திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/051.அருள் தண்டக மாலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



51. தண்டக மாலை

தொகு

இலக்கணம்:-

தண்டகம் என்பது ஆபரணம் எனும் பொருள் தரும் சொல். சொன் மாலையால் இறைவனை அலங்கரித்தல், அர்ச்சித்தல் என்பதே இப்பனுவலின் இலக்கு.

வெண்பாவான் முந்நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே
- முத்துவீரியம் 1068
வெண்பா முந்நூறு கவிப்
பாடல் தண்டகமாலை யாம்
- பிரபந்த தீபிகை 14
தண்டக மாலையே தனிவெண் பாவான்
முந்நூறு செய்யுள் மொழிவது என் புணர்ச்சியே
- பிரபந்த தீபம் 41
வெண்பாவின் முந்நூறு
செய்யுட் கூறுவது இதுவே
புணர்ச்சி மாலை எனவும் படும்
- தொன்னூல் விளக்க உரை ப.203

வெண்பாவால் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் புகழை விதந்தோதுதல் இப்பனுவலின் நோக்கம்.

அருள் தண்டக மாலை

காப்பு

நேரிசை வெண்பா

தொண்டர் இதயமெனும் தூமணி ஆசனத்தார்
அண்டர்க் கரியர் அருட்புகழை - தண்டக
மாலையாய்ப் பாடிடவே சொல்சந்தம் தந்தருள்வீர்
கோலமார் சாலைவள் ளால்.

நூல்

நேரிசை வெண்பா

கடவுள்

கடத்துள் உயிராகக் காணுறலால் தெய்வம்
கடவுள் எனுநாமம் ஏற்றார் - உடனுறைந்து
ஊனாய், உயிராய், உணர்வாய் உணர்ந்தோர்க்கு
தேனாய்த் திகழ்கின்றார் தேர். (1)

கடவுள் எங்கே?

ஈசன் இதயத்துள் என்றேசை வம்உரைக்கும்
வாசம் இருதயத்துள் விஷ்ணுவெனும் - ஏசுமதம்
தூய இதயமெனும் 'கல்பில்'அல் லாவென்னும்
ஆயஇஸ் லாமென் றறி. (2)

கடவுளின் செயல்

மூச்சை இயக்குவதும் மிக்குதிரம் ஓடுவதும்
ஆச்சுநான் நானென் றறைவதுவும் - பேச்சிதனின்
ஓசை ஒலிவளர்வு உற்றுணர்வு உஷ்ணமெலாம்
ஈசன் செயலென் றியம்பு (3)

தன்னை அறிதல்

தன்னை அறிவதுவும் தன்னுயிராம் அத்தலைவர்
தன்னை உணர்வதுவும் தன்கடனாம் - பின்னும்சீர்
மெய்ப்பொருளாம் அத்தலைவர் மேலோர் தமைஉணராப்
பொய்யருக்குப் பொய்யாகிப் போம் (4)

குருவே பரன்

தெய்வம் கடவுளிறை என்றேபல் நாமத்தார்
ஐயன்உள் ளும்புறம்பும் ஆவர்காண் - சீராரும்
பேரார் பராபரையாய் நிற்கும் பரமாத்மா
நேர்நிகரில் சற்குருவாம் காண். (5)

அண்டத்திற் கொத்தது பிண்டம்

அண்டபிர் மாண்டம் அணுவுக் கணுவாயும்
பிண்டத்தில் சிற்றுயிராய்த் தானிலங்கும் - தொண்டர்
இதயத்துள் ளேஒளிரும் ஈசன் இயல்பை
எதையொப்புக் கூறவிய லும். (6)

இறையே குருவாய்வரும்

இறையே குருபரராய் இவ்வுலகிற் போந்து
மறைதெளிய மாற்றிப் பிறக்கும் - துறைகாட்டி
தன்னுலகும் விண்ணுலகும் தான்காட்டி மண்ணவரை
பொன்னுலகிற் கேற்றும் பொலிந்து (7)

இறைவன் சிலைகளில் இல்லை

கல்லில் உலோகச் சிலைகளில்இல் லைதெய்வம்
இல்லம் இதயத்துள் என்றறிமின் - நல்லார்
இறையுணர வேண்டில் குருபரர்தாள் சார்ந்து
துறையறிந்து தேர்மின் தெளிந்து (8)

அவதாரம்

காலகா லங்கடொறும் கர்த்தர் அவதரித்து
ஞாலத்தார் மெய்யறிய நன்கருள்செய் - கோலமிகு
சற்குருதான் மானிடர்போல் தான்மேனி கொண்டிவர்ந்து
பொற்பதியைக் காட்டும் பெரிது. (9)

ஆலயம் எதற்கு?

அறியாப் பருவத்தோர் அந்நிலையி லுள்ளோர்
அறிய இறையொன்று உண்டென் - றறிய
ஆலயங்கள் உண்டாக்கி ஆராத னைநகலாய்ச்
சீலர்செய் சேவை யிது (10)

இறைநினைவூட்டற்கு ஆலயம்

நினைவூட்டற் கென்றே நிறுவினர்கள் கோவில்
தனையுணரற் காகா தவைதாம் - தனையுணர
அவ்விறையே சற்குருவாய் ஆர்ந்துவரும் ஆய்ந்தறிந்து
செவ்வழியைத் தேர்மின் தெளிந்து (11)

போலிகுருக்கள்

சற்குருபோல் வேடமிட்டுப் பொய்க்குருக்கள் போதருவார்
சற்குருவாய் ஆகார்அத் தீயவர்கள் - பொற்புடையார்
சன்னதங்கள் தாங்கியிந்த உன்னதத்தைச் செய்தருள
நன்னயமாய் நண்ணும் இனிது (12)

பொய்ஞ்ஞானியர் செயல்

தாடி சடைவளர்த்து தாம்குருபோல் தாம்நடித்து
நாடிக்குறி யுரைத்து நம்பவைப்பார் - ஆடிப்
பொருள்பறிக்கும் பாசாண்டி போலியர்கள் சார்ந்தால்
இருளுலகில் எய்க்கும் விரைந்து (13)

மெய்க்குரு

ஓர்மொழியால் வேதம் உணரச்செய் சற்குருவே
சீராரும் மெய்க்குருகாண் பாருலகில் - சார்ந்தோர்க்கு
காட்டாதனவெலாம் காட்டிச் சிவம் காட்டும்
தாட்டாமரை காட்டும் தான். (14)

மதங்களின் நோக்கம் ஒன்றே

காலதே சம்வர்த்த மானம் கருதியிந்த
ஞாலத்தே பல்நெறிகள் தோன்றினகாண் - மூலமது
ஒன்றே இறைவழியும் நோக்கம் முடிபனைத்தும்
நன்றே அறிமின் நயந்து. (15)

நெறிகாட்டவே இறைவன்

அவ்வப்போ தாங்காங்கு அவ்விறையே தோன்றி
செவ்வை நெறிகாட்டிச் சீவர்க்கு - இவ்வுலகில்
ஒன்றுக்கொன் றேமாறு பட்டமர்கள் செய்திடவோ
நன்றிறைவர் செய்தார் இது (16)

தெய்வ அவதாரம் எதற்கு?

இதையுணர்ந்தே எம்பெருமான் எல்லாம் சமம்செய்
உதயம்செய் தாரென் றுணர்மின் - நிதம்புதியர்
நன்மார்க்கம் காட்டி நலம்சேர்க்கும் மெய்வழியை
பொன்மார்க்கர் ஈன்றார் பெரிது. (17)

மெய்வழி

பொய்வழியும் பொய்ப்போதம் போயிற்றஃ தோடே
மெய்வழிஒன் றேயினிது மேன்மையுறும் - வையகத்தே
ஒன்றே குலமும் ஒருவரே தேவனென
நின்று நிலவும் நிறைந்து. (18)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஊரும் குலம்மொழியும் வாழ்முறையும் பண்பாடும்
பேரும்வே றாகப் பிரிவுறினும் - சீராக
பிறப்பும் இறப்பும் பெறுமின்ப துன்பம்
சிறப்பும் ஒருபடித்தே தான் (19)

மதம் படைத்தது எதற்காக?

நெறிசெலவே நித்யர் மதம்படைத்தார் தீய
வெறிகொளவோ மார்க்கம் வகுத்தார் - அறிவுடையோர்
எல்லாம்ஒன் றென்றுணர்ந்து பொல்லாப் பொழிந்திடவே
நல்லாறு மெய்வழியை நாடு. (20)

மெய்வழி எதற்கு?

வையகத்தே வந்நமனு வெய்யஎமன் கைச்சிக்கி
நையாது காத்து நலம்பெறவே - ஐயமின்றி
செய்யும் நெறிகாட்டித் தெய்வ பதம்சேர்க்கும்
உய்யச்செய் யும்மெய் வழி. (21)

சமய சாத்திரங்களின் நோக்கம்

சமயமதம் சாத்திரங்கள் சாதிகளெல் லாமும்
இமயவர்தாள் ஏகச் செயவே - அமைந்தனகாண்
துன்பமெ னும்மறலி கைதீண்டா துய்விக்கும்
இன்பநெறி யேமெய் வழி. (22)

மெய்வழியின் செயல்

ஐம்புல னின்நுகர்ச்சி அவ்வழியில் ஏலாமல்
செம்பொருளைச் சேர்ந்து சிறப்புற்று - உம்பர்பதம்
என்னும் உயர்நிலைக்கு ஏகிடச்செய் துய்விக்க
மன்னும் உயர்மெய் வழி (23)

சத்திய மெய்வழி

அழியும் சுகநுகர்ச்சிக் காளாகி மாளா
வழியொன்று உண்டிங்கு மன்னோ - எழிலாரும்
நித்தியத்துள் ஆக்கி நிர்மலர்சார்ந் துய்யச்செய்
சத்யநெறி யேமெய் வழி. (24)

அன்பின் வழி மெய்வழி

வேதாக மக்கலைகள் வித்தியா தத்துவங்கள்
சூதானம் சொல்லும் துறைகேண்மின் - ஈதுலகில்
துன்பம் அணுவுமின்றி தொல்பெருஞ்சீர்த் தெய்வம்சார்
அன்பின் நெறிமெய் வழி. (25)

நித்திய வழி மெய்வழி

ஏடா யிரம்கோடி கற்றாலும் எய்தரிய
வாடா நெறிமுழங்கும் மாதவச்சீர் - கோடா
யிதம்கொண்டு தெய்வ பதம்கண்டு நன்று
சதம்கொள் நெறிமெய் வழி. (26)

எமனை வெல்லும் வழி

செல்லும் வழியெலாம் சீரழிவே வல்லெமனை
வெல்லும் வழியறியா தேங்க - நில்லும்காண்
என்றெமனை வென்று இன்பநெறி விண்டு
நன்றறியும் நன்மெய் வழி (27)

எல்லார்க்கும் மெய்வழி

கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார்க்கும் மாட்டர்க்கும்
எல்லார்க்கும் இன்பம் இனிதுறவே - நல்லார்மெய்
தெய்வம் புவியிவர்ந்து மெய்யாம் தவப்பலன்தந்(நு)
உய்விக்கும் ஓர்மெய் வழி (28)

உய்வழி காட்டும் மெய்வழி

நான்பெரிது நீசிறிது என்றமர்கள் நீக்கியுயர்
வான்பெரிது என்று தெளிவுறவே - தானிவர்ந்து
செய்வழியைக் காட்டி உய்வழியும் கூட்டுவதே
தெய்வம் அருள்மெய் வழி (29)

உம்பர்பதம் வழங்கும் மெய்வழி

நம்பியபேர்க் கெல்லாமே நாலாம் பதமென்னும்
உம்பர்பதம் தன்னை உவந்தளிக்கும் - எம்பெருமான்
சாலை வளவரசர் சற்சனர்க்கு மெய்வழங்கும்
சோலை உயர்மெய் வழி (30)

நற்கதிசேர்க்கும் மெய்வழி

அழியும் பொருள்தேடி அம்புவியோ ரெல்லாம்
ஒழியும் இதுகாலம் வந்து - அழியா
நிதிதந்து நித்ய கதிதந்து தெய்வப்
பதிதந்த தேமெய் வழி (31)

இன்பநெறி

சாகாக் கலையென்று போகாப் புனல்தந்து
வேகாத காலால் நடவென்ற - ஏகாப்
பெருவெளியின் பொன்னரங்கர் பேதமைதீர்த் தின்பம்
தரும்ஒளியர் தாம்மெய் வழி. (32)

ஜீவன் முத்தி

ஜீவன்முத் திக்கென்றே சீரோர் தவமியற்றும்
தேவாதி தேவர் அருள்தரலால் - மூவாத
தேகமுத்தி யுண்டதனால் செத்தா ரெழுந்துவரும்
யோகமுத்தி கூர்மெய் வழி (33)

