திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



79. பிள்ளைத் தமிழ்

தொகு

இலக்கணம்:-

தெய்வத் தமிழுக்கு உரியனவாகக் கூறப்பெற்றுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தமும் ஒன்றாம். இஃது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும்.

காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென்றன் முதல்
அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பின தெய்வ நலம்பெறு புலவர்
- பன்னிரு பாட்டியல் சூத்திரம் 102

1. காப்புப் பருவம் :

இஃது குழந்தையின் மூன்றாம் திங்களில் பாடப்பெறுவது. இஃது முதற் பருவம். புலவர் தாம் இயற்றும் பிள்ளைத் தமிழ் சிறக்கவும் பாட்டுடைத் தலைவர் ஆகிய சிறு குழந்தையைக் காக்கவும் காப்புக் கடவுளர்களிடம் வேண்டுதல்.

2. செங்கீரைப் பருவம் :

இஃது குழந்தையின் ஐந்தாம் திங்களில் பாடப் பெறுவது. இனிய குழந்தை மொழியாகிய “ங்க் ங்க்” என்னும் ஒலியை எழுப்புதல். இதனைச் செங்கீரை என்பர். குழந்தை இரு கைகளையும் தரையில் ஊன்றி ஒருகால் நீட்டியும் ஒருகால் மடக்கியும் தலையை நிமிர்த்தியும் ஆடச் சொல்வதைக் குறிக்கும். குழந்தையைச் செங்கீரை ஆடுக என்று தாய் கேட்பதாக அமையும்.

3. தாலப் பருவம்:

இஃது மூன்றாம் பருவம். குழந்தையின் ஏழாந்திங்களில் நிகழ்வது. தாய் குழந்தையைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பது. தாலாட்டு என்பது தால் என மருவி நின்றது.

4. சப்பாணிப் பருவம்:

இஃது நான்காம் பருவம். குழந்தையின் ஒன்பதாந்திங்களில் நிகழ்வது. தரையில் உட்காரத் தொடங்கிய குழந்தை கை கால்களை அசைத்துக் காட்டும். இருகைகளை ஒருசேரத் தட்டும். சப்பாணி கொட்டியருளே என்று தாய் வேண்டுவதாக் அமைவது.

5. முத்தப் பருவம் :

இஃது ஐந்தாம் பருவம். பதினொன்றாம் திங்களில் நிகழ்வது. குழந்தையின் மலரினும் மெல்லிய பூவிதழ்களால் முத்தம் தரும்படி வேண்டிக் கேட்பது.

6. வருகைப் பருவம் (வாரானைப் பருவம்):

இஃது ஆறாம் பருவம், குழந்தையின் பதிமூன்றாவது திங்களில் நிகழ்வது. குழந்தை தளர் நடையிட்டுத் தள்ளாடி வருதல் கண்டு தாய் பூரித்து வருக வருக என்று மேலும் வரச்சொல்லி வேண்டுதல்.

7. அம்புலிப் பருவம் :

இஃது ஏழாம் பருவம். பதினைந்தாம் திங்களில் நிகழ்வது. ஒப்பிடல் (சாமம்), வேறுபடுத்தல் (பேதம்), வழங்குதல் (தானம்), தண்டித்தல் (தண்டம்) முதலிய நான்கு வகையாகப் பேசி வெண்ணிலாவைக் குழந்தையோடு விளையாட அழைத்தல்.

8. சிற்றில் பருவம் :

இஃது எட்டாம் பருவம். பதினேழாம் திங்களில் நிகழ்வது. சிறுமிகள் தாங்கள் கட்டிய மண் சிற்றிலைக் குழந்தை, காலால் அழித்துச் சிதைக்காதிருக்குமாறு வேண்டுதல். தெய்வ பக்தி காரணமாகப் புக்கில் (தஞ்சம் அடையும் இடம்) என இந்நூலின்கண் குறிக்கப் பெற்றுள்ளது.

9. சிறுபறைப் பருவம் :

இஃது ஒன்பதாம் பருவம். குழந்தையின் பத்தொன்பதாவது திங்களில் நிகழ்வது. சிறிய பறைக் கருவியைத் தந்து முழக்கும்படி சொல்லுதல். இந்நூலில் திருமுரசு என்று குறிக்கப்பெற்றள்ளது.

10. சிறுதேர்ப் பருவம் : இஃது பத்தாம் பருவம். குழந்தையின் இருபத் தொன்றாம் திங்களில் நிகழ்வது. சிறுதேர் உருட்டி விளையாடும்படி குழந்தையைத் தாய் வேண்டுவதாக அமைவது. சிறுதேருருட்டியருளே என்பதனை இந்நூலில் அருட்தேர் நடத்தியருளே என்று குறிக்கப் பெற்றுள்ளது.

குறிப்பு :

ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பத்துப் பாடல்கள் பாடப் பெறுவது மரபாக உள்ளது. பாட்டுடைத்த தலைவர் சர்வ மூல மந்திர நிரூபிகரும் சர்வசமய வேதநாதரும் சகல ஜாதிகளின் கர்த்தரும் சர்வ வல்லமையும் மிக்க முழுமுதற்பொருள் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் ஆகலின் மாட்சி கருதி ஒவ்வொரு பருவத்திற்கும் பதினொரு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளது.

அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்

காப்பு

நேரிசை வெண்பா

மெய்யாம் வழியதனால் உய்வித் துயிர்ப்பயிர் செய்(து)|r}}
ஐயா றடைவித்த ஆண்டகையே - துய்யமலர்ப்
பொற்றாள் சிரமணிந்து போற்றி வணங்குகின்றேன்
நற்றாளே காப்பாம் துணை

அவையடக்கம்

நேரிசை வெண்பா

சிற்றில் இழைத்தகால் சிந்தைமகிழ்ந் தாதரிக்கும்
நற்றாய்போல் தங்களுளம் நன்கேற்கும் - முற்ற
அடைக்கலங்கொண் டாசைமிக்கு அம்புயத்தாள் போற்றிக்
கடைப்பிள்ளை சொல்புன் கவி (1)

கட்டளைக் கலித்துறை

ஆடும் திருமலர் அம்போ ருகத்தாள் அகம்நெகிழ்ந்தே
பாடும் இளங்கலைப் பையல்சொன் மாலை தனைஇனிதே
நீடும் திருவோங்கு நித்தியர் மெய்வழி ஐயரருள்
தேடும் அனந்தாதி தேவர்கள் ஏற்கும்சிந் தைகனிந்தே! (2)

1.காப்புப் பருவம்

திருமால்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

திருவோங்கு அன்பலைகள் செறியுமெய்ப் பாற்கடல்
சீரனந் தாதி சேடர்
சிந்தைதனி லறிதுயில் செய்யு(ம்)திரு நாரணர்
தெளிஞான செல்வ அன்னை
திருமார்பில் மிளிரவே திருவுந்தி பதுமமிசை
திகழ்பிரம்ம மதுபூத்திட
தென்தமிழ் வான்அறம் சேனைகொண்ட ரக்கரைச்
செயிர் தீர்த்துத் தேவிமீட்டீர்!
குருவோங்கு க்ஷேத்திரத் தேபார்த்தர் காண்டீபம்
கீதையொளிர் விஸ்வரூபம்
கொண்டுய்ய அருள்தரு கோபாலர் கலிதீர்க்கக்
குவலய மிசைகல் கியாய்
திருமார்க்க நகர்தனில் அவதாரம் செய்தனிர்!
சாலைமெய்த் தெய்வ மதலை
தேங்கமழ் தாரர்திரு மாலெழிற் கோகுலர்
தாம்தம்மை இனிது காக்க.
(3)

