள் எங்கெங்கும் இறை உரையாற்றும் (3)

மாலை காலை ஊருராய் மெய்
மதியர் புதியர் சென்றாங்கே மிக
மெய்யின் வழியை உரைகூறும் அருள் நாவேந்தர்! (4)

மண்தீண்டாப் பொற்பாதத்தார் மெய்
மாதே வர்மென் றாள் நொந்து பதம்
வருந்த நடையாய் நடந்து அவர் கடிதேகும்! (5)

மண்ணில் உயிர்கள் யாவினுக்கும் உணா
வழங்கி நித்தம் பசிதீர்க்கும் - எங்கள்
வள்ளல் தமக்குப் பசியாற்றும் உணவு எங்கெங்கே (6)

வானம் கூரை மண்மனையாம் - சில
மடங்கள் கோவில் தங்கிடமாம் எங்கள்
வள்ளல் தமக்குறு துணையாரே அது சிலகாலம (7)

மென்தொண்டையது தீய்ந்திடவே அண்ணல்
மிகவே உரைகள் பொழிதேவர் - சில
மாணாக் கர்கள் வந்துற்றார் – அது இனிதாகும் (8)

6. மாதர் திலகம் உம்முசல்மா மற்(று)

அவர்தம் கணவர் மகனாரும் - எம்
மாத வர்க்கு மாணாக் கர்மணி எனஆனார் (1)

ஆங்காங் கேசிற் சிலபேர்கள் நமது
ஐயன் தமக்கு ஆளாகும் - உயிர்
அன்புச் சீடர்குழாம் பெருகும் மிக அரிதாக (2)

ஆயிழையாள் உம் முசல்மா வும்
அவர்கள் மனையில் குடில் கட்டி - நம்
அண்ணல் தன்னை தரிசித்து உயர் வரமேற்றார் (3)

அவ்வவ் வவதா ரம் தன்னில் உறை
ஆங்குறு சில்லோர் அரக்கர்களும் நம்
ஐயன் வந்துற்ற போதும் இவண் வரலானார் (4)

அறவோர் பிரசங் கத்தலத்தும் மிக(கு)
அரிய உபதே சத்திடத்தும் - அந்த
அற்பர் கல்லும் சாணமுமே கடி(து) எறிந்தார்கள் (5)

அன்பர் போல்ச லாம் செய்து அங்கு
அதன்பின் கோணைப் பழிப்பதுவும் இதை
அழிவோர் செய்து ஒழிந்தார்கள் இறை அதுதாங்கும் (6)

அழிம்பர் பல்லோர் கூடி வந்து
ஆயுதத்தோ டிடர் செய்ய நம(து)
அமரர் கோன் அஃதையழித்துத் தடை வென்றேறும (7)

ஆங்கோர் அச்சா பீஸ்காரன் மிக
அவதூறாய் ஒன்(று) அச்சிட்டு அதை
ஆண்ட வர்க் கென்றாஸ்ர மத்தில் கொடுபோட்டான் (8)

7. ஆண்டவர்தம் சீடர் குழாம் சினந்(து)

அவன்மேல் வழக்குத் தொடர்ந்திடவும் அவன்
ஆண்டவர்கள் இவர்களல் லஎன அவன்கூறும் (1)

ஆண்ட வர்கள் எனுநா மத்தில்
அக் காலத்தில் பலருண்டு
ஆனால் ஆண்டவர் நாம்இன்று என இறைகூறும் (2)

ஆன்ற நீதி மன்றமது - தீர்ப்பில்
அவனுக் குஅப ராதமொடு உடன்
ஆங்கே சிறைதண் டனைதரவும் அவன் குடியோடும் (3)

ஆண்ட வர்கைத் துப் பாக் கிக்கு
ஆங்கு உரிமம் வாங்குங்கால் இனி
ஆண்டவ ரென்றே கைச்சாத்திடவே ஆட் சியர்கூறும் (4)

ஆண்டவரிவ் வாறுறுங் காலை
அரியதனி கையர் வந்து அந்(து)
அருமைச்சீட ரொடோர் இருநாட்கள் இருந்தாரே (5)

ஆன்ற தனிகை மணிவள்ளல்
அவர்தம் மூல வளநாடு நினைந்(து)
ஆங்கே கிடவே மனதானார் இறை அலமந்தார் (6)
அரியர் தனிகை பிரிந்தேக - நம்
அண்ணல் அழுது புரண்டனரே
அதன்பின் பிரான்மலை சென்றங்கே இறைதவமாற்றும் (7)

அருந்துண(வு) உறக்கம் அற்றெம்மான்மிக
அருந்தவம் இயற்றும் அதுகாலம்
ஒருதுற வுடைமா திதுகண்டுமிக வியந்தார்கள் (8)

8. உயர்தவத் திருந்த எம்மானும்

தவங்கலைந் தெழுந்து அதுகாலை அவ்
உத்தமி பணிந்தனள் போற்றிஒரு வரம்வேண்டும் (1)

ஓங்குயர் தவத்தின் பெரியோரே யான்
உற்றவள் ராஜகம் பீரத்தினன் எனை
உங்களின் சிஷ்யையென்(று) ஏற்றிடுவீர் எனவேண்டும் (2)

உளமது இரங்கி எம்மூர் வந்து எனக்கு
உற்ற சீடர்களை ஆட்கொள்க என
உத்தமி பணிவொடு வேண்டினரே இறை அதுகேட்டு (3)

உடையவர் ராஜகம் பீரம் செல அவர்க்(கு)
ஓரெழில் தவக்குடில் அமைத்தார்கள் அதில்
உத்தமர் தங்கிநல் உரைசெய்தார்கள் சிலகாலம் (4)

ஊரதன் சுற்று ஊரினர்கள் வந்(து)
ஓங்கு தவத்தினர் தாள்பற்றி நல்
உபதே சம்பெற் றதுகண் டார்கள் ஊரோர்கள் (5)

ஊரவர் அனைவரும் முகமதியர் நம்
உத்தமர் முஸ்லிம் எனஎண்ணி இவர்
இந்துகட்கு உபதேசம் தரல்தன்னைமிகத் தடுத்தார்கள் (6)

உடையவர் நம் பெருமான் தானும் அவர்
உரைகளை ஏற்றிலர் அதுகண்டு அவ்
ஊரினர் எம்மான் தனக்கே மிக மாற்றானார் (7)

உலகுபடைத் திறை வர்ஒன்றே அதில்
உமதெம தென்பது இலையென்ற உணர்
வீர்கள் மக்காள் பேதம் வேண்டாம் எனகூறும் (8)

சந்தக்குழிப்பு 4

தானத னத்தன தானத னத்தன
தானத னத்தன தானான

மாற்றறி யாதபொன் மாமணி ஆண்டவர்

மக்களெ லாம்பொது என்றார்கள் (1)

மாந்தரை வேறுப டுத்தல் கொடூர மாம்
வானவரிங்கன் மொழிந்தார்கள் (2)

மாதர் இருவரை மணமுடிப் போமிவண்
வாழ்ந்திடும் ஆலிம் சா ஆக (3)

வயல்களும் தோப்புகள் வழங்கிடு வோமிவண்
வாரும் இணங்கியே என்றார்கள் (4)

வஞ்சகர் சூதுகள் வலைவிரிப் புக்களில்
மாதவர் சற்றும் மயங்கிலரே (5)

மைவைத் தேமக்களைமயக் கினரென
வன்முறை இடர்கள் செய்தார்கள் (6)

வண்டர்கள் கூடி ஒழித்திடு வோமென
வந்தனர் பலர் கூட் டம்கூடி (7)

மெய்யரின் சீடர்கள் வேங்கைகள் பாய்ந்தனர்
வாலறுந் தோடினர் கொடியோர்கள (8)

2. வள்ளல் தவக்குடி லுக்கே தீ வைத்தனர்

வன்மனச் சண்டாளர் அதிபாபம் (1)

மனுமகன் தீயெரி கண்டு முகட்டினை
வெட்டித் தப்பியே வெளியேறும் (2)

வஞ்சகர் தீயணை யாவனம் மூட்டியே
மாதவர் சீடரைத் தடுத்தார்கள் (3)

வைகை நதிப்புதர் தங்கியிருந்துமே
வள்ளல் காரைக் காலுக்கேகும் (4)