தேகமுத்தி

சந்திப்பார் எல்லாரும் சாவைத்தான் எம்மானைச்
சிந்திப்பார் தேகம் அழியாது - வந்திப்பார்
முத்தாபம் தீர்த்தேமெய் வித்தகர்தாள் போற்றிசெயும்
நித்தியமே சேர்மெய் வழி. (34)

சீதனம்

துட்டத் தனந்தொலைத்துத் தூயோராய் வேதித்து
சிட்டரென ஆக்கிவிடும் செந்நெறிகாண் - மட்டில்லா
மாதவத்தார் மெய்ச்சாலை ஆண்டவர்கள் ஈந்தருளும்
சீதனம்தான் சீர்மெய் வழி (35)

செவ்வை நெறி மெய்வழி

ஒன்றே குலமும் ஒருவரே தேவனென
நன்றே நிறுவுமொரு நல்லாறே - என்றென்றும்
எவ்வுயிர்க்கும் எண்டிசையும் எல்லாம்செய் துய்திதரும்
செவ்வைநெறி யேமெய் வழி (36)

வேதத்திருவுரு

வேதம் உருவெடுத்து மேதினிக்கு வந்தருளி
சேதம் எனும்மரணம் தீர்த்தருளும் - நாதர்தான்
மெய்வழிசா லையாண்டார் ஐவழிக்கு அப்பாலார்
உய்வழிதந் தாண்டார் உவந்து (37)

மந்திரத் திருவுரு

மந்திரங்கள் யாவும் மணிவிம்ப மெய்யுருவாய்
வந்திங்கண் ஆண்டவராய் தோன்றியதே - சிந்திப்போர்
சிந்தா குலந்தவிர்த்து சீரோங்கு செல்வர்களாய்
நந்தாது வாழ்வர் நயந்து. (38)

ஞானசூரியன்

எங்கும் எவரும்எத் தானும் இயற்றரிய
மங்கா தவத்தங்க மாமலையாம் - எங்கோமான்
வையகத்தில் வந்துதித்து வானோர்செல் வம்வழங்கும்
செய்யகத்துச் செங்கதிரோன் காண் (39)

கார்க்கும் தீ கை கொண்டவர்

தீர்க்கத் தரிசியர்கள் சீரோ டெதிர்பார்த்த
கார்க்கும்தீகைகொண்ட கர்த்தர்காண் - பார்க்குள்
பேதம் தவிர்த்தாண்டு பேரின்ப சித்திதரும்
நாதர்மெய்த் தெய்வம் நவில். (40)

கலியுக வரதர்

ஊழி விதிப்படியே உய்ய உலகமிதில்
ஆழிவாழ் ஐயர் அவதரித்தார் - வாழி
கலியுகத்தை மாற்றிப் புதுயுகத்தை ஆக்க
வலியார்வந் தாண்டார் மதி. (41)

ஆதியும் அந்தமும்

ஆதியும் அந்தமுமாய் ஆனவரே வானவரே
நீதி நிறைந்தபொருள் நித்தியராய் - மேதினியில்
வந்தருளி மாவரங்கள் தந்தருளி நித்தியத்தை
விந்தைமிகத் தந்தார் விரைந்து. (42)

ஆதி விநாயகர்

ஆதிவி நாயகரே அம்புவியிற் போந்தார்காண்
வேதியராய் மெய்ம்மதத்தை ஸ்தாபித்தார் - பூதலத்தே
வேற்றுமையெல் லாம்மடியும் விண்ணுலக மேவிடியும்
ஆற்றலர்காண் அண்ணல் அறி. (43)

கற்பகர்

மானிடர்போல் தோற்றம் மிகக்காட்டும் மாசற்றார்
வானவரே வந்துற்றார் நன்கறிமின் - தானான
கற்பகத்தார் காருண்யர் நற்பதத்தார் நல்லருள்செய்
பொற்பதத்தார் போற்றிப் பணி. (44)

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதமென் றேற்றதனை மெய்ப்பிப்பார்
தம்மதமாம் மெய்வழியைத் தான்காட்டி - பொய்ம்மலங்கள்
போயகல நேயமருள் பொற்பதியர் சற்குணத்தார்
தாயகமாய்த் தாங்கும் தெளி. (45)

பதி

பதியானார் வான நிதியானார் சேரும்
கதியானார் கண்ணகன்ஞா லத்தார் - மதியானார்
என்றும் புதியராய் எண்ணில் பழமையராய்
நின்று நிலவும் இறை. (46)

தவராஜ சிங்கம்

வேதம் உருவான வேதாந்தர் நாதாந்தர்
போதம் அருள்பொழியும் போதாந்தர் - நீதமே
எங்கும் நிலவவருள் தங்கம் தவராஜ
சிங்கம் இவரென் றறி. (47)

ஒண் பொருள்

மந்திரங்கள் தந்திறம்செய் விந்திரத்தார் பந்தமுறு
இந்திரனார் அந்தரத்தின் துந்துமியார் - சந்தமிகு
செண்பகப்பூ மேனியனார் பண்பகம்சேர் வாணியனார்
ஒண்பொருளாய் வந்தார் உணர். (48)

சமரச நாதர்

சர்வமத மந்திரங்கள் மாமறைகள் தாம்தெளிக்கும்
சர்வேசர் சாலையையர் தானறிமின் - சர்வ
சமரசமாய் எல்லாம் தமருகந்து வாழ
எமதையர் ஏற்றும் இனிது (49)

அத்தன்

அத்தனென்பார் மிக்கபரி சுத்தனென்பார் அன்பருளும்
முத்தனென்பார் கர்த்தாதி கர்த்தனென்பார் - வித்தகனார்
சித்தனென்பார் பத்தினர்க்கும் நத்தினர்க்கும் எத்திசையும்
மெத்தஉயர் மெய்வழி ஐயர். (50)

முக்காலம் கண்டார்

மாண்டவரை மீண்டெழுப்பும் மாதவராம் மெய்வழியர்
ஆண்டவர்கள் என்றே அறிமின்கள் - வேண்டுவரம்
மிக்கருளும் தக்காராம் சொக்கேசர் பொற்கோகாண்
முக்காலம் கண்டார் அறி. (51)

மூவா முதல்வர்

ஜீவகா ருண்யர் திருஞான சித்தரெனும்
தேவவான் மேரு அருள்விளங்கும் - மூவா
முதல்வர் முனிவர் தனிகைமணி வள்ளல்
புதல்வர்என் றேயினிது போற்று. (52)

நன்மார்க்கர்

சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே துலங்கவைக்கும்
வித்தகர்மெய்ச் சாலையையர் மெய்யறிமின் - இத்தரையில்
துன்மார்க்கம் எல்லாம் தொலைந்தேகும் என்றென்றும்
நன்மார்க்கம் ஒன்றே நிலை. (53)

செவ்வை நெறி

தென்பால் உதித்ததவ சூரியனார் நேரியனார்
அன்பாய் அறமுரைக்கும் ஆரியனார் - இன்பாலே
இவ்வுலகில் என்றென்றும் எவ்விதத்தும் மெய்வழியே
செவ்வைநெறி நிற்கும் சிறந்து. (54)

ஆதி அரசு

சாதிச் சழக்கர்மதப் பேதப் பிணக்கர்கட்கும்
நீதி யறியாத நீசர்கட்கும் -ஆதி
அரசுவந்து ஆள்கை செய்(து) அத்தனையும் ஒன்றாய்
முரசறைவித் தாக்கும் தெளி. (55)

சோஷியாஸ்

ஆசியாக் கண்டத் ததன்தென்பால் வந்தவர்க்கு
சோஷியாஸ் என்றோர் திருநாமம் - பூசிப்போர்
பொன்றாத வாழ்வுபெறும் பொன்னரங்கர் ஆசிபெறும்
குன்றாத நித்யம் உறும். (56)

மீட்பர்

ஆட்பட்டோர் தம்மையெலாம் ஆதரிக்கும் ஆண்டவர்கள்
மீட்பர் எனும் நாமம் ஏற்றிடுவார் - கோட்களமல்
மீறாமல் மெய்வரங்கள் மிக்கருளும் சொக்கேசர்
மாறா நிலையருளு வார். (57)

தீர்ப்பதிபர்

தீர்ப்பதிபர் என்றோர் திருநாமம் செப்பிடுவார்
பார்பதியர் என்றும் பரவிடுவார் - சீர்பதிக்கும்
தென்னா டுடைசிவனார் பொன்னாடர் விண்ணாடர்
எந்நாட் டவர்க்கும் இறை. (58)

பரிசுத்த ஆவியர்

பரிசுத்த ஆவியரைப் பாங்குயர்தெய் வத்தைத்
தரிசித்தோர் எல்லோரும் தன்யர் - விரிகருணை
வெள்ளம் பெருக்கெடுக்கும் கள்ளம் கருகிவிடும்
உள்ளம்ஞா னத்தோங்கும் காண். (59)

சித்திர மேசானா

சித்திரமே சானாவாய் வெண்டரள வாசியினில்
மெத்தவுமே ஏறி உலாவருவார் - வித்தகராம்
சாலை வளவரசர் சாயுச்யம் தந்தருள்வார்
மேலைவெளி மெய்ம்மருந்து கொண்டு. (60)

பொன்னரங்கத்தாய்

செண்பகப்பூ வாசமுளாள் சீர்மார்க்கக் காரியென
பண்பகத்தி யர்தாம் பகர்நாமம் - ஒண்பொருளோர்
மேனிகொண்ட வாணியருட் காணியம்மை தோணியம்மை
தானிவள்பேர் பொன்னரங்கத் தாய். (61)

மதம்

மதமென்று வந்ததெல்லாம் வல்எமன்கை தீண்டா
இதம்பெறற்கே என்றெண்ணுமின்கள் - பதந்தருமெய்
தெய்வத் திருத்தாளைத் தெண்டனிட்ட பேர்களுக்கு
உய்வைத் தருதல் மதம். (62)

சாதி

சாதியென்று செப்புவது சாவா வரம்பெற்றுச்
சாதித்தற் கென்றே தெளிமின்கள் - வேதியராம்
மெய்வழிதெய் வத்தாள் மிகப்பணிந்து உய்வுற்று
வையகத்தீர் வாழ்வீர் மகிழ்ந்து. (63)

புலை

உணவென்று சொல்லி நிணம்தின்று வாழும்
பிணம்தின்னும் பேய்கள் மனுவோ - குணமோங்கு
மெய்வழியைச் சார்ந்துய்ந்து வெய்யஎம னைக்கடக்கும்
உய்வழியைக் கொண்மின் உவந்து. (64)

கொலை

சிற்றெறும் புக்குமுயிர் தான்தரவே ஆற்றலிலான்
மற்றுயிரைக் கொல்லுவது வன்கொடுமை - சற்றேனும்
எண்ணியிதைப் பாராமல் ஏனோ கொலைசெய்யும்
புண்ணியதயத் தீர்உரைமின் கள். (65)

களவு

தன்பொருளல் லாதவற்றைத் தான்கொள்ள எண்ணுவதே
வன்கொடுமைப் பாதகமாம் மன்பதையீர் - இன்னே
களவுகொடுத் தோர்துடித்தல் போல்அந்தக் கள்வர்
உளம்பதறி ஏகும் நரகு. (66)

கள்

கள்ளுண்டு தாமயங்கி கண்டோர்கள் 'சீச்சீ'யென்(று)
எள்ளற்க் கிடந்தருதல் நன்றாமோ - உள்ளம்
தெளிந்து உயர்ஞான வெள்ளம் பெருகக்
களிவான் அமுதம் பருகு. (67)

பொய்

அஞ்சாமற் பொய்யுரைக்கும் அன்னவர்தம் நாவான(து)
எஞ்சாது ஏகும் நரகிற்கே - மிஞ்சாப்
புழுத்து நெருப்பினிலே போடுமெம தூதர்
அழுத்தும் புழுக்குழிக்கே தான். (68)

சூது

சூதாட்டம் ஆடித்தம் கைப்பொருளைப் போக்கி
வாதாட்டம் செய்கின்றீர் வல்லெமன்முன் - ஏதாட்டம்
செய்வீர் ஏரிதழலில் வீழ்வீர் அதுகாலை
உய்வழி யில்லையுணர் வீர். (69)

பிறன்மனை நயவாமை

பிறன்மனையை நத்தும் பெருங்கொடுங்கா மத்தான்
மறலியம லாலே மயங்கும் - அறக்கடவுள்
ஓவாதறுக்கும் உயிர்வீயும் துன்பியலில்
ஆவா வெனத்துடிக்கும் காண். (70)

புகை

புகையே உயிரறுக்கும் பொல்லாத வாளாம்
பகையாம்கொள் ளிவாய்கொள் பேயாம் - தகையிழந்து
சாவுங்கால் தாங்காத் துயருறச்செய் ஆயுதமாம்
மேவித் தவித்திடச்செய் வேல். (71)