சிவபெருமான்

பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

முன்னைப் பொருளே! முழுமுதலே!
முனிவர்க் கரசே! அருண்மணியே!
மெய்பார் பதித்தாய் இடப்பாகம்
விளங்கத் திகழும் பரசிவமே!
பொன்னார் மேனிப் பரஞ்சுடரே!
பிறைகங் கைத்தாய் சிரஞ்சூடி
புரமூன் றெரித்தீர் நகையாடி
பொல்லாக் காமம் தகித்தீரே!
தென்னா டுடைய சிவபரமே
சகமுற் றுய்மெய் வழிகாட்டத்
தேனா ரமுதர் அவதாரம்
திருவுள் கனிந்து சேய்காக்க
மன்னே வரங்கைக் கொண்டாளும்
வளமார் பாண்டித் திருநாடர்
மலர்த்தாள் போற்றிப் பணிந்தேத்தும்
மணியாம் குழவி தனைக் காக்க
(4)

பிரம்ம தேவர்

பதினாறு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

இரண்டி ரண்டெனும் எழில்முக வாயிலாய்
இரண்டு மைந்தெனும் வகையுள தோற்றமும்
ஈரிரண் டெண்பது இலக்கமார் ஜீவர்கள்
இகம திற்படைத் தருள்செய் யிறைவரே!
இரண்டி ரண்டெனும் யுகங்கள் ஏழுறல்
இறுதியாம்கலிக் கடையில் உயிரு(ய்)ய
இறைமும் மூர்த்தியாம் கரங்கள் ஒர்மையாய்
இயங்கும் ஒருதிரு வுருவம் கொண்டனிர்!
இரண்டெ னும்இகம் பரமும் உணர்தர
இறுதித் தீர்ப்பராய் மகதி கல்கியாய்
எளியர் அரியராய் இணையில் திருவொடு
எமையும் பொருளெனத் தமையும் அருள்தரு
இரண்ட தாம்பிறப் பருளி மெய்வழி
ஈயும் சாலைமெய் ஆண்டவர் என
இவர்ந்த பிரம்மமே இறைசூல் குழவியே
இனிது தங்களைத் தாங்களே காக்கவே!
(5)

விநாயகக் கடவுள்

இதுவுமது

துதிக்கை என்னுமெழில் திருக்கை கொண்டுயிர்தம்
துணைக்கை யாய்வருகும் வினைக்கை தீர்த்தருளும்
செருக்கை முற்றழிய அருட்கை கற்பகமாம்
தருக்கை தண்ணருட்கை தருமம் இலங்குகண
பதிக்கை பண்பருள்கை புவியில் மெய்யருள்தற்
பரக்கை மெய்ப்பொருட்கை புரத்தை எரித்திடுகை
பவக்கோள் அறுத்திடுகை புவிக்கோர் வரத்திருக்கை
பருக்கை இன்பமிகு மோதகம் படர்கை
விதிக்கை மாற்றி எமன் படர்வி லக்குதிரு
மதிக்கை ஏற்று அருள் மலர்க்கை கோபுரத்தின்
விளங்கும் ஐம்மணிக்கை வேத மாமறைகள்
பொழியும் நற்றிருக்கை பொன்ன ரங்கர்செங்கை
புது(க்)கை மாநகரம் அணித்து இன்பமழை
பொழிய ஓங்கிவளர் பொழிலுத்யோ வனத்தில்
பெருகு மெய்வளரு சாலை ஆண்குருசேய்
போற்றிக் காத்தருள்க! பொன்னின் ஐங்கரனே!
(6)

திருமுருகர்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

சகமீது வந்து முகமாறு கொண்டு
தகையோங்கு வண்ணமயில் மேல்
தமர் ஜீவ னென்னும் குகையேறி வாழும்
தமிழ்தெய்வ சுப்ர முத்தே!
திகழீடி லன்பும் திருவோங்கு மருளும்
தெளிஞான மாட்சி பொழியும்
தென்னா டகத்து சிவன்மால் அயன்ஓர்
குருவாக வந்து இனிதே
இகமேல் பிறந்து இறவாத இன்ப
இமையோருள் எங்கள் உயிரை
இனிதாள்கை கொள்மெய் எழில்மார்க்க நாதர்
எனு(ம்)நாம மேறி வரு சேய்
அகசூர் தடிந்து அறஞ்செய்தீர் அன்று
கலிவெல்ல வந்தீரிதுகால்
அழகாரும்ஜீவ மணியென்னும் சேயை
அன்போங்கக் காக்கக் காக்க!
(7)

பராசக்தி

பதினாறு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மதிகதிர் உடுக்கள் வையகம் வானகம்
வளருயிர் யாவும் வாழ்வுறத் தேற்றினை!
மனுவினம் அமரர் எனும்நிலை யுறவே
மறைதெளிந் தறஞ்செய் மாந்தரைத் தேற்றினை!
இதுவிதற் கிதுவென யாவையும் ஆற்றினை!
இகபரம் இரண்டாம் இங்கிதம் பூட்டினை!
இணைபத முளரிகள் எம்முயிர் சார்ந்திட
எமபயம் இரிய இன்பமெய் கூட்டினை!
நிதம்புதி யோறெனும் நித்தியர் நீவிரே!
நீதிமெய் யார்ந்தனை நீள்தவம் ஆற்றினை!
நின்மலர் நிர்க்குணர் நேமியர் எம்முயிர்
நற்பதம் நண்ணிட நான்மறை ஏற்றினை!
இதங்கனிந் தன்பால் சாதிகள் சமயத்(து)|r}}
ஈடிலா ஓர்மெய் இயற்றினை தாயே!
எழில்மிகு குழவியாய் வடிவெடுத் துற்றனை!
இனிமைநிற் காக்க! இனிமையாய்க் காக்க!
(8)

தீர்க்க தரிசிமார்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

ஆர்க்கின்ற வெம்பிறவிப் பிணிதீர அருளியே
அரனாரின் திருவுளார்ந்து
அம்புவியில் வருகைதர அணிகொள்நிதி அனந்தர்பெற
அக்காட்சி மாட்சி தன்னை
சீர்கண்டு சிந்தைகளி கூர்ந்திந்த நற்செய்தி
சற்சனர்க் கேசெப்பி னீர்!
செல்காலம் வந்திந்தச் செகமீதில் வெகுபாடு
துன்பஞ் சுமந்தலுத் தீர்
தீர்க்கமார் தரிசனம் திருவுரைஞர் சான்றாண்மை
செல்வச் செழுங்குலத் தீர்!
செம்பாகு மொழியரசு சீர்ஜமால் பெரியதாய்ச்
செல்வராய் மார்க்க நகரில்
பார்க்குநற் பரிசான பலகலைகள் ஒருவடிவம்
பழமறைதம் ஒருதெளிவு மாய்
பொன்னரங் கத்துவளர் தென்னரங்கச் சேயைப்
போற்றுமின் காத்திடு மினே!
(9)

நந்தீசர்

இதுவுமது

திருக்கயிலைப் பரம்பரையில் சீர்மிளிரு நந்தீசர்
செல்வமெய் விடைநல் ஏறே!
சிவபரஞ் செம்பொருள் புவனமிஃ துய்யவே
திருமேனி தாங்கி யங்கண்
பெருகிவரு பவவினைகள் பொடிபடவும் கிருதயுகம்
புதுமைமிக இங்க ணுதயம்
புரிகருணை நிதிசெழிய தமிழ்வளரு புவியினில்
பொன்னரங் கச்சா லையில்
அருளரசு இனிதோங்க அறமுயர நலமோங்க
அனந்தர்குல முற்ப விக்க
அமரர்துய ரந்தீர அணிமார்க்க நகர்மிசை
அவதாரம் செய்த ருளினார்
ஒருதனிமெய் முழுமுதல்வர் உலகிலொரு உருவுகொடு
உலவவரு எழில் சேய்தனை
உயிர்தளிர அருள்மழைபெய் யெழில்கனிய பொழிதரவே
உளமார்ந்து காத்திடு கவே!
(10)