வளநா டர்அங் கேசில பேர்கட்கு
வழங்கும் உபதேசம் அதன்பின்னர் (5)

வான்மீ கத்தலம் வந்தனர் பயிர்
வான்மழை கண்டது போலானார் (6)
வளருமு யிர்ப் பயிர் செழித்தன அங்கே
மாணாக் கர்பல்லோர் வரலானார் (7)

வள்ளல் இராஜகம் பீரத்தி ருப்பதை
திருப்புத் தூரினர் கேட்டனரே (8)

3. வந்துப ணிந்து உவந்து மகிழ்ந்தனர்

வாடிய உள்ளங்கள் செழித்தனவே (1)

வானவர் குமரர் தானங் குறுநாள்
மாதர்கள் சீடராய் வரலானார் (2)

வருகும வர்க்கொரு உறுதுணை செய்யவே
மாது நல்லாள் உறல் நலமாகும் (3)

வள்ளல் தனிகையர் உரைத்திடு லட்சணம்
வண்ணம் வனிதையை அவர்தேடும் (4)

மாதினி யாளும்மு சல்மா மகளார்
வளர்ந்திருந் தார்மிக எழிலாக (5)

வேந்தர் எமது கோமகன் அவர்க்கு
வைத்தனர் பத்தியம் கடிதாக (6)

மாதம் பதினொன் றானதுவே மிக
மெலிந்தே தோற்றம் உற்றார்கள் (7)

வாடிவ தங்கினர் மேனி இளைத்தது
மங்கைசம்சு எழில் மிக்கார்கள் (8)

4. வள்ளல் தமதருட் சீடர்கள் தம்மையே

மணப்பெண் கேட்டுமே தூதுவிடும் (1)

மங்கையர் திலகம் உம்முசல் அம்மா
மகிழ்ந்து இணக்கம் தெரிவித்தார் (2)

வாழும் ஊரினர் உற்றவர் எதிர்த்தனர்
மணம்செய் வதனைத் தடுத்தார்கள் (3)

மாதருட் சிங்கம் ஞானமணித் தங்கம்
மணம்செய் விப்பதில் திடமானார் (4)

மணமகள் அணிந்திடப் பட்டினில் புடவைகள்
வாங்கிக் கொணர்ந்தது குருகண்டார் (5)

வள்ளலும் அவ்வணி மறுத்தனர் வெண்மை
ஆடைகள் வனிதைக்(கு) அணிவித்தார் (6)

வந்தவர் உறவினர் கண்டு வியந்தனர்
வருந்தி அகன்று செலலானார் (7)

வதுவைவி ருந்தினை எளியவர்கட்கு
வழங் கியேபெற்றோர் மகிழ்ந்தார்கள் (8)

5. மணமும் நடந்தது மறுதினம் பர்மா

வள்ளல்பிரானுமே சென்றார்கள் (1)

மணமகள் தனையே வருந்தவிட்டு விட்டு
மணமகன் சென்றார் என்றாங்கே (2)

மக்கள் கூட்டமும் அலரும் தூற்றிடும்
மயங்கும் பெற்றோர் இதுகேட்டு (3)

மதிமெய் மன்னவர் பர்மா வினிலே
மாணாக் கர்கட்கு உபதேசம் (4)

மாதவர் நாற்பத் தைந்து நாளானபின்
வந்தனர் இங்ஙன் மழைபோலே (5)

மகிழ்ந்தெல் லோருமே போற் றினரேமன
வருத்தம் தெளிந்து இருந்தார்கள் (6)
மறுவில் இறைவர் மங்கை சம்சுவைப்
பனிமதி மங்கையென் றழைத்தார்கள் (7)

மாதர்கள் அரசி பனிமதி அம்மைக்கு
ஹஜ்யாத் திரைஉடை கொணர்ந்தார்கள் (8)

6. மலையா ளத்தினர் பிராமண ரிவரென

மக்களும் தூற்றினர் அதுநாளில் (1)

மணியவர் எம்முயிர்க் கணியவர் அவ்வுரை
மாற்றிட எண்ணினர் மதிவேந்தர் (2)

மக்கா மதினா புனிதஹஜ் யாத்திரை
மாதவர் சென்றிட நினைத்தார்கள் (3)

மயிலனை யாரெழில் பனிமாமதியெனும்
மாதர்கள் திலகம் தன்னோடு. (4)

மங்கையின் பங்கன் மதராஸ் பம்பாய்
வழியாய் மக்கா சென்றடைந்தார் (5)

மக்கா அரபாத் மைதா னத்தினில்
மாண்புடை தொழுகை செய்தார்கள் (6)

மக்காப் பதியதன் கஃபத் துல்லாவினை
அறமார் வலமும் வந்தார்கள் (7)

மதினாபதி சென்று ரவுலா சரிபில்
குருமணி மாலை பொழிந்தார்கள் (8)

7. மணமகள் தனையே விற்கச் சென்றாரென

மக்கள் கூட்டம் குறைபேசும் (1)

மக்கா தனிலே மகளைப் பார்த்தேனென
அம்பல காரர்செய் திகூறும் (2)

மட்டிலா மகிழ்ச்சி பெற்றவ ருற்றனர்
மற்றூர் மக்களும் தெளிவுற்றார் (3)

மனமது வருந்திடக் குறைமொழி மாந்தர்கள்
மனம் தெளிந்தேமன் னிப்புவேட்கும் (4)

மருகரும் மகளொடு ஹஜ்ஜு முடித்திவர்
வரக்கண்டோ ருளம் மலர்ந்தார்கள் (5)

மழைபெறு வாடிய பயிர் செழிப் பதுபோல்
மகிழ்ந்தனர் உம்முசல் அம்மாவும் (6)

மக்களின் வசவுகள் குறைமொழி செயல்கள்
மாய்ந்தன ஓய்ந்தன மகிழ்வோடும் (7)

வள்ளல்பி ரான்தனி கையரின் ஆக்ஞை
வனம்செலத் திருவுளம் எண்ணினாரே (8)

8. வனிதா மணிக்கு தனுர்வித்தையினை

வானவர் திறனாய்ப் பயிற்றினாரே (1)

மாதவர் மங்கையும் தோலுடை தரித்தனர்
வனமது சென்றே சேர்ந்தார்கள் (2)

வனமது நைமிசா ரண்யம் கூர்மமாம்
வளமார் குகையினைக் கண்டாங்கே (3)

வாழ்புலி யதனை உத்தியால் விரட்டியே
வள்ளலதில் தவம் செய்தார்கள் (4)

வானவர் தவம்செய மங்கை நல்லாளவள்
வில்லொடு காவலும் புரிந்தார்கள் (5)

முரீதுச் சுருக்கமும் ஞானக் குறளதும்
குருமுறாதியும் இயற்றினரே (6)

வள்ளலும் ஓராண் டங்கிருந்தே பின்னர்
வண்டமிழ் நாடகம் சேர்ந்தாரே (7)

வழங்கினார் ஆசியும் திர்த்தம் சீடர்கள்
மகிழ்ந்தனர் பெற்றனர் இனிதாக (8)

சந்தக்குழிப்பு 5

தனதான தனதானன
தனதானன தனதானன
தனதானன தனதானன தனதானா

சேர்ந்தார்திருப் புத்தூரினில்

ஆர்ந்தோர்தவத் திருமாளிகை
சீராயமைந்திட எண்ணினர் தவராஜர் (1)

சீடர்பலர் துணையாகவே
தேவாதியர் திரு ஆலயம்
தவபாதள குகையோடமைந்(து) உருவாகும் (2)

சேலார்விழி பனிமாமதி
தாயாரணி கலன்யாவுமே
திருவார் பணிக் கென ஈந்தனர் அதுகாலம் (3)

சேரும்பல மாணாக்கர்கள்
திருஞானமெய் பொழிவாகிட
தெய்வீக நன் னெறியானது வளர்வேறும் (4)

தேசோங்கிடு தவவான்மணி
நிறைவாகிய வழியானது
செங்ஙோலது புரிந்தாரெங்கள் குருதேவர் (5)

சேவைசெயும் மாணாக்கரை
வரவேற்றங் குணவீந்நிட
செய்தார்கள் பாய் நெசவும் நம திறையோனே (6)

ஜெகம் யாவுமே திருஞானமும்
பெறவே செய முயல்காலையில்
தீயோடர் செய்தாரதான் மனம்நொந்தார் (7)

