திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/046.அறக்களவஞ்சி



ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫46. செருக்கள வஞ்சி

தொகு

இலக்கணம்:-

ஒர் அரசன் பகையரசன் மீது படையெடுத்துச் சென்றபோது போர்க்களத்தில் மாற்றான் படையொடு பொருத அப்போர்க்களச் செய்திகளைப்பாடும் பொருண்மையுடைய இலக்கியவகை இஃது.

விருத்தவகை பத்தான் விளம்பு மதனைச்
செருக்களம் எனவே செப்பினர் புலவர்
- பன்னிரு பாட்டியல் 201
மொய்யின் திறம் வஞ்ஞிப் பாவின் முடித்துரைத்தல்
செய்யின் செருக்கள வஞ்சியாம்
- வெண்பாப் பாட்டியல் 59
செருக்கள வஞ்சியாம் செருமுகத் தாயவை
சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே
- தொன்னூல் ..... 270
வாய்த்த செருக்கள வஞ்சி களத்தைக்கூறல்
-சிதம்பரப் பாட்டியல் 39
செருக்களம் கூறின் செருக்கள வஞ்ஞி
- இலக்கண விளக்கம் 869

இந்தக் காலத்தில் உலக மாந்தர் அற்ப அழிந்து போகும் இன்ப சுகங்களின் மீது ஆசைப் பட்டுத், தாங்கள் அடைய வேண்டிய பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடையாமலே எமன்கைப்பட்டு மரணிக்கிறார்கள். அதனை எதிர்த்து எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தங்கள் தபோபலத்தால் உத்தமமான ஒரு சந்ததியை உற்பவிக்க செய்யும் போர்தான் அறக்கள வஞ்சி.

அறக்களவஞ்சி

காப்பு

வஞ்ஞி நிலை விருத்தம்

நாடும் நல்லோர் மெய்வழி
கூடும் சான்றோர் உய்வழி
தேடும் சிந்தை தேர்வழி
ஆடும் தாள்கள் காப்பிதே

நூல்

பலம்கொள் பரமர் படைபார்மின்
வலங்கொள் மெய்யாம் வழிசேர்மின்
மலங்கள் மூன்றும் மடிந்தேகும்
கலங்கி எமனும் கடிதேகும் (1)

முத்தர் முகுந்தர் எம்பிரான்
சித்தர் தலைவர் தம்பிரான்
கர்த்தர் சேனை எழுந்ததே
எத்தர் படையும் விழுந்ததே. (2)

அரங்கர் மெல்லச் சிரித்தனர்
புரங்கள் மூன்றும் எரித்தனர்
வரங்கள் அருளால் கொடுத்தனர்
உரங்கொள் சாலை தெய்வமே! (3)

வையம் எங்கும் செழிக்கவே
வெய்ய எமனை அழிக்கவே
துய்யர் தெய்வம் தோன்றினார்
அய்யர் சாலை ஆண்டவர் (4)

குலங்கள் செழிக்க வந்தகோன்
நலங்கள் யாவும் நல்கினர்
துலங்கும் சாவா வரந்தரும்
இலங்கும் சாலை திறந்திடும் (5)

ஆற்றல் சிகரம் எங்கோமான்
ஏற்றம் உற்றார் எம்மரசர்
கூற்றம் தன்னை வென்றார்கள்
போற்றும் பொன்னர் பொற்றாள்கள் (6)

மூவா முதல்வர் முனிவேந்தர்
தேவா திதே வர்சார்ந்தோர்
தீவா தனைகள் தீர்ந்தார்காண்
சாவா வரம்பெற் றார்ந்தார்கள் (7)

ஆதி மூலம் ஆண்டவராய்
நீதி மன்னர் நாற்படையர்
தீதாம் கொடிய கூற்றோடும்
பேதம் யாவும் தோற்றோடும் (8)

நவநீ தத்தார் என்காமீல்
சிவமாம் அரசர் என்சாமி
பவக்கோள் வென்றார் அருள்வாமி
தவத்தால் செழித்த திப்பூமி (9)

ஆற்றல் சிகரம் எங்கோமான்
ஏற்றம் உற்றார் எம்மரசர்
கூற்றம் தன்னை வென்றார்கள்
போற்றும் பொன்னர் பொற்றாள்கள் (10)

அறக்களவஞ்சி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!