மச்சமுனிவர்

பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

வையத் துற்ற நெறியாவும்
வளரும் கயிலைப் பரம்பரைகாண்
மாண்பார் நந்தீசர் மரபு
மச்ச முனிவர் கோத்திரங்காண்
மெய்யாம் இதயத் தெழில்நடுவுள்
மிளிரும் மச்சம் ஒளிருங்காண்
மச்சம் பிரம்மப் பிரகாசம்
மற்ற துணர்ந்தோர் மச்சமுனி
ஐயர் எங்கள் ஆண்டவர்தான்
அழகார் மச்ச முனிவரர்காண்
அன்பே சிவமே அறிவுருவே
அமுதே மச்சத் தவமுனியே
வையம் உய்ய அவதரித்து
வந்தீர் சாலை ஆண்டவர் மெய்
மார்க்க மருள்நன் நாதர் சேய்
மச்ச முனிநீர் நுமைக்காக்க!
(11)

திருத்தனிகை வள்ளல் பிரான்

பண்டு பரத்தில் முழுமுதல்முன்
பகர்ந்த திருவார் உரைவண்ணம்
பாரில் போந்து பரதத்தில்
பண்ணார் தமிழ்ச்சீர் அகமிதனில்
அண்டி அருள்சேர் அறம் மூவர்
அணிகொள் தனிகைத் திருத்தாதாய்
அனந்தர் குலமே விளங்கவரு
ஆதிமூலம் அவதாரம்
விண்ட மாட்சி வியனுலகில்
மிக்கார்ந் தேற்று வேதமுதல்
விளைந்து தவத்தில் யுகத்தீர்ப்பு
வழங்கத் துணைசெய் மதிமணியே
அண்டர் கோன்மெய் யார்குழவி
அழகார் திருவைப் பார்த்திடுவீர்
அமுதர் எழிலைக் காத்திடுவீர்
அறிவுக் கரசைக் காத்திடுவீர்!
(12)

திடஞானக் கொண்டலராம் வடலூர் வள்ளல் பிரான்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அருணயந்த நன்மார்க்கர் ஆள்கவென அன்றுரைசெய்
அருட்ஜோதி போற்று வடலூர்
அரசாளும் தனிப்பெரிய கருணைமிகு வள்ளலே
அன்புவடி வானபெரியீர்!
இருட்சமய சாதிவெறி யேறியிப் புவியினர்
இடர்ப்பட்டு நின்ற காலை
இவைதவிர இறைவருகும் இணையில்தவ மறைமுதல்வர்
யாவுமொன்றாய் மிளிருமே
பொருள்மலர மெய்வேதப் பொழில் மலரக் கற்பகம்
பொலிய வரு சாலை ஆண்டார்
பொய்மடிய மெய்விடியப் புவியிலொன் றேகுலம்
போற்று தெய்வம் ஒன்றென
தருபெரியார் திருவுயரும் தரணிதனில் நிகரிணையில்
தவமேரு வந்துதித் தார்
சகலவுயிர் மகிழவரு திகழுமெழில் சேயினைத்
தங்கள்திரு வுள்ளம் காக்க!
(13)

2. செங்கீரைப் பருவம்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

திருநுதற் பொற்சுட்டி வெயிலொளி விரிப்பவும்
திலகமது மின்னொளிரவும்
சீரார் திருக்கண்டம் பொன்மாலை ஊசலிட
திருமார்பம் நிலவெரிப்ப
இருதிருக் கரங்களும் இனிதுபுவி மாதுமிசை
எழிலார்ப்ப ஊன்றியழகாய்
இலகுமொரு தாள்நீள ஒருதாள் மடக்கியே
இணையில் சிர மிக்கசையவே
அருளுதிரு முகமதியும் அழகுபொலிந் தொளிரவே
ஆருயிர்கள் கண்டு மகிழ
அணிதிகழ மதியரசு அண்டர்கோன் எம்முயிரே
ஆளுடைய நாயக மணி
திருமறைகள் தெளியதிரு மொழியுதவு மெய்க்குழவி
சீரடியர் சிந்தை மகிழ
சகமுழுது உய்யவென இகமதனில் திருவருக
செங்கீரை யாடியருளே!
(14)

செய்யாத நோன்பிலையெம் தெய்வமணி யைவேண்டித்
தோத்திரம் செய்பெரியதாய்
சேர்த்திருகை நீட்டிடத் தத்தித் தவழ்ந்துதாய்
சீர்மடியி லேறி யினிதே
பொய்யாது பெய்யமுத பொற்கலசம் வாய்வைத்துப்
பேரின்ப ஊற்று பொங்கப்
பொன்விரல்கள் தலைவருடப் பூரித்து அமுதுண்ட
பேராளர் குமுதவாயால்
துய்யநீர் “ங்க்ங்க்” என்றமொழி குழறவும்
தாயுள்ளம் கருவமுறவும்
திருவளரல் இங்கென்ற குறிப்புஅறி யாதுயிர்கள்
திக்கித் திகைத்து நிற்க
தையேபி றந்துஉயர் மெய்யேவ ளர்ந்து விளை
தன்னேரி லாத அரசே
சகமுழுது உய்யவென இகமிதனில் திருவருக
செங்கீரை யாடியருளே
(15)

தந்தையென வருபெரியார் தங்கம்நும் முன்போந்து
செங்கரம் ஏந்தி நிற்க
தாவிவிழுந் தேயவர்தம் மார்பில்த வழ்ந்துஎழில்
தோளைத் தழுவி யிங்கே
விந்தைவிளை வேதமெழில் மிக்கிலங்கப் பொழியு
மென்மலர் வாய்ம லர்ந்து
மெல்லிசை யினின்பமருள் நல்லிசையெ னும்மழலை
மிக்கி 'ங்குங்கு' எனவே
தந்தசுக வாரியே! தருமதுரையே! மொழியுள்
தன்னேரி லாத தமிழே!
தங்கமக மேருவே! தவமுனிவர் தனிகைமணி
சிந்தையெதிர் நோக்கி நிற்கும்
சிந்தைகுடி கொண்டுவரம் சீர்பெருகத் தந்தருளும்
தேவாதி தேவ மணியே!
சகமுழுது உய்யவென இகமிதனில் திருவருக
செங்கீரை யாடி யருளே!
(16)

ஏன்றுகொண் டெமையாள இனிதுவரு தனிகைசுதர்
எம்பெரும! இன்ப வடிவே!
இனிமைகனி தமிழிதனில் இலங்குமெழுத் தொலிகளின்
இலக்கணம் வழுவி யிங்கு
மூன்றுபத்தொடு மூன்று அட்சரம் வழக்கின்றி
மொழிவலார் என்பர் விடுநாள்
மூமூச்சு மார்தலைவ! மொழிமுறைமை குறைவறவே
மெய்ம்மொழி வழங்குமரசே!
ஆன்றமுழு முதல்தேவே! அருளாளா! எம்முயிர்க்
கன்புசெய் ஆதியிறையே!
ஆனந்த மேஅரிய மோனந்தமே அருண்மெய்
அஃதிங்கு என்றினிமையாய்
சான்றாண்மை ஓங்கவே சற்சனர் தாதையே
செங்கீரை யாடியருளே!
சகமுழுது உய்யவென இகமிதனிற் திருவருக
செங்கீரை யாடியருளே!
(17)

மறைபல தெளிவுற விழைந்து வணங்கிட
முழுமுதல் மாதவரும்
மணிமொழி பொழிதர வையக மிதுதனில்
வருகைசெய் அவதாரம்
இறைதிரு வுருவொடு எழில்பொலிந் திலகிட
இனிமைமெய்த் தமிழாளும்
இதமுயர் பகுதியில் வடிவுடை மணிமலை
இனிதுற உயிர்உய்யும்
நிறைமதி அருள்மணி எமையொரு பொருளென
நிகரிலர் திருவாரும்
நிதிபதி கதிதர நிலைதரு பொருள்பெற
நினைவற அறிவாரும்
சிறைவிடு துறைதரு திருமிகும் அரசரே!
செங்கோ செங்கீரை!
சகமுழு தினிதுய இகமதில் வருதிரே!
செங்கோ செங்கீரை!
(18)