செல்வோமினி மைசூரினிற்(கு)
அரசோடுறை அதுகாலையில்
தீங்கேவரா தெனஎண்ணுவர் குருதேவர் (8)

2. மைசூர்செல ரயிலேறினர்

மாதாவுடன் மாதேவரும்
மணியானநன் மாணாக்கர்கள் அதுகேட்டு (1)

விரைந்தேவரும் பிரியேலென
அழுதேதொழும் பெருமானவர்
திருவுள்ளமும் இரக்கம்கொடு நின்றார்கள (2)

மாமேருஎம் மிறை மாமணிக்
கெனவோரெழில் கல்லாலயம்
மதுரைப்பதி தனிலாக்கிட நினைத்தார்கள் (3)

மாணாக்கர்கட்(கு) ஓலைவிட
வந்தார் நிதி தந்தார் உயர்
வள்ளற்கொரு நல்லாலயம் புதிதாக (4)

மதுரைப்பரன் பெருமேட்டில்
வித்தீரண முடை ஓர் நிலம்
விலைதந்தது பெற்றார்கள் விண்ணோர்கள் (5)

மலைசென்றுகல் கொணர்வார்களும்
மண்வேலைகள் உளிவேலைகள்
விளையாட்டெனச் செய்தார்களே வளர்ந்தோங்கும் (6)

மாதேவரே பொறியாளராய்
நின்றேபணி செயலாயினர்
வாடாநெறி மாமேருவே உருவாக்கும் (7)

மறுவற்றவர் குருகொற்றவர்
திருவுற்றவர் அருள் பெற்றவர்
செய நற்பணி வளர்வுற்றது நிறைவேறும் (8)

3. மாமேருஎம் வான் வேந்தரின்

பேராலயம் சீராகவே
பொன்னார் அரங்கம்மெனும் பெயரோடு (1)

மறைநாதரும் கொலுவேறிட
மாணாக்கர்கட் கோலை விட
வந்தார் ஜனக் கடல் பொங்கின அதுபோலும் (2)

மறைமங்கள இசைபொங்கிட
மாதேவரின் அருளார் கரம்
தங்கத்திற வின்கோல்கொடு திறந்தார்கள் (3)

மணிநாதமும் பொலியும் அவண்
மாதேவர்கள் சுபசோபனம்
மலர்மாரியும் அமுதும்பொழி நிகழ்வாமே (4)

மாணாக்கர்கள் பிறவிப்பிணி
மாற்றும்பணி யாற்றும் இறை
மறையாதவர் தேவாதியர் புகழ்ந்தேத்த (5)

மங்காத்தவ சங்கோசையர்
எங்கள்குல தேவேந்திரர்
வானாட்சியின் செங்கோல்அரி யணையேறும் (6)

மதிமாதவர் கதியீந்திடும்
மாபொற்பதி மிகவோங்கிட
மறலிதவிர் வரமீந்திடு மணிநாதர் (7)

மாயாப்புகழ் தேயாநெறி
ஓயாத்தவம் சாயாவுரு
வள்ளல்பிரான் மகவானவர் எமதையர் (8)

4. நிஜ ஞானமும் நிலைவாழ்வதும்

நிலவும் உயர் தவமெய்வழி
நலமாகவே வளர்வுற்றிடு அதுகாலம் (1)

நீரார்குளம் தனில்கல்லெறி
நிட்டூரர்கள் போலும் இயல்
நலமெய்வழி தனிலோர் புயல் வரலாகும் (2)

நற்பொன்னரங் கது சீரோடு
நிகழ்காலையில் புவிப்போர்ப்படை
கலக்கொட்டிலுக் கரசாங்கமே விழைந்தார்கள் (3)

நமதாருயிர் தவநாயகர்
நல ஊழியின் விதியீதென
நினைவோருற அதுஈந்தனர் கிழக்கேகும் (4)

நாடாம்புது மைக்கோட்டையின்
நல ஊறலின் மலைசார்ந்துள
நற்கானக மதில் சாலைசெய் தவராஜர் (5)

நீலம்ஒளிர் காசாம்பெழில்
நீறைநீர்க்குளம் அதுசார்ந்தனர்
நிஜவாசமெய் வழிநாதரும் நலமோங்க (6)

நிறைமாமதி திடதீர்க்கர்கள்
தவராஜரின் வருகைமொழி
நவ வாய்மைகள் நிறைவேறிடும் பதியாகும் (7)

நலமெய்வழிக் குலமேயிவண்
நிலை வாழ்வது வளர்வேறிட
நமனார்கெட நடமேபுரி தவராஜ்யம் (8)

5. தேவேசர் நன் நாவாஸ்திரர்

தென்னாடுடை சிவமாதவர்
செப்பற்கரி தொப்பில்தவ மாமேரு (1)

தரணிமுழு தோர்மெய்வழி
தரமோங்குயர் அனந்தாதியர்
சத்யதேவ பிரம்மகுலம் வளர்வேறும் (2)

தறுகண்எமன் கரம்தீண்டிடா
தனியாம்செயற் திருவார்பதி
தஞ்சம்எனில் எஞ்சும்உயிர் நிலைவாழ்வு (3)

தக்கார்களே சுரர்வாழ்வுறும்
தரணிதனில் இலதோர் பதி
தங்கங்களை அங்கம்கொளும் திருவூராம் (4)

தன்னேரிலாத் தலைவர்எம(து)
அண்ணல்தவ மணிவாய்மையை
தாமேஅமர்ந் தருளாள்கைசெய் பதியீதே (5)

தமிழ்தன்முழு அழகார்ந்திட
திருஞானமும் ஒளிர்ந்தோங்கிட
தருகற்பக மலர்பூத்தொளிர் பொழிலாகும் (6)

செந்நாமலர் நடமே செய
சர்வமதம் ஒன்றாகிடும்
சர்வகுலம் ஒருமைபெறும் நிலையாகும் (7)

தங்கும்அறம் பொங்கும்மகிழ்
தண்ணார்எழில் அமராதிபர்
தாமேதிரு விளையாட்டயர் உயர்நாடு (8)

6. புவியேயிது வரைகண்டிலா

புதுமையிவண் நிகழ்வானது
புரக்கும்பொதி மலைஜோதியர் இவராகும் (1)

புண்யம்ஒரு உருவானதோ
புலமைநிறை திருவேற்றதோ
பொற்றாமரை மணமேற்றதோ புகழ்மேரு (2)

புரிசக்கரம் பொலிசங்கமும்
திரிசூலமும் வாள்வேலதும்
பொலிசன்னதம் கிள்நாமமும் பெறுராஜர் (3)

பழமையெனும் அறியாமையும்
பொய்ஞ்ஞானமும் போய்மாய்ந்திடும்
பெரியோர்க்கெலாம் பெரியோர் நம(து) அறவாழி (4)

புக்கில்இது புவியோர்க்கெலாம்
பொலியும்இறை தனிநாயகர்
புதுமைக்கெலாம் புதுமெய்தரும் புலவோரே (5)

பொன்னின்அரங் கண்ணல்உயர்
தன்னைஉணர் தலைவர் தெரி
பென்னம்பெரு கடமைதனை நிறைவேற்றும் (6)

பொலியும்மறை யனைத்தும்ஒரு
புதுமைத்திரு உருவேற்றது
பேர்மெய்வழி தெய்வம்எனும் திருவோங்கும் (7)

புவியோர்களே புரிமின்களே
புரிந்தேபதம் பணிமின்களே
பெறுவீர்களே! இறவாவரம் அருள்காணே! (8)

7. உலகில் ஒரு உரை கேண்மின்களே

உடல்வாழ்வது சதமாமென
உழன்றேஎமன் கரம்பட்டிடும் முறைவீணே (1)

உயிர்வாழ்வது உளதாமறி
உறும்அஃதினை வழங்கும்சிவம்
உடல்கொண்டிவன் வரலானதே அறியீரோ (2)

உயர்மானுடப் பிறவியென
உணராதவர் உலகம்மிதில்
உணரச் செயும் தலைவர்இவண் வரலானார் (3)
உம்பர்பதம் ஒன்றுண்டது

நம்பிச்செய தம்கைக்கொளச்
செம்பொற்பதம் தருவாருளர் உயர்தெய்வம் (4)

ஊறல்மலை அருகேஉள
உத்தியோவன கானம்மிது
உயர்மெய்வழி உயிர்உய்வழி அதுசார்மின் (5)

உடலுக்கென உறவுண்டுயிர்
இறுதிக்குற(வு) அவையாகிடா
உயிருக்கொரு உறவெம்மிறை உளர்வம்மின் (6)

உமைகேள்வரெம் குருகொண்டலர்
தமைநாடியர் உயர்மேனிலை
உறவேவரம் அருள்தாயகர் தவநாதர் (7)

உயிரேஉயிர் அணியேஅணி
கலனேஎம துயிரோவியம்
உயர்சாலையர் பதமேபணிந் துய்வீரே (8)

8. எல்லாஉல குற்றோர்களும்

ஏதோஒரு துறைசார்ந்துளர்
எதுதான்சரி எனஓர்கிலர் பரிதாபம் (1)

எமனார்வரு பொழுதேசரி
எதுவென்றுணர் முறைகாண்குவர்
அதுபோதது உணர்வாரெனின் எதுவாகும் (2)

எல்லாஉயிர் உண்டாக்கியர்
வல்லார்ஒரு திருமேனியர்
நில்லாஉல கினில்வந்துறும் குருவாக (3)

ஏதும்இணை துணை கூறிடா
ஈசன்வரு கைதந்துயிர்க்(கு)
இதமேபுரி பதமேதரும் அவர்தெய்வம் (4)

எங்கெவ்விதம் அவர்காண்பது
என்றேமயங் கேல்மாந்தரே!
இங்கேயுள மெய்யாம்வழி இதுசத்யம் (5)

எல்லாமதம் எல்லாமறை
எல்லாகுலம் எல்லாமொரு
நல்லாறினில் நடையாற்றிடு நடராஜர் (6)

எண்ணம்செயல் சொல்லாதிய
நன்னீதமாய் திண்ணம்கொளும்
வண்ணம்வரில் அன்னோர்க்கிது எளிதாகும் (7)

எம்மானிறை கோமானவர்
பெம்மான்பெருந் துறைமேவியர்
செம்மாந்தினி செல்லும் நல தவமேரே (8)

சந்தக்குழிப்பு 6

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதானா

நற்றவத் தனிமுதல் நற்புவி அருள்திரு

நற்றமிழ் மறைமணி உயர்சாலை (1)

நன்மதி திரள்உரு நன்மனு வெனவொரு
நனிஉயர் அறிவதன் பிரகாசம் (2)

நன்னிறை மனுவினம் அதுபடைத் ததுதனை
நற்கதி பெறச்செயும் உபகாரம் (3)

நன்மதி அமுதருள் பொழிதர செழிப்புற
நாமலர் மலர்ந்தது ஒளியார (4)

நற்கரு ணாகரர் நல்லுயிர் நற்றுணை
நற்றிரு மார்க்கநல் ரிஷியானார்! (5)

நம்பிய அடியவர் நற்பதம் பெறவருள்
நற்றிருப் பெருவுளத் தயைமேரு! (6)

நம்குரு குலமணி நாயகர் பதமலர்
நம்சிர அணியென அணிவோமே! (7)

நத்தியர் பத்தியர் நித்திய மெய்தரும்
நம்பரர் நல்லடி பணிவோமே! (8)

2. நித்தியம் அருள்செய நிர்மலர் படுதுயர்

நவிலுவ தெளிதுகொல் உலகீரே! (1)

நிட்டுரர் தருமிடர் பலப்பல நமதிறை
நமக்கெனப் பொறுத்தனர் எளிதாமோ! (2)

நன்மைகள் நல்வரம் நல்கவே நம்துரை
நல்லுல கிதுதனி அவதாரம்! (3)

நம்புமின் இறைவரை நல்குவர் நலமெலாம்
நாடிடில் ஈடிலாப் பெரும்பேறு! (4)

நல்லொழுக் கம்மதே நலமுயர் குருபரர்
நற்றொடர் பதுபெற வழிகோலும்! (5)

நன்மனச் சாட்சிக்கு உடையவர் திடமுளார்
நல்லன புரிந்திட முனைவீரே! (6)

நல்லதே காணுமின் நல்லதே எண்ணுமின்
நல்லறச் செயல்செயத் துணையோடும்! (7)

நல்லுயர் கல்வியும் நற்றவர் தகைமையும்
நன்மையே விளைவுறும் பெரும்பேறு! (8)

3. நல்லறி வுடையவர் நல்லய தார்த்தர்கள்

நல்லுயர் தகைமையும் முகப்பேறும்! (1)

நன்றலாச் செயல்செய அஞ்சுமின் அஞ்சுமின்
நல்லன புரிபவர் திடதீர்க்கர்! (2)

நல்லதே எண்ணிடு நெஞ்சகர் நன்னெறி
நடந்திடத் திடம்தரும் நலம்தேறே! (3)

நற்குரு பொற்பதம் புலமைகள் நல்கிடும்
நன்றுபெற் றோங்கிட அருள்கூறும் (4)

நல்லெணம் நற்செயல் நன்மைகள் புரிபவர்
நற்குரு தேட்டமும் உடையோராம் (5)

நமனிருள் கெடவொளி அருளுல கடைவர்கள்
நன்னெறி மெய்வழி அடைவீரே (6)

நானிலம் போதரும் நாதர்மெய் ஆண்டவர்
நற்கழல் படிபவர் நலமேவும் (7)

நல்லுயிர் நற்கதி அடைந்திடும் நல்வழி
நலமுயர் மெய்வழி தொடர்வீரே (8)

4. நற்பதம் நல்கிட நாடிய நாயகர்

நாதர்மெய் ஆண்டவர் புவிமீது (1)

நல்ல அமானிதம் ஏழது நன்கறி
நன்னிய ஏழனுள் முதல்காலம் (2)

நடந்தது சென்றது நடப்பது இன்றது
நாளை நடப்பது எனமூன்றாம் (3)

நன்மனுக் காயிது ஆயுளாய் வகுத்தது
நல்கிய நூறெனும் ஆண்டாகும் (4)

நவின்றதில் முன்னான் காணது விளையாட்
டயர்வது எனவதில் செலவாகும் (5)

நான்கொன் பானது முதுமையில் தீர்வது
நித்திரை இருபத் தாறாகும் (6)

நவின்றிடு இருபத் தாறதில் கல்வியும்
நாடிடும் சுகமதில் முடிவாகும் (7)

நண்ணிடு ஆயுளில் நற்கதி உயிர்க்கென
நாடிடில் இலையென முடிவாகும் (8)

5. நலமிகு சுவர்க்கமே பெறமுயல் காலமும்

நயந்திடில் அதற்கொரு வழியுண்டு (1)

நற்றவர் நல்லடி நாடிடில் நற்றய
வாலவர் சென்றநாள் மீட்பார்காண் (2)

நற்கதி சேர்ந்திட நல்வரம் நல்குவர்
நல்லுயிர் நற்பதி இனிதேகும் (3)

நல்லுரை நல்லவர் நவிலுவர் அதுவென
நன்னெறி முறைவழி நடையாகும் (4)

நன்மனுக் குளகடன் நீதியும் அறமுரை
நல்லதும் அல்லதும் இதிற்சேரும் (5)

நலந்தரு நற்குரு சார்ந்தவர் தயவினால்
நலமுயர் சாகாக் கலையாகும் (6)

நமனிடர் தீர்ந்திடும் குருபரர் வரந்தரும்
நல்லடி பணிந்தினி துய்வீரே! (7)

நனதிலை நினதென உடல்பொரு ளாவியும்
நற்குரு விற்கெனத் தருவீரே! (8)

6. நல்லதோர் வாசியும் தன்வச மாகிட

நலம்பெறும் வித்தையை அறிவீரே! (1)

நற்பவ வாழ்வினில் நன்னெறி முறையுறில்
நற்குரு நித்தியம் அருள்வாரே! (2)

நிலமிசை அகம்புறம் வாழ்வினில் வாழ்வது
நற்குரு பரரது தயவாகும் (3)

நற்றவர் பாற்கொளும் அன்பதே ராகமாம்
நல்லதாம் பக்தியென் றறைவார்கள் (4)

நாதராம் முழுமுதல் இறைவரே குருவென
நானில மீதினில் வருங்காலம் (5)

நன்கினி தோர்மினே நல்லவர் அருள்தரும்
நற்குரு வின்பெரும் துணையாகும் (6)

நன்னிலை பெறுவதே வாழ்வதின் குறியென
நன்மனு வேயிதை அறிவாயே! (7)

நல்லதாம் சுத்தமாம் மாயைய(து) ஏழது
நலம்தரும் இறைநிலை அறிந்தோர்கள் (8)

7. நற்குரு குலமதில் நிலைபெறும் வாசமும்

நண்ணிடில் இதுமிக எளிதாகும் (1)

நற்றிரு அருள்முக தரிசனம் பவவினை
நலிந்திட நவநிதி வழிகோலும் (2)

நற்பதம் பணிவதும் திருப்பணி யியற்றலும்
நற்புகழ் பரவுதல் துணைகூட்டும் (3)

நற்புணை பவக்கடல் கடந்திட நெடுவழி
நற்றுணை நமதிறை உணர்வீரே (4)
நறகுரு குலமணி நலம்புனை அனந்தரின்
நயமிகு இனியசொல் புகல்வீரே (5)

நம்பிதா பொன்தரு வாய்மலர் பொழிந்திடு
நறைமது ரம்மொழி கேட்பீரே (6)

நன்றதே என்றுமே நமனிடர் நலிந்திடும்
நம்பிரான் பதமலர் பணிவோமே (7)

நற்றலை மைப்பதி நலமெலாம் திரள்வரு
நல்லெழில் மேனியர் நமதையர் (8)

8. நல்வரம் நல்கிட நானிலம் நண்ணினர்

நனியுயர் நாயகர் நற்றாள்கள் (1)

நத்திய பத்தியர் சத்தியர் நித்தியர்
மெத்தவும் உத்தமர் அனந்தாதி (2)

நித்தமும் புதியவர் நிர்மலர் புதல்வர்கள்
நிஜநிதி பெறும்திருக் குலமானார் (3)

நன்மையே எங்ஙணும் நல்லுயிர் அனைத்துமே
நந்திடா நிலைபெறும் உயிர்ஓங்கும் (4)

நாதரே நம்திருப் பொன்மலர்த் தாளிணை
நாடினோம் பற்றினோம் நலமீய்வார் (5)

நமதுயிர்க் குயிரெனும் நலந்திகழ் அருளினர்
நாமமே போற்றியே புகழ்பாடும் (6)

நல்வழி மெய்வழி உய்வழி செய்வழி
நம்பிரான் திருவடி துணையாமே. (7)

நற்கதி நல்கிடும் நற்பதம் நத்திடில்
நற்றவர் நல்வரம் அருள்வாரே! (8)

சந்தக்குழிப்பு 7

தான தனதன தான தனதன
தான தனதன தனதான

ஆதி அரியவர் பாற்க டலின்மிசை

அனந்த சயனம்செய் ததுகாலை (1)

ஆதி பிரம்மமே அயர்ந்த உறக்கமே
ஆழ்ந்த பொழுதினில் மறையாவும் (2)

அவரின் சுவாசத்தி னின்று வெளிவர
அயர்வில் அந்தஹயக் கிரீவனும் (3)

அந்த மறைகளைக் கவர்ந்து கடலிடை
ஆழ்ந்து ஒளிந்ததை அரிகண்டார் (4)

அந்த சமயமே சத்ய விரதனாம்
அரியின் பத்தி மிகுந்தோனாம் (5)

அன்று தருப்பணம் செய்த பொழுதினில்
அவன்கம லண்டத்துள் சிறுமீனாய் (6)

அரியும் படிந்தனர் என்னை வளர்என
அரசன் அவ்வணம் செயலானார் (7)

அதுவும் வளர்ந்தது பெரிதாய் உருவொடு
அரசர்க் குரையது சொலலாகும் (8)

2 அரசே ஒருபுணை யதனை இயற்றிடு
அனைத்து உயிர்களின் இணைசேர்ப்பாய் (1)

அதனில் ஏற்றிடு ஜலப் பிரளயம்
ஆர்ந்து வந்திடும் அதுகாலம் (2)

ஆற்றல் மச்சமாய் யான்வந் தேயுனை
அரிது காத்திடும் அஞ்சேலே (3)

அந்த மறைகளை மீட் டெடுத்திடும்
அகிலம் யாவையும் காப்போனே (4)

அந்த மீனது உரைத்த படியவன்
அப்பு ஓங்கிய பிரளயம் (5)

அசுரர் ஒழியவே அமரர் செழிக்கவே
அரியும் செய்திடும் அவதாரம் (6)

ஆதியில் முதல் வந்த பிரளயம்
அரசன் சத்திய விரதனும் (7)

அவனே வைவஸ்வத மனுவும் ஆயினன்
அறிமின் அகிலத்துள் வதிவோரே (8)

3. ஆரெழில் நன்மலர் மாலை யைத்துரு

வாசர் கொணர்ந்தவர் வருகாலை (1)

அங்கு வருகைசெய் தேவேந் திரர்க்கதை
அன்பொ டளித்தனர் அதுவாங்கி (2)

அவனின் ஐராவ தமெனும் கரியது
அடியில் போட்டு மிதித்தேகும் (3)

அதுகண் டார்முனி புங்கவர் சினந்து
அவர்க்கு சாபம் கொடுத்தாரே! (4)

அதனால் மூன்றெனும் உலகம் சோபையும்
இன்றிக் களையதும் இழந்தேகும் (5)

அந்த இந்திரன் மண்டி யிட்டுமே
அரிய முனிவரை மிகவேண்டும் (6)

அவரி ரங்கியே கூர்ம மாம்அவ
தாரத் தில்அது தெளியும்மே (7)

அன்ன வாரவர் சாபவி மோசனம்
ஆகும் மெனஅவர் உரைகூறும் (8)

4. அந்த வேளையில் அரக்கர் வென்றனர்

அமரர் தோற்றனர் தேவாதி (1)

ஆதி நாரணர் சன்னிதி சென்று
அடிபணிந்து முறை யிட்டாரே (2)

அதனை ஏற்றனர் அமிழ்தம் கடையவே
ஆணை யிட்டனர் நாரணர் (3)

அந்த மேருவே மத்ததாம் அடியில்
அரியும் கூர்மமாய் இலங்கும்மே (4)

அமிழ்தம் வந்தது அரக்கன் கவர்ந்துமே
அகன்று ஓடினான் அரியன்னார் (5)

அழகு மோகினி வடிவாய் வாங்கியே
அமரர்க் கேபகிர்ந தளித்தாரே (6)

அரக்கன் சுவர்ண பானு பெற்றனன்
அரியவன் தலையைத் துணித்தாரே (7)

அவனே ராகுவும் கேது மாயினர்
ஆன்ற கூர்மமாம் அவதாரம் (8)

5. அரியின் வைகுந்த வாயில் காவலர்கள்

அவர்ஜெய விஜயர்கள் :அதுகாலம் (1)

அரியின் பக்தரை வணங்கி வழிவிடல்
அவர்தம் வழக்கமாய் :உளநாளில் (2)

அவர்தம் உளமதில் கருவம் ஆணவம்
அதிக ரித்தன அதனாலே (3)

அரியர் நால்வராம் முனிவர் வருகையில்
அவர் தடுத்தனர் அதுபோது (4)

அரிநா ராயணர் அங்கெ ழுந்தருள
ஜயவி ஜயர்கள் துதித்தாரே (5)

அற்பு தமுனிவர் சாபத் தாலவர்கள்
அரக்க ராகிடும் நிலையாக (6)

அரிய மாமுனி காஸ்ய பர்மனை
அன்பு திதிவயி றதில்தோன்றும் (7)

அரக்கன் இரண்யாட் சன்இ ரணிய
கசிபு என்றுரு வேற்றாரே (8)

6. அனைத்து தேவர்கள் தம்மை வென்றனர்

அடிமை யாக்கிடத் துடித்தாரே (1)

அந்தக் கடவுளர் எங்கே எனவவன்
அற்பன் அகங்கரித் துறுமினான் (2)

ஆதி நாரணரும் வராக மாயங்கண்
அவதரித்துவளர்ந் திருந்தாரே (3)
அவ்வ ராகமது பூமியைச் சுமந்து
அங்கு போந்ததுகண் டரக்கனும் (4)

அந்த இரணியா ட்சகன் இறையோடே
அமர்புரி ந்தவனும் அழிந்தானே (5)

அண்ணன் இரணியா கட்சன் மாண்டதனை
அந்த இரணியகசிபு அறிந்தானே (6)

அரிய வரமிகு ஆகமாம் இதனை
அறியார் பன்றியென உளறுவார் (7)

ஆருயிர்க்குவரம் தருகு மேனியரென்
றறிகிலர் உலக மனுவோரே. (8)

7. அந்தக் காசியப முனிவர் பிள்ளையென

இரண்யக் கசிபுவும் தோன்றினன் (1)

அந்தப் பிள்ளையவன் மாதவம் இயற்றி
அரிய வரங்கள்பல பெற்றானே (2)

அரக்கர் வானவர் மிருகம் மனிதரால்
அல்லில் பகலிலுமே இறப்பில்லை (3)

அகத்தில் புறத்திலும் சாவிலை என
அற்புத வரமே பெற்றானே (4)

அரியின் நாமமே உரைத்திடேல் எனையே
ஆர்ந்து வணங்குமின் என்றானே (5)

அவனின் பிள்ளையாய் பிரகலா தனவன்
அங்கு தோன்றினன் அரிபக்தன் (6)

அரியின் நாமமதே உயர்ந்த தென்றினிது
ஓதினான் தகப்பன் மோதினான் (7)
அன்புக் குமரன்தனுக் கிடர்கள் செய்துமே
அரக்கன் மாற்றிடவும் முயன்றானே (8)

8. அணுவ ளவும் பிற ழாத பக்தியினன்

அரியின் பக்திநிலை நின்றானே (1)

அரிய நாமமேசங் கீர்த்தனம் செய்து
அமரர் போற்றிடவே வாழ்ந்தானே (2)

அருமை மைந்தன்தனை மாற்ற ஆற்றலிலான்
அவனைக் கொல்லவே ஏவினனே (3)

அத்தனை கொடுமை வீய்ந்தன குமரன்
அப்பனின் கொடுமை சகித்தனனே (4)

அந்த அரியும் எங்குளான் எனவும்
அந்தத் தூணிலுளன் என்றனனே (5)

அரக்கன் தூணுதைக்க நரசிம்மம் வந்து
அவனை மடிவைத்துக் கொன்றனரே (6)

அமரர் ஆற்றலது வென்றது அரக்கர்
ஆழ்ந்து ஒழிந்தனர் அறிமின்னே (7)

அசுரத் தன்மையது மாய்ந்து அமரர்திறம்
ஆங்கு உற்றதிது தெளிமின்னே (8)

அரியின் பக்தராம் பிரக லாதர்தம்

அரிய பேரனாம் மகாபலி (1)

அன்னவன் இந்த்ர உலகம் வென்றிடவே
ஆவல் கொண்டனனே அந்நாளில் (2)

அவர்க்குப் பிருகு குலத்து மன்னர்களும்
அரிய உதவிகளும் செய்தாரே (3)

அசுர குருசுக்ரர் ஆதரித் ததனால்
அரக்கர் வலிமைமிக் குற்றாரே (4)

அமரா பதியதன் மேற்போர் புரிந்தவர்
ஆட்சி தன்னைகைப் பற்றினரே (5)

அமரரின் அன்னை அதிதி இந்நிலையை
அறிந்து வேதனைமிக் குற்றனளே (6)

அரிய மாமுனிவர் காஸ்யபர் இதனை
அரிநா ராயணர்க்கு உணர்த்தினரே (7)

அரியும் நினதுமக வாக உதித்திடுவேன்
ஆற்றல் வாமனரென் றாகுவமே (8)

2. அசுரர் தமையெலாம்வென்று மீட்டிடுவேன்

அமரர் வாழ்வுபெறும் அறிமின்னே (1)

அந்த வேளைதனில் மாபலி விஸ்வஜித்
யாகம் செய்திடவே மேயினனே (2)

அங்கு வாமனரும் குறிய மேனியது
ஆகம் கொண்டினிது போயினரே (3)

அந்த மாபலிமுன் சென்ற வன்தனிடம்
மூன்றடி மண்ணைத் தானமாய் (4)

அளிக்க வேண்டுமெனக் கேட்டனன் அதனை
அந்த மகாபலியும் ஏற்றனனே (5)

அண்ணல் ஓரடியால் விண்ணை ஓரடியால்
மண்ணையும் யும்அளந் தார்தாமே (6)

அடுத்து ஓர்அடியை மாபலி தலைமேல்
அரியும் வைத்துமிக அழுத்தினார் (7)

அரசன் மகாபலியும் அழுந்தி பாதலத்தின்
அரசு ஆகிடவே ஏகினனே (8)

3. அழகர் சந்திரனின் வழிவ ழிவருகும்

அரியர்க் காதியவர் புதல்வராம் (1)

அற்புத முனிவர் ரிஷிகர் நன்மணமும்
கொண்டு ஈன்றனர் மகனென (2)
ஆன்ற ஜமதக்னி முனிவர் நன்மனைவி
அன்பின் ரேணுகா அம்மையாம் (3)

அம்மை ஈன்றருளும் மகவுள் பரசுயர்
ராமரென் றொரு முனிவராம் (4)

அந்த நாளினில் கார்த்த வீரியார்ச்
சுனன் கரங்களா யிரம்கொண்டோன் (5)

அன்னவன் படைக்கு அமுது அளிமினென்
அரிய முனிவர்தமை வேண்டினான் (6)

அற்புதம் மிகுந்த காமதே னுவினால்
அனைவ ருக்கும்பசி யாற்றினார் (7)

அதுகண் டரசனும் காம தேனுவினைக்
கவர்ந்து தன்னகரம் ஏகினான் (8)

4. அதையறிந்த ரிஷி பரசு ராமரிடம்

அறைய அன்னவரும் சென்றும்மே (1)

அரசின் ஆயிரமா கரங்கள் சேதித்து
அரிய காமதேனை மீட்டாரே (2)

அதுகால் அன்னையாம் ரேணுகை கந்தர்வன்
அழகைக் கண்டு வியந்தாளே (3)

அதையறிந்த ரிஷி தாயை வெட்டிடவே
பரசு ராமரைஆக்ஞா பித்தாரே (4)

அன்னை தலைவெட்டி அத்தன் வரம்பெற்று
அன்னை தன்னை உயிர்ப்பித்தாரே (5)

அரிய ஜமதக்னி முனிவர் தலைதனை
அரசர் குமரர்கள் வெட்டினரே (6)

அவரை உயிர்ப்பித்து பரசு ராமரவர்
அரசர் குலம்கரு வறுத்தாரே (7)

அந்தப் பாவங்கள் தீர்க்க வேண்டியவர்
யாத்திரை மேற்கொள லாயினரே (8)

5. அசுரன் ராவணன் அருந்தவம் செய்து

ஆற்றல் மிக்கவரம் பெற்றானே (1)

அன்னோன் மாமுனிவர் அன்னை போல்பவர்க்கு
அதிக இன்னல்கள் செய்தானே (2)

அதுகால் அயோத்தி மன்ன வர்க்கு அரும்
தவத்தால் நான்குமக வுதித்தனர் (3)

அரிய ராமரென அன்று தித்தனராம்
அற்புதமிகு வில் லாளிகாண் (4)

ஆன்ற மாமுனிவர் விஸ்வா மித்திரரின்
யாகம் காத்துவரம் பெற்றாரே (5)

அரசர் ஜனகருடை வில்வ ளைத்தவரின்
மகளாம் சீதையை மணந்தாரே (6)

அன்னை கைகேயி வரத்தினால் ராமர்
அருந்தவம் செய்யக்கான் ஏகினரே (7)

அரிய தம்பியெனும் லக்குவன் சீதை
அவருடன் தொடர்ந் தேகினரே (8)

6. அரக்கன் ராவணன் சீதையைக் கவர்ந்து

அவ்விலங்கை தனில் வைத்தனனே (1)

அரிய ராமபிரான் இலக்குவன் வருந்தி
அங்கு மிங்குமே தேடினரே (2)
அனுமன் நற்றுணை கொண்டி லங்கையில்
அரிவை உள்ளாளென் றறிந்தாரே (3)

அற்புதப் பாலம் அமைத்து வீடணன்
அங்கு வந்துதவி செய்தானே (4)

அரசர் கோமகனாம் அரக்கரை வென்று
அன்னை சீதை சிறை மீட்டாரே (5)

அண்ணல் அன்னையும் இலக்குவன் தன்னோடு
அயோத்தி வந்தர சேற்றனரே (6)

அரியணை மிசை ஏறி இராமரும்
அரசியற் றினர்பல காலம் (7)

அமரர் மீண்டனர் அசுரர் மாண்டனர்
அரியும் பாற்கடல் சென்றாரே (8)

7. அறம் குறைந்துமே அதர்மம் ஓங்குகால்

அகிலம் காத்திட வரும்யானே (1)

அரிய கீதையில் அண்ணல்பொன் னுலகில்
வண்ணமாய் அவதாரம் (2)

அரசன் உக்கிர சேனன்தம்பி மகள்
அருமை தேவகிநன மாட்சியாள் (3)

அன்னவள் தனை வாசு தேவர்க்கு
அருமையாய் மணம் செய்தாரே (4)

அருமை மணமக்கள் தேரில் ஊர்ந்தகால்
அரசன் கம்சனெனும் அரக்கனாய் (5)

அந்த வேளையில் அசரீரி ஒன்றினை
ஆகாயம் தனில் கேட்டானே (6)

அரிவை தேவகி மகனே உன்றனை
அழிப்பன் என்றுதும் வாளேந்தும் (7)

அந்த வேளையில் வாசுதேவர் தடுத்(து)
அனைத்து குழந்தைகளைத் தந்திடுவேன் (8)

8. அழித்திடேல் இவள் தன்னை விட்டிடு

என்றி றைஞ்ச அவன்விட்டான் (1)

அடுத்து ஈன்றிட்ட ஆறு செல்வத்தை
அழித்தனன் கம்சன் வாளாலே (2)

அருமைக் கிருஷ்ணரும் அவதரித்தனர்
அவரைக் கோகுலம் சேர்த்தாரே (3)

அந்தக் கண்ணனை அழிக்கக் கம்சனும்
அரிது முயன்றுமே தோற்றானே (4)

ஆழ்மடுவினில் காளிங்க ரவினை
அழித் தொ ழித்தனர் கண்ணன்தான் (5)

ஆர்ந்த கோவர்த்தன கிரியின் குடை
யாலே கோகுலம் காத்தாரே (6)

அரக்கன் கம்சனை கண்ணபி ரானவர்
அழித்து வெற்றிமே டேறினரே (7)

அடுத்து வருவது கல்கி அவதாரம்
என்றுரைத் தனர் ஆதியே! (8)

சந்தக்குழிப்பு 8

தான தான தான தான
தான தான தான தான
தான தான தான தான தனதான

ஆதி தேவன் தூலம் கொண்டு

ஆழி சூழ்பு வியில் வந்து
அன்பு ளோரை ஆண்டு கொண்ட தவராஜர்! (1)

அந்த எமன் வந்த போது
அஞ்சேல் என்று ஆத ரிக்கும்
அண்ணல் சாலை ஐயர் பாதம் பணிவோமே! (2)

அங்க யற்கண் அம்மை கேள்வர்
அண்டும் ஜீவர் நன்று உய்ய
அருள்வ ரங்கள் தருகு மெங்கள் குருதேவர்! (3)

அரிய வேதம் தெளிவ தாக
அருஞ்சொல் மந்திரம் குருசொல் எந்த்ரம்
அருண்மெய்ச் சாலை குருவின் சேத்ரம் அடைவீரே! (4)

அனைத்து சாதி மதமும் ஒன்று
அகில மீதில் பேத மில்லை
யாவர்க் கும்பே ரின்ப வாழ்வு அருள்வாரே! (5)

அல்லலில்லா எல்லை சாலை
அருந்த வர்கள் உறையும் சோலை
அரனைப் பணிதல் ஒன்றே வேலை இதுகாலம்! (6)

அகில உலகோர் பிணிகள் அடைவர்
அவர வர்க்கும் முதுமை வருகும்
அடைவர் ஏமன் நரகம் இறுதி அறிவீரே! (7)

அதன்முன் சாலை ஐயர் நாமம்
அணுவும் மறவா துரைத்தல் சேமம்
அழியாப் பதியின் குடியாய் ஆவோம் இதுதீர்க்கம்! (8)

2. கல்கி அவதா ரம்வந் தேறும்

கலியன் கொடுமை அனைத்தும் மாறும்
கலைமெய்ஞ் ஞானம் செழித்து ஏறும் அதுநாளில் (1)

கண்ண பெருமான் விஸ்வ ரூபம்
காட்டும் மாந்தர் தாபம் தீரும்
காணும் அருளார் ஒளியின் தீபம் எழிலாரும்! (2)

காமம் குரோதம் மோகம் அழியும்
கர்த்தர் திருவாய் அமுது பொழியும்
கலைகள் அனைத்தின் அருமை தெரியும் உயர்மாட்சி! (3)

கனிந்து பற்றில் பக்தி பொங்கும்
கட்டு ஒழிந்து இன்பம் தங்கும்
கடிய எமனின் அச்சம் மங்கும் கருதுங்கள்! (4)

கண்ட பேர்க்கு இல்லை சாவு
காட்டும் குருவின் பாத மேவு
கருணைத் தலமாம் சாலைதீவு கனிவோங்க! (5)

கலியன் கல்வி வயிற்றுப் பாடு
கலைமெய்ஞ் ஞானக் குருவைத் தேடு
கடவுட் காட்சிக் கேது ஈடு இறைமாட்சி! (6)

கண்டு தெளிந்தோர் ஞானி யாகும்
கசடு இல்லை கழிந்தே போகும்
கல்ப தருவே குருவே யாகும் பதம்சூடும்! (7)

கருத்தில் தெளிவு செம்மை துலங்கும்
கலக்கம் மறைந்து ஞானம் இலங்கும்
கலக்க மில்லார் தொடர்பு முழங்கும் உயர்சாலை! (8)

3. அறத்தின் தந்தை அறிவின் தாயாம்

அன்பின் மூலம் அகமார் சீலம்
ஆற்றல் கோலம் ஆண்டார் சாலை குருநாதர்! (1)

அனைத்துள் உள்ளார் அனைத்தும் ஆனார்
தனைத்தந் தென்னைத் தான் கொண்டார்காண்
வினைத்துன் பங்கள் வீயச் செய்வார் வலமேரு! (2)

ஐம்புலன் அளித்த அரனார் அவரே
ஐம்புலன் நுகர்வும் அவரே ஆனார்
ஐம்புலன் அடங்கும் துறையும் ஆனார் அறவாழி! (3)

அங்கம தாளும் அங்கா ளம்மன்
திங்ஙள் வதனர் திரிமூர்த் திகரர்
செங்க மலர்த்தாள் வருந்த நடந்தருள் திருமாலே! (4)

அறமோர் உருவாய் அமர்ந்தார் எம்மான்
அறத்தான் வருகும் இன்பம் ஆனார்
அறமே அனைத்தும் நல்கும் அறிமின் அமிர்தாழி! (5)

அறத்தான் அழியா நல்வாழ் விலங்கும்
அறமே சுகமாம் அகவாழ் வுய்க்கும்
அறஞ்சீர் அருளும் அதுஎம் தெய்வம் அறம்கோவே! (6)

அறமே நினைக அறமே புரிக
அகிலம் அனைத்தும் அறமே நிறைக
அணுவும் பரிசாய் நெறிநின் றோங்க விழைவீரே! (7)

அறிந்தோர் அழியார் அமல வாழ்வர்
அறத்தின் நிற்போம் அருளார் வழியாம்
அறமெய் வழியே அதுசார்ந்துய்வோம் உலகீரே! (8)

4. கல்விப் பயனே இறைதாள் தொழுதல்

கடத்தின் பயனே இறையுட் காணல்
கருத்துட் தெளிந்து இறையுள் ஆதல் நலம்சேர்க்கும்! (1)
கல்வி கண்கள் போல்வ தாகும்
கல்வி கல்லார் கண்ணில் லாதார்
கல்வி மெய்மை கற்றற் காமே அறிமின்கள்! (2)

கற்றோர் என்னும் இறைசற் குருபால்
கனிந்து பணிந்து வணங்கி வேண்டிக்
கற்றல் உயிர்க்குக் கதிதந் திடுமால் கற்பீரே! (3)


கல்வி வயிற்றுப் பாட்டுக்(கு) அன்று
கல்வி கற்றோன் இறைபால் பற்றன்
கல்வி கற்றோன் அறவோர்க்(கு) உறவாய்த் திகழ்வானே! (4)

கற்றோர் இதயம் கலையின் புதையல்
கற்போர் உள்ளம் அறிவின் வெள்ளம்
கற்றோர் மேலோர் செல்வர் சான்றோர் உயர்ந்தோரே! (5)

கல்வி அழகு உயிருக் கழகு
கடவுள் குருவாய் வருகால் அவர்பால்
கற்றல் மெய்யாம் பொருளைப் பற்றல் தெளிவீரே! (6)

கடைநாள் துயரம் வருகால் துணைவர்
கடவுள் குருவாம் அவரைக் கற்றல்
கல்வி உயிரைக் காணல் பேணல் அறிவீரே! (7)

கல்வி கலைகள் அனைத்தும் இறைவர்
குருகொண் டலென வருகால் பற்றல்
கல்விப் பயன்பெற் றுய்வர் மாந்தர் திருவோங்கும்! (8)

5. அன்பும் சிவமும் இரண்டென் பார்கள்

அவர்கள் அறியார் அன்பே சிவமென்(று)
அறிவோர் அறவோர் சிவமாய் ஆகும் அருள்மேரே!
     (1)
அன்பை அனைத்து உயிரும் விழையும்
அன்பால் அனைத்து உயிரும் இணையும்
அன்பால் இன்பம் விளையும் கனியும் அறிவீரே! (2)

அன்பால் நட்புண் டாகும் அரிய
அன்பால் வாழ்வு சிறக்கும் இனிய
அன்பால் உலகை வெல்ல லாகும் அறவோரே! (3)

அன்பு தான்மெய் உயிரின் சக்தி
அன்பி லாதார் உயிரில் லாதார்
அன்பி னாலே அறம்சி றக்கும் அணியாகும்! (4)

அன்பால் உடலின் புலன்கள் துலங்கும்
அன்பால் உயிரின் பயிர்செ ழிக்கும்
அன்பில் லாதார் பிணத்தை ஒப்பர் இதுகேண்மின்! (5)

அன்பு இறைபால் கொண்டோன் உய்வன்
அரனை அடையும் வழியும் அன்பே
அன்பு ளார்க்கு அகிலம் உறவாம் அறிமின்கன்! (6)

அன்பி லாத உடலின் பொறிகள்
அணுவும் பயனின் றாகு மன்றோ
அன்பி னாலே அறமும் வளரும் அன்பினோரே! (7)

அன்பு கொண்ட நெஞ்சர் தேவர்
அண்டர் தலைவர் தம்மை அடைய
அன்பே மெய்யாம் வழியென்றினிது உணர்வீரே! (8)

6. இனிய மனுவே பெற்ற பரிசு

இன்ப மாகும் மொழிகள் உரைத்தல்
இனிமை நிறைந்த உரைசொல் இனிது உலகோரே! (1)

இனிய மொழியால் இன்பம் பூக்கும்
இனிய புகன்றால் அன்பு மலரும்
இனிய நோக்கால் நேசம் துளிர்க்கும் அறியீரோ! (2)

இன்னுரை யாடில் இதயம் தளிர்க்கும்
இனிய பணிவார் உரைகள் வாழ்வில்
இறைதன் னெறிக்குத் துணை நன்றாகும் இனியோரே! (3)

இனிய பணிவார் மொழிகள் உலகில்
இகத்தின் பத்தின் வாழ்க்கை அனைத்துள்
இணையில் நன்மை பெறநன் குய்க்கும் உணர்வீரே! (4)

இதமிக் கோங்கும் இணங்கிப் பணிவாய்
இன்சொல் கூறல் ஏற்றம் வழங்கும்
இன்னல் வாரா திருமின் நன்றே புவியோரே! (5)

இறைசன் னிதிமுன் அன்பாய்ப் பணிவாய்
இனிய உரைகள் மொழிமா ணாக்கர்
இறைவர் திருவுள் தனக்கு இணக்கர் தெளிவீரே! (6)

இனிய சொற்கள் கனிபோல் இலங்கும்
இன்சொல் பணிவு உலக மாந்தர்க்(கு)
இனிய அணிகள் தேர்ந்து அணிமின் அன்பினீரே! (7)

இரக்கம் ஈகை நடுவு நிலைமை
இறைபால் பற்று இன்சொல் பணிவு
இவற்றோ டியல்வார்க் கென்றும் வெற்றி! தெரிமின்கள்! (8)

7. ஒழுக்க நெறியே உலகோர் வாழ்வில்

உயர்வை நல்கும் உணர்ந்து நடந்தால்
உம்பர் என்றே உலகோர் போற்றும்உணர்வீரே! (1)

ஒழுக்கம் காத்தல் உயர்ந்த பண்பாம்
உலகோர் அதனைப் பேணி உய்யும்
ஒழுக்கம் ஒன்றே வாழ்வின் நியதி உரைகேண்மின்! (2)

ஒழுக்கம் நினைவில் சொல்லில் செயலில்
உடையோர் எல்லாம் உடையார் அமரர்,
ஒழுக்க மில்லார் நரகில் அழிவர் இது கேண்மின்! (3)

ஒழுக்கம் உலகம் பழித்த தொழித்தல்
ஒழுக்கம் உயர்ந்தோர் உரைத்த நலம்காண்
ஒழுக்கம் உடையோர் நீடு வாழ்வார் இதுதீர்க்கம்! (4)

ஒழுக்க மில்லார் அரசர் எனினும்
உம்பர் எனினும் உலகம் மதியா(து)
இதனை ஓர்ந்து ஒழுக்கம் பேணுக! உலகீரே! (5)

ஒழுக்கம் உடையார் மறந்தும் பிறர்க்கு
ஊறு செய்யார் உளத்தும் எண்ணார்
ஒளியார் வாழ்வில் உயர்வார் என்றும் ஓங்குவாரே! (6)
ஓதும் பன்னூல் அறிஞர் எனினும்
ஒழுக்க மில்லார் நரகர் அறிமின்
ஒழுக்கம் உயிர்கள் அனைத்தும் காக்கும் உணர்வீரே! (7)

ஒழுக்கத் தாலே உலகம் இயங்கும்
ஒழுக்கம் இன்றேல் உலகே அழியும்
ஒழுக்கம் காத்தல் உயர்ந்த பண்பாம் உணர்ந்தோது! (8)

8.தரும நெறியே சிறப்பும் செல்வம்

தருமம்அ றிமின் தரணி மாந்தரீர்!
தருமம் உரைக்கும் நெறியில் வாழ்வீர்! உயர்வீரே!
     (1)
தருமம் சொல்நெறி நடப்போர் தேவர்
தரும நெறிசெல முயல்வோர் மனிதர்
தருமம் பேணா அவத்தர் அரக்கர் இதுதீர்க்கம்! (2)

தருமம் பொதுவாம் அனைவர்க் கென்றும்
தருமம் தலையைக் காக்கும் அறிமின்
தருமத் தாலே உலகம் இயங்கும் இதுகேண்மின்! (3)

தருமம் மனத்தினும் மாசில் லாமையாம்
தருமம் சொல்லில் செயலிலும் தூய்மையாம்
தரும நெறியில் சிறிதும் தவறேல் மறவாதீர்! (4)

தருமம் என்றும் நின்று நிலவிடும்
தருமம் குறைந்திடில் தரணி அழிவுறும்
தருமம் என்றெக் காலும் செய்குமின் திடமோங்கும்! (5)

தருமம் ஓர்உரு இறையாய் வந்திடும்
தருமம் வகுத்த நெறிகைப் பிடிமினோ
தருமம் பிறவி நோய்தீர் மருந்தென அறிவீரே! (6)

தருமம் உரைநூல் மறைகள் தெளிமின்
தருமம் தன்னால் சகலம் வந்துறும்
தருமம் குறையின் அழிவு நேர்ந்திடும் அறிவீரே! (7)

தருமம் மெய்வழி தெய்வம் அறிமின்
தருமச் சேத்திரம் மெய்வழிச் சாலை
தரும மாமறை வேதாந் தங்கள் இறைபோற்று! (8)

திரு ஒலியந்தாதி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!