திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/010.அருள் இயன்மொழி வாழ்த்து


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



10. இயன்மொழி வாழ்த்து தொகு

இலக்கணம்:-

இயல்பினைக் கூறி வாழ்த்துவது இயன்மொழி வாழ்த்தாம். அஃதாவது செந்தமிழ்ப் புலவன் ஒருவன் வள்ளண்மை மிக்க புரவலர் ஒருவரைக் கண்டு “ஐயனே தங்கள் குடியிற் பிறந்தோரெல்லாம் ஈயும் குணத்தில் ஈடிணையற்றவர்கள். அவர்தம் வழிவழி வந்த நீங்களும் உங்கள் குடிப்பண்பை இயல்பாகவே பெற்றுள்ளீர்கள். ஆகலின் எமக்கு வேண்டுமட்டும் பொருள் தந்து அருள்வீர்களாக” என அத்தலைவரின் பண்பு நலன்களைப் பாடுவதோடு அவர்தம் குடிப்பிறந்தார் பண்புகளையும் புகழ்ந்து பாடிப் பொருள் வேண்டி நிற்பதாகிய பாடற் பொருண்மையுடையது இவ்விலக்கியம்

இயன்மொழி வாழ்த்தே இக்குலத் தோய்நீ
பயன்அளித் திடுஎனப் பாவலர் பகர்தலே
- பிரபந்ததீபம் 11
இக்குடிப் பிறந்தோர்க் கெல்லா மிக்குணம்
இயல்பென் றுநீயு மவற்றை யுடையை
என்று மின்னோர் போனீயு மியல்பாக 
ஈயென்று முயர்ந்தோ ரெடுத்துமற் றவனை
வாழ்த்துவ தாக வாழ்த்தலி யன்மொழி
வாழ்த்தா மென்ன வாழ்த்தினர் புலவர்
- முத்து வீரியம் 1128
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்
அடுத்தூர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும்
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம்  - 87

இவ்விலக்கிய வகையான் கூறுங்கால் முதலேழு, இடையேழு, கடையேழு வள்ளல்கள் இருந்ததாகத் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இவர்கள் அனைவரின் வள்ளற்றன்மையையும் விஞ்சுவதாக வான நாட்டு வள்ளல் பெருமான், என் உயிர்நட நாயகர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் வள்ளல் தன்மை விளங்குகின்றது. இவ்வுலகில் நேரும் வறுமை உலகியற் பொருள் கொடுப்பினையான் தீரும், ஆயின் தீராத வறுமையாகிய மரணக் கொடுமையானது மாபெரும் மாதவ மாமணியான வரோதயர் வரையறாது வழங்கும் வரமாதி வரமாகிய வான் கொடையால் மட்டுமே தீரும். ஆகலின் எளிய கடைச்சிறு புலவனாகிய எளியேன், எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய தயாளரஞ்சித, குணகுஞ்சித, பதாம்புயர் தனிப் பெருங்கருணை வானாட்டு வள்ளல் பெருமானை வணங்கி, வாழ்த்திப் போற்றிப் புகழ்ந்து ஏற்றி இறைஞ்சி எளியேனைப் பற்றியிருக்கும் மரணமென்னும் மகாக் கொடுமையோங்கிய தரித்திரத்தை நீக்கிப் பேரின்ப சித்திப் பெருவாழ்வை வழங்கி அருள்பாலிக்க வேண்டும் என்று விண்ணப்பிப்பதாக இச்சிற்றிலக்கியம் இயற்றப் பெற்றுள்ளது.

முதலேழு வள்ளல்கள்
குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி.

இடையேழு வள்ளல்கள்
அக்குரன், அந்திமான், அரிச்சந்திரன், கர்ணன், சத்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன்.

கடையேழு வள்ளல்கள்
எழினி, ஓரி, காரி, பாரி, நள்ளி, பேகன், மலையன்.

அருள் இயன்மொழி வாழ்த்து

காப்பு

நேரிசை வெண்பா

அயனும் அரிசிவனும் ஒன்றாம்மெய்த் தேவே
இயன்மொழி வாழ்த்து இயம்ப - தயவருள்க
சொல்லாய்ப் பொருளாயும் தோத்திரமாய்ச் சாத்திரமாய்
எல்லாமாய் நிற்பீர் இனிது.