சந்த விருத்தம்

செந்தமி ழின்சுவை கண்டு களித்திடத்
தந்தவ ரோதயரே
சிந்தை கனிந்து உயிர்க்கொரு நற்றுணை
எந்தையுகோதயமே!
விந்தையெ னும்பசு மைத்திரை யேதவிர்
மெய்ப்பொருள் தந்துய்ப்பீர்!
வேதியரே அருள் மேதினி மீமிசை
போதனை விண்டருள்வீர்!
கந்தையெ னக்கிழி பட்டுயிர் பட்டது
காத்தது காதலரே!
கஞ்சமலர்ப் பதம் தஞ்சமடைந்தவர்
கோதகல் சீதனரே!
வஞ்சஎ மன்படர் விஞ்ச புரந்தருள்
செங்கோ செங்கீரை!
மாதவர் பாதம தேகதி போற்றுதும்
செங்கோ செங்கீரை!
(19)
சாவத னிற்பெரு துன்பிலை யென்று
சகத்தினர் திண்டாட
சாவது ஜீவனின் நற்பய ணம்என
சற்சனர் கொண்டாட
சாவொடு வாழ்வு முடிந்ததெ னப்பலர்
தமையறியா துளற
சாவது நித்தியம் செல்நுழை வாயிலென்
றேஒரு பண்போர
சாவும் அடக்கமும் வேறென நாட்டி
யதன்குறி கள்சீராய்
சாவதனில் இரு தன்மைக ளுண்டெனத்
தெய்வம் விதந்தோத
சாவினின் மீட்சிமெய் வாழ்வருள் மாட்சியர்
செங்கோ செங்கீரை!
சற்குரு வாய்வரு தெய்வ வரோதயர்
செங்கோ செங்கீரை!
(20)

ஒன்றுகு லம்மென ஓதினர் பண்டது
உரைசொன் மொழியளவே
உலகிலிருந்துற அலகிலர் சோதியர்
ஒப்பிலி அப்பன் வந்(து)
இன்றது மெய்யென அறுபானொன்பது
ஒத்தே குலமொன்றாய்
இணைந்து மகிழ்ந்துயிர் நேசரு மாகினர்
எழில்மெய் வளர்சாலை
குன்றினி லிட்ட விளக்கது வானது
கோதகல் சாதிகளின்
கோகுலர் கோமகன் கொழுமலர்ச் சேவடி
குவலயம் உய்வழி காண்
நன்றெமை யாளுடை நாயக! தாயக!
செங்கோ செங்கீரை!
நற்குரு வாகிய நற்றவ நாதரே!
செங்கோ செங்கீரை!
(21)

பொன்னொளிர் தொட்டிலி றங்கிய மர்ந்தெழில்
பொங்கிடு பொற்காரை
பூண்டம ணிச்சிறு தாளினை நீட்டி
மடக்கினை மற்றோர் தாள்
இன்பொடு நற்கரம் ஊன்றிமுகம்மதில்
இங்கிதம் பொங்காட
எங்களுயிர்த்துணை “ங்க்ங்க்” கென்றே
ஈடிணை யற்றாட
தென்கயி லைச்சிவன் வாய்மலர் பில்கும்
செந்தேன் முந்தாட
சீர்கழியுந்தி இலங்கிடு தொந்தி
சிந்தை கவர்ந்தாட
வன்கலி யின்னிருள் வீய்ந்திட மெய்ம்மறை
ஓங்கினம் என்றாட
மாதவ மாமணி வையக முய்ந்திட
ஆடுக செங்கீரை!
(22)

தென்னகம் வந்தசி வன்பரம் மெய்வழிச்
சாலை தெய்வச் சேய்
சிந்தைக வர்ந்திடு கள்வரெ னுஞ்சீர்
செஞ்சொல் முந்தாட
என்னக மேறியே இங்கித மாகவே
“ங்க்ங்க்” கென்றேதான்
இன்பநடம்புரி எந்தைவரோதயர்
என்னுள்க ளித்தாட
மன்னுயிர் உய்ந்திட இன்னமு தந்தரு
மன்னவர் அன்னாட்டு
வித்தெனவே எமைத்தத்தென வேஎடு
மெய்ம்மை கனிந்தாட
அன்னம தேறிய மண்ணக பிரம்மம்
ஆடுக செங்கீரை!
ஐந்தொழி லேபுரி என்னவர் தெய்வம்
ஆடுக செங்கீரை!
(23)


செம்பவ ளத்திரு வாயமு தூறத்
தீந்தமிழ்த் தென்னாட!
சிந்தைக னிந்திட 'ங்க்ங்க்' கெனுநற்
சீரார் பொன்னாட!
எம்பிற விப்பிணி தீர்வுற லாவதும்
உய்வதும் இங்கேதான்
எம்மதமும் சம்மதமெனும் மெய்ம்மதம்
இலங்குவ திங்கே தான்
வம்படி செய்குல வாதனை தீர்ந்தினி
வாழ்வதும் இங்கே தான்
மறைபலவும் தெளி வுற்றுயர் வாகியே
மாண்புற லிங்கேதான்
உம்பர்ப தங்களும் ஓங்குவ ரங்களும்
ஈவதும் இங்கேதான்
உத்தம மாமணி வித்தக சித்தரே
ஆடுக செங்கீரை!
(24)

3.தாலப் பருவம்

பதினான்குசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அரிதாம் மனிதப் பிறவி கிடைத்தும்
அறம் சார்ந் துய்யாதே
அறவோர் உரைகள் மறுப்போர் மிகுந்து
அழிசெய் கலிகாலம்
உரிதாம் நெறிகள் உலகே உய்ய
ஒருமெய் முதலானீர்!
உவந்தே வருக தவஞ்சே ரருளால்
உயிர்கள் தழைத்தோங்க
பெரிதாம் பொருளை அருள வருக
பிறவாப் பெரியோனே!
பெரிய தாயின் பொன்னார் உதரம்
பொருந்திப் புவிபோந்த
பெரியீர் எவர்க்கும் அரியீர் உயிர்க்கு
உரியீர் தாலேலோ!
பெருமான் எம்மான் செம்மாண் புடையோர்
தாலோ தாலேலோ!
(25)

தேடற்கரிய செல்வச் செழுஞ்சீர்
திருவே அருளாளா!
தெய்வக் கனியே தீர்க்கத் தரிசிச்
சீமான் அனைவோரும்
வாடா நெறியை வழங்கும் வருகை
மகிழ்வோங் குரைசெய்ய
வையஞ் செழிக்க ஐயர் வருகை
வளரெம் உயிர் உய்ய
கோடா கோடிப் பெருக்க நிதியைக்
கோதில் திரு மெய்யை
கொடுக்கக் கொடுக்கக் குறையா வளமார்
கொண்டல் கொடைக்கையர்
ஈடில் மாட்சிச் சாலை அரசே!
தாலோ தாலேலோ!
இறைவா உயிருய் துறைவா! எம்முள்
உறைவா! தாலேலோ!
(26)

பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

அன்போர் உருவாம் சிவபரமே
அறிவே திருவே தாலேலோ
அகிலம் முற்றும் மெய் காணா(து)|r}}
அலையும் காலம்தயவாலே
தன்னே ரில்லா நிறை மொழியால்
சர்வ மறைகள் தெளிவாக
சர்வ மூல மந்திரங்கள்
தத்தம் திருவார் உருவொளிர
பொன்னார் அரங்கில் உதித்தெங்கள்
புன்மை தவிர்த்த கதிரோனே!
பொங்கும் பேரின் பத்திருவே!
பெரியோய் ஒண்ணார்க் கரியோயே!
மன்னே! மணியே! மதியரசே!
வள்ளால்! தாலோ தாலேலோ!
வையம் வானம் ஈடில்லா
மாண்பே! தாலோ தாலே லோ!
(27)

