திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫16. உழத்திப் பாட்டு
தொகுஇலக்கணம்:-
உழத்திப் பாட்டு என்னும் இவ்விலக்கியம் உழவுத்தொழில் செய்யும் உழவர் பெருங்குடி மகளைப் பற்றியது. உழத்தி ஒருத்தி பிரிதோர் உழத்தியோ, உழவனோ அத்தொழில் பற்றிய செய்திகளை விளக்கிக்கூற அறிந்து கொண்டதாகப் பொருள் அமைத்துப் பாடுவதாகும்.
புரவலர் கூறி அவன் வாழிய வென்று அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள் எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே
- பன்னிரு பாட்டியல் 216
உணவின்றி உயிர் வாழ்தல் இயலாது. அவ்வுணவுப் பொருட்களை விதைத்து, வளர்த்து, மக்கட் சமுதாயத்திற்கு வழங்கும் ஒரே தொழில் உழவுத் தொழில். அதுபற்றி விதந்தோதுவது இப்பனுவல் ஞான வேளாண்மை செய்யும் தேவகோமான் எங்கள் உயிர் நட நாயகர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தெய்வீக அன்பு நீர் பாய்ச்சி, திருவருள் அமுதென்னும் ஜீவதேவ உணவை வழங்கி, உயிர்ப்பயிர் வளர்த்து அருள்பாலிக்கின்றார்கள். இப்பனுவல் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப் பெற்றுள்ளது.
மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
காப்பு
வழுத்தி வணங்கினர்க்கு வாழ்வருளும் வள்ளல்
உழத்திப்பாட் டோதஅருள் ஈவர் - பழுத்தினிய
மாமறைகள் போற்றும் மணிமொழிமெய் ஆண்டவர்கள்
தூமலர்த்தாள் என்றும் துணை.
நூல்
பாட்டுடைத்தலைவர்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உயிர்ப்பயிர்செய் விண்ணுழவர் உலகிலவ தரித்தார்
உத்தமர்தம் ஓங்கருளை உலகமெலாம் விரித்தார்
செயிரெனும்வல் எமபடரைச் சிதைந்தோட ஓட்டி
ஜென்மசா பல்யமுறச் செய்வழியைக் காட்டி
துயர்தவிர மெய்வழியாம் துறையதனில் இருத்தி
தொல்லுலகில் புகல்வேறு இலையென்றமு தருத்தி
நயவுரைசெய் சாலைவளர் ஆண்டவர்எம் தெய்வம்
நற்றாள்கள் சிரம்சூடிப் பணிந்தினிது உய்வம் (1)
உலகனைத்தும் படைத்தளித்து மறைத்தருளி அழிக்கும்
ஒருமுதல்மெய் வழிச்சாலை தெய்வம்அருள் கொழிக்கும்
அலகில்விளை யாட்டுடையார் அனைத்துயிரும் புரக்கும்
அண்டசரா சரர்தயவால் அமுதருவி சுரக்கும்
கலகமிகு சாதிமத பேதமெலாம் களைந்து
கர்த்தாதி கர்த்தர்புகழ் கழறிடவுள் விழைந்து
திலகமெனும் சாலைவளர் தெய்வமனைத் துயிரின்
சீரோங்கும் புரவலர்காண் திருவடிவா ழியரோ! (2)
அனந்தரடிப் பொடியெனுமோர் அடிமைஉழ வியற்றும்
அன்பாம்நீர் பாய்ச்சியருள் ஆருயிரை வளர்க்கும்
வனம்உத்யோங் கிடும்சாலை வளர்பதிசார் வயலில்
மறுவில்பணி யாற்றுமிளம் கலைக்குடும்பன் மயலால்
தினம்வணங்கிச் சீருழவின் சிறப்பதனை உழத்தி
சௌந்தரவல் லிக்குடும்பி செவிமடுக்கக் கிளத்தும்
கனமிகுவே ளாண்மையிந்தக் காசினியில் உயர்க
கர்த்தரின்மெய் மேலாண்மைக் கலந்துயிரில் வளர்க (3)
அறுசீர்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
செவ்விய காஷா யத்தால்
சிரசில்ரட் சிப்புச் சீரா
பவ்விய மாய்அ ணிந்து
பஞ்சகச் சமும் புனைந்து
கவ்விய இடைக்கச் சும்தான்
கனிவுடன் கட்டிக் கொண்டு
இவ்வணம் இளம்கலை யாம்
எழில்குடும் பன்தான் தோன்றும் (4)
எல்லையில் சாலை தெய்வ
இணையடி சிரத்தில் சூடி
செல்வமாய் சௌந்தர வல்லிச்
சீருடைக் குடும்பி தானும்
மெல்லவே பணிவோ டன்பு
மிக்கவள் வந்து தோன்றி
நல்லவக் குடும்ப னோடு
நற்பணி செய்ய வந்தாள் (5)
துஞ்சாத வரங்கள் ஈயும்
தூயமெய் வழித்தெய் வம்மே
எஞ்சாமி சாலை சார்ந்த
எழில்வயல் தன்னில் நாங்கள்
செஞ்சாலி நெல் விளைக்கத்
திருப்பணி யாற்றப் போந்தோம்
தஞ்சமிக் கடைந்தோம் தேவே!
தருக உத்தரவு இன்னே! (6)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மெய்வழி சாரா நெஞ்சினர் இறுகி
மிகக்கடி னமனம் கொளல்போல்
செய்யது கிடப்பச் சேடைபாய்ச்சினனே
சேற்றுழ வுக்கெனக் குடும்பன்
ஐயனைத் தொழுது அழகுடன் ஏரில்
அன்புடன் எருதுகள் பூட்டி
மெய்யவர் தனிகைப் பிள்ளையார் சுற்று
மிக்கவே முதலினில் உழுதான் (7)
நாதரைப் பணிந்து நான்முறை உழுது
நல்லசந் தனம்போல்சே றுணக்கும்
தீதற அண்டை வெட்டியே சீராய்
தெண்ணீரை நாற்புறம் தேக்கும்
ஆதரவாக அவுரியும் கொளுஞ்சி
ஆவிரை இழைதழை எருவும்
நீதமாய்நெல்நல் நாற்றது விடவே
நற்கழ னியைப்பண் படுத்தும் (8)
நான்கெனும் கரணம் நால்வகை நிலங்கள்
நாற்பெரும் நிலையெனப் போலும்
நான்கெனும் பாலும் காரணம் பதவி
நானிலை நான்கு தீட்சைகள்
நான்கெனும் வேதம் நாற்கவி போலும்
நான்முறை உழுதலும் நலமாம்
நான்மறை வேந்தர் நானறவழங்கும்
நற்றவப் பேறது நித்யம்: 9)|r}}
குறிப்பு:
நாற்பால் : அறம், பொருள், இன்பம், வீடு
நான்கு தேகம் : தூலம், சூக்குமம், காரணம், மகாகாரணம்
நான்கு பதவி : சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்யம்
நாநிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்
நான்கு வேதம் : ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
மேலைநாட்டு நால்வேதம் : சபூர், தவ்ராத், இன்ஜீல், புர்கான்
நாற்கரணம் : மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்
நாற்காரணம் : தூங்காமை, கல்வி, துணிவுடைமை, நீங்காநிலம்
மேழியின் செல்வம் கோழைப டாது
மேதினிக் குணவருள் பணியாம்
மேழிகைப் பற்றி உழுதுறும் சேறு
மேழியின் சந்தனம் என்பர்
ஆழிவாழ் ஐயர் அகம்விழை மாட்சி
ஆருயிர்ப் பயிர்விளை காட்சி
வாழுயிர் நித்ய வரம்பெறும் நீட்சி
மாதவர் திருவருள் ஆட்சி (10)
பொன்னரங் கையர் பொற்பதம் பணிந்து
பொன்னொளிர் கூடைநெல் லேந்தி
பொன்மணி போலும் நெல்விதை நாற்றுப்
பாவிடக் குடும்பனும் முனைகால்
நன்மணிக் குடும்பி குடும்பனை நண்ணி
நெல்வகை புகலென வினவ
அன்புடன் எண்ணில் நெல்வகை தம்முள்
அவனறிந் தவைசில புகலும் (11)
ஆனந்தக் களிப்பு
குடும்பன் கூற்று
வாருங்கள் சாலைக் குடும்ப - மெய்
வழிவழிச் சந்ததிச் சோதரர் எல்லாம்
சேருங்கள் சாலை வயலில் - தெய்வத்
திருப்புகழ் பாடியே திருப்பணி செய்வோம்
வந்தனம் உங்களெல் லோர்க்கும் - மெய்யாம்
வான்வளர் சாலைமெய் ஆண்டவர் பொற்றாள்
சிந்தனை செய்தினி தேத்தி - நம்மின்
தேவாதி தேவரைப் போற்றி செய்திடுவோம்
வித்தில்லா வித்தினைக் கொண்டு - இந்த
வியனுல கெல்லாம் படைத்திட்ட சாமி
அத்தன ருட்புகழ் ஓங்க - இந்த
அகிலமெய் வழிதனில் அன்புடன் தேங்க
சித்தம் கனிபணி செய்வோம் - தெய்வத்
திருமல ரடிதனைப் பற்றியே உய்வோம்
சொல்விற்ப னம்கடந் தேறும் - சாமி
சுத்தநித்ய பத்யர் திருவடி சாரும்
நெல்வகை கூற விழைந்தேன் - என்றும்
நிலைபெறும் ஜீவப் பயிர்தான் தழைந்தேன்
அன்னதானம் அல்லிப் பூவார் - சம்பா
அறுபதாம் கோடைஅம்பா சமுத்ரம்
அன்னழகி அருஞ் சோதி - மிக்க
அலங்காரப் பொன்னியும் அழகுசம்பாவும்
ஆனைக்கொம் பன்இடைக் காட்டன் - அரும்
இலுப்பைப்பூ சம்பாவும் இறங்கு மோட்டனும்
தேனாரும் ஈர்க்குச் சம்பாவும் - நல்ல
சேர்விளை ஈசற் கோவை செந்தாழை
ஊசிச் சம்பாகருங் குறுவை - மணம்
ஓங்கிடும் கஸ்தூரி சம்பாவும் மற்றும்
தேசிகர் கருணைவா லனொடு - காரும்
செஞ்சாலி கண்ணாடிக் கூத்தன்கல் முத்தன்
காடைக் கழுத்தன் குறுவை - மேலும்
கல்லுண்டைச் சம்பாவும் காடைச் சம்பாவும்
வாடாத கிச்சிலிச் சம்பா - குதிரை
வாலன் காளான்சம்பா கைவண்ணச் சம்பா
கோடைச் சம்பா குண்டுச் சம்பா - குறுவை
குண்டுமணிச் சம்பா குட்டைச் சிகப்பன்
சித்திர வண்ணன் செஞ்சாலி - வளர்
செம்பாளை செல்லிப் பிரியன் சம்பாவும்
முத்தான சீரகச் சம்பா - சின்ன
சம்பா சிறுமணிச் சம்பா மிளகு
பக்கிரி சம்பாவும் பூசைப் - பெட்டி
பாலன் சம்பா பிச்சை வாரியும் மற்று
தக்க புரட்டாசிக் காரும் - தரம்
சீராம்பொன்னி வெள்ளைப் பொன்னியு மேலும்
பூவார் சம்பாவும் பொன்சாலி - நல்ல
பெங்களூர் சம்பாவும் பள்ளி கொண்டானும்
மேவும் பெரிய சம்பாவும் - பொன்
கம்பியும் பொங்காளம் பைசோ சம்பாவும்
மணல்வாரி மைச்சம்பா - மிக்க
மட்டைக்கார் முள்ளுக் குறுவையும் மற்றும்
மணவாளம் மலைமுண்டன் நெல்லும் - பனை
முகரி மணக்கத்தை மல்லிகைச் சம்பா
மோகனம் வெள்ளைச் சம்பாவும் - முத்து
விளங்கி வாலன்மலை குலுங்கி விழுங்கி
மோரன் சம்பா வெண்ணெல் - துய்ய
வெள்ளைக்கார் நடப்புக்கார் பாகோ டாளம்
சீராம் வளைதடிச் சம்பா - என்று
செந்நெல் வகையது ஆயிரம் உண்டு
வாருங்கள் நாற்றுப்பா விடுவோம் - அஃது
வளர்ந்தபின் பாங்காய் வயலில் நடுவோம் (12)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
தாயின் கருணை மிக்க
தயவுடை சாலை அண்ணல்
ஆயிரம் நெல் வகைபோல்
அனைத்தினம் மதத்தோர் தம்மை
சேயென எடுத்து மெய்யாம்
திருவயல் நடவு செய்யும்
நேயனும் அதுபோல் நாற்று
விட்டுநெல் விளைக்க முந்தும் (13)
பல்வகைச் சாதி, பண்பு
பழக்கங்கள் உள்ளோர் தம்மை
நல்வித்தா யெடுத்து நித்ய
நற்பிறப் பருளிக் காத்து
வல்பிணி மார ணத்தை
மாற்றி மெய்த் தேவராக்கி
சொல்விற்ப னம்க டந்தார்
சாலையர் திருத்தாள் போற்றி (14)
உழவுகள் பணிசெய் மாந்தர்
உத்தமர் முடிநாற் றேந்தி
முழவு போன்ம் தோளர் செய்யில்
விளம்பிடும் முடிநாற் றங்கே
செழுமொழி கேட்டோர் சிந்தை
செழித்திடல் போலும் சாலை
முழுமுதல் சாலை தெய்வம்
மெய்ப்பயிர் விளைக்கும் சீரே! (15)
உழத்தி நாற்று நடவு செய்தல்
தென்பாங்கு
வண்ண வடிவழகர்
வாசமிகு மேனியினர்
வள்ளல் பிரான் சாலை அண்ணல் பாரும் - உங்கள்
வஞ்சவினை வல்பினைகள் தீரும் (16)
வண்ணவண்ணச் சேலை கட்டி
வகிடெடுத்துக் கொண்டை யிட்டு
வாசமல்லி சூடியிங்கே வாரும் - சாலை
வயற் பணிகள் செய்து களிகூரும் (17)