திரைக்காட்சி

இறைவன் குடியிருக்கும் உள்ளத்தில் தீமை
உறையச்செய் வெங்கலியின் ஆய்தம் - மறைந்திருந்து
கொல்லும் பகைவன்போல் அல்லும் பகலுமுமே
வெல்லும் திரைக்காட்சி காண். (72)

ராஜதுரோகம்

அரசை இகழாது அம்புவியில் வாழ்மின்
அரசன் பகைதீங்குள் ஆக்கும் - பரம் சார்ந்த
முன்னோர்மன் னர்பகையால் பட்டதுயர் எண்ணிலவால்
இன்னலற வாழ்வீர் இனிது. (73)

உயிர் வாழ்வு

உடல்வாழ்க்கை ஒன்றேவாழ் வென்னும் உலகீர்!
திடமாம் உயிர்வாழ்வொன் றுண்டு - நடமாடும்
தேகமுள்ள போதே அதைத்தேடிக் கைக்கொண்மின்
ஏகன் இறைவன் துணை. (74)

பிறவிப்பிணி

உடற்குப் பிணியுண்டு காணும் உயிருக்கு
அடர்ந்துவரும் நோயொன்று உண்டு - படர்ந்து
பிறவிப் பிணியாம் மரணமெனும் வெந்நோய்
இறைவ(ர்)துணை யால்வெல்ல லாம். (75)

பிரணவதேகம்

இத்தேகத் தோடேவாழ் வெல்லாம் முடிவதில்லை
சுத்தப் பிரணவதே கம்உண்டு - அத்தேகம்
பேன்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்கு
சீரின்பம் தந்தருளும் தேர். (76)

பேரின்ப தேகம்

பிணிமூப்பு சாக்காடு அண்டாத தேகம்
அணிதிகழும் ஆண்டவரால் பெற்று - கணிக்கொண்ணாப்
பேரின்பம் பெற்றோங்கி நித்தியராய்ச் சத்தியராய்
சீரோங்க வாழும் நெறி. (77)

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்நாள்கள் நூறாண்டு வாழ்ந்தாலும் மாரணத்தில்
ஆழ்நாள்வந் தேதீரும் அஃதின்முன் - வாழ்வாங்கு
வாழும் நெறிகண்டு வான்பதத்தில் என்றென்றும்
ஆழ்மெய் வழிதேர்மின் கள். (78)

மெய்க்கல்வி

மெய்க்கல்வி பொய்க்கல்வி என்று இரண்டுண்டு
பொய்க்கல்வி இவ்வுடல்வாழ் வுக்காகும் - மெய்க்கல்வி
மேலாம் பதமென்னும் நாலாம் பதமருளும்
வாலகுரு வால்அஃ துறும் (79)

பரோபகாரம்

நரராய்ப் பிறந்தோரை நன்மனுவாய் மாற்றி
சுரராக்கித் தேவுலகிற் கேற்றும் - பரபோகம்
எய்திடச்செய் கல்வியதே ஈடில்மெய்க் கல்வியதாம்
மெய்க்குருவை மேதினியில் தேடு. (80)

நற்றாள்

கற்றோங்கும் கல்விப் பயனே இறையவரின்
நற்றாள் பணிவதொன்றே நண்ணுமின்கள் - நற்றுணைசெய்
மெய்க்குருவால் தானிதனை மேவிடலாம் அத்தகையர்
வையகத்தில் வந்துறும்வா னோர். (81)

திருப்பாதம்

ஏழ்நிலைக் கம்பமாய் இலங்கும் திருப்பாதம்
வாழ்நிலை மூவுலகும் மேவுங்காண் - ஆழ்நிலை
மெய்ப்போதம் ஈய வருங்குருவே மெய்வழியுள்
உய்விக்கும் உத்தமராம் காண். (82)

நற்றுணை

இருளதனைச் சங்கரித்து இன்னுயிரில் ஜோதி
அருளதனை ஏற்றும் அகம்சீர் - குருகொண்டல்
நற்றுணையா லன்றே நற்றாள் பரிமளிக்கும்
பற்றிடுமின் பண்பார் பதம். (83)

மூதுரைஞர்

நற்றாள் தரிசனம்செய் விப்போரே ஞானியராம்
முற்றறிஞர் மூதுரைஞர் சற்குருவாம் - மற்றவர்தாம்
தேகம் மறைந்தபினர் தெய்வமெனப் போற்றிடுமெய்ப்
போகம் அவரே அறி. (84)

நித்தியதூலம்

நித்தியதூ லம்எடுக்கும் நேரமதைச் சாவென்று
இத்தரணி யோர்சொல்லும் விண்ணவர்க்கு - மெத்தவது
பொன்னுலகம் தோன்றும் பிறப்பிடமாம் சற்குருவால்
தன்னையறி மெய்வாழ் வுறும். (85)

சாகாமை

அத்தனை மதங்கள் அடித்தலமே சத்துவமாம்
சத்ய உயிர்ப்பான சாகாமை - மெத்த
மறலிகை தீண்டாத மெய்ம்மதமே தெய்வம்
அறவாழி சாலை அரசு. (86)

நரகம்

வித்தாம் கசப்புவெளி யாகல் துயர்மரணம்
நித்ய நரகமதே நேரும் - அத்தகையோர்
கற்பகோ டிகாலம் கஷ்டமுறும் தீநரகில்
அற்பருக்கு இஃதே கதி. (87)

சுவர்க்கம்

வித்தடங்கில் மெய்அமரர் ஆகும் சுவர்க்கபதம்
சித்திக்கும் இன்பமே எக்காலும் - மெத்த
சற்குணத்தார் சற்குருவைச் சார்ந்தே தனையறிந்தால்
பொற்பதமே வாய்க்கும் பெரிது. (88)

நாற்பதம்

சாலோகம் சாரூபம் சாமீபம் சாயுச்யம்
நாலாம் பதமென்பர் நற்றவத்தார் - பூலோகம்
போந்த மனுமக்கள் பொற்குருவால் பொற்பதமாம்
சாந்தி நிலைபெறுவார் சார்ந்து. (89)

நாசிவெளியே மூச்சோடாமை

நாசிவெளி யேமூச்சு ஓடாத் தவத்தோரே
பூசிக்கப் பெற்றிடுமெய்ச் சற்குருவாம் - ஆசீர்
பதிக்க அவர்கள் தகையுடையார் ஞான
மதிக்குடையர் அன்னவர் மன்னோ (90)

தூங்காத ஆண்மை

தூங்காத ஆண்மைத் துலங்குதவ கோமானே
பாங்கான பொற்குருவாம் பாரகத்தீர் - ஓங்கும்
உயிர்க்குத் துணையாய் இலங்கிடுவார் மெய்யாம்
பயிர்விளைக்கும் பண்பாளர் பார். (91)

நல்லவர்

மனோவாக்குக் காயத்திற் கெட்டாஎல் லைக்கு
மனோவாக்கு காயம் கடந்த - கனதவத்தார்
செய்வழியைக் காட்டி அழைத்தேக வல்லார்அந்
நல்லவரை நாடிப் பணி. (92)

ஆசான்

இருட்கோள மான அசைவில் நினைவை
அருட்கோள ஆசான் அசைப்பர் - பொருட்காட்சி
அன்றன்றே தோன்றும்காண் அம்மூச்சு தானடங்கும்
நன்றதற்கு நாதர் துணை. (93)

உயிர் உடல்

வயிர உடலெடுத்துச் சாயுச்யம் என்னும்
அயரா பதிக்கேகும் அன்னாள் - துயரம்
அற்றுப்பே ரின்பம் அடையும் திருநாள் காண்
சற்குருவை சார்ந்து தெளி. (94)

நான்கு தேசம்

தூலமொடு சூக்குமம் கார்ணம் மகாகார்ணம்
நாலாகும் தேகமுண்டு நானிலத்தீர் - ஏல
வல்லவராம் வானாடர் மெய்ச்சாலை ஆண்டவரே
சொல்லவல்லார் சாலையையர் தேர். (95)

உயிர்க்குத் துணை

உயிர்க்குக் குருவாவார் உத்தமர்அத் தெய்வம்
செயிர்தீர் திருக்காட்சி காட்டி - அயர்வறவே
மெய்ப்பதியில் ஏற்றி உய்கதியுள் கூட்டி
வையகத்தில் வானகம்காட் டும். (96)

சர்வலோக சரண்யர்

சர்வலோ கத்தின் சரண்யர்காண் சாலையையர்
சர்வகா லம்கடந்த சாயுச்யர் - சர்வ
கலைக்ஞான பண்டிதரின் காருண்ய நோக்கால்
நிலைநித்ய வாழ்வு வரும். (97)

சாகுந்தலம்

சாகுந்த லம்மேவும் தாரணியிற் மெய்ப்பதியாம்
ஏகும் தலத்திற்கு ஏறுதற்கு - ஆகும்
வழிகாட்டி ஞான வழிதிறக்கும் தெய்வம்
எழிலாரும் சாலை அரசு. (98)

வித்தியா தத்துவம்

காலம் நியதி கலைவித்தை ராகமொடு
ஏலபுரு டன்சுத்த மாயையெனும் - சீலமாய்
ஏழாம் அமானிதத்தை ஈசன் மனுவுக்கே
வாழ்வின் கடன்ஆக்கி னார். (99)

பண்டிதர்கள்

தூலமறிந் தோர்தேக பண்டிதராம் சூக்குமமாம்
தூலமறிந் தோர்ஜீவ பண்டிதராம் - வால
காரணதே கம்அறிந்தோர் ஞானபண் டிதரென்று
ஆரணத்தார் கூறும் அறி. (100)

அமுத தாரை

சாவதனைச் சாகடித்து நோவதனைப் போக்கடித்து
பாவமெலாம் தீர்க்குமொரு ஔஷதமாம் - தேவன்
திருச்சன்னி தானத்தில் சீராய்வர் ஷிக்கும்
அருளமுத தாரை அறி. (101)

அகிம்சை

மூச்சுக்கு மூச்சுநால் அங்குலமே துண்டாட
சாச்சுக் கழிப்பதுவே ஹிம்சையாம் - பாய்ச்சலூர்
நாதர் பதம்பற்றில் நம்மூச் சடங்கிவிடும்
போதம்அ ஹிம்சையெனக் கூறு. (102)

சாலை வளநாடர்

ஒன்றுமூன் றைந்தெட்டாம் மந்திரங்கள் எல்லாமே
நன்றறிய நாயகர்தாள் நாடிடுவாய் - பொன்றாத
வாழ்வுதரும் சாலை வளநாடர் பொன்னரங்கில்
தாழ்வகற்றி வாழ்வு தரும். (103)

மெய்ம்மருந்து

மாதவரின் மெய்ம்மருந்து வன்பிறவி நோயகற்றும்
ஆதவரால் பாவ இருளகலும் - வேதாந்தம்
கற்றால் அறிவொளிரும் நற்றாள் பணிந்தவரை
ஏற்றும்சா யுச்யநிலைக் கே. (104)

தேடாத் திரவியம்

தூலப் பிணிக்குலங்கள் சாபம்யா வும்தீர்க்க
ஏலவல்லவர் வந்தாரே இங்கேகாண் - கோலமுயர்
மேலவெளி மெய்ம்மருந்தால் வெவ்வினைகள் தீர்த்தருளும்
சாலைவள்ளல் தாள்சரண் செய்மின். (105)

நித்தியம்

நித்தியத்தைப் பெற்றிடவே நித்யர் மனுபடைத்தார்
பத்தியவர் பாதம் பணிந்தாலே - சித்தர்
அழியா நிதியருளும் எழிலாரும் சாலைப்
பொழில்சேரும் பொற்பதம் கொள்க. (106)

நால்வருணம்

ஞானஇச்சை இல்லாதான் சூத்திரனாம் ஆசானை
தான்தேடு வோன் வைஸ்யன் வைராக்கியக் - கோனவனே
சத்திரியன் சற்குருவால் மெய்ஞ்ஞானம் பெற்றவனே
சுத்தப் பிராமணனாம் செப்பு. (107)

நற்றவம்

மூக்களவே மூச்சோடல் நற்றவம்மூச் சோடாமல்
தேக்குவதைக் கற்பதுசா காக்கலையாம் - ஆக்கை
மரணபயம் மாறல் சுதந்திரமாம் எய்த
அரன்சாலை அண்ணல் துணை. (108)

எழில்தேகம்

அழிதேகம் விட்டு எழில்தேகம் ஏற்க
பொழிலாரும் பொற்பதிசேர் மெய்யாம் - வழிகூறும்
பொன்னரங்கர் பொற்றாள் பணிந்தேத்து மின்கள்சீர்
நன்னலமே சேரும் நயந்து. (109)

தேடாத் திரவியம்

ஓடாது மூச்சு உழலாது பாழ்மனமும்
வாடாத் தவத்தரசர் மெய்த்துணையால் - தேடாத்
திரவியமாம் சாயுச்யம் சேருங்காண் ஞான
இரவியவர் சாலைவள்ளல் காண். (110)

நித்தியர் நேசம்

நித்தியரின் நேசமுனக் காகவெனில் சன்னிதியில்
சத்தியமே பேசு குயுக்திமற - சுத்த
ஒழுக்க நெறிநின்று உத்தமரைப் போற்றில்
வழுக்காது சாலை வழி. (111)

கண்ணியர்

விடத்தை அமிர்தமென வேதிப்பார் நெஞ்சில்
திடத்தை உருவாக்கும் தோன்றல் - அடுத்துஅவர்
கள்ளை முறித்துவட் டாக்கிவிடும் கண்ணியராம்
வள்ளலவர் சாலைஅண்ணல் காண். (112)

சாலை வளவரசர்

எமபயத்தை நீக்கி சிவபதத்தில் ஏற்றித்
தமருகந்து நிற்பார்தாட் டீகர் - சமரசமார்
சாலை வளவரசர் சீலம் பெறவருள்வார்
கோலம் பணிவ தறம். (113)

ஆரண்யம்

வேதங்கள் ஆகமங்கள் மெய்துலங்கத் தாமொளிரும்
நீதத் திருவளரும் நற்சோலை - போதம்ஆர்
உத்யோ வனசித்தி கானகமாம் முத்திதரு
சித்திவளர் ஆரண்யம் சேர். (114)

ஆலயங்கள்

நினைவூட்டற் கென்றே நிறுவினர்கள் கோவில்
தனையுணர ஆகா தவைதாம் - தனையுணர
ஆண்டவரே சற்குருவாய்ப் போதருவார் அண்டர்கோன்
ஈண்டறிமின் இஃதுண்மை காண். (115)

சற்குரு

சற்குருபோல் வேடமிட்டுப் பொய்க்குருக்கள் வந்திடுவார்
சற்குருவாய் ஆகார்அத் தீயவர்கள் - சற்குருவே
சன்னதங்கள் தாங்கியிந்த உன்னதத்தைச் செய்திடுவார்
நன்னயமாய் நன்கறிமின் கள். (116)

பொய்க்குரு

தாடி சடைவளர்த்துத் தாம்குருபோல் வேடமிட்டு
நாடிக் குறியுரைத்து நம்பவைப்பார் - ஆடிப்
பொருள்பறிக்கும் பாசாண்டிப் போலியரைச் சார்ந்தால்
இருளுலகிற் குய்க்கும் அறி. (117)

வல்பிணி

வையகத்தோர்க் கெல்லாமே வல்பிணிசாக் காடும்
வெய்ய முதுமையும்வந் தேதீரும் - ஐய!
வஞ்சஎமன் வந்திடுமுன் வானவர்மெய் ஆண்டவரைத்
தஞ்சமெனச் சார்மின் தெளிந்து. (118)

மீசான் தராசு

ஆசான் இரக்கமொன்றே அவ்வுலகுக் கெய்துவிக்கும்
மீசான் தராசினிலே மீட்பருளும் - தேசிகராம்
மெய்வழிதெய் வத்தாள் மிகவணங்கித் தோத்தரித்து
உய்வழியைத் தேடு உவந்து. (119)

தஞ்சம்

எமபடரை நீக்கி தவப்பலனை ஈந்து
நமையின்று காத்தருளும் தெய்வம் - இமையவர் கோன்
மெய்வழிதெய் வத்தின் மென்மலர்த்தாள் நற்றுணைக்கு
செய்வழி தஞ்சமுறல் தான். (120)

புணை

நம்மைப் படைத்து நலமெல்லாம் நன்கருளும்
செம்மலோன் சீரடியில் சேர்மின்கள் - இம்மை
மறுமைக்கும் மெய்த்துணையாம் மெய்வழியர் பொற்றாள்
பிறவாழி நீந்தும் புணை. (121)

நிலையான சொர்க்கம்

எக்காலும் எவ்வெவர்க்கும் எட்டாத இன்பமருள்
சொக்கேசர் மெய்வழி ஆண்டவர்கள் - துக்கமிலா
வாழ்வுதரும் வானரசர் வந்துதித்தார் தாள்போற்றில்
தாழ்வகலும் சொர்க்கம் நிலை. (122)

மெய் வணக்கம்

முறையான மெய்வணக்கம் மாசில் இரக்கம்
நிறைவாம் வருங்கால தீர்க்கம் - மறைபோற்றும்
தெய்வத் திருத்தாளைச் சிக்கெனவே தான்பற்றல்
உய்வைத் தருமென் றறி. (123)

அறம்

தாங்கொணா இன்னல் எதிர்ப்புகள் பேரிடர்கள்
தாங்கி முறியடித்த தாட்டீகர் - பாங்கரசர்
சேர்த்த தவச்செல்வம் சீரடியார்க் கீந்தருள்வார்
ஆர்த்துப் பணிதல் அறம். (124)

முத்தாபம்

தெய்வத் திருமணிச்சூல் தாங்கிப் பிறப்பருள்செய்
மெய்த்தாய்க்கு ஈடுண்டோ மாந்தர்களே - வையகத்தில்
அத்தாய் உடல்வளர்த்தாள் மெய்த்தாய் உயிர்வளர்த்தாள்
முத்தாபம் தீர்த்தாள் முனைந்து. (125)

நல்லங்கம்

சொல்லங்கம் ஈந்தினிது வில்லங்கம் தீர்த்தருளி
நல்லங்க மாயேற்ற நாதரெம்மான் - வெல்லுங்காண்
வெய்ய எமன்வழக்கை வீடுபெறச் செய்தாள்வார்
மெய்வழியெம் தெய்வம் தெளி. (126)

மானுடம்

படைப்பில் உயர்ந்ததிந்த மானுடமே இஃது
உடையதுள் மூன்றுலகும் கண்டு - அடைவதற்கு
சற்குருவின் நற்றுணையால் தான்காண லாகும்காண்
பொற்குருதாள் போற்றிப் பணி. (127)

கற்றல் பயன்

கற்றால் பயனென்னென் றோர்மின் இறைவர்தம்
நற்றாள் பணிதல்தான் நன்கறிமின் - பொற்புயர்ந்த
போதத்தால் மண்படியாப் பாதத்தைக் காட்டிடுவார்
நாதத்தால் நற்குருவை நாடு. (128)

சீர்திறம்

நரரை மனுவாக்கி மாற்றிப் பிறப்பால்
சுரராக்கும் சீர்திறத்தார் எம்மான் - பராபரர் காண்
மெய்வழிதெய் வம்இந்த மேதினியில் வந்தருளி
உய்வழியைக் காட்டும் உவந்து. (129)

மன்திறம்

பொய்யகத்தே தான்படிந்த புன்மனத்தை மெள்ளமெள்ள
மெய்யகத்தில் மாற்றிவைக்கும் மன்திறமே - வையகத்தில்
ஆண்டவர்தம் ஆரருளால் அன்பினிய சீடருக்கு
வேண்டுவரம் ஈயும் விரைந்து. (130)

அறம் செயல்

பாதம் தரிசித்தால் வேதம் பரிமளிக்கும்
நீதம் இதுஅறிமின் நீணிலத்தீர் - நாதரெனும்
மெய்வழி தெய்வமிந்த வானார் அறஞ்செய்யும்
உய்வழியைக் காண்பீர் உவந்து. (131)

எம்மான் அருள்

சர்வ உயிர்களையும் சாய்த்துவிடும் வல்லெமனை
சர்வேசர் வென்றிங்கு சாதிப்பார் - பர்வதமாம்
மும்மலங்கள் தூளாக்கி செம்மனமும் தான்விடிய
எம்மான் அருளும் அறி. (132)

மூவா முதல்வர்

மூவா முதல்வர் சாவாமை ஈந்தருளும்
தேவாதி தேவன் திருவுயர்ந்தார் - ஓவாத்
தவத்தரசர் எம்மான் சிவகுருவென் றேற்றும்
சிவபெருமான் சாலையையர் தேர். (133)

அழியாத தேகம்

அழியும் தரத்ததிந்த ஆக்கைகாண் என்றும்
அழியாத தேகமொன்று உண்டு - வழிமெய்யாம்
காட்டியருள் பூட்டிடுவார் நாட்டாண்மை நல்லருளால்
வேட்டதெல்லாம் மெய்யர் தரும். (134)

பூட்டடங்காச் சாவி

பூட்டடங்காச் சாவிகொண்டு பொன்னுலகம் தான்திறந்து
காட்டாதன வெல்லாம் காட்டிடுவார் - தேட்டிலுயர்
செல்வம் வழங்கியருள் தெய்வம்சா லையண்ணல்
நல்வரங்கள் நல்கும் நயந்து. (135)

வேதமணி

ஊணும் உறக்கமற்று ஓவாத் தவமியற்றி
மாணும் மணிமொழியர் மாதவர்கோன் - காணும்
வேதங்கள் மெய்ம்மை துலங்கவருள் பாலிக்கும்
வேதமணி சாலைஅண் ணல். (136)

வைரமணித் தேகம்

மறலிகை தீண்டாத வைரமணித் தேகம்
அறவாழி யால்பெற்று ஞாலத் - திறவாத
பேரின்பம் என்றென்றும் பெற்றிடவே இப்பிறவி
சீரோங்க வாழ்மெய் வழி. (137)

எந்நாட்டவர்க்கும் இறை

நாசிவெளி யேமூச்சு ஓடாத் தவத்தினரே
வாசிப் பரியேறி வந்திடுவார் - தேசிகர்
தென்னா டுடைசிவனார் செப்பரிய மேனிலையர்
எந்நாட்ட வர்க்கும் இறை. (138)

கிரகஸ்தன்

கிரகக்கோள் எல்லாம் அணுவாக்கி நீக்கி
கிரகஸ்தன் ஆக்கிப் பிரம்மப் - பிரகாசம்
பேரொளியார் பூணூல் தரிப்பிக்கும் மாதிறத்தார்
சீரோங்கு மெய்வழி தெய்வம். (139)

செய்யாமற் செய்த உதவி

வையகமும் வானகமும் ஈடில்லா நித்தியத்தை
ஐயன்மெய்த் தெய்வம் அருள்வார்கள் - செய்யாமற்
செய்த உதவி இதுவாகும் மானிலத்தீர்
எய்தற் கரிதாம் இது. (140)

பிரம்மவித்தை

தன்னிருத யந்தன்னில் சர்வேஸ்வரர் தன்னை
அன்னியமின் றித்தரிச னம்செய்தல் - மன்னும்
பிரம்மவித்தை ஈதாகும் மெய்வழியைத் தந்த
பிரம்மமே சாலை அரசு. (141)

வல்ல தனம்

மனம்வாக்குக் காயங்கட் கெட்டாத வல்ல
தனமொன்று உண்டு தெளிமின் - தினம்புதியர்
தெய்வத் தயவாலஃ தெய்த வரமருள்வார்
உய்வழியர் மெய்வழித் தெய்வம். (142)

மெய்ஞ்ஞானம்

அஞ்ஞான மாம்கிழங்கை ஆழ்ந்தகழ்ந்து தானெடுத்து
மெய்ஞ்ஞான மாம்தருவை மிக்கவளர் - எஞ்ஞான்றும்
எண்டிசையும் கண்டறியா எந்தாய் பராபரையைக்
கண்டோரே கண்பெற்றோர் காண். (143)

வாக்கு வாளாண்மை

பத்தினித்த னம்முடைய வாக்குவா ளாண்மையரே
சத்தியராம் சற்குருவாம் சாயுச்யர் - முத்தரவர்
ஜீவஉல கம்காட்டித் தேவஉல கம்விடிய
ஆவனசெய் ஆண்டவர்தாள் போற்றி. (144)

வேத சூரியன்

வேதசூர் யன்உதித்து வேதாந்தம் தான்தெளிய
நாதம் வழங்கியருள் நன்னாளே - போதத்
திருநாளாம் ஞானம் தருநாளாம் வேதித்
திருள்கெடுத்து ஏற்றும் ஒளி. (145)

மும்மூர்த்திகரம்

மும்மூர்த்தி ஒன்றாக மேனிகொண்ட மாட்சிமிக்கார்
எம்மூர்த்தி எம்தெய்வம் என்றறிமின் - எம்மான்
அருள்கூர்ந்து ஆருயிர்ஞா னாக்கினியாய் வேதித்(து)
இருள்கெடுத்து ஏற்றும் சுடர். (146)

மூன்று ரத்தினங்கள்

இவ்வுலகம் காணா இரத்தினங்கள் மூன்றாகும்
அவ்வுலகோர் கண்ட அதிசயமாம் - செவ்வைமிகு
ஜீவனெனும் ரத்தினம்சி ரோரத்னம் நாகரத்னம்
தேவரரு ளால்காணு றும். (147)

மார்க்கக்காரி

அன்னைமார்க் கக்காரி ஆர்சிலம்பின் நாதஒலி
என்னோ இனியததற் கேதிணையே - பின்னை
அதுகேட் டதுகண் டதுவாகி ஆழ்வார்
இதம்பெற்றன் னாடேகும் இன்னே. (148)

அழியாப் புகழ்

அழியாப் புகழுக்கே அம்புவியில் போந்தோம்
அழிவிற்கே கூட்டுமந்தக் கூற்றம் - அழிவதனின்
மீட்டு எழிலாரும் மெய்வரங்கள் சாயுச்யம்
கூட்டும் குலதெய்வம் காண். (149)

தீர்த்தம்

தீர்த்தம்என் றால்அந்த தேசிகரின் வாசகம்காண்
ஆர்த்துப்பா வம்ரோகம் மாரணமும் - தீர்த்து
அந்நாட்டிற் கெய்துவிக்கும் அற்புதமார் மாட்சியது
இந்நாட்டில் எம்மான் அருள். (150)

சிரஞ்சீவி

வித்தியா தத்துவங்கள் மிக்கேற்ற மானுடனை
நித்தியனாய் ஆக்கியருள் நிர்மலராம் - சத்திய
தேவர் தயவால் சிரஞ்சீவி ஆக்கிடுவார்
மூவா முதல்வர் அறி. (151)

சாகாக்கலை

இந்நாட் டிருந்தே பிரணவநன் நாடென்னும்
பொன்னாடு போக்குவரத் தாக்கிடவே - தென்னாடர்
அப்பிரம்ம வித்தை அருள்பாலித் தாண்டார்கள்
செப்பரிது சாகாக் கலை. (152)

உய்வழி

மதிவளரும் பூவனத்தே வாழ்ந்திருக்க நாளும்
புதியோர் அருளினார்கள் மக்காள் - விதிகடந்த
மெய்வழிச்சா லைஆண்டார் மெல்லடியே போற்றுமின்கள்
உய்வழியிஃ தொன்றே கதி. (153)

மனம்

மனம்கீழே போகும் இயல்பினது சைத்தான்
மனம்மேலே ஏகில்சை தன்யம் - மனம்தெளிந்து
ஆசான் திருவடியில் அன்புகொண்டால் அன்னவனும்
ஈசற் கினியன் இயம்பு. (154)

ஜென்ம சாபல்யன்

உத்தமனாம் ஈசன் உடலில் உறைவதனை
மெத்த அறிந்தோனே மேலவனாம் - சித்தம்
சிவன்பாலே வைத்துத் திருவருளுக் கான
அவன்ஜென்ம சாபல்ய னாம். (155)

தேவன்

அறுசுவையை நன்கறிந்தோன் மானுடனாம் மற்று
அறுசுவைசேர் அவ்விடத்தைக் கண்டோன் - மறுவில்லா
தேவனாம் என்று திருமறைகள் தீர்ப்பருளும்
ஜீவர்க் கிதுவே கடன். (156)

பிரணவ தேகம்

பசிதாகம் நோய்நொடிகள் தீண்டாத தேகம்
வசிக்கின்ற தும்முள்ளே மக்காள் - இசைவுடனே
அத்தேகம் பெற்றோர் அதிசோப னம்கொண்டு
இத்தரணி வாழ்வர் இனிது. (157)

தந்தை தாய் குரு

முகமுகத்தில் தந்தை அகமுகத்தில் தாயாம்
தகவுடனே சற்குருவைச் சார்ந்தால் - இகம்கடந்து
சூக்குமமாம் ஞானநிஷ்டை தன்னைப் பழக்குகுரு
ஆக்கும் அதுதெளிமின் ஆர்ந்து. (158)

குருவே பரன்

மனிதனுக்கே ஆண்டவரைப் போற்றிடும் தன்மை
இனிதாய் அமைந்துளது அன்பாய் - நனிசிறந்த
தெய்வத்தைத் தெய்வமாய்க் காட்டும் குருபரர்தாள்
உய்ய பணிந்தே இரு. (159)

தாயகம்

சத்திய ஒட்டுதலில் தாமிருப்போர்க் கேயிந்த
நித்தியம் வாய்க்கும்இந் நீடுலகீர் - வித்தாகும்
நாயகமாம் தெய்வத்தின் நற்றாளைப் பற்றினர்க்குத்
தாயகமாய் ஆவார் தெளி. (160)

பொன்றாத வாழ்வு

சத்தியமாய்ப் பேரின்பம் தானடைய வந்தீர்நீர்
பத்திப் பணிந்து பயன்பெறுவீர் - இத்தேகம்
என்றும் நிலையல்ல அத்தேகம் ஒன்றுண்டு
பொன்றாது வாழ்வ தது. (161)

சாவு

தொண்டை அடைபட்டு தீர்த்தம் இறங்காமல்
விண்டலறி நாறி விரைத் திட்டு - பெண்டுபிள்ளை
சீச்சீயென் றேயொதுங்கத் தேகம் அழுகிடவே
தீச்சாவு உய்க்கும் நரகு. (162)

ஜீவப் பிரயாணம்

சென்று வருகின்றேன் என்றினிது செப்பிவினை
வென்று விமலரடி சார்ந்து - நன்றுயர்ந்து
தீர்த்தம் அருந்தி இளமை பரிமளிக்க
ஆர்த்து மகிழ்பயண மாம். (163)

உய்கதி

பிணிமூப்புச் சாக்காட்டால் போயொழியும் தேகம்
அணிதிகழ்மெய் வீடொன்று உண்டு - மணிமொழியர்
மெய்வழிதெய் வத்தயவால் மேவிக் குடியேறி
உய்கதியைக் கொண்மின் உவந்து. (164)

மாறாத இன்பம்

மாறாத இன்பமெனும் ஆன்மாவின் லாபமதை
ஆறாகப் பொங்க அதுவிழைந்து - கூறரிய
சற்குருவைச் சந்தித்து வந்தித்துப் பந்தித்து
பொற்குருதாள் போற்றித் துதி. (165)

ஜீவசிம்மாசனம்

இதயப்ர காசமெனும் சிம்மா சனம்ஏற
மதிநிறைநா வேந்தர் பதமே - கதியென்று
பற்றினர்க்கு நற்றுணையாய்ப் பொன்னரங்கர் போந்துறலால்
ஏற்றிக்கொள் எம்மான் பதம். (166)

எண்ணரிய காட்சி

மண்ணுலகில் விண்ணுலகைக் கொண்டுவந்து மாதவர்தாம்
எண்ணரிய காட்சி இனிதருளும் - கண்ணாளர்
அந்நாட்டி னுக்கே அரியவித் தேயெடுக்க
இந்நாட்டிற் போந்தார் அறி. (167)

பிறவா நெறி

பிறவா நெறிவிழையும் பெற்றியர்காண் தெய்வம்
மறவா நிலைபெற்றார் மாணும் - உறவனைத்தும்
உற்பவிக்கும் கற்பகர்தம் பொற்பதமே அன்பினிரே
நற்பதமே நண்ணும் இனிது. (168)

அன்பு

அன்பொன்றே தெய்வம் அடையத் துணைதருமால்
அன்பவ் விறைவர்பால் வைம்மின்கள் - துன்பம்
தொலைந்திடுமே இன்பம் நிலைபெறுமே அஃதால்
கலையரசர் தாள்படிமின் கள். (169)

தயவு

பாவச்சேற் றில்அழுந்திப் பாருலகம் சீரழிதல்
தேவாதி தேவர்கண் டேயிரங்கிப் - பூவுலகில்
தோன்றிப் பவம்கடத்தி ஆன்ற வரங்கொடுத்து
சான்றோராய் ஆக்கும் தயவு. (170)

ஓரினம் ஓர்தெய்வம்

உலகம் ஒருகுடும்பம் ஓரினம்ஓர் தெய்வம்
நலமெங்கும் என்றினிது நாட்ட - குலதெய்வ
தேவேசர் செய்யும் திருநிறைநல் லாற்றலால்
பூவுலகம் உய்யும் பொலிந்து. (171)

பேரின்பம்

திருவருள்வாக் யம்கேட்கில் ஜீவாவி ஓங்கி
அருள்வளரும் பேரின்பம் தேங்கும் - குருபரர்தம்
பொன்மலர்த்தா ளில்பற்று தான்பெருக்கில் நல்லவரே
இன்பத் துறையும் உயிர். (172)

தவம்

மூக்களவே மூச்சடங்கி ஓடும் தவச்செயலை
ஆக்கும் அருட்குரு நம்தெய்வங்காண் - தேக்கும்
மறையோதல் மந்த்ரம் ஜெபித்தல் தியானம்
துறையாகும் இவ்வரவுக் காம். (173)

தவத்தரசர்

பவக்கடலில் ஆழ்ந்தே கிடக்கும்நல் முத்தைச்
சிவபுரத்தார் மூழ்கி எடுப்பார் - தவத்தரசர்
மெய்வழிதெய் வம்அந்த மெய்ம்மையுளார் இம்மாட்சி
வையகத்தில் யார்க்கும் இலை. (174)

சரணாகதி

எல்லாம்நம் ஆசானே என்றுணர்ந்த நல்லார்க்கு
வல்லசு வாசம் மிகவொடுங்கும் - பொல்லாப்
பிறப்பொழியும் வாசிமலர் பூக்கும்காண் அன்னோன்
இறப்பொழிக்கும் எம்மான் துணை. (175)

ஜீவமணித் தேகம்

உதிரம் புலால்நாற்றம் ஒன்றுமிலாத் தூய்மை
இதயமுயர்ந்த ஜீவமணித் தேகம் - அதுபெறவே
ஐயன் திருத்தாளில் ஐக்யம் அடைவதுவே
மெய்யின்பம் மேவும் அறி. (176)

வாசி

வாசியெ னும்பரியில் ஏறிவலம் வருவார்
தேசிகர் என்றினிது தேர்மின்கள் - ஊசிமுனை
வாசல் தமர்திறக்கும் வல்லவர்க்கு ஆசானின்
நேசத்தால் இஃது நிலை. (177)

ஜீவகுகை

ஜீவகுகை ஒன்றே அதனின்பல் கோடியர்கள்
தேவப் பிறப்போர் தவம்செய்வர் - சாவா
வரம்பெற்றார் ஜீவன் அறம்பெற்றார் தேவத்
தரம்பெற்றார் நன்கே யறி. (178)

உஷ்ணம்

தேகத்தின் உஷ்ணம் ஜடராக்னி நற்ஜீவ
தேகத்தின் உஷ்ணம்கா லாக்கினியாம் - தேகத்தின்
உஷ்ணம் குறைந்தால் வியாதிவரும் ஜீவனின்
உஷ்ணம் குறையிலுயிர் போம். (179)

உடல் பொருள் ஆவி தத்தம் செய்தல்

இத்தேகம் என்னுமுடல் வாக்காம் பொருளுமுமே
சுத்தமிகு ஜீவாவி மூன்றையுமே - தத்தம்செய்(து)
அத்தன் திருவடியில் அன்புகொண்டு மெய்பெறுமச்
சுத்தன்நற் சித்தர் தெளி. (180)

சைதன்யம்

பார்த்ததிலெல் லாம்தாவும் பாழ்மனத்தை மீட்டு
கீர்த்திமிகு தங்கள் திருவருளால் - ஆர்த்தினிது
சைதன்ய மாக்கும் தவச்செயலை மாட்சிமையை
எய்தவைக் கும்எம் இறை. (181)

நாதம்

நாதத்தால் மெய்யுணவு ஊட்டிநம் ஆருயிர்க்கு
போதத்தால் இன்பம் பெறவருளும் - வேதத்தால்
உய்வழிதந் தாண்டருளும் உத்தமர்மெய்ச் சாலையண்ணல்
மெய்நாதர் என்றினிது மேவு. (182)

சான்றோர்

பரத்திற் குரியவனாய்ப் பண்புயிரை மாற்றிச்
சிரத்தில் திருவளர்க்கும் தெய்வம் - பரத்திற்(கு)
உபகாரம் செய்தருளும் உத்தமர்மெய் யையர்
தபவாய்மைச் சான்றோர் அறி. (183)

புண்ணியம்

சன்னதப்பா ரவான்கள் முத்திரைகொள் சான்றோர்கள்
இன்னுயிர்காத் தெம்பால் இரக்கமுற்று - நன்னயமாய்
கண்ணியத்தைத் தந்து கனவரங்கள் கொள்செயற்குப்
புண்ணியம் என்றே பெயர். (184)

நான்

நானானென் னும்மனமே நல்லாசான் பாலிணைந்து
நான்நீ எனமருவில் ஞானியெனும் - கோன்நீ
குருகொண்டல் தெய்வம் இறைவர்மெய் ஞானம்
தருமெய்யர் என்றே தெளி. (185)

ஆலவாய் அரசர்

திருவோலக் கம்தன்னில் சீர்திகழும் செம்பொருளே
திரு ஆல வாயரெனும் மாட்சி - குருதேவர்
வையகம் உய்யவென்று வான்செல்வம் கொண்டுவந்த
தெய்வம்சா லையையர் தேர். (186)

நன்மார்க்கரிஷி

சித்தி நிலைப்பிடத்தார் தேவாதி தேவரவர்
சத்தினி பத்தினியும் தானானார் - முத்தியருள்
வித்தகரும் வேதியரும் நீதியரும் நற்றலைமைச்
சித்தர்நன் மார்க்க ரிஷி. (187)

சாலைவளநாடர்

எமபயத்தைத் தாட்டி சிவபதத்துள் ஏற்றும்
தமருகந்தார் சாலைவள நாடர் - அமரர்கோன்
நாமம் நவின்றோர்கள் நற்கதிகொண் டுய்ந்தார்கள்
சேமம் சிறந்தார் தெளிந்து. (188)

சரியை

அவநெறியில் ஆழ்ந்து அழியநின்றோர் தம்மைச்
சிவநெறியில் ஏற்றிச் செழிப்பாய்த் - தவப்பரிசை
தந்தருளும் சாமி தயாநிதிமெய்த் தெய்வத்தை
புந்தியுளே வைப்பாய் போதிந்து. (189)

கிரியை

ஆசானின் அன்புக் கிலக்காகி அன்னவரால்
மாசறவே கொள்ளும் மறுபிறப்பு - தேசுறவே
பெற்றிடுதல் தானே கிரிகையென அந்நிலையை
உற்றிடுவோர் செய்யும் அறம். (190)

யோகம்

மறுபிறப்புப் பெற்றோர் மாதவரின் அன்பைப்
பெறுபவராய் ஆகிப் பிரிவு - அறநின்று
ஒட்டி இணைந்திருத்தல் யோகம் எனும்நிலையாம்
மட்டில் பெரியோர் உரை. (191)

ஜனநாயகம்

அவரவர்தம் சாதிமதம் தன்னின் சிறப்பை
அவரவர்க் கேதெளிவித் தாண்டு - தவத்திறத்தால்
ஒன்றே குலம்தேவன் ஒன்றே எனநிறுவும்
குன்றாண்டார் சாலைவள்ளல் காண். (192)

அகிம் சை

ஒவ்வொருமூச் சுக்கும்நால் அங்குலங்கள் துண்டாடி
ஒவ்வாது உயிரிம்சை செய்யாமல் - செவ்வையாய்
ஆசானைச் சார்ந்து அளவாய்ச்சு வாசமுறல்
தேசோங் கஹிம்சையெனச் செப்பு. (193)

சுயராஜ்யம்

சுவர்ணபதி நற்கயிலை நாடர் தயவால்
சிவமுதலாம் ஜீவனைக்கைப் பற்றல் - ஸ்வராஜ்யம்
வெம்மறலி தன்னமலில் மீளல் சுதந்திரமாம்
அம்மையப்பர் எம்மான் அருள். (194)

நாகரீகம்

சற்குருவின் சன்னிதிசார் சற்குணமும் நற்பணிவும்
பொற்புயர்ந்த நாகரிகம் என்போம்காண் - பற்குணர்பால்
சொல்செயல்எண் ணம்தூய்மை சுத்த யதார்த்தமது
நல்நாக ரீகம் நவில் (195)

தன்ஆசான் இச்சை

தன்ஆசான் இச்சை தனதிச்சை என்போரே
பொன்னான மாணாக்கர் பூதலத்தே - மன்னும்
இறைநெறிசார் பேரின்பம் எய்தும் அவர்க்கு
துறையிஃது என்றே மொழி. (196)

ஞானமணி

ஆசான்பால் ஒட்டி அவராக்ஞை போல்நடப்பார்
தேசோங்கு சீடனெனச் செப்புமின்கள் - மாசில்லா
வானோர் பதம்பெறுவர் கோனாத வாழ்வுறுவர்
ஞானமணி என்றே நவில். (197)

சம்பூர்ணன்

அழல்நாற்றம் நீக்கி அருளமுதர் தம்தாள்
நிழலில் படிவிக்கும் நாதர் - எழிலோங்கும்
சம்பூர்ணர் சாயுச்யர் சாலைமெய் ஆண்டவர்கள்
எம்பூர்ண தெய்வம் அறி. (198)

காரணதேகம்

உலகறிவி லேகலந்த இம்மனத்தை மாற்றி
நலமிகுகார் ணதேகம் நண்ணில் - வலமார்
அறிவு துலக்கமுறும் ஆசானின் மாட்சி
அறியில் எமனில்லை காண். (199)

அன்பு

துணிவெளுக்க மண்ணும் தோல்வெளுக்க சாம்பல்
மணிவெளுக்க சாணையுண்டு என்பர் - பிணியார்
மனம்வெளுக்க அன்புமிக்கு நெக்குருகும் கண்ணீர்
தினம் பெருக்கில்தேஜோ மயம். (200)

மாமிச வாடை

மாமிச வாடைக்கு வந்துறும்வேங் கைபோல்
மாமிசமே னிக்குயமன் வந்துறுவான் - பூமிசையே
பொன்னரங்கர் பொற்பாதம் பற்றினர்தம் வாழ்வை
வின்னமுறச் செய்யான் எமன். (201)

மந்திர ரூபர்

மந்திரங்கள் எல்லாமே உருக்கொள் சர்வமூல
மந்திரமாய் தான்விளங்கும் மெய்வழியார் - விந்திரத்தார்
மூவுலகும் போற்றும் முழுமுதல்வர் வந்துற்றார்
தேவுலகம் தோற்றுவித்தார் தேர். (202)

தேடுடையார்

மெய்ம்மை அறியாத மற்றறிவர் ஆணவத்தார்
பொய்மை தனிஅழுந்தும் மாயையினார் - துய்ய
வீடடையாப் பொய்ப்பாடோன் கன்மத்தான் மெய்துலங்கத்
தேடுடையோர் மெய்வழியர் காண். (203)

உள்ளம் உருகார்

சுயம்பிர காசநித் யானந்த பிரம்ம
தயாவடிவம் தன்னை அறியா - மயக்கமுறும்
உள்ளம் உருகார்க்குக் கள்ளம் கருகாது
தெள்ளியஞா னம்தேரான் காண். (204)

சிவபதம்

தவம்நிஷ்டை யோகம் எனும்செயல்கள் யாவும்
சிவபதத்தைச் சேர்தல் தெளிமின் - பவம்கடத்தும்
அண்ணல்பதம் சார்தல் ஆளுடைமை நன்கறிமின்
விண்ணாளும் மெய்யர் செயல். (205)

ஆறு ஆதாரம்

ஆறுஆ தாரமென ஏதேதோ செப்பிடுவர்
கூறுமவர் கொள்கை சரியன்று - மாறுபடா
ஜீவதே கத்தின் சிறப்பார் நிலைகுருவாம்
தேவரால் கற்றுத் தெளி. (206)

நித்ய தேகம்

நித்திய தேகம் எடுத்துவை ராக்கியமாய்
சத்திய சற்குருவைச் சார்ந்து - வித்தகமாய்
மாற்றறியா அன்பு மகேசரிடம் வைத்திட்டால்
கூற்றன்கை தீண்டாது காண். (207)

பிரம்மநிஷ்டர்

பிரம்மநிஷ்டர் போதம்செய் காலத்தில் ஞானி
பிரம்மோப தேசம்செய் காலத்தே - பிரம்மகுரு
தூலம் கடந்தேகும் போது பிரம் மச்சாரி
கோலம்சேர் கால்பிரம்மம் காண். (208)

மௌனி

மூக்குவெளி யேமூச்சு ஓடுபவர் ஞானியல
மூக்களவே ஓடிலவர் ஞானியாம் - ஆக்கும்
மூச்சடங்கும் அவ்விடத்தே தானிருந்தால் முமூச்சு
பேச்சடங்கும் மௌனி யவர். (209)

எமனை வென்றவர்

மந்திரத்தை ரூபத்தில் காட்டுபவர் தேவகுரு
மந்திரத்தைக் கண்டவர் மெய்ஞ் ஞானியெனும் - விந்திரத்தார்
எல்லாத் தவத்திறமும் ஏற்ற அவர்தாமே
வல்லஎம னைவென்ற வர். (210)

தேகத்தைச் சுடாதே

ஏழாவி சேர்ந்தகட்டே ஜீவாவி தேகத்தை
பாழாய் நெருப்பிலிட்டால் தாம்பிரியும் - வாழும்
மறுபிறப்பு கிட்டாது ஆதலினால் தேகம்
இனிநெருப்பில் போடா திரும். (211)

மண்மறைவு

ஜீவன் மரண அவஸ்தையுறும் தீயிலிட்டால்
சேவையென்ப தவ்வாறு செய்யாமை - தேவன்
திருவருளைப் பெற்றோரை மண்மறைவு செய்தல்
அருளாரும் ஆன்ற செயல். (212)

ஏழ்பிறப்பு

ஏழ்பிறப்பு என்பதது இவ்வுடலின் ஏழ்பருவம்
பாழாய் இறந்துபிறத் தல்என்பர் - வாழும்
மனுப்பிறப்பில் நல்லுணர்வு மாறி வளர்ந்து
இனிதுமரு வல்ஏழ தாம். (213)

பிரசவம்

பிறக்கும்கால் கர்ப்பத்தில் பேச்சுமூச் சில்லாதால்
பிறக்குமுனே அஃதுசவம் போலாம் - பிறந்தவுடன்
ஒன்பது வாசல்கள் ஒக்கத் திறந்திடுமால்
முன்னோர் பிரசவம் என்றார். (214)

குரு

இதயத் திருள்கிழித்து இன்பப்ர காசம்
உதயம்செய் விப்போர் குருவாம் - மதியருளும்
ஆண்டகுரு தேடாதோர் ஆற்றும் தவமதுகாண்
மாண்டமரம் நீர்பெற்றாற் போன்ம். (215)

உருத்திராட்சம்

உருத்திரனாம் வெய்யஎமன் அஞ்சும் குலிசம்
உருத்திராட்சம் என்பதுவே உண்மை - உருத்திரண்ட
கொட்டைக்காய் தானும் நகலாகும் அஃதாலே
துட்டன் எமனஞ்சி டான். (216)

விபூதி

வெற்றிதரும் தீப்பூவாம் விபூதி சாம்பலல்ல
நற்றவரால் பூசப் படும்மன்னோ - உற்றறிவார்
கங்காளன் பூசும் கவசத் திருநீறு
மங்காத மாட்சி யுடைத்து. (217)

பத்து வயதான கன்னி

பத்துவய தானகன்னி பார்பதியாள் என்றுமுளாள்
அத்தனைபேர் காமம் தணிவிப்பாள் - சுத்தமிகு
பத்தினித்தாய் முத்தியருள் வித்தகியாள் சத்தினித்தாய்
உத்தமியாள் என்றே உணர். (218)

சேமம் பாலிக்கும் இறை

வெற்றிதரும் நாயகர்வி நாயகராம் மூலமுளார்
நற்றவராம் யாவினுக்கும் முன்னிற்கும் - கற்றவர்கள்
தாம்விழுங்கும் கற்பகர்காண் ஆன முகமுடையார்
சேமம்பா லிக்கும் இறை. (219)

ஆறுமுகம்

முருகப் பெருமானார்க் காறுமுகம் என்பர்
கருகும் வினைநாமம் செப்பில் - திருமிகுந்தார்
கண்டால் கவலையெலாம் ஆறும் அருள்முகத்தார்
கண்டுபணி சேயோன் பதம். (220)

விஷ்ணு பிரம்மம்

திருப்பாற் கடல்தன்னில் பாம்பணையில் பள்ளி
அருட்பாலர் ஆதியாம் விஷ்ணு - திருவோங்கு
உந்திக் கமலமிசை உச்சிதனில் உற்றுளர்காண்
விந்தை பிரம்மம் அறி. (221)

அசோகவனம்

சோக வனத்திருந்து துன்புறலை மாற்றிஅ
சோக வனந்தன்னில் ஆக்கினார்கள் - பூகயிலை
மன்னாதி மன்னனின் பொற்பாதம் சார்வோர்க்கு
என்றும் இதயக் கனி. (222)

ஆத்ம ஜோதி

ஆத்மாவில் ஜோதி அமர்ந்ததனால் ஆத்மலிங்கம்
ஆத்ம தரிசனம்செய் தஃதறிமின் - ஆத்மாவின்
நாயகர்மெய்ச் சாலையண்ணல் நற்றவர்பால் இஃதறிமின்
தாயகத்தார் தாமே அது. (223)

ஜோதி விருட்சம்

ஜோதி விருட்சமென்பார் அஃது மரமன்று
ஆதியிறை தன்னின் அருளுருவம் - மேதினியில்
தெய்வத் திருவருளால் தேர்ந்தறிவாம் எம்மானார்
உய்யவைத் தாண்டார் உவந்து. (224)

செவியுணவு

அவியுணவால் தேகம் வளர்வுறும்காண் சீரார்
செவியுணவால் ஜீவன் செழிக்கும் - தவத்தரசர்
வானமுதத் தால்மனுவே தேவனா கும்மாட்சி
தேனமுதம் என்றே தெளி. (225)

ஜீவரத்னம்

தன்னறிவில் சாய்ந்து தளர்வடையேல் மெய்துலங்க
தன்னாசான் தந்தருளும் மெய்யறிவால் - மன்னியசீர்
தேவத் திருவளரும் ஜீவன் ஒளிதுலங்கும்
ஜீவரத் னம்விளையும் தேர். (226)

பசுபதி

பசுவென்னும் ஜீவன் பதியாம்மெய் ஆசான்
நிசநேசம் கொள்வதுவே மாட்சிப் - பசுபதியாய்
ஆனாரே அம்புவியில் வானோராம் மெய்யறிந்தோர்
ஞானியராய் ஆவார் நயந்து. (227)

பேரின்பம்

பிறப்பும் வளர்வுறுதல் ஐயுணர்வு எய்தல்
இறப்பும் இவைபொதுவாம் எங்கும் - சிறப்பு
இறைவன் திருவடிசார்ந் தெய்தல்பே ரின்பத்
துறைமெய் வழியென்று தேர். (228)

நரன்

நான்நான்என் றேயுள் அகங்கரித்து ஆடுகின்றார்
வான்பெரிது என்றே உணராதார் - வானவரே
வந்து அறிவுறுத்தி மாளா வரங்கொடுக்கும்
விந்தையது எண்ணான் நரன். (229)

நரனாய்ப் பிறந்து மனுவாகி வானின்
சுரனாய் உயர்தல் கடமை - பரம்நினையான்
இத்தோடு வாழ்வு முடிந்ததென எண்ணியெண்ணிச்
செத்தே தொலைவான் நரன். (230)

மனு

இறவாப்பே ரின்பம் உளதென்று ணர்ந்து
இறைகுருமுன் நின்று பணிந்து - நிறைவாக
ஏற்று எனையாள்க என்றேத்த வானவர்தாம்
ஏற்றிடவும் நிற்போன் மனு. (231)

சுரன்

தெய்வத் திருவுள்ளம் ஏற்று மறுபிறப்பு
எய்த அருள்புரிந்து நன்மனுவை - உய்யும்
பிரம்மவித்தாய் ஆக்கிப் பெரும்பதம்சேர் விக்கும்
தரம்பெற்றோன் தானே சுரன். (232)

சன்மார்க்கம்

மின்னல் கிரணமொளிர் ஜீவதேகம் தன்னை
மன்னும் இறைவர்தரப் பெற்றேஅச் - சன்னத்தில்
நாடோறும் தானுழைத்து நற்பேறு கொள்வதுவே
பீடுறுசன் மார்க்கம் தெளி. (233)

சத்திய மெய்வழி

நித்திய வாழ்வில் நிலைபெறற்கு நற்சீடன்
சத்திய மெய்வழி சார்ந்திருப்பன் - முத்தர்
முகுந்தர் முழுமுதல்வர் மெய்வழித் தெய்வம்
தகுந்தநிலைக் கேற்றும் தெளி. (234)

அனந்தர்

இறைநோக்கில் நல்லாராய் உள்ளோர் அனந்தர்
துறைமெய் வழியொன்றே தேர்மின் - அறவாழி
ஆண்டவர்கள் பொன்னார் அடிக்கமலம் சார்ந்துற்றோர்
மீண்டெழுவ ரென்றே மதி. (235)

உடம்பு

உடம்பினுள் உத்தமராம் தெய்வம் உறைய
உடம்புதே காலயமென் றோதும் - திடம்பட
தன்னுள் இறையறிதல் தான்தேகத் தின்பயனாம்
தன்னை அறிதல் இதே. (236)

குருவான கோலம்

உள்ளத் திருந்துமிறை உணரார் மனுவென்னும்
தெள்ளியராம் தெய்வம் திருமேனி - கொள்ளும்
குருவான கோலம்கொண் டுய்விப்பர் மக்காள்
உருவாய்வந் தாட்கொள்வர் காண். (237)

தினம்புதியர்

மனுத்தேகம் தாங்கியிறை வையகத்தில் வந்தார்
மனுவென்றே எண்ணி மயங்கும் - தினம்புதியர்
விஸ்வரூ பம்காட்டி மெய்வழிக்குள் ஆக்கிடுவார்
ஐஸ்வர்யர் ஆண்டவர்கள் தான். (238)

ஆசான்

பொய்க்கல்வி கற்கவொரு ஆசான்வேண் டும்அதுபோல்
மெய்க்கல்விக் காசானும் வேண்டுங்காண் - வையகத்தீர்
மெய்வழிதெய் வம்தானவ் ஆசானென் றேயறிவீர்
உய்வழிகண் டுள்தெளி மின்னே! (239)

மனுஈசன்

மனுவுடலில் வந்ததெல்லாம் மாற்றிப் பிறந்து
மனுஈசன் ஆவதற்கே அஃது - மனுமகனார்
ஆண்டவர்கள் வந்திங்கண் அத்தர்மம் தானீந்து
மாண்டவரை மீண்டெழுப்பும் காண். (240)

உடம்பு

இவ்வுடம்பு நோயும் முதுமை இறப்புக்கு
எவ்வகையும் ஆட்பட்டே தீரும் - செவ்வைநெறி
சாலை வளவரசர் பொன்மேனி தந்தருளி
மேலைவெளிக் கேற்றும் உவந்து. (241)

தன்னுள் தரிசித்தல்

தான்தனையே காட்டவந்த தெய்வத்தைக் காணாமல்
வான்நோக்கிக் கையேந்து மாந்தர்களே - மேனாள்
வருசித்தர் முத்தர்களும் தேவரிஷி தன்னுள்
தரிசித்தார் தேவை இனிது. (242)

செண்பகமேனியர்

அழியாப் பிறப்பெய்து அந்தணணாய் ஆக
வழிகாட்டும் மெய்வழி தெய்வம் - எழிலாரும்
செண்பகவா சம்கமமும் தேவாதி தேவர்
பண்பரசர் பாதம் பணி. (243)

தர்ம பரிபாலனம்

எமனனுகா வைரமணித் தேகம் அருளி
இமையவர்கோன் சாலைவள நாடர் - தமருகந்து
தர்மமிகுத் யோவனத்தில் தாம்வீற் றிருந்திறைவர்
தர்மபரி பாலனம் செய்யும். (244)

வித்தில்லா வித்து

வித்தில்லா வித்தொன்று உண்டுகாண் ஆசானின்
முத்தியருள் மெய்த்தவ வாக்கியங்கள் - அத்தனருள்
வேதம் துலங்கிடுமால் நாதம் முழங்கிடுமால்
பாதம் பணிதல் அறம். (245)

கற்பகப் பூஞ்சோலை

அழியாத்தே கம்கொண் டழியாத வாழ்வில்
எழிலாக நிற்றல் இனிதாம் - பொழில்மலர்ந்த
கற்பகப்பூஞ் சோலை களையாற்றும் வேண்டுவரம்
பொற்பகர்மெய்த் தெய்வம் தரும். (246)

மூவாசை

மண்பெண்பொன் என்றமூ வாசையி னாலுலகு
பண்ணிழந்து பேரழிவும் கொண்டிடுமால் - மண்ணுலகீர்
ஆசை அளவுபடக் கொண்டு அரனடியில்
ஆசைகொண் மின்கள் இனிது. (247)

ஞானக்கண்

உடன்வருதல் மெய்ப்பொருளே உற்றறியார் மன்னும்
கடனறியார் ஞானக்கண் ணெண்ணார் - அடலேறு
சற்குருதாள் சார்ந்து சதகோடி முத்தர்புகழ்
நிற்குநிலை மெய்ப்பொரு ளொன்றே. (248)

சம்மதம்

எல்லாம தங்களுமே எம்மதந்தான் சம்மதந்தான்
பொல்லாப்புக் கொள்வதுவே பேதங்காண் - வல்லவராம்
மெய்வழிதெய் வம்வந்து மெய்ப்பொருளு ணர்த்தியதால்
உய்வழிகண் டுற்றார் சுரர். (249)

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்வாங்கு வாழ வழியருளும் தெய்வத்தின்
தாழ்வறியாச் சீர்சிறப்பை தேர்ந்தோர்கள் - வாழி
எங்கும்பே ரின்பம் இலங்கும் திருச்சாலை
தங்குமிடம் தான்மெய் வழி. (250)

தன்வீடு

தன்வீடு தானறியாப் புண்பாடே பொய்ப்பாடு
மன்னுதவ மெய்வீடு புக்கினிது - பொன்னரங்கர்
பொற்றாளைப் போற்றிசெய்து பொற்பதவி பெற்றிடலாம்
நற்றாளே நற்றுணை நாடு. (251)

வாடாநெறி

வாடா நெறிமுழங்கும் வல்லார்மெய் ஆண்டவர்கள்
தேடாப் பெருஞ்செல்வம் தந்தருள்வார் - ஈடில்லார்
நாடினோர் எல்லாம் நலம்பெற்று உய்ந்திட்டார்
தேடித் திருவடைமின் கள். (252)

நான்குகோடி

கோடிநால் கோடிகண்ட கோதறுமெய் தெய்வத்தை
நாடிப் பணிந்துமெய்ஞ் ஞானமுற்றோர் - வாடி
மயங்கார்காண் வல்லெமனை வென்றிடுவார் என்றும்
தவம்சார்தெய் வப்பே றுறும். (253)

நீங்கா மகிழ்ச்சி

என்றென்றும் நீங்கா மகிழ்ச்சிகரப் பேரின்பம்
நன்றே அனுபவிக்கும் நித்தியமாம் - பொன்றாத
வயிர மணித்தேகம் வாழ்வுபெற்று என்றும்
துயரமிலா மெய்வழியைச் சேர். (254)

உய் வழி

எல்லா உயிர்களுமே ஏமன்கை யில்அடக்கம்
பொல்லான் அவன்எம்மெய் தெய்வத்தின் - வல்லமையார்
கையடக்கம் என்பதனைக் காசினியீர்! கண்டறிமின்
உய்வழியிஃ தோர்மின் உவந்து. (255)

நல்லொழுக்கம்

தீங்கற்ற நல்லொழுக்கம் தெய்வத்தின் பால்பற்று
பாங்குற்ற சான்றாண்மைப் பண்பாடு - ஈங்குற்று
மெய்வணக்க நற்பலன்கள் மேதக்க பொற்குணத்தார்
உய்ந்திடுவார் என்றும் உயர்ந்து. (256)

மாறாவயது

மாறா வயதுடைய மாணிக்கத் தேகத்தில்
ஏறா நிலமிசையே ஏற்றிபெரும் - பேறுடையார்
பொன்னரங்கத் தையர் பொழில்உத்யோ வனச்சாலை
என்னரங்கத் துற்றார் இறை. (257)

திருக்கருணை

தேவாதி தேவர் திருக்கருணை வர்ஷிப்பால்
சாவா வரம்பெற்றார் சாயுச்யர் - மூவா
முழுமுதல்வர் சாலைவள நாடர் மலர்த்தாள்
தொழுதெழுவார் உய்வர் தெளி. (258)

உபதேசம்

உபதேசம் பெற்றோமென் றேமயங்கிச் சில்லோர்
அபகீர்த்தி கொண்டே அழிவர் - தபோபலத்தால்
மெய்த்தெய்வ மாட்சி மிக்கறிதற் கன்றோ
உய்ப்பொருளைத் தந்தார் உவந்து. (259)

ஆசான் நேசம்

ஆசானின் னாரென் றறிந்தவர்பால் அன்புமிகு
நேசம் பெறற்கே உபதேசம் - மாசறியா
மாணிக்கத் தெய்வத்தின் மாண்பை உணர்ந்தோர்கள்
மாணிக்கம் சீடர்க்குள் தேர். (260)

மெய்யறிவு

பொய்யகத்தே என்றும் புகுந்துள்ள இம்மனத்தை
மெய்யறிவு ளாக்கி விளைவேற்றி - உய்வித்து
செவ்வீடு தான்புகுத்தி தேவனென ஆக்குதற்கே
மெய்க்கல்வி என்றே அறி. (261)

சஞ்சீவி

வானகத்தின் வேதாந்த சஞ்சீவி மெய்ப்பொருளை
தானம் தருவள்ளல் தானெம்மான் - வானவர்கோன்
செவ்வழியைக் காட்டி உய்வழியுட் கூட்டும்
மெய்வழிதெய் வம்தானி வர். (262)

நற்பதம்

துய்ய ஒழுக்கச் சுடரொளிரும் சீரனந்தர்
மெய்க்குலத்தை உற்பவித்தார் பொன்னரங்கர் - ஐயரவர்
பொற்பாதம் சார்ந்து பணிந்து வணங்கிடுவார்
நற்பதமே நண்ணும் நயந்து. (263)

உய்வழி

விதிப்படியே ஆகுமென்று விள்ளும் உலகோர்
கதியெமனின் கைப்படுதல் என்பர் - மதியரசர்
மெய்வழிதெய் வம்வந்து வெய்ய வினைகடத்தி
உய்வழிதந் தாண்டார் உவந்து. (264)

வண்ணவுடலம்

அக்கினியால் வேகாது அப்பில் கரையாது
மிக்கஎழில் மாட்சியுடை மெய்யுடலம் - தக்காராம்
விண்ணவர்மெய்த் தெய்வ மிகுதயவால் பெற்றஎழில்
வண்ணவுடல் என்றே அறி. (265)

மெய்ப்பொருள்

எந்திறத்தை வெல்லவல்லார் யாருளர்காண் என்றேமன்
தந்திறத்தை தான்செலுத்தும் அக்காலம் - விந்திறத்தார்
வையகத்துள் வந்தினிது மெய்ப்பொருளைத் தந்தருளி
உய்யவைத்தார் என்றுவந்து ஓது. (266)

கோளாயிதம்

கோளா யிதம்கொண்டு கூற்றுவன்தன் ஆற்றலினால்
மாளவைக்கும் மாந்தர்களைக் கோளரியும் - வாளா
யிதம்கொண்டு எங்கள் உயிர்நின்று வான
பதம்தந்து காக்கும் தெய்வம். (267)

ஆத்ம சாந்தி

ஆத்மசாந் தியென்னும் அற்புதத்தை ஈயபர
மாத்மாவாம் பொன்னரங்கர் போந்தார்காண் - மாத்திறத்தால்
என்றும் நிலைநிற்கும் பொன்றாப் பெருவாழ்வை
நன்றே அளிக்கும் நயந்து. (268)

காருண்யர்

காலகா லம்கடந்த காருண்யர் கர்த்தாதி
ஞாலம்முற் றுய்ந்து நலம்பெறவே - கோலம்கொள்
பொன்னரங்க நாயகரின் பொற்றாள் பணிபவர்க்கு
எந்நாளும் இன்பம் நிலை. (269)

ஆவிடை

புழுக்கம்வித் தண்டம் சினையென்ற நான்கு
ஒழுக்கப் பிறப்பிடங்கள் உண்டு - இழுக்கில்லாத்
தேவராய்த் தாம்பிறக்க தேசிகரின் ஆவிடையாம்
மூவாப் பிறப்பிடமொன் றுண்டு. (270)

ஏழாம் பிறப்பு

ஏழாம் பிறப்பதுவும் எய்தியே தேவரென
வாழும் அழியா நிலத்தாள்கை - ஆள்கின்ற
அப்பேறு பெற்றுயவே இப்பாரில் வாழ்வுற்றோம்
செப்பமுறத் தெய்வம் துணை. (271)

மெய்ப்பயன்

மும்மலமும் நீறாக்கி முப்பொருள்தத் தம்செய்து
எம்பெருமான் இன்னருட்கே ஆட்பட்டு - செம்மையுற
ஏழாம் பிறப்புற்று ஈடில்பே ரின்பசித்தி
வாழ்வுறுதல் தான்மெய்ப் பயன். (272)

அறிவுடையன்

ஆசான் அறிவினெறிச் செல்வோன் அறிவுடையன்
நேசமாய்த் தன்னறிவிற் சாய்ந்திட்டோன் - மாசுடையன்
தேவன் அறிவுதரம் செப்பற் கரிதாகும்
ஆவோம் அவர்க்கிணக்கம் ஆம். (273)

திரவியம்

திரவியம் என்பது தேவேசர் போற்றிப்
பரமன்ஜீ வன்ரத்னம் பேணல் - பரநாதம்
சேர்ந்து விளைவேற ஞானக்கண் தான்திறக்கும்
ஆர்ந்து கடலோடிச் சேர். (274)

சத்தியம்

முத்திக் குரியகுரு தேவர் திருவாக்கே
சத்தியம் சார்ந்தோர்க்கே சாத்தியமாம் - முத்தரசர்
சத்தியம் பேணுதற்கே தன்னுயிரும் தந்திடுவார்
சித்தி நிலைப்பிடத்தார் காண். (275)

வானவர்

மானுட மேனிய ரெல்லாம் மனிதரல்ல
மானுடர்போல் மற்றுயிர்கள் வந்துறுமால் - வானவரும்
மானுட மேனியினில் வந்து பிறப்பறுப்பர்
தானிறிந்து சார்ந்துய்மின் கள். (276)

காயத்திரிதேவி

காயத்ரி தேவிதனைச் சந்தியா வந்தனம்செய்
தேயத்தீர் சற்றேநீர் சிந்திப்பீர் - காயத்ரி
தந்தம் இதயத் திருமாளி கைதன்னில்
சந்தித்து வந்தனம் செய்மின். (277)

சர்வலோக சரண்யன்

சர்வலோ கச்சரண்யன் தன்னுள் உறைந்தினிது
சர்வாங்க முங்காக்கும் தன்மையறி - சர்வேசர்
இக்கடத்துள் உள்ளவனை அக்கடத்துள் ஆக்கவென்றே
மிக்கவதா ரம்செய்தார் மேவு. (278)

நீதி

நித்தியத்தைக் கைதரவே நீதியெனும் மெய்பொருளாம்
சத்தியர்மெய்த் தெய்வம் அருள்கின்றார் - பத்தியுளோர்
பெற்றுப்பே ரின்பப் பெருவாழ்வில் தேவநிலை
உற்று உயர்வார் இனிது. (279)

வல்லாளர்

எல்லாம் எமன்கை அடக்கமவ் வேமனென்றும்
வல்லாளன் எம்பெருமான் கையடக்கம் - நல்லாரின்
நாமம் உரைத்தாலே சேமம் செழித்தோங்கும்
ஆமனுஎன் ஐயன் அறி. (280)

பரிசுத்த ஆவி

இறைவன் பரிசுத்த ஆவியாய் பரந்து நிற்கும்
துறையே சபைஆ லயமாம் - மறைபோற்றும்
தேவாதி தேவர் திருவரங்கள் தந்தருள்மெய்
மூவா முதல்வர் அறி. (281)

தேசிகர்

ஜீவன் தனைச்செழிக்கச் செய்து மனுப்பிறப்பால்
தேவன் எனஆக்கும் தேசிகரே - மாவலியர்
அந்நாட்டு வித்தாக ஆக்கும் தயவுடையார்
இந்நாட்டில் சாலை அரசு. (282)

கண்ணாளர்

புண்ணுடம்பி னாணைப் புகழுடம்பில் ஏற்றிவைக்கும்
அண்ணல் பதாம்புயத்தை ஆஸ்ரயித்தல் - வண்ணமிகு
விண்ணவனாய் ஆக்கி விமலனுமாய் மாற்றிவைக்கும்
கண்ணாளர் எம்மான் கனி. (283)

தேவ ஆசை

மூவாசை தானேஎம் மெய்ம்முதலைக் கொள்ளாமல்
மேவாசை யாக விளங்குதுகாண் - தேவாசை
கொண்டு சிரஞ்சீவி கண்டு சிவபதத்தை
அண்டும் துறைமெய் வழி. (284)

சாகா வரம்

சாக இருந்தவரைச் சாகா வரங்கொடுத்து
வேகாமற் காத்த விமலரருள் - ஏகாப்
பெருநிலைக்கு ஏற்றி இகசுகத்தை மாற்றி
அருளுலகில் ஆழ்த்தும் அறி. (285)

சமச்சீர்

பேதங்கள் கொள்ளும் பெரும்வெறியர் வன்செயல்கள்
ஆதங்கம் செய்யும் அகிலத்தை - மாதங்கம்
எம்மான்மெய்த் தெய்வம் அனைத்தும் தகர்த்தெறிந்து
பெம்மான் சமச்சீர் செயும். (286)

குரு

அறிவறிந்தோம் என்று அலறும் மதத்தார்
நெறியறியா(து) இன்னல்செய் காலம் - அறிவை
அறிவுறுத்தி ஆன்ம நெறிநிறுத்தி குன்றாக்
குறிப்புணர்த்தி ஆளும் குரு. (287)

சாலை

ஞானமும் நாமறிவோம் என்றே நவின்றிட்ட
ஈனர்க்குச் செப்பும் மொழி கேண்மின் - வானம்
வழிதிறந்து வானவிழ்தம் தான்கொணர்ந்து தெய்வம்
எழிலுறவந் தார்சாலைக் காம். (288)

சமரசம்

இல்லை சமரசமென் றிப்புவியோர் பொல்லா
எல்லைவரை வந்துவிட்ட இக்காலம் - வல்லாளர்
சாலை வளவரசர் சர்வ சமரசத்தைக்
கோலமாய் ஈயும் கொணர்ந்து. (289)

எம்மான்

ஞானம்தி யானம்யோ கம்என்று இவ்வுலகில்
ஊனப்பா சாண்டியர் தாமுளறும் - வானவர்கோன்
மெய்வழியை மெய்ஞ்ஞான மெய்ம்மணத்தைக் கொண்டுவந்து
மெய்நாட்டும் எம்மான் அறி. (290)

துங்கநெறி

தங்களின மேஉயர்வு என்றுலகில் பேதமது
பொங்கியெழுந் தேஅழிந்து போங்காலம் - சிங்கமென
எங்களையர் இங்குவந்து எங்கும் சமரசமார்
துங்கநெறி காட்டும் சிறந்து. (291)

மரணமிலா வாழ்வு

மரணமிலாப் பேர்வாழ்வை வையகத்தில் இந்தச்
தருணத்தில் கொண்டுவந்து தந்த - அரனெமது
ஆண்டவர்கள் ஒன்றுகுலம் ஒன்றிறைவன் என்றகொள்கை
ஈண்டுநிலை நாட்டும் இனிது. (292)

சாவு

விந்துவெளி யாகி விரைத்துப் புழுத்தழுகி
செத்துஜில் லிட்டுக் கனமேறி - மெத்த
வாதனையுற்றேயிறுதி வெந்நரகுக் கேகும்
சாவதனின் துன்பம்வே றில். (293)

ஜீவப்பிரயாணம்

சென்றுவரு கின்றேன் எனச்செப்பித் தீர்த்தம்ஏற்(று)
அன்றலர்ந்த பத்ம அழகிலங்க - நன்று
துவண்டு கனமின்றி மஞ்சள்தான் பூத்துச்
சிவபதத்தில் சேர்பயணம் தேர். (294)

பூமித்தாய்

சாமி திருவருளால் ஜீவப்ரயா னர்தமை
பூமித்தாய் ஏற்றுப் பொதிந்துவைப்பாள் - சேமம்சேர்
தங்கம்தங் கல்போன்று தீர்ப்புநாள் ஆகுமட்டும்
இங்கிருப்பார் சத்யமிது தேர். (295)

தேவாதி தேவன்

எந்த உலகத்தும் எவரும் இயற்றரிய
விந்தை தவமியற்றும் மெய்த்தெய்வம் - நந்தம்
ஜீவன் கடைத்தேறச் செய்யும் திருவோங்கு
தேவாதி தேவன் அருள். (296)

தெய்வப் பரிசு

எங்கும் சமரசமே தங்கும் தவவாழ்வு
பொங்கும்மெய்த் தெய்வப் பரிசாலே - இங்கு
அந்நாட்டு வித்தாக அற்புதமாய் வாழ்வருளும்
இந்நாட்டில் எம்மான் இனிது. (297)

மெய்குண்டம்

தீர்க்கத் தரிசனத்தோர் செப்புமுரை வண்ணம்போல்
ஆர்க்கும் அமரவாழ் வென்றுமே - கார்க்கும்தீ
கைகொண்ட தெய்வம் காசினியி லேவந்து
மெய்குண்டத் தீந்த வரம். (298)

சரணாகதி

சரணா கதியொன்றே சாயுச்யத் துய்க்கும்
மரணாவஸ் தையில்லை என்றும் - கரணம்
கருவியெலாம் ஓய்ந்திடுமுன் கர்த்தர்தாள் சார்ந்து
குருவினருள் கொள்க இனிது. (299)

வாழி

என்றுமெங் கும்மெய்ம்மை இன்பம் துலங்கிடவே
நன்றருளும் நன்மார்க்க நாதர்தயை - நின்றினிது
நீடூழி மெய்வழியே ஓங்க விளங்கதவப்
பாடுடையார் பொன்னரங்கர் வாழி. (300)

அருள் தண்டக மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!