வித்தே வித்தில் லாவித்தே!
விளைவே வித்து நாயகமே!
வேதத் திருவார் எழிலுருவே!
மெய்ம்மை என்னும் தனிமுதலே!
சித்தே சித்தர் கணத்தலைவா!
தெளிஞா னத்தின் கனிப்பிழிவே!
தீராப் பவத்தின் பிணிதீர்க்கும்
தேவே! வைத்தீஸ் வரர்நீரே!
முத்தே முத்திக் கொருவித்தே!
முதன்மெய்க் குருவே மாமேரே!
மோன ஞான வரம்பான
விஞ்சைப் பொருளே! மெய்வழியே!
சத்தே! சத்சித் தானந்த
திருவே! தாலோ தாலேலோ!
தனிகை தந்த பெருங்கொடையே!
தாலோ தாலோ தாலேலோ!
(28)

அழியும் பொருளை நிதந்தேடி
அலைந்தே மறலி கைப்பட்டு
அலறி நரகத் தாழ்கின்ற
அகிலத் திடையே திருவோங்க
அழியா நிதியைக் கொணர்ந்திங்கண்
அருளும் வள்ளால் அன்பில்லார்
அமரா பதியே! விதிமாற்றும்
அரனே! பரனே! அருள்ஞானம்
பொழியும் முகிலே! உயிர்க் கெல்லாம்
புகலே அகலாப் பெருந்துணையே!
பொன்னின் அரங்கில் நடஞ்செய்தெம்
பொல்லாப் பொழித்த பேராளா!
வழியும் அமுதத் தேனாறே!
வள்ளால்! தாலோ தாலேலோ
வையம் வானத் திணையில்லா
வள்ளால்! தாலோ தாலேலோ!
(29)

உண்ணல் உறங்கல் அழிகாமத்
துழல்தல் இறத்தல் முடிவென்று
உளறிப் புலம்பி நரகேகும்
உலகத் திடையே உயிருய்வை
எண்ணச் செய்து இறைமாட்சி
இயம்பிக் காட்சி அருள்மீட்சி
ஈந்த தயவே! எங்கோவே!
இணையில் ஞானக் கனியான
அண்ணல் உங்கள் துணையன்றி
அகிலத்துண்டோ பிறிதொன்று
அமுதம் பொழியும் வாரிதியே!
அறத்தின் உருவே! வானிதியே!
விண்ணாயகனே! தாலேலோ!
வேதமுதல்வா! தாலேலோ!
விமலா! மெய்யா! தாலேலோ!
வேந்தே! தாலோ தாலேலோ!
(30)

பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

எம்மத மேபெரி தெம்மிறை யேஉயர்
வென்றுரை கொண்டோதி
எங்ஙணு மேஇடர் வெங்கொடு மைக்கல
கங்களு முண்டாக
எம்மத மென்றனீர் இறைவர்க ளெத்தனை
என்றுரை செய்ம்மின்கள்
என்று வினாவி யனைத்து மதங்கள்
இணைந்து மகிழ்ந் தொன்றாய்
சம்மத மாகிடச் செய்த தபோநிதி
சற்குரு மெய்ச்சாலைத்
தெய்வப ராபரர் சீருரு வாகிய
ஞான சுகோதயரே!
செம்மை நெறிதரு தேவ தயாநிதி
தாலோ தாலேலோ!
சிந்தையி லேநிறை செந்திரு வே அருள்
தாலோ தாலேலோ!
(31)

பதினான்குசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

செப்பிடுவித் தைக்கள்ளர் தீனர்குறி காரர்கள்
தாம்தெய்வ மென்று செப்பி
சீமையெல் லாமுமறி யாமையில் ஆழவே
செய்துவரல் ஒரு பாலதாய்,
இப்பெரிய ஞாலமும் கதிர்மதி யுடுக்களும்
யாவுமி யற்கை, தெய்வமே
இலையென்பார் ஒரு சாரர், கல்செம்பு வெள்ளியில்
இயன்றசிலை தெய்வமென்று
ஒப்பிடுவர் பலதெய்வம் பலகோவி லென்றுரை
ஓங்கி யோங்கிப் புளுகுவார்
உண்மையறி தன்மைபெற செம்மைநெறி தந்துதடுத்
தாட்கொண்ட சாலை அரசே!
செப்பரிய தெய்வமொன் றேகுலமும் ஒன்றெனச்
செய்தபெரு தேவா தியே!
திருமெய்வழி தருமரசு அருள்முரசு தெய்வமே!
செந்திருவே! தாலேலோ!
(32)

அம்மை யொடு அப்பனும் ஆன்றகுரு தெய்வமும்
ஆனமெய் வழி தெய்வமே!
அகிலம்வரு குயிர்தளிர நெறியருள அமுதமொழி
அந்தமிழ்ப் புவியில் வந்தீர்!
செம்மைமிகு தனிகைமணி வள்ளலைக் கண்டுடன்
துறவுகொடு பின்தொ டர்ந்து
சீரகில வலம்வருகு பொழுததனில் பசிதாகம்
தூக்கமு மற்று விடுமால்
அம்மையினி தீன்ற பெருமாட்டிநற் பெரியதாய்
ஆராரோ பாடுபொழுது
அன்று (உ)றங்காநிலைக் கின்றுறங் கிடுகமுன்
ஐயமெய்த் தெய்வமணியே!
தம்மையுணர் தருமநெறி தருபெரிய துரையுமது
தாள்தனில் தஞ்சமுற்றோம்
திருமெய் வழி தருமரசு அருள் முரசு தெய்வமே!
செந்திருவே தாலேலோ!
(33)

இருபதின்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

சாகாத மெய்த்தலை தந்ததாய் விந்தையார் எந்தாயே!
சாலோக சாமீப சாரூப சாயுச்யம் தந்தாயே!
வேகாத காலதும் மெய்ப்பா லறந்தரும் மெய்த்தாயே!
விண்மெய்ம் மணிச்சுடர் தன்னால் இருட்கெட வைத்தாயே
போகாத நற்புனல் பொய்யாத கையுட்பு குத்தேமெய்
பேரின்ப போகமிப் பூமியில் பெறுகென ஈந்தாயே!
மாகாதல் தந்த மணவாள மாதவா தாலேலோ!
மாண்போங்கு மெய்வழி தேவாதி தேவரே! தாலேலோ!35)|r}}
பேரான நாடுடைப் பெம்மானே! எம்மானே! தாலேலோ!
பெருந்துறை எற்குத் தருந்துறைவா! தாலோ தாலேலோ!
கூரான மெய்க்குரு கொண்டலே தெய்வமே! தாலேலோ!
கோதகல் மெய்ந்நெறி தந்தாண்ட செம்மலே! தாலேலோ!
ஆராவ முதனே! அன்போர்உ ருவனே! தாலேலோ!
அறிவுக் கரசரே! அளவில்த யாநிதி தாலேலோ!
நீரே எனக்கொரு நற்றுணை யாயினீர் தாலேலோ!
நித்தியா னந்தமே! நற்றவா! தாலோ தாலேலோ!
(34)

4. சப்பாணிப் பருவம்

பதினான்கு சிர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பொன்னைக் குழைத்தழகுப் பதுமை சமைத்ததுவும்
பேருயிர் பெற்று வருகால்
பூணணிகள் நவரத்ன கசிதமிழை பேரெழில்
பொங்கமிளிர் தங்கமயிலே!
பொன்னரங்க கத்தழகர் விண்ணரங் கத்தரசர்
போதமார் மெய்ம்மாதவர்
பூதலத் தவதாரம் ஏதமில் தவமேனி
பெருகுதய வுயர் கொண்டலே!
என்னையும் பொருளென்று ஏன்றுகொண் டருளாழி
இன்பலைக ளிடைபடியவே
இணையில்தவ பலனருளும் இனியகனி யமுதமே
எங்கள்குல தெய்வமணியே!
தன்னையே தந்தருளு தற்பரா பரநாத
சப்பாணி கொட்டியருளே!
தனிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(35)