தென்னன் பெருந்துறையார்
தேவாதி தேவரெங்கோன்
திவ்யத் திருப்பணிகள் செய்வோம் - செய்து
சீராரும் நல்வரம் பெற்றுய் வோம் (18)
கன்னல் கனிமொழியர்
கருணைத் திருவிழியர்
கர்த்தாதி கர்த்தரடி பணிந்து - அழகுக்
கையாலே நாற்றெடுங்கள் கனிந்து (19)
மரகதப் பச்சை நாற்று
மணிக்கரத்தால் தொட்டெடுத்து
மாதேவர் திருவயலில் நடுங்கள் - உங்கள்
மரணபயம் துக்கமெலாம் விடுங்கள் (20)
விரகத வசன வேந்தர்
மெய்வழிச்சா லைவயலில்
மாதேவர் பாட்டிசைத்து நடவு - செய்தல்
வெவ்வினைகள் தீர்க்குமெழில் கடவு (21)
கசிந்துள் பயிர் நடுவோம்
கர்த்தர்தி ருவயலில்
களம்நிறைய நெல்மணிகள் விளையும் - மெய்
கனமிகுந்து தெய்வபக்தி தழையும் (22)
அனந்தர் குலம் தழைக்கும்
அதுபோல் பயிர் தழைக்கும்
ஆருயிர்கள் ஆண்டவர் தாள்படியும் - சார்ந்த
அனைத்து யிர்க்கும் மெய்வாழ்வு விடியும் (23)
வேறு
காமம் குரோதம் லோபம் மதம் மோகம் - மாற் சரியம்
கர்த்தர் திருக்கடை கண்ணோக் காலவை காணா தோடிடுமே
பூமியில் மாந்தருள் பொய்யே நிறைந்துளதே - களை நீக்கிப்
பொன்னரங்கையரும் வந்தனர் மெய்ம்மை பொலிந்தினி தோங்கியதே
சாமியின் சாலையைச் சார்ந்தினி துய்வீரே - சகத்தீரே
சாயுச்யபதம் தந்தருள் ஐயனின் தாள் சரணா கதியே (24)
உழத்தி அறுவடைத் திருப்பணி செய்தல்
தென்பாங்கு
தெய்வத் திருவயலில் செஞ்சாலி நெல்விளைந்து
மெய்யர் தலைவணங்கல் போல்சாய்ந்து கிடக்கிறதே
தோழியரே வாரும் - சாலைத் திருவயலில் சேரும்
ஐயரடி பணிந்து அரிவாளைக் கையிலேந்தி
துய்யநெற் தூறுகளைச் செங்கையால் நன்குபற்றி
சுறுசுறுப்பாய் அறுங்கள் - தெய்வத் திருவரத்தைப் பெறுங்கள் (25)
அரியரியாத் தாள்கிடத்தி அழகுமணி சிதறாமல்
துரியபதம் கடந்தருளும் தோன்றலரைப் போற்றிசெய்து
அரிகள் அடுக்கிச் சேர்த்து - வைக்கோல் புரிகள் முறுக்கி ஆர்த்து (26)
நெல்லடித்துத் தாம்புகட்டி பதர்தூற்றி நெல்குவித்தால்
நெற்குவியல் பொற்குவியர் நெஞ்சம்நிறை தோற்றம்
நாயகரும் வருவார் - கண்டு நல்வரங்கள் தருவார் (27)
நல்வித் தெடுக்குமந்த நாட்டினுக்கு நாதரவர்
நெல்முத் தளந்து அந்த நெற்சேரில் சேர்த்திடுவார்
நித்தியர்தாள் வாழி - பாதம் பத்தியரும் வாழி (28)
புத்தரிசிப் பொங்கலிட்டு புண்ணியர்க்கு நாம்படைப்போம்
வித்தகர்முக் கூர்கத்தி வைத்துப் பானைப் பலியிடுவார்
பொங்கலோ பொங்கல் - இன்பம்எங்குமே தங்கும் (29)
வித்தாதி வித்தகரும் வைப்பாரே காணும் பொங்கல்
சித்தம் கனிந்து காளைமாடு கட்குப் பொங்கல் ஊட்டும்
மெய்வழியின் தெய்வம் - போற்றி உய்வழிகண் டுய்வம் (30)
இங்ஙன மாக அன்பின்
இளங்கலை உழத்திப் பாட்டு
பொங்குநற் குன்று சாலைப்
பொன்னரங் கையர் தாளில்
இங்கித மாகச் சார்த்தி
இனிதுளம் கனிந்து போற்றும்
எங்கும் மெய்வழியே ஓங்க
என்றென்றும் வாழ்க வாழ்க. (31)
'மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு இனிது நிறைவு பெற்றது.
குரு வாழ்க! குருவே துணை!