நூல்

கலி வெண்பா

விண்ணுலகி னின்று வியனுலகிற்போந்தருள் செய்
அண்ணலே உங்கள் அருட்பாதம் - வண்ணமுறப்
போற்றிப் பணிந்து புகழ்பாட முன்னிவர்ந்தேன்

எண்குணங்கள்

ஆற்றல் அளவில்லா துற்றவரே! - மாற்றிடும்
பாசத்தில் நீங்கினிரே! பேரருளார் பண்பினிரே! (5)
நேசமிக முற்றும் உணர்ந்தவரே! - மாசில்லாத்
தன்வயத்த னானவரே! தூயதிரு மேனியரே!
அன்புவடி வானவரே! எல்லாம்வல் - இன்பம்
வரம்பில்லா வானவர்கோன் எண்குணத்தார் என்று
பரசிவமே பற்றிநின்றேன் பாதம் - சிரம்புனைந்தேன் (10)
உழவர் பெருங்குடியில் அவதாரம்
படைத்தார் படியளந்தார் பாரெல்லாம் காத்தற்-
குடையாராம் காராள வம்சம் - திடமோங்கு
வேளாண் குரைசிக்குல மேங்குடியில் வந்துயர்ந்த
தாளாண்மை மிக்கத் தயவுடையார் - தோளாண்மை
ஏழை எளியவர்க்கு உண்டிகொடுத் தாதரித்தல் (15)
வாழும் வகைகூறி வாழ்வித்தல் - யாழின்
இன்னிசைபோல் அன்பார் இனிய பெருந்தகையை
தன்னில் விளங்குகின்ற சான்றாண்மை - மன்னியசீர்

வாணிகர்

அந்நாட்டு மெய்ப்பொருளை யாவருமே பெற்றுய்ய
இந்நாட்டிற் கீயவந்த வாணிகராய்த் - தென்னாட்டில் (20)
கொண்டு வந்தீர் நட்டமில்லாக் கோமகனார் நற்கிரிகை
விண்டுரைக்கும் மெய்ம்மை வியாபாரம் மண்டுபுகழ்
நெல்வணிகம் செய்துபொருள் ஈட்டும் அதுகாலம்
பல்லோர்க் கிலவசமாய் நெல்லிந்து - சொல்லரிய
பஞ்சம் தெளிவித்த பண்பாளா! நின்கொடையை (25)
விஞ்சும் திறனுடையோர் இல்லாக - நெஞ்சில்
இரக்கம் குடிகொண்ட ஏந்தலே! ஞானப்
பெருக்கம் விழைவேட்கை பொங்கி - அருக்கன்
உதயம்செய் தாலன்ன ஓங்குயர்ந்த வள்ளல்
இதயம் கவர்கள்வர் ஈடில் - மதிசிறந்த (30)
வான்தனிகைப் பாட்டையர் வந்துற்றார் மெய்தந்தார்
வான்பெற்றீர் வைராக்ய மெய்த்துறவு - தானேற்றீர்!
தன்குருவே தஞ்சமெனச் சர்வமும் அர்ப்பணித்து
பொன்திருவே சற்குருவைப் போற்றிசெய்து - அன்னியமில்
வித்தகராய் ஓங்கி விளைவேற் றகிலவலம் (35)

சத்திரியர்

சத்திரிய ராகித் தொடர்ந்தேகி - மெத்தவுமே
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணமென
ஊழிவெல் லும்வலிமை தான்வளர - பூழியர்கோன்
உத்திரவின் வண்ணம் உவந்தே மறிமேய்த்து
சித்தம் உரமேறிச் செம்மையுற்று - அத்தனுரை (40)
கூறுமாப் போல்பரங் குன்றில் தவமிருந்து
ஆறிரு சன்னதங்கள் தங்கையில் - வீறோங்க
தான்தரித்தீர் சாமி தனித்தேகிச் செங்கோல்செய்
வான்தனிகை இவ்வாறு வாழ்த்துரைக்க - கோன்தாங்கள்

பிரம்ம சொரூபர்

பிர்ம்மமே ஓர்வடிவாய்ப் போந்தருள்செய் எம்பெருமான் (45)
தர்மமே தாரணியில் மெய்வழங்கும் - கர்மமே
தன்செயலென் றேகொண்டு சர்வத்தி ராளுக்கும்
பொன்செய் பெரியவுளம் தாமிரங்கி - அன்புருவே!
வானாட்டுச் செல்வமதை வையகத்தோர் தான்பெறவே
தேனார் அமுதத் திருமொழியால் - தானருள்செய் (50)
கோல்கைப் பிடித்தெழுந்த கோமானே! வானவரே!
சீலம் மிகுந்தஉயர் செம்பொருளே! - வாலறிவர்!
உத்தமரை எல்லாம் உவத்தெடுத்து அன்னவர்க்கு
சித்தமலம் சேதித்துத் தேவர்களாய் - மெத்தவுமே
செய்திறத்தை என்னென்று செப்புவனோ சார்ந்தோர்க்கு (55)
வெய்ய இருவினையும் வீய்ந்திடுமால் - வையகத்தில்
சாதிசா தியெங்கும் சண்டைமிகும் இந்நாளில்
சாதிகளை ஒன்றாக்கிச் சாதித்தீர்! - வேதியரே!
எங்கும் மதவெறியால் எண்ணற்ற வன்கொடுமை
பொங்கிப் புவிமாந்தர் துன்புறுங்கால் - இங்குமட்டும் (60)
எல்லா மதங்களுமே இன்புற் றொருங்கிணைந்து
பொல்லாப் பொழிந்துயிர்தான் பூரிக்க - நல்லாற்றின்
சம்மதமெய் கொண்டு சரிகூறி வாழ்திறத்தை
எம்மொழிகொண் டேயான் எடுத்துரைப்பேன் - அம்மையப்பா!
இப்பரிசு ஏற்க எவரோ தகுதி யெனில் (65)
செப்பரிய அன்பு யதார்த்தஉளம் - ஒப்பரிய
தன்மதத்தின் உட்பொருளைத் தானறிந்த சற்சனரும்
வன்புலைகொ லைகளவு கள்காமம் - புன்மைமிகு
பொய்,புகை, சூதும்சினிமா பொய்ம்மைக் கொடுஞ்செயல்கள்
செய்யாத நல்லோர் தகுதியுற்றோர் - மெய்யாக (70)
இத்தகையோர்க் கெல்லாம் இறவா வரந்தந்தீர்!
முத்தரென ஆக்கியவர் வாழூராம் சத்தியமெய்ச்
சாலை வளநாடு தாரணியில் நன்னாடு
சோலை மலர்ப்பொழில்சூழ் சீர்நாடு - சீலமிகு
விண்ணோர் அனந்தர் வணக்கம் மிகப்புரியும் (75)
தண்ணார்உத் யோவனமாம் இப்பதியில் - பண்ணாரும்
வேதம் முழங்கும் மெய்வணக்கம் தான்சிறக்கும்
போதம் பொலிந்திலங்கும் பொன்னரங்கம் - நீதமிகு
ஜீவப்பிர யாணமதே தானிகழும் துன்பமிகு
சாவுப் பயணமிலாச் சீரூராம் - தேவர் (80)
உறையும்நல் லூராக ஓங்கிடுங்காண் - உய்யும்
துறையிஃது என்றே தெளிந்தேன் - நிறைமொழியீர்!
சின்னஞ் சிறுபுலவன் சன்னிதிமுன் வந்துற்றேன்
தென்னன் பெருந்துறையீர்! சீமானே! - மன்னும்
தெளிஞானம் வேண்டியுங்கள் தாள்பணிந்தேன் தேவே! (85)
ஒளியாரும் மெய்ப்பொருளைக் காட்டிக் - களிகூர்ந்து
மண்தீண்டாத் தங்கள் மலர்ப்பாதம் காட்டியிங்கு
பண்போங்கு வானமுதப் பாங்குணர்த்தி - ஒண்சுடரார்
வேகாத காலதுவும் போகாப் புனலதுவும்
சாகாத் தலையதுவும் தான்காட்டி - ஏகரிய (90)
வெட்ட வெளிகாட்டி வேதாந்தம் போதாந்தம்
இட்டமுடன் காட்டியெனை ஆதரித்து - அட்டியின்றிப்
பாடிப் பனுவல் பலஇயற்றித் தோத்தரிக்க
நாடி வணங்கியுமை நண்ணிநின்றேன் - கோடி
கடந்த குரீஸ்வரா! கோவே! எளியேற் (95)
கிடந்தந்து மெய்வரங்கள் ஈந்து - உடனிருந்து
ஏடெழுத் தாணிமுனை என்னினைவில் நீர்நின்று
பாடுவிக்கப் பற்றும் பதம். (98)

அருள் இயன்மொழி வாழ்த்து இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!