சதுர்வேத மாகமம் சர்வமந்த் ரார்த்தமும்
தெளிவின்றி இருளாகவே
தற்குறியர் கைப்பட்டுப் பொய்யருத்தம் கூறத்
தடுமாறி நின்ற காலை
மதியோங்கு மாதவர் வஞ்சமில் பரமார்த்தர்
மெய்யாக மெய்ம்மை யோங்க
வளர்கருணை அமுதமொழி மழைபொழிய எமதுயிர்கள்
வளமிக்கு வந்து ஓங்க
கதிதந்து எம்முயிர் கரையேறப் புணையாகக்
காட்சிதந் தாளுமரசே!
காசினியில் வந்துற்ற கற்பகவி ருட்சமே!
கதிமாத வப்பெரும்பேர்
துதியோங்கு பொற்கரத் தானமுதத் தெய்வமே!
சப்பாணி கொட்டியருளே!
தனிகைமணி தருமரசு தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(36)

சமயமத மெமதுயர்வு எனவொருவ டொருவர்மிக
சமர்புரியு மிதுகாலையில்
சகலவுயி ரியல்புசுக விழைவுதுயர் வெறுப்புறுதல்
தன்மையும் உணர்த்து வித்து
எமபடரின் இடருமதில் விடுதலையைப் பெறுதுறையும்
இன்பமிக வேயுரைத்து
ஈடிலாத் தவமாட்சி இனியமெய் யுயிர்மீட்சி
யாவும் விதந்தோதியே
அமுதமடை பெருகிவர எமதுயிர்கள் வளமுறவும்
ஆண்டுகொள் மெய்த் தெய்வமே
அணிமணிகு லுங்கஇரு கரமலர்கள் ஒன்றோடு
ஒன்றுஒன் றிப்பொருந்த
தமைஎமது உடமையெனத் தந்தருளும் வள்ளலே!
சப்பாணி கொட்டியருளே!
தனிகைமணி தருமரசு தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(37)

சுகதுக்க மிடுபேழை தேகமொன்றே என்று
சிந்தைதடு மாறுற்ற கால்
தூலசூக்மம் காரணம்மகா காரணம்
தேக(ம்) நான் கென்று நிறுவி
சுகவாரி பேரின்ப வீடடைக் கூர்ப்பினைச்
செப்பியங் கேயிருத்தி
சுந்தரம தாகச்சு தந்திரம டைந்துய்ய
சீர்மெய்வழி காட்டியாண்ட
தகையோங்கு சாலைமெய் யாண்டவர் பொற்கமலத்
தாள்மலர் சிரஞ்சூடுவோம்
தன்னிலக் கணச்சாவி தந்துமெய் வீடதுதி
றந்திடச் செய்த குருவே!
திகழெழில்வி ளங்குவரு தேவாதி தேவரே!
சப்பாணி கொட்டியருளே!
தனிகைமணி தருமரசு தருமதுரை தவமுனிவ!
சப்பாணி கொட்டியருளே!
(38)

ஜெகமிருக பாயபயம் சடுதிச்சா விறுதிநாள்
திண்டாடும் தாபமூன்றும்
சற்றுமணு காமலே வெற்றிமுக டேறுபோல்
ஜீவப்பிரயாண மாகும்
சுகஉதய மருள்தருக சாலை மெய்த் தெய்வமே!
சீராரும் தெய்வமணியே!
துரியமலை மீது அருட்ஜோதிவள நாடரே!
தேஜோ மயானந்தரே!
நிகரிலவ ரெனுமகதி புகலரிய அருள்தருகு
நித்திய நிமல நாதா!
நீதிமுரசே எமது ஆதியரசே! உமது
நற்றாள் சிரஞ்சூடினோம்
தகவுயரு சத்திய தேவகுல முற்பவத்
தாதையே சர்வேஸ்வரா!
தனிகை மணிதருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(39)

வருணநான் கென்றுரைசெய் வார்களாதில் வேற்றுமை
மேல்கீழென் றியம்பும் மெய்யின்
மாட்சியறி யாமையால் மீட்சியின் றிஎளியர்
வாழ்வு துன்பத்துள் மூழ்கும்
கருணையிலர் செயுகொடிய துர்ச்செயலிலிடர்ப்படுங்
காலையில் அவதரித்தீர்!
கனிஞான இச்சையில்லாதவன் சூத்ரனாம்
கலைஞான வேட்கை மிக்கு
குருபிரான் தனையடைந்தோன் வைசியன் எனும்
குருமொழியில் வைராக்யமே
குறிகொண்டு ஞானபத மடையநிற் போனவன்
கோதில் க்ஷத்திரிய னாகும்
திருகண்டு குருநாதர் உபதேசம் அருள்பெற்றோன்
சீர்பிராம் மணன் என்றனிர்!
தனிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(40)

நாசிக்கு வெளிமூச்சு ஓடாத தவமுடைய
நாத நாதாந்த அரசே!
நற்கருணை நாயகா! நற்றயவ ருள்பெருக
நற்றேவ ஞான முரசே!
வாசிக்க வானமுது வருஷிக்க உய்திபெறு
வையகம் வாழ் வானவர்
வளமார் அனந்தர்குல தெய்வமே! சாலைவளர்
வள்ளால் மெய்வழி ஆண்டவர்
நேசிக்கு மக்களுயிர் நமனிடர் கடந்துய்ய
நல்வரம் நல்குமிறையே!
நித்திய வாழ்வுபெறு சத்திய தேவகுல
சற்சனர் போற்று தகையே!
தேசிகா தேவாதி தேவரே! பொற்கரம்
சப்பாணி கொட்டியருளே!
திருத்தணிகை அருட்குமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(41)

விண்ணிடையு லாவுதல் வாரியிடை மூழ்குறல்
விண் கோள்களிற் றாவுதல்
விளையாட்டு மேன்மையென வெறிகொண்டு திரிதரல்
வெஞ்சமர்க் கிச்சையுறுதல்
மண்மனை பொன்பெரிது வையக வாழ்வுயர்வு
வைப்புநிதி கோடி தேடி
வளவாழ்வு நிறை வென்று மதிமயங்கித்திரியும்
மண்ணூரி லவதரித்து
உண்மைவாழ் வின்பெருமை உணர்வித்து அருள்வித்தை
ஊன்றியுயிர்ப் பயிர்செய்குமெய்
உத்தம தபோதனர் ஓங்குமெய் வழிதெய்வம்
உங்களருட் தயவுபோதும்
தண்ணளிசெய் சாவா வரம்நல்கும் தேவாதி
சப்பாணி கொட்டியருளே!
தணிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(42)

சரியைகிரி யையோகம் ஞானமென் றேகூறித்
தான்கொண்ட பொய்யருத்தம்
தக்கபடி யேயுரைத் தெளியரை வாட்டிடும்
தறுகணர் வாழ் பூமியில்
சரியிதுமெய்ந் நெறியிதெனச் சாற்றிமெய் உணர்வித்த:
சர்வேஸ்வ ரப்பிரபுவே!
சர்வமூ லமந்த்ர நிரூபிக மகான்மியர்
சாலை ஆண்டகை தெய்வமே!
உரிமைபெறு மெய்யனந் தாதியர னைவர்க்கும்
உற்றதுணை தாங்களரசே!
ஓதாதுணர்த்திடும் ஓங்குமெய்ப் பலனருள்
உத்யோவனச் சோலையில்
தரிசனைதந் தெமையாளும் சாலை மணிரத்னமே!
சப்பாணி கொட்டியருளே!
தணிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(43)

மூலமுத லாறுஆ தாரமென மொழிகுவார்
மூலஆ தாரமறியார்
மூலமது மலவாயிலருகி லென்றுளறுவார்
மெய்ம்மூல மறிகிலாதார்
சீலமிகு செந்நெறியைச் செப்பிடினும் ஒப்பிடார்
தெய்வமது பலவென் பர்காண்
தேவாதி தேவரே! அவதாரம் செய்சீர்மை
சிந்தையினி லோர்ந்திடாதார்
கோலமிகு மெய்வழி தேவகோ மானுமருள்
கொண்டுய்த்த பேர்கள் கோடி
குருகொண்ட லேஅருளைத் தருகொண்டலே! வருகை
தருகொண்டலே! போற்றுதும்
சாலையெனும் மெய்குண்ட பூகயிலை யையனே!
சப்பாணி கொட்டியருளே!
தணிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(44)

மச்சாவ தாரத்தை மீனென்பர் வரஆகம்
அவதாரம் பன்றியென்பர்
மற்று நந்தீசருக் கெருதுருவம் என்பர்காண்
முருகருக் காறு சிரமும்
எச் செயற்கும் முன்னர் ஆனமுக தெய்வத்தை
ஆனை முக மென்றுரைப்பார்
இடப்பாகம் கொண்டதாய் பார்பதி சிவனாருக்
கிவன்விழை உருவரைகுவான்
அச்சமின்றிப் பைரவர் தனை நாயெனும்
ஆதிசேடன் பாம்பெனும்
அகமியம தறியாமல் அவனவன் தான்தோன்றி
அர்த்தம்செய் தலைக்கழிப்பான்
துர்ச்சனர்தம் பொய்மடிய மெய்விடியச் செய்தவர்
சப்பாணி கொட்டியருளே!
தணிகைமணி தருகுமர தருமதுரை தவமுனிவ
சப்பாணி கொட்டியருளே!
(45)

5. முத்தப் பருவம்

பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

மார்க்கப் பதியில் பெரியதாய்
மணியார் உதரம் தனிலுதித்த
மதிப்பிடலங்கா மணிமுத்தே!
வாழி!வாழி! நின்கொற்றம்நீர்க்கொள் நீலக் கடல்முத்தும்
நிலத்துட் கழையுள் விளைமுத்தும்
நிகரில் யானை மருப்பில் விளை
நல்முத்தும் நெல்மணி முத்தும்
பார்க்குள் விளைந்த நவரத்னப்
பரிசார் முத்தும் நின்னெழிலார்
பவளத்திரு வாய் மலர்ந்தருளும்
பண்ணார் முத்துக் கிணையாமோ!
சீர்(க்)கொள் தனிகை மணித்தங்கம்
திருவாய் முத்தம் அருளாயோ
தெய்வ மணியே செவ்வல்லித்
திருவாய் முத்தம் அருளாயோ!
(46)

பொன்மா தெங்கள் பெரியதாய்
பூரித்தமுதப் பொற்கலசம்
பொங்கிச் சுரந்த சுவையமுதைப்
பூவாயிதழும் பொருந்திடவே
மின்னார் மேனி மடிவளர்ந்து
மென்செம் பவள விரல்சிரத்தை
மிகவே வருட வதனமதி
மேல்பார்த் தருந்திச் சிறந்தீரே!
மன்னே மணியே செங்கமல
மலரா ரிதழ்கொண் வாய்திறந்து
வையத் துயிர்கள் உய்யுமருள்
மாரி முத்தும் அருளாயோ!
தென்னா டுடைய சிவபரமே
திருவாய் முத்தம் அருளாயோ!
தெய்வம ணியே! செம்பவளத்
திருவாய் முத்தம் அருளாயோ!
(47)

பூமா திங்கண் செழித்திடவே
பொழியும் விண்ணின் மழைமுத்து
பூவாரிதழ்கள் மலர்ந்தினிது
பொங்கு மங்கண் தேன்முத்து
நாமா துள்ளம் களித்திடவே
நவில்வே தாந்த நன்முத்து
நற்றேன் பிலிற்றும் மான்மியமும்
நல்வாக் கியவான் முத்தாரம்
சீமா னுங்கள் திருமலர்வாய்
செம்மா துளைமுத் ததுபொழிய
செழித்தோம் எங்கள் உயிர்களித்தோம்
சீரார் தனிகைத் திருமகவே!
தேமா மதுரத் தமிழ்மணியே!
திருவாய் முத்தம் அருளாயோ!
தெய்வ மணியே செங்கமலத்
திருவாய் முத்தம் அருளாயோ!
(48)

வாவா என்று அருகழைத்து
மதுர மொழியால் உயிர்தடவி
மணிநா வமுதம் உயிர்தளிர
வழங்கும் ஞானம் கனிமுத்தே!
தேவா! தெளிதேன் மணிமுத்தே!
சித்தம் களிக்கும் தேனாறே
சீரார் முத்துக் குவியலெனும்
திருவா யமுதக் கருவூலம்
ஓவா தின்ப அருள்மாரி
உவந்தே பொழியும் கொண்டல்காண்
உத்யோ வனமெய்ச் சோலைதனில்
ஒப்பில் முத்தம் அருள்வாயே!
சாவா வரங்கள் தரும்சாமி!
தயவாய் முத்தம் அருளாயோ!
தணிகைச் செல்வத் திருக்குமரா!
திருவாய் முத்தம் அருளாயோ!
(49)

சருவ சமயம் இணைந்தமரும்
சங்கப் பலகை எனும்தவிசே!
சாதிச் சிக்கு தவிர்த்தாளும்
தனிச் செங்கோலார் தவத்தரசே!
திருவே! அனந்தர் குலப்பரிசே!
 :செழுஞ்சீதனமே! தேன்பாகே!
தெய்வக் கனியே! சீராரும்
செல்வக் குவையே! முத்தருள்வாய்
குருவாய் உருவாய் அருள்வாயே!
கோதில் ஞானப் பெட்டகமே!
கொள்ளை யின்ப வைப்புநிதிக்
குன்றே! மணியே! கற்பகமாம்
தருவே! தயவே! தற்பரரே!
திருவாய் முத்தம் அருளாயோ!
தணிகைச் செல்வத் திருக்குமரா!
திருவாய் முத்தம் அருளாயோ!
(50)
குறிஞ்சி நிலத்தி லவதரித்து
கொழுமெய் மருத நிலம் வாழ்ந்து
குருமா மணியோ டகிலவலம்
கூடி நடந்தீர் முல்லைநிலம்
அறஞ்செய் நெய்த லதுகடந்து
அமர்ந்தீர் பாலை நிலத்திடையே
அதுவுத் யோங்கும் திருவனமாய்
அழகு மிளிர அனந்தர்குலம்
திறமாய் வதியும் திருநகராய்
திகழச் செய்து சிவச்செங்கோல்
திருவாட் சிசெய் தவமாலே!
சிந்தை களிக்க வரமருள்வீர்!
இறைஞ்சிப் பணிந்து விழைகின்றேம்
இனிதே முத்தம் அருள்வாயே!
இன்ப நடம்செய் இறைவா!எற்
கினிய கனிவாய் முத்தருள்வாய்!
(51)
கற்ப கம்முக் கனிச்சாறும்
காம தேனின் தீம்பாலும்
கட்டிக் கரும்பின் பாகுடனே
கற்கண் டின்நற் பொடிசேர்த்து
நற்புத் துருக்கு நெய்யுடனே
நற்றேன் கூட்டிப் பூங்காரம்
நல்முந் திரிவா துமைஏலம்
நன்று சேர்த்த சுவையமுதும்
பொற்குன் றேமெய் வழிச்செல்வப்
பேரார் நிதியே நின்றிருவாய்
பொலியும் பூவல் லியிதழார்
பொருந்தும் முத்தத் திற்கிணையோ
எற்கென் றேவந் தருளாளும்
இணையில் தவமே ரே!எற்கு
இனிய கனிவாய் முத்தருள்வாய்!
இன்பத் தேனில் ஆழ்த்திடுவாய்!
(52)
கற்றோ மென்னும் செருக்கினரும்
கலைஞர் என்னும் தருக்கினரும்
கணக்கில் நிதிகொள் பிணக்கினரும்
களிப்பில் மிதக்கும் மயக்கினரும்
முற்றத் துறந்தோ மென்போரும்
மேலோர் வலியோர் மறைதெளிந்தோர்
மொழிவல் லாரென் றுரைகூறி
மிக்க மயக்கும் திறத்தினரும்
சற்றே தங்கள் சன்னிதிமுன்
சார்ந்த போதே மயக்கொழிவார்
தாழ்ந்து பணிந்தோர் தமையுணர்ந்து
சாகாக் கலையின் தெளிவுணர்வார்
நற்றேன் சுவைவிஞ் சும்திருவாய்
நல்முத் தம்எற் கருள்வாயே!
நாதா!போதா! நவநீதா!
நல்முத் தம்எற் கருள்வாயே! (53)

செம்பொன் உருக்கிச் சிலைசெய்து
சிறப்பாய் அதற்கு மெருகேற்றி
சிறந்த நவரத் னம்பதித்துச்
சிலையே உயிர்பெற் றெழுந்தன்ன
பைம்பொன் மணியே பேராளா!
பாரில் உயர்ந்த பரிசே!நற்
பண்ணே கனிந்த மெல்லிசையே!
பவளக் குன்றே! தேன்கடலே!
இன்பம் திரண்ட எம்முயிரே!
எழிலார் இருதாள் இனிதெடுத்து
ஏரார் திருவே! சிறுநடைசெய்
தெங்கள் உயிரில் திருநடம்செய்
அம்பொன் னரங்கத் தரசே!எற்
கன்பு முத்தம் தந்தருள்வாய்
அணிசேர் அழகே! அமுதே!எற்
கன்பு முத்தம் தந்தருள்வாய்!
(54)
வேதம் புதிது மொழிபுதிது
மெய்யை யுணர்த்தும் திறம்புதிது
வேதாந் தத்தின் முறைபுதிது
வண்ணப் பாடல் பண்புதிது
நாதம் புதிது நல்வரங்கள்
நல்கும் பான்மை யதும்புதிது
நங்கள் ஆதி மான்மியத்தின்
நடையும் தொடையுமிகப் புதிது
ஆதி தேவன் அருள்புதிது
அழகர் கோல மதும்புதிது
அனந்தர் வணக்க முறைபுதிது
அன்பே உன்முத் தம்புதிது
நீதி அரசே! நித்தியரே!
நின்பொற் பூவாய் முத்தருள்வாய்!
நிகரில் மணியே! மாதவரே!
நின்தீங் கனிவாய் முத்தருள்வாய்!
(55)
முத்தே! முத்திக் கொருவித்தே!
மெய்யாம் வழியை அருள்அத்தா!
முந்நீர் மூழ்கா தினிதெடுத்து
மிளிரும் ஒளியார் மணிமுத்தே!
சித்தே சித்தர் கணத்தலைவா!
செல்வக் குவையே! சீதனமே!
திருவே! கற்ப கத்தருவே!
தேவே! எங்கள் அருட்குருவே!
எத்தே யத்தும் எக்காலும்
எவரும் இணையில் எழில்வேந்தே!
என்றும் சாவா வரமருள
இனிதே வந்த வான்கொடையே!
வித்தே வித்தில் லாவித்தே!
விமலா மெய்யா விடைப்பாகா!
வேந்தே! விண்ணோர்க் கதிநிதியே!
மலர்வாய் முத்தம் அருள்வாயே!
(56)

6. வாரானைப் பருவம்(வருகைப் பருவம்)

பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

வருக! வருக! தெய்வமணி
வள்ளால் வருக! அருள் வருக!
மணித்தாள் இலங்கும் பொற்சிலம்பு
மகிழ்வாய்க் கொஞ்சத் திருவருக!
வருக! கற்ப கக்கனியே!
வானோர் போற்றும் தேனாறே!
வையம் செழிக்க ஐயா!நின்
வருகா வருகை தவவருகை
தருக! பொன்னா ரடியெடுத்து
தனிமெய் முதல்வா! புவிமாது
தன்னின் மேனி புளகிக்க
தங்கம் வருக! திருவருக!
உருகும் உள்ளம் உயிர்களிக்கும்
உங்கள் அஞ்செஞ் சீரடிகள்
உவந்தே சிறிய நடைபயின்று
உலகுய்ந் திடமெய் யுருவருக!
(57)

இடையில் அணிசீர் பொற்சதங்கை
இனிதே குலுங்க எழிற்றாள்கள்
எங்கள் உள்ளம் தித்திக்க
இன்ப நடஞ்செய் தருள்வருக!
மடைதே னூற்று மெல்லென்று
வழிதல் போலும் பூந்தென்றல்
மலர்கள் தழுவி வரல்போலும்
மன்னே தண்ணென் நடைபயில்க
நடையார் அன்னம் களிபொங்க
நளினம் திகழ எங்கள்குலம்
நலமே சிறக்க வான்மயிலே!
நற்றாள் கொஞ்சும் நடைபயில்க!
கொடையார் கொண்டல் வான்தவழல்
குலவி நடக்கும் எழில்நடைகாண்
கோவே! எங்கள் குலதெய்வக்
கொழுந்தே! வருக! அருள்வருக!
(58)

வலமார் புரிசங் கெனுமிடற்றில்
வளமாய் இலங்கும் மணிமாலை
மிளிரும் மின்னார் பொற்சரங்கள்
மென்மார் பகத்தே மிக்கிலங்க
குலமே விளங்க வருங்கனியே!
குமரா! மார்க்கத் திருமணியே!
கொஞ்சி நடந்து வாராயோ!
கொள்ளை யின்பம் தாராயோ!
நலமார் பொற்றேர் அசைந்து வரும்
நங்கட் கின்பம் இசைந்து வரும்
நற்றேன் பிலிற்றும் பொன்மலர் வாய்
நளின நகையோ டிவண்வாராய்
இலம்ஆ யிரங்கண் இக்காட்சி
எழிலைக் கண்டு உளம்தளிர
இதமாய் மெலிதாய் நடைபயின்று
எம்மா ருயிரே வாராயோ!
(59)

உத்யோ வனமெய்ச் சோலையிது
உங்கள் நடைக்காய்க் காத்திருக்கும்
உயிர்மெய்ம் மலர்கள் தேன்சுரந்து
உவந்து எழிலாய்ப் பூத்திருக்கும்
சத்ய தேவ பிரம்மகுலச்
சான்றோர் உள்ளம் ஆர்த்திருப்பர்
தகவார் உங்கள் அருளாட்சித்
திருவார் வருகை பார்த்திருப்பர்
பத்ய நெறிகள் பிறழாமல்
பணிந்தும் தாள்கள் மறவாமல்
பாங்காய் உம்மை எதிர்நோக்கும்
பரிசே வருகை அருள்தேக்கும்
நித்ய வரங்கள் தரும்தேவே!
நிமலா நீதிக் கொருகோவே!
நின்னின் பொன்னார் திருவடிகள்
நெஞ்சம் களிக்க நடைபயில்க!
(60)

ஆர்க்கும் மறைகள் தெளிவிற்காய்
அரன்உம் வருகைக் காய்ஏங்கும்
அரிய மூல மந்திரங்கள்
அழகாய் நும்முன் னர்த்தேங்கும்
தீர்க்கத் தரிசிச் சீமான்கள்
சித்தர் முத்தர் ரிஷிமார்கள்
தேவர் முனிவர் யோகியரும்
தேவே உங்கள் திருவருகை
பார்க்குள் நிகழ்மெய்ப் பதிநோக்கி
பக்தி நெஞ்சில் மிகத்தேக்கி
பண்பாய் பணிந்து விழைகின்றார்
பதிமெய்ச் சாலை நுழைகின்றார்
மார்க்க மணியே! மதிநிதியே!
வானோர் கோவே! மெய்ப்பதியே!
மகிழ்வாய் இங்ஙண் வாராயோ!
மாயா வரங்கள் தