திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/026.திரு ஒருபா ஒருபஃது


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



26. ஒருபா ஒருபஃது தொகு

இலக்கணம்:-

ஒரே ஒரு பாவகையான் ஒரு பொருளின் மேல் பத்துப் பாடல்கள் வருமாறு பாடிமுடிப்பது ஒருபா ஒருபஃதாம்

வெள்ளை ஆதல் அகவல் ஆதல்
தள்ளா ஒருப தொருபா ஒருபஃது
- பன்னிருபாட்டியல்  - 219
ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறை என்ற
ஒன்றினால் ஆர்ந்த ஒருபா ஒருபஃது
- வெண்பாபாட்டியல்  - 40
அகவல் வெண்பா கலித்துறை அதுகொண்டு
ஒருபா ஒருபஃது உறின் அப் பெயராம்
- இலக்கண விளக்கம்  - 823
ஒருபா ஒருபஃது உரைக்கில் அகவல்
கலித்துறை வெண்பா கலந்துபத்து இயம்பலே
- பிரபந்ததீபம்  - 59

இஃது என் ஆத்ம காம நாயகரைத் தரிசனை செய்து தெய்வீக மெய்வழிச் சபையில் அங்கத்தினனாக ஏற்றருள வேண்டிப் பாடியது.

திரு ஒருபா ஒருபஃது

காப்பு

கலித்தாழிசை

திருவருணற் பெருங்கருணை இறைவர்திரு வடியே!
கருதிடுவன் உறுதுணையஃ தலதுபிரி திலையே!
இருகமல திருவடிகள் நனதுமுடிக் கணியே!
ஒருகணமும் மறவாநினை விதயமதில் பதிவேன்!

நூல்

பதினான்கு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

ஞாலமிசை ஞானநெறி காட்டிஅந் நாட்டிற்கு
நல்வித் தெடுக்கு மரசே!
நற்கருணை அருளமுதம் நனிபெருகத் திருவுயர
நற்றவம் சிறந்து ஓங்கச்
சீலமிகு செந்தமி ழகத்தினி லுதித்த தமிழ்த்
தெய்வமே சைவ மலையே!
சீரார் மறைபுகழும் தேவே! பரம்பொருளே!
சித்துவிளை யாடும் திருவே!
சாலையினில் சமரசசன் மார்க்கநெறி யோங்கவே
தண்ணொளி பரப்பு கதிரே!
சர்வபிர பஞ்சமும் படைத்துக்காத் தருள்பரா
சக்தியே! திகழும் இறையே!
மூலமுதல் திருவடிக் கேழைசிரம் தாழ்த்தியே
வணங்கினேன் ஏற்ற ருள்கவே!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(1)

சாலையின னந்தரடித் தூசுதனையே தொடவும்
சற்றுமரு கதையி லேன்யான்
சிறியேன்பி தற்றுமொழி பிழையேமி குத்தெனினும்
திருவுளம் பொறுத்தல் வேண்டும்
சீலமில னெனைப்போலும் கொடியன்கொடு நரகினில்
தேடிடினும் கிட்டா னந்தோ!
சாக்கடை புழுவினும் மாக்கடைப் புழுவேழை
தீமையே உருவா னவன்
சாலவுமு யர்ந்ததகை யோர்களையி கழ்ந்தவெஞ்
சழக்கன்யான் எனினும் இறைவா
தங்கள்தனிப் பெருங்கருணை யால்தடுத் தாட்கொண்டு
சாலையின னந்த னாக்கி
மாலயனும் காணாத திருவடியும் மறைமுடியும்
ஏழைக்குக் காட்டல் வேண்டும்
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(2)

நிலையான தெதுவென்று அறியாத கொடும்பாவி
நீசருள் நீச நீச்சன்
சிறிதேம லம்படின் கழுவவகை யுண்டென்று
செப்புவர் ஆன்ற பேர்கள்
மலமேகொண் டுருவான என்னையே கழுவியே
மாற்றுமா றென்னை? எங்ஙன்?
மாயையா ணவம்காமி யங்களால் என்னுடல்
முழுதுமே ஆன தந்தோ!
கொலைபாவி தனிலுமாக் கொடும்பாவி ஏழையைக்
கொண்டுபொறுத் தருள்க இறைவா!
கனிவுமிகு திருவருட் கருணையால் ஆட்கொண்டு
கலையார் அனந்த னாக்கி
மலம்நீங்கி மருள்நீங்கி மகிழ்வோங்கத் திருவடியும்
மறைமுடியும் காட்டி யருள்வீர்!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(3)

கற்றவன் போலே நடித்துமே கர்வமிக
நெஞ்சினில் கொண்ட கொடியன்
கருதாது மொழிபேசிப் பிறர்மீது குறைகூறிக்
காலம் கழித்த மடையன்
கற்றிடவும் உரியதோர் அரியதோர் கல்வியைக்
கருதியும் பார்த்தி டாத
கசடன்வெங் காதகன் பாதகன் தீதகன்
கல்லாத புலையன் கொலையன்
தெற்கினில் உதித்ததிருத் தெய்வமே! பண்பினில்
திருவினில் தீனன் எளியேன்
திருவருட் கருணையால் மருள்கடிந் தருளொளிச்
சாலையின் அனந்த னாக்கிப்
பொற்கமலத் திருவடியும் மறைமுடியும் காட்டியிப்
புன்மையேன் உய்ய வருள்க!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(4)

ஆண்டுபல கோடியாய் அருந்தவம் செய்தோரும்
அடையாத பெரும்பேற் றினை
அடியனேன் பெற்றனன் அகம்களிப் புற்றனன்
ஆனந்த மென்சொல் லுகேன்
ஆண்டவர்கள் தாங்கள்அவ தரிக்குமிக் காலத்தில்
அமிழ்தெனும் தமிழ கத்தில்
அசடனென் உயிர்மீது கருணையால் பிறப்பித்த
அருளினுக் கிணையும் உண்டோ?
ஆண்டவர்கள் அருட்புகழைக் கேட்டுதிருப் புறத்திருவை
அடியனேன் காணும் வாய்ப்பை
அளித்ததோர் அருட்பெருங் கருணைக்கு இணையெந்த
அகிலத்தும் இல்லை இறைவா!
மாண்புமிகு தெய்வமே! மடையனெற் கிப்பேறோ
வழுத்தினேன் போற்றி! போற்றி!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள்ளலே!
(5)

கண்டுமகிழ் வாய்ப்பினைக் கசடனெற் களித்துமே
கனிவதாய் நோக்கிச் சுவைகற்
கண்டில்தேன் பால்மதுரப் பருப்புநெய் சர்க்கரை
கலந்ததினும் இனிய சொல்லால்
“சண்முகா” என்றழைத் திட்டதோர் அன்பினைப்
புகழவோ நாவில் லையே!
பொய்மைமிகு என்நாவால் புகழவெனின் சொல்லிலை
பொற்றமிழ் அறிகி லேனே!
எண்டிசையும் மேல்கீழும் இலங்குமெய்ப் பரம்பொருள்
இறைவரே! தங்கள் அருட்கு
இணையேதும் அறியாத எளியேனை அருளோடு
ஏற்றருள வேண்டும் இறைவா!
விண்டுரைகள் புகலவரி தாகும்திரு வடிமுடியும்
மாண்புடனே காட்டி யருள்க
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(6)

இறைவரெனை அன்போடு நோக்கியஞான் றேயானும்
இனிதங்கு அங்க மானேன்
எனைச் “சண்மு காஎன அழைத்தபோழ் தேதங்கள்
இன்சொலில் யான்பி றந்தேன்
மறைபுகழும் திருவாயால் 'மணம்கொண்டு வா'வென்று
மொழிந்ததோர் தீட்சை யன்றோ
மறுமுறையும் சென்றகால் மறவாது கேட்டதோர்
மாண்பினுக் கென்சொல்லு கேன்
குறைகள்மிகு கொடியனெனி னும்எனக் கிவ்வருள்
கருணைதந் திட்ட இறைவா
கலைமயில்கள் நடனமிடு சாலையில் திகழுமுயர்
கற்பகத் தருவின் திருவே!
மறைமுடியும் திருவடியும் காட்டிஎளி யேனையும்
மாற்றிப்பிறப் பித்த ருள்கவே!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(7)

மட்டிக்குள் மட்டிபெரும் துட்டர்க்குள் துட்டன்வெறும்
வித்தைக்கள் ளன்புலை யனேன்
மக்கட் குணமிலாது மிக்கக் கொடுவிலங்கை
ஒத்துத் திரியும் கடையன்
வெட்டிக் குழைத்துவெறும் பட்டிக்குள் நாய்போல்தளைப்
பட்டுக் கிடக்கும் மடையன்
மிக்கக் கொழுத்தவன்ச ழக்கன் கொடுமைசெய
வெட்கப் படாத கொடியன்
கட்டுக்குள் ளேஅடங்காக் கெட்டுத்தி ரியுமனம்
கட்டுக்குள் என்ற டங்குமோ?
கல்விக் கடலெனுமச் செல்வத் திருமிகுந்த
ஒல்காப் புகழ்தெய் வமே!
மட்டில் பெரும்புகழின் எட்டாப் பரம்பொருளின்
எட்டிரண் டும்அருள் கவே!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் இறைவரே!
மெய்ஞ்ஞானப் புகழ்வள் ளலே!
(8)

காண்போர்க்கு நல்லவன்போல் வீண்பேச்சுப் பேசிநடித்
தேன்வீணன் மிக்கா ணவக்
காழ்ப்பேறிக் காமமெனும் சீழ்ப்பிடித்த பொய்யுடலேன்
வாழ்வாக்கும் மெய்தேர் கிலேன்
பூண்போல்நி னைந்துவிலங் கேமாட்டி யேதிரியும்
புன்மைக் கருத்தின் வெறியன்
போகாத புனலறியேன் வேகாத தலையறியேன்
சாகாத காலு மறியேன்
மாண்பார்க்கும் வானவர்கள் தான்போற்றும் ஞானநெறிக்
கோன் ஆக்கும் வல்ல இறைவா!
வீண்பீற்றல் பாண்டமெனும் பாழ்ச்சோற்றுத் துருத்தியெனை
மேலாக்கித் தீமையி னின்று
மீள்வாக்கி ஞானக்கயப் பூவாக்கி யேஅருள்க
வேதமுடி காட்டி யருள்க
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே
மெய்ஞ்ஞானப் புகழ் வள்ளலே!
(9)

நெஞ்சில்மிகு வஞ்சன்கொடு நஞ்சன்மதிப் பஞ்சமுடை
யோனறிவு கொஞ்ச முமிலேன்
நல்லவர்கள் சொல்லுமுரை தள்ளியவன் கள்ளன்உயர்
வுள்ளகலை கல்லா தவன்
விஞ்சையினிற் கொஞ்சியுயர் செஞ்சடைய வன்சிவனைந்
தஞ்சமுற அறியா தவன்
வேதமது வோதியுயர் நாதனருட் பாதம்பற்றும்
தீதில்முறை தெரியா தவன்
துஞ்சுதலும் மிஞ்சிவரல் அஞ்சுகிறேன் தூயவடித்
தஞ்சமிகத் தஞ்சம் இறைவா!
தறிகெட்ட பாவியெனை நெறிப்படவும் வழியருள்க
தருமமுயர் கருணை ஞான
மஞ்சுபுடை சூழஎழில் விஞ்சுபுகழ் மேண்மையுயர்
மாண்பிணையில் தேவர் கோனே!
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் தெய்வமே!
மெய்ஞ்ஞான புகழ்வள் ளலே!
(10)

இணையற்ற திறலோங்கு இறைவா!யான் இதுகாறும்
இழைத்தவெம் பாவ மெல்லாம்
எழுகதிரின் ஒளிபடவும் இரிந்தோடு பனியெனவே
இறையவர்கள் கனிந்த பார்வைக்
கணைபட்டுக் கழிந்தோடக் குறையற்ற நெறிப்பட்டுக்
கசடற்று வாழ அருள்வீர்!
கடையனெனை ஆளவிது தருணமிது தருணம்ஒண்
கழற்பற்றத் திறம ருள்வீர்!
துணையற்றேன் எளியேனிப் பிறவியினில் தவறாது
தனிப்பெருங் கருணை பொழியும்
தரணிமுத லாம்தங்கள் திருவருள் பெற்றுய்ய
அருள்புரி கவேபொற் கழல்
புணைபற்றிக் கரையேறப் பொய்மையேன் கடைத்தேற
பேரருள் புரிதல் வேண்டும்
மெய்வழியின் உய்கதியை எய்தவருள் எம்மானே
மெய்ஞ்ஞான புகழ்வள் ளலே!
(11)

வேறு

எம்மா தவஞ்செய்தும் எய்தற்கு எட்டாத
இன்பம்வ ழங்கும்நல் மெய்வழியின் சாலை
ஏகன்அ னேகன்இ ருடியர்கள் மோகன்
இறைவர்அ ருள்கொண்டு றைந்திடுநற் சோலை
அம்மாத வம்ஓங்கும் ஆண்டவர்கள் வள்ளண்மைக்
காட்பட்டுக் கனிவோடு அனந்தரெல் லோரும்
அம்மா!என் அப்பா!என் அன்பே!என் அருளே!என்
இறையே!என் அகம்வாழும் தேவே!

பெம்மானே! அண்டங்கள் புவனங்கள் எல்லாமே
புரந்தருள் பரம்பொருள் தவகொண்டல் இறைவா!
பேரின்ப வெள்ளமே என்றே புகழ்பாடிப்
போற்றித் துதிக்கின்ற வேளையில் நான்ஏழை
இம்மாத வப்பேறு என்றெய்து வேன்என்றன்
இருகண்கள் ஆறாகப் பரவுவேன் என்று
ஏங்கும்என் நெஞ்சும்இ ணைதாள்கள் தஞ்சம்
எனைக்காத் தருள்தந்து ஏற்றருள்க இறைவா!
(12)

திரு ஒருபா ஒருபஃது இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!