திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/107.வெற்றி மணி மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
107. வெற்றி மணி மாலை
தொகுநூற் குறிப்பு:-
வேந்தன் ஒருவன் மாற்றரசன் ஒருவனின் மதிலை முற்றுகையிடலும் அரசன் எதிர்த்துப் பொருது வென்று அக்கோட்டையைக் கைப்பற்றிக் கொள்ளலும் வெற்றிமணி மாலையாம். இதன்வாயிலாக எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் புகழ்வதே நோக்கமாம்.
காப்பு
வழிமுறை யறியா மாந்தர்
மயங்கிய காலந் தன்னில்
எழிலுற இனிது போந்து
இன்புறும் ஆறு காட்டும்
அழகியர் சாலை அண்ணல்
அருட்புகழ் போற்றி யிங்கண்
கொழிமணி வெற்றி மாலை
கூறிட அருள்செய் தேவே.
நூல்
அதர்மத்தை அழித்து தர்ம
ஆட்சியுண் டாக்க வென்று
இதமுயர் சாலை தெய்வம்
எழுந்தனர் வெற்றி யோங்க
அதஞ்செயும் அரசர் கோன்மெய்
அறஞ்செயும் கலியை வெல்ல
முதுமொழி வரங்கள் ஈயும்
மாட்சிமை போற்றி! போற்றி!
(1)
உலகினைப் படைத்த ஞான்று
ஒருதனி முதல்வர் மக்கள்
நலமெலாம் பெற்று வாழ்ந்து
நற்கதி யடைய வென்று
வலமெலாம் வழங்கி வாய்மை
வழிவகு த்திட்ட போதும்
நலங்கெடக் கலியன் மேவி
நலியுறு வழியுள் ஊக்கும்
(2)
அறமெனும் கோட்டை கட்டி
அன்பெனும் வாயில் வைத்து
திறமுயர் செல்வம் மெய்ம்மை
தந்தருள் புரியும் காலை
மறந்தரு மாய்கை யாலே
வன்கலி தீங்கு செய்ய
புறம்இடர் தந்தி யற்றும்
பேதமை வீறி யோங்கும்
(3)
விடமிகு வெந்நோய் தன்னை
வியனுல கினில்ப ரப்பி
படுதுயர் பல்கச் செய்யும்
பாதகன் கலியன் காணே
அடம்திடம் உடைய நீதர்
அவனைவென் றெழுந்த ஞான்றும்
திடமிலா மணத்தோர் அன்னோன்
தீங்கினில் ஆழ்ந்தா ரன்றே!
(4)
ஆணவம்
நானெனும் அகந்தை மேவி
நல்லுளம் கெட்டுத் தீய்ந்து
தான்வல்லான் சிறந்தோன் என்று
தருக்கியே வியக்கும் மாந்தர்
ஊனப்பட் டழிந்தார் மாந்தர்
உறுபொருள் காண கில்லார்
தேனமர் தாரோன் தெய்வத்
திருவடி எண்ணத் தேகும் (5)
கோபம்
கோபமே குடிகெ டுக்கும்
கனல்படு பஞ்சு போலாம்
தீபமோ குன்றும் உற்ற
சீர்நட்பு யாவும் தீய்க்கும்
ஆபத்தை விளைக்கும் ஆண்றோர்
அகம்வெறு திடுமற் றன்னோர்
சாபத்தைத் தலைக்கு ஏற்றும்
தீக்கலிப் படையிஃ தொன்றாம்
(6)
மாயை
கண்டதெல் லாம்வி ரும்பும்
கவலையுட் படுத்தும் வேட்கை
விண்புகும் தகுதி மீறி
விழைந்திடும் மயக்கம் கொள்ளும்
எண்டிசை மாந்தர் பாலும்
இரந்திட வெட்கம் கொள்ளா
பண்டிதர் பெரியோர் சொல்லும்
பயன்படாச் செய்யும் மாய்கை
(7)
காமம்
சேமம்தன் மனையா ளோடு
சிறந்திருந் திடுதல் தர்மம்
காமமோ மாற்றான் இல்லம்
கருதுதல் கொடிய பாவம்
காமத்தால் கெட்டோர் கோடி
கடுநர குற்றோர் கோடி
தீமையுட் கொடிது இஃதை
செந்தண்மை பூண்டார் எண்ணார்
(8)
புலை
புலையெனும் பிணமுண் பாவம்
பெருநர கினிலே சேர்க்கும்
குலைநிரப் புயிர்கள் கொன்று
கொடியஅந் நிணத்தை உண்டு
வலைப்படும் எமன்கைக் குள்ளே
மயங்கிடும் மாந்தர் கூட்டம்
நிலைபெறும் உயர்ந்தோர் சான்றோர்
நிணமுணார் சாந்தம் கொள்வர்
(9)
கொலை
தன்னுயிர் போலும் இந்தத்
தரணிவாழ் உயிர்கள் எண்ணார்
மன்னுயிர் கொல்வர் தீய
வஞ்சனை வெறியர் செய்கை
இன்னவர் தம்மை ஏமன்
எரிநர குய்ப்பன் கேண்மின்
வன்னெஞ்சத் தோர்செய் தீங்கு
வன்கலிப் படையுள் ஒன்றாம்
(10)
களவு
பிறர்பொருள் நயக்கும் அந்தப்
பேதைமை களவு என்பர்
அறமிலாப் பண்பை நல்லோர்
அகநடுக் குறுவர் கேட்டு
மறச்செயல் புரியும் இன்னோர்
வெந்நர கவராழ் திண்ணம்
திறமென நினைக்கும் இஃது
தீயவெங் கலியின் செய்கை
(11)
புகை
புகைகொடும் பகைவன் என்று
புந்தியுள் ஓரா மாந்தர்
தகையிலார் புற்று நோயின்
தரகனப் புகைதான் அந்தோ
சுகமென அதனை எண்ணிச்
சோர்வுறும் பணியில் ஆழ்வார்
சகத்தினில் கலியன் ஆய்தம்
சான்றவர் வெறுப்பர் காணே
(12)
சினிமா
திரையினில் படங்கள் கண்டு
சிந்தையைப் பறிகொ டுத்து
தரமுயர் பண்பு கெட்டுத்
தாழ்ந்திடும் மாந்தர் கோடி
அரனுறை மனத்தைப் புன்மை
அழிவுக்கு இடந்தந் தாளும்
நரகதன் ஆய்தம் இஃது
நற்பண்பைக் கெடுக்கும் மன்னோ
(13)
ராஜதுரோகம்
அரன்நெறி சாரு மாந்தர்
அரசினை இகழார் மற்று
தரமிலா திகழ்ந்து பேசேல்
தனக்குத்தான் செய்யும் தீங்காம்
அரசன்யா ரானா லென்னும்
அவர் செய்கை நீதியாயின்
அரசுகோல் துரோகம் செய்யார்
ஆன்றவர் செய்கை இஃதாம்
(14)
வஞ்சகம்
நீதமே இயங்கும் இந்த
நெஞ்சகந் தன்னில் மாந்தர்
பேதமே விளைக்கும் வஞ்சப்
புன்மைகள் நினைந்து தீய
பாதகம் விளைகின் றஃதால்
படுதுயர் பலவா கிற்றால்
பூதலம் தன்னில் பொய்மை
போக்கிட இறைபோந் துற்றார்
(15)
மண்ணாசை
மண்இது என்ன தென்று
மயங்குவன் பேதை ஆயின்
மண்ணது இவன் என்னுள்ளே
மடிந்தடங் கிடுமென் றோங்கும்
மண்வெறி கொண்டு இங்கண்
மாண்டபல் சாம்ராஜ் யங்கள்
மண்வெறி கலியன் கைக்கொள்
மாபெரும் படைகாண் மன்னோ
(16)
பொன்னாசை
பொன்னதன் ஆசை யாலே
பூதல மாந்தர் எல்லாம்
என்னது என்ன தென்றே
எளிதிலா சையுள் வீழும்
மன்னவர் மற்று பல்லோர்
மாய்ந்தது கணக்கே யில்லை
தென்னவர் பாண்டி நாடர்
திருவடி சார்மின் நன்றே!
(17)
பெண்ணாசை
பெண்ணின்பால் காமமுற் றோர்கள்
பேதமை மீக்கொண் டாழ்ந்து
மண்ணினில் மடிந்த சேதி
வரைந்திட அளவோ இல்லை
பெண்ணவள் தாய்க்கு லம்காண்
பேதையீர் அழிதல் வேண்டாம்
நண்ணுநன் மணையா ளோடு
நல்லறம் புரிமின் மக்காள்
(18)
அகங்காரம்
யான்என தென்று மாந்தர்
எளிதிலா சைப்பட் டாழ்வார்
தானெனும் கருவத்தாலே
தாழ்ந்தவர் கோடி கோடி
வான்பெரி தென்று தெய்வ
மலரடி சார்ந்தால் மெய்ம்மை
தேன்மலர் மணம்பெற் றார்போல்
தரணியில் சிறந்து வாழ்வார
(19)
பொய்ஞ்ஞானிகள்
போலிப் பாசாண்டி யர்கள்
பொய்ம்மையைப் பரப்பி இந்த
ஞாலத்தைக் கெடுத்து வெய்ய
நரகினில் புகுத்தும் மன்னோ
கோலமெய்ச் சாலை அண்ணல்
குணமணி நீதிச் செங்கோல்
சீலமாய் கொணர்ந்த சேதி
செகத்தினோர் அறிந்து பற்றும்
(20)
நாத்திகம்
நாத்தழும் பேற மாந்தர்
நாத்திகம் பேசி மாயும்
ஆத்திகம் ஒன்றே நன்றென்(று)|r}}
அறிகிலார் நிரூப ணம்செய்
சாத்தியம் உற்றார் சாலைத்
தனிப்பதி வருகை கேண்மின்
ஏத்திமெய் முகட்டில் ஏற்றி
எழில்தரும் தெய்வம் போற்றி
(21)
மதம்
மதமெனில் உயிர் பரன்பால்
மருவுறு துறையென் றோரார்
இதங்கெட எழுந்து போர்செய்
தழிந்தனர் கோடி கோடி
இதமிகு மெய்ம்மை ஈந்த
எம்பிரான் சார்ந்தோர் தம்மை
மதமெனும் நெறியுள் நீடு
வாழ்வளித் தார்காண் மக்காள்
(22)
சமயம்
சமயத்தே இறைசார்ந் துற்றும்
தம்மதம் அறியா தோர்தம்
சமயமே பெரிதென் ரோர்ந்து
சண்டையிட் டழிகின் றார்காண்
சமயமொன் றென்று எம்மான்
சாதித்த சேதி கேண்மின்
இமையவர் எங்கோன் சார்ந்து
இனிதுமெய் யறிமின் மக்காள்
(23)
சாதி
சாதித்து மெய்ம்மை தன்னை
சார்ந்திடப் போந்த சாதி
பேதமுற் றலைந்து சாலை
பெருமான்மெய் வழியர் தெய்வம்
நீதமே வழங்கி இந்த
நிற்பவர் தன்னில் ஒன்றே
சாதியென் றேற்று வித்து
சீர்நெறி தந்தார் சார்மின்
(24)
சாவு
சாவினில் இரண்டுண் றென்ற
சேதியை அறியின் மக்காள்
வேதனைச் சாவென் றெண்ணி
வீழ்ந்தவர் புலம்பு வார்கள்
நாதனைக் கைக்கொண் டோர்கள்
நல்லடக் கம்ஆர்ந் துய்ந்தார்
மூதுரை நாதர் சாலை
மெய்த்தெய்வத் தாள்கள் சேர்மின
(25)
அடக்கம்(ஜீவப்பிரயாணம்)
அடக்கமுற் றோர்கள் நாறார்
அழுகிடார் விறையார் தீட்டுத்
துடக்கிலார் இளமை பூத்து
துலங்குவர் வியர்ப்பர் தீர்த்தம்
மிடறினில் இறங்கும் மண்ணில்
மட்கிடார் மண்தாய் காப்பாள்
படுப்பவர் கனமில் லாது
பரமர்தாள் சார்வர் மன்னோ
(26)
கலியனின் ஆட்சி இந்தக்
காசினி முற்றும் ஓங்கி
வலிமைகொள் காலம் வந்தார்
வரந்தரு திருவின் மெய்யர்
பொலிவுறு வாய்மை சீரார்
பொன்னரங் கையர் மேவு
கலியுகம் தன்னை வென்று
தலையுகம் தன்னை ஆக்கும்
(27)
இப்புவி தோன்றிய கால்நின்(று)
இத்தகு மாட்சி இல்லை
செப்பரும் தவத்தார் தெய்வ
திருவடி சார்ந்தோர் உய்ந்தார்
மெய்பதம் பெற்றார் மோட்ச
மேனிலை எய்தினா ரால்
வையகத் தீரே வம்மின்
வானவர் பதம்காத் துய்மின்
(28)
பவப்பிணி தவிர்க்கும் எங்கள்
பரமர்தாள் பணிந்து போற்றி
சிவக்குல மக்க ளாகி
சீர்பெறு தவச்செல் வத்தை
குவையென ஏற்று நம்தம்
குலமெலாம் உய்மின் மக்காள்
தவத்திரு தெய்வம் போற்றி
திருவெலாம் எய்து மின்கள்
(29)
சமரசம்
மெய்வழி ஒன்றே சர்வ
மதங்களின் சங்க மம்தம்
உய்வழி அறிமின் நும்தம்
உயிருய்ந்து ஓங்கு மின்கள்
தெய்வம்வந் துற்ற தோர்ந்து
திருவடி சார்ந்து போற்றி
வையக முற்றும் வாழ்ந்து
வாழிய வாழ்த்தும் மன்னோ!
(30)