திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/030.திருக்கண்படை நிலை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫30.கண்படை நிலை தொகு

இலக்கணம்:-

அரசர் அரசவையில் நீண்ட நெடுநேரம் கழிக்க, மருத்துவரோ மந்திரியோ அவர்களை நோக்கி, “நேரம் மிகவும் கழிந்துவிட்டது, நடுநிசியாகிவிட்டது. எனவே இன்துயில் கொள்ளச் செல்வீராக” எனக்கூறுவது கண்படைநிலை என்பதாகும்.

கண்படை நிலையே காவலன் அவைக்கண்
சுற்றம் குழூஉத்துணை சூழ இருத்தலின்
நெடும் பொழுது உரிவரும் நித்திரை கூறலே.
- பிரபந்த தீபிகை 60
அரசரு மரசரைப் போல்வாரு மவைக்கணெடிது வைகியவழி 
மருத்துவரு மமைச்சரு முதலியோ ரவர்க்குக் கண்டுயில் 
கோடலைக் கருதிக் கூறுவது.
- தொன்னூல் விளக்கம் உரை பக்கம் 204
கண்படை கண்ணிய கண்படை நிலையே
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம் 87
மண் கொண்ட மறவேந்தன் கண்படைநிலை மலிந்தன்று 
- புறப்பொருள் வெண்பாமாலை 183

எனது இன்னுயிர் நாயகர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள், ஊண் உறக்கமற்ற ஒருதனி முதல்வர். அவர்களை உறங்கச் செல்க என்றோ உறக்கத்தினின்று விழித்து எழுக என்றோ விழைவது பொருந்தாது. எனினும் இரவு பதினொரு மணிக்கு தவத்திற்கு எழுதல் வேண்டும் என்று திருவுளத்திற்கு நினைவு கூர்ப்பிப்பது வழக்கமாக இருந்தது. தவம் என்பது தூலம், சூக்குமம், காரணம், மகா காரணம் கடந்து பிரம்மரந்திரத்தில் புறநினைவற்று ஆழ்ந்து நிற்றல். அஃதும் ஒருவழித்துயில் போலும் அறிதுயில் நிலை ஆகலான் அதனைக் கண்படைநிலை எனக் கொளலாகும்

.

திருக்கண்படைநிலை

காப்பு

அருட்கண் அரசே அமரா பதியே
திருக்கண் படையார் நிலையே மொழிய
பொருட்சொன் மலர்கள் உரைநற்றி றன்கள்
அருள்க அடியேன் சரணம் சரணம்

நூல்

கலித்தாழிசை

சமரசமிங் ஙுலகினிலே தழையவெனத் திருவுளங் கொண்(டு)
இமையவரை புவியினில்போய்ப் பிறமினென உரைவரைந்து
தமையுமொரு மனுமகனாய்த் திருவுருக்கொண் டவதரித்தீர்
உமைகேள்வ! ஒருமெய்வழி ஆண்டவரே தாலேலோ! (1)

அவதரித்த அருட்சிவமும் அரியயனும் ஒருங்கிணைந்த
தவபரமே! செழுமணியே! திகழனந்தர் தலைவரெங்கள்
நவநிதியே! நலமனைத்தும் திரள்உருவே! நடத்தரசே!
பவப்பிணியைக் கடத்துமொரு பரந்தாமா! தாலேலோ! (2)

மதிமணியே! மலர்மணமே! மறைதெளியும் துறையெனுமோர்
புதியவரே! புனிதமுயர் அமுதவரே! அறஞ்சுரந்த
நதியவரே! நிலவுலகில் தவமுறையில் நிலைபெறுமெய்க்
கதியவரே! கழல்மலரே அடைக்கலமே! தாலேலோ! (3)

எமதுயிர்கள் உயர்நலமே பெறவருள்செய் களஞ்சியமே!
உமதுபணி வருங்காலத் ததிகதிடம் உளவாக
உமதுதிரு மலர்மேனி அயர்வறவே இதுகாலே
இமைமலரா மலரிதழ்போன்ம் அறிதுயில்வீர்! தாலேலோ! (4)

அடிமலர்கள் நிலம்படிய அகிலத்தாய் சிலிர்சிலிர்க்க
வடிவுடைய தனிகைமணி தருமகவே பணிமிகையால்
மடிவதுபோன்ம் மலர்மேனி களைப்புறுமே அதுகருதி
கடிகைசிறி தளவயர்க கனிமொழியீர் தாலேலோ! (5)

படைத்தபெரும் கடவுளரே! பணிஓய்வு நுமக்கிலையே
மடைதிறந்து அமுதுபொழிந் திரவுபகல் கருதாமை
உடையவரே உமதுதிரு வுளமதனில் உறுதியரே!
கடைச்சிறியேன் விழைவேற்று அறிதுயில்வீர் தாலேலோ! (6)

இனியெவரும் இதுபோலும் அருள்வழங்க வருவதிலை
தனியொருவர் இதுபணியே புரிவதென முனைந்தீரே!
தனிகையரும் அதுகருதி வருகைதரும் அதனாலே
கனியமுது வழங்குகொடைக் கரத்தீரே! தாலேலோ! (7)

மதவெறிகொள் மதகரிகள் இனவெறிகொள் வரிப்புலிகள்
இதமறியாக் குலவெறியர் எனுமிருக மவைஎதிர்த்து
விதவிதமாய்ச் சமர்புரிந்து அவையடங்க அழித்தொழிக்க
மதியரசே பணியுளதால் சற்றயர்வீர்! தாலேலோ! (8)

குணம்பலவாய் உளமாந்தர் கொடுமைகளைக் களைந்தெரிய
வணம்பலவாய் உளவறிந்து வளர்கொடுமை விலகிடவே
கணந்தோறும் உழைப்பதெனக் கனிந்துளத்தே துணிந்தவரே
மணம்திமிரும் திருமேனி களைப்பாறத் தாலேலோ! (9)

இனியுலகில் மதமொன்று குலமொன்று இனமொன்று
தனிமெய்வழி தருமதுரை அதுநிறுவும் திறத்தவரே
இனித்தமுற அதுகருதி இளைப்பாறும் எம்சாமி
நனிஇசைகேண்ம் இமையமைந்து அறிதுயில்வீர்! தாலேலோ! (10)

திருக்கண்படை நிலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!