திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/041.மெய் பெறு நிலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
41. கையறு நிலை
தொகுஇலக்கணம்:-
மிகமிக அன்புற்றவரின் பிரிவை எண்ணி அவர்க்கு உற்றவர் மனம் கலங்கிப் பாடுவது கையறுநிலை என்பதாம்
வலங்கெழு வேந்தர் வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே - பன்னிரு பாட்டியல் 230
கலியே வஞ்சியிற் கையற வுரையார் - பன்னிரு பாட்டியல் 231
வெருவரும் வாளமர் விளித்தோற்கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று -புறப்பொருள் வெண்பாமாலை கொளு 31
முழுமுதற் பொருள், சர்வலோக ரட்சகர், என்னுயிர் நடநாயகர், கர்த்தாதி கர்த்தர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருமுடியேற்று, அருளரசாட்சி, ஞானச்செங்கோல் ஓச்சுகின்றார்கள். ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத ஆயிரம் திருநாமத்திற்கு உரிய எங்கள் தேவகோமான் ஒரு திருமேனி தாங்கி வையகம் உய்யும் பொருட்டாய் அவதாரம் செய்தருளினார்கள். அவர்களின் அவதாரத் திருநோக்கம், கலியுகத்தை மாற்றித் தலையுகத்தை உற்பவம் செய்தல்; அந்நாட்டுக்கு வித்தெடுத்தல் என்பனவாம். போற்றுதலுக்குரிய என்சாமி வான் கன்னி விராட்தவத்தில் ஆழ்ந்து திருமேனியை மறைத்துக் கொண்டார்கள். அணுக்கணமும் பிரியாது உள்ளும் புறம்பும் நிறைந்து உறைந்து கொண்டு இருக்கும் என் ஐயனின் தூலத்திருமேனியின் அருட்பெரும் பேரழகைக் காணவியலா நிலையை எண்ணிப் பாடியது இச்சிறு பனுவல்.
மெய் பெறு நிலை
காப்பு
கலிவிருத்தம்
மெய்பெ றுநிலை மேவியே மாந்தர்கள்
உய்வ டைந்திட உத்தமர் தாள்பணிந்(து)|r}}
ஐயர் வான்புகழ் ஆர்ந்துமே போற்றிசெய்
கைய றுநிலை பாடிடக் காப்பிதே.
நூல்
மருட்பா
பேரான நாட்டுப் பெருமானே! மெய்யருள்செய்
சீராரும் தெய்வத் திருமணியே! - ஏரார்ந்த
சாலை வளநாட! சற்குருவே! சற்சனராம்
சீல அனந்தர்குலத் தெய்வமே! - கோலமிக
வையத் துயிருய்ய வந்த தவமேரே!
ஐயா! எமைக்காத்த அத்தாவே! - துய்ய
மணிவாணி மன்னாவே! மாதாவே! - வானார்
அணியெங்கட் கீந்த அரசே - பணிந்தோர்
பிறவிப் பிணிதவிர்த்த பொன்னரங்கத் தேவே!
அறவாழி அந்தணரே! வேத - நிறைமொழியால் (10)
இன்பம் வழங்கும் இனியவரே எற்குற்ற
துன்பம் தவிர்த்த துரையரசே! - அன்பே
உருவாய் அமர்ந்த ஒருதனிமெய்ச் சீரே!
குருவாய்த் திகழ்ந்ததவ கொண்டல்! - திருவாரும்
நாமம் உரைத்தால் நமனிடர்கள் தீர்ந்தேமெய்ச்
சேமம் செழிக்கும் திருவரத - மாமணியே!
பூமாது பூரித்தாள் பொன்னடிகள் தோய்வுறலால்
நாமாது பூரித்தாள் நால்வேதம் - கோமானே
நல்கியதால் வையகத்தில் வானகமே வந்துறலால்
பல்கியதே ஞானமெனும் பாக்கியமாம் - செல்வச்சீர் (20)
மார்க்கநகர் செய்தவமோ மாண்பார் ஜமாலரசும்
பார்பெரிய தாயரசி பெற்றபெரும் - சீர்வரமோ!
எல்லா மதங்களுமே ஏக்கமுற்று வேண்டியதோ!
பொல்லாக் குலங்கள்விளை பேதகங்கள் - வில்லங்கம்
தீர விழைந்ததுவோ! சீர்மறைகள் மந்திரங்கள்
நேராய்த் தெளிய நிகழ்திறமோ! - பாரகத்தே
முத்தர்சித்தர் ஞானி முனிவரர்கள் மெய்ஞ்ஞான
வித்தகர்கள் வேட்கை விளைவிதுவோ! - இத்தரையில்
முன்சென்ற தீர்க்க தரிசியர்கள் மூதுரையாம்
பொன்னென்ற வாக்குப் பலிதமோ - பொன்குன்றே (30)
எங்களுயிர்க் கானஇனிய தவ வான்பரிசே!
பொங்கு மணமலரார் பூங்கொத்தே! - துங்கஎழில்
பொற்றா மரைக்குளத்து சங்கப் பலகையே!
கற்றார்க் கரிய கலைநிலையே! நற்றவத்தோர்
ஓருருவாய் மும்மூர்த்தி ஓங்கவதா ரம்செய்த
சீருருவாம் எம்சிந்தை மந்திரமே! - ஆரூரா
மட்டில் தவத்தோர்கள் வந்துவந்து வன்கணரால்
பட்டதுயர் தீரப் பலன்விளைக்கும் - திட்டமுடன்
இங்கவதா ரம்செய்த எங்கள் மரகதமே!
பொங்கிவரும் வான்கங்கைப் பேராறே! - திங்களெழில் (40)
சீர்திகழும் பொன்வதனச் செம்மலே! செண்பகப்பூ
வார்மணமே னிகட்டி மாணிக்கப் - பேர்மலையே!
கர்ப்பமுற்று அண்டாண்டம் ஈன்ற ஒருதாயே!
கர்ப்பத்துள் புக்குக் கனிவாகி - நிர்மலராய்
வந்த வடிவழகே! வைரவை டூரியமே!
எந்தையென இங்குற்ற எங்கோவே! - விந்தை
உருவுகொண்டு மார்க்கநகர் ஊரகத்தே தோன்றி
தெருவு விளையாடிச் செம்மைத் - திருவளர்ந்து
கல்லாமற் கற்று கலைபலவும் தான்தேர்ந்து
வெல்வார் எவருமிலை என்றன்றே - செல்வாக்காய் (50)
சீரார் மணம்கொண்டு செம்பொற் சிலைபோற்பெண்
பேரார் குழவி பிறப்புறவும் - ஆர்வமொடு
வாணிபம்செய் நோக்கம் வலுவுறவும் தானெழுந்து
ஆணிப்பொன் நாடர் அயலேகி - காணெழிலார்
திங்களூர் சார்காசுக் காரம்பா ளையத்தில்
எங்களிளஞ் செம்மலே நீரமர்ந்து - பொங்குவள
ஈரோடு மையம்கொண்(டு) ஈடில்சான் றோரென்ற
பேரோடு வாழ்ந்தேசெய் வாணிகத்தில் - சீரோடு
பொற்குன்று சந்தைகளில் நெற்குன்று மேலமர்ந்து
சொற்சென்ற சாதுரியச் செல்வாக்காய் - இற்சென்று (60)
வாழ்ந்து வரும்நாளில் வான்தனிகைப் பாட்டையர்
ஆழ்ந்தபே ரன்பின் அருண்மணியைச் - சூழ்ந்து
இனிது எடுத்தணைத்து இன்பாழி மூழ்கும்
புனித அறம்செய்து பொன்னர் - தனித்தலைமைப்
பேரரசர்க் கெல்லாப் பெரும்பதமும் தந்தருள
சீராய்த் துறவறந்தான் செய்வித்துக் - காராரும்
கொண்டற் கொடைவள்ளல் கூட்டி அகிலவலம்
கொண்டேகி வான்செல்வம் கோடிபல - அண்டர்க்
கரசர்க் கரசாட்சி ஆள்பட்டம் சூட்டப்
பரசுகமார் பேரின்ப போகம் - தரவிழைந்து (70)
ஜீவர்களை மேய்க்கும் திருப்பணிக்குக் கோமானே!
ஆவினம்ஆ டுமேய்ப்புக் காக்குவித்து - தேவாதி
தேவர் திருப்பரமார் சீர்கிரியில் பேர்த்தவத்தில்
மூவா முதல்வர்தமை மூழ்குவித்து - சாவாத
சாயுச்யம் இந்தச் சகத்தோர் பெறவருள
மேயுச்சி விண்ணாட்டிற் கேற்றுவித்து - தாய்மணியாம்
வான்தனிகை வள்ளல் வகுக்க அதுதொடர்ந்து
கோன்மணியெங் கோமான் தவம்புரிய - வான்பதமார்
சன்னதச்சீர் தங்கள் திருக்கரத்தில் ஏந்திவர
அன்னையெனும் பாட்டையர் ஆசீர்செய் - நன்னயமார் (80)
ஞான ரதம்நடத்த நன்மகவே ஏகெனவே
தேனார் திருமொழியால் தான்தழுவ - வானாடர்
தாதை தனைப்பிரியத் தான்கலங்கிச் சொல்லொண்ணா
வேதனையால் தான்துடிக்க வேதாவும் - நீதர்தமை
அன்பால் உயிர்தடவி ஆதரவாய்த் தானணைத்து
இன்பாக ஏற்ற பொறுப்புரைத்து - முன்பாக
தேவர் திருச்சபையின் தீர்மானம் தானுரைத்து
ஜீவரெலாம் காத்திருத்தல் தான்செப்பி - மேவும்
உயிர்ப்பயிர்செய் வேளாண்மை உங்களுக்குண் டென்று
அயர்வறவே அன்புவரம் தந்து - துயர்தவிர்க்கும் (90)
உத்திகளைக் கூறி உடன்யான் வருகுமென்று
அத்தன் தனிகைமணி ஆதரவாய் - சித்தர்கணச்
சீரார் தலைவர்தமைச் செல்ல வழியனுப்ப
பேராளர் எங்கள் பெருமானே! - ஆராலும்
எண்ணியே பார்த்திடவும் ஏலாத பல்லிடர்கள்
அண்ணல் மிகவடைந்தீர்! அண்டினர்க்கு - விண்ணாட்டுச்
செல்வம் வழங்கித் திருச்சபையைத் தோற்றுவித்து
நல்மெய் வழிச்சாலை நாட்டியக்கால் - தொல்பெருஞ்சீர்
வானகத்து ஞானமணி யாபரணம் மக்களுக்கு
தேனகத்தார் பூட்டிச் சிறந்திருக்க - தீந்தமிழ்வாழ் (100)
மாமதுரைப் பொன்னரங்கம் மாட்சிமிகக் கட்டுவித்து
கோமான் அரசுக் கொலுவேறி - ஆமனுமெய்
செங்கோல் புரிகாலம் சீரோங்கு நற்காலம்
அங்கோர் கொடுங்கோலன் ஆங்கிலனாம் - பங்கமடை
பேராசைப் புல்லர் பிரிட்டிஷார் நாடுபிடிப்
போராசை கொண்டு தளவாடம் - சேர்கிடங்காய்
ஆலயத்தைக் கேட்க அரசுகோல்க் கேதெதிர்காண்
சீலமிகு தெய்வம்சிந் தைநொந்து - காலமிது
வாய்த்ததென ஆலயம் விட்டு வழிகடந்து
ஆய்தொண்ட மான்சீமை ஆங்குற்று - காய்கானம் (110)
தன்னை மிகத்திருத்தி தேவால யம்நிறுவி
தென்னோலைக் கூடாரம் தானமைத்துப் - பொன்னாடர்
ஆட்சி புரிந்தீர்கள் ஆயிரம்பல் ஜீவர்களை
மீட்சி புரிந்தீர்கள் வேதாவே! - மாட்சியிது
என்றென்றும் இப்படியே இருக்கும் எனநினைந்து
பொன்றாவாழ் வெண்ணியுளம் பூரித்தோம் - கன்றுகள்யாம்
ஞானப்பால் தான்குடித்து நல்லூற்றம் பெற்றனமால்
வானப்பால் தந்த மதியமுதே! - கோனெங்கள்
தேவாதி தேவா திருவரங்க நாயகரே!
மூவா முதல்வா! முனியரசே! - சாவா (120)
வரமருளும் எங்கள் துரையே! - வானரசே!
சிரோன்மணியே சீரோங்கு செல்வ தயாநிதியே!
வானார்ந்த கன்னி விராட்தவத்திற் கேகினிரே
தேனார்ந்த செஞ்சொல் அமுதருளும் கோனேநும்
கோலத் திருமேனி காணாது வாடுகின்றோம்
சீலத் தவத்தரசே! தென்னாட! - ஞாலத்தில்
காணாக் கருவூலம் காட்டியதுள் ளேற்றிவைத்த
பூணாரம் நீரே! பெருந்தேவே! - மாணெழிலார்
திங்கள் திருமுகத்தைச் சீரார் தரிசனந்தான்
எங்கே இனிக்காண்போம் ஏறுருவே! - மங்காத (130)
பொன்னாற் கிரீடம் புனைந்தெழிலார் பொற்சரிகை
மின்னும் திருவுருமால் மிக்கணிந்தும் - தென்னன்
பெருந்துறையார் வாழ்வு தருந்துறையார் சீரார்
திருச்சிரசை தான்காண்ப தென்னாள் - அருளார்
நளினச் சிரசசைவை நாங்களுளம் பூரித்து
களிதுளும்பக் காண்ப தென்றோ கர்த்தா! - ஒளியார்ந்து
மின்னல் திருமேனி மாட்சியெழில் காணாமல்
மன்னுயிர்கள் வாடிமயங்கு தம்மா! - அன்னையே!
எங்கள் குருமணியே! இன்னமுத வாரியது
பொங்கிவரும் பேரலையே! நித்திலமே! - தங்கும் (140)
இரக்கம் அடைபடுத்த ஏரார் கமலத்
திருநயனம் கண்டு களிக்கும் - தரிசனமும்
மூச்சுவெளி ஓடாத் திருநாசி மிக்கெழிலார்
ஆச்சரியப் பேரழகும் ஆரமுதப் - பூச்சொரியும்
செவ்வல்லி நேரும் திருவதரப் பொன்மலர்வாய்க்
கெவ்வுவமை கூற இயல்வேனோ - செவ்வியநற்
சீர்வரங்கள் நால்வேதம் தேனமுத வாக்கியங்கள்
பேரருளாற் தந்த பெருமானே! - பாருலகில்
சாதிமத பேதச் சழக்குகளைச் சிக்கறுத்து
நீதம் நிறுவியநற் செங்கோலாம் - போதம் (150)
அருட்தேன் பொழியுமெழில் பூவிதழார் இன்பப்
பெருக்கெடுக்கும் ஆனந்த வாரி - குருதேவே!
ஓங்கும் குரல்கேட்டெம் உள்ளம் உருகோமோ?
பாங்கோசை கேட்டுப்பூ ரிக்கோமோ? - ஈங்கிணையில்
கற்பூர வாடை கமழும் திருமலர்வாய்
பொற்பூரும் மார்பகத்தில் முத்தாரம் - நற்பணிகள்
ஒன்பான் மணியால் ஒளிரும்நல் லாபரணம்
இன்போங்கப் பூண்ட எழில்கண்டு - தென்பாய்
வேறு
பூரித் திருந்தோமே பொன்னரங்க நாயகரே!
ஆரைத் தரிசிப்போம் இன்றதுபோல் - நேரில்சீர் (160)
பொன்கலம்போல் நல்லுதரம் வெண்கலம்போல் முன்தாள்கண்
டெங்குலங்கள் ஆனந்தம் கொண்டோமே - தங்களெழில்
சிங்க நடையைத் திருத்தங்க தேரூரும்
பொங்கெழிலைக் கண்டுள்ளம் பூரிப்ப தெக்காலம்
கல்லாரைக் கற்றோரைக் கனிவோடு ஆதரித்து
எல்லா வரந்தருகும் இயல்காண்ப தெக்காலம்
பேதம் கருதாமல் பெரிதுசிறி தெண்ணாமல்
வேதம் விளக்குமருள் வினைகாண்ப தெக்காலம்
அல்லற்பட் டார்தம்மை அருகணைத்து ஆதரவாய்
நல்வரங்கள் நல்கும் நலங்காண்ப தெக்காலம் (170)
வாடா மகனே மயங்காதே என்றருளால்
தேடாப் பெருஞ்செல்வச் சீர்தருவ தெக்காலம்
இகமும் பரமும்நான் யானறியா தென்செய்வாய்
சுகமா யிருவென்று திருவருள்வ தெக்காலம்
செல்வர் வறியவரைச் சிறுபேத மெண்ணாமல்
பல்வரங்கள் பேரருளால் பாலிப்ப தெக்காலம்
அன்பே! அறிவுருவே! அருள்நதியே! வான்கடையே!
இன்பப் பெருங்கடலே! இன்னுயிர்க்கு ஓர்துணையே!
தென்பே! தெவிட்டாத தீங்கனியே! பூம்பொழிலே!
பொன்னே! நவரத்னப் பெட்டகமே! கட்டெழிலே! (180)
மன்னுயிர்க் கெலாம்துணையே! வான்மணியே! மெய்ம்முதலே!
தென்னன் பெருந்துறையார் சீமானே! கோமானே!
முன்னவரே முத்தியருள் வித்தகமே! சத்தியமே!
தெருவு விளையாடு சிறுகுழந்தை அன்னை
உருவுகா ணாமல் உருகியழல் காணீரோ
மருவு மணாளன் மறுநாடு சென்றக்கால்
பெருகு கவலைமிகு பெண்டு கலங்கினள்போல்
வெயிலில் கிடந்துபுழு மிக்கத் துடித்தல்போல்
அயில்வேல் அரசே!நீர் அருகின்றி வாடுகிறோம்
ஜீவன் தனில்நீங்கள் சிறிதும் பிரியாமல் (190)
ஓவாத இன்பம் உவந்தளித்த போதிலுமே
தூல வடிவழகைத் தோற்றத்தில் காணாது
ஆலமா லப்பட்டு அடியேம் கலங்குகின்றோம்
நல்லழகும் சொல்லழகும் நளினச் சிரசசைவும்
அல்லும் பகலுமெமை அருகிருந்து காத்ததுவும்
பலவகையால் அன்பதனைப் பாலித் - துபதேசம்
கல்வியெலாம் கற்பித்த கனிவும் பரிவாகப்
பேரிட் டழைத்து பேராத ரவளித்து
நேரிட்ட துன்பமெலாம் நீறாக்கிக் காத்ததுவும்
துன்பமெலாம் தாமடைந்து சுகமெல்லாம் எற்களித்த (200)
அன்புத் தவமேரே! அரியமணிப் பெட்டகமே!
தோன்றாத் துணையாக தேவே இருந்தாலும்
தோன்றும் வடிவழகைத் தோற்றோமே எம்சாமி
தீர்ப்புநாள் என்றுவரும் திருவாட்சி என்றுஎதிர்
பார்ப்பில் எமதுள்ளம் பெரிதும் கலங்கியுள்ளோம்
அவ்வப்போ திங்குறும்பல் அல்லலால் நைகின்றோம்
செவ்வை நெறிநடத்தச் சீராளர் என்றுவரும்
அச்சம் பயமில்லா ஆரூரென் றாலுமின்று
அச்சம் பலவாக அலைக்கழிக்கு தையாவே!
வெம்பி யிருந்தாலும் வேதா வரும்நாளை (210)
நம்பியிங்கு வாழ்கின்றோம் நாதாவே வாருமையா!
தெம்பு எமக்களிக்கச் சீக்கிரமே வாருமையா!
பைம்பொன் பதமலரால் படிநடந்து வாருமையா!
செம்பொன் திருவடிகள் சகம்தோய வாருமையா!
பொன்வாய் திறந்தெமக்குப் பூரிப்புத் தாருமையா!
அன்னை அமுதளித்து ஆதரிக்க வாருமையா!
விழியழகால் எங்கள் வினைதீர்க்க வாருமையா!
மொழியழகால் எங்கள் மயக்கறுக்க வாருமையா!
தவப் பலனைத் தந்து பவப்பிறப்பைத் துண்டாடி
சிவபதத்தைத் தந்தருள சீக்கிரமே வாருமையா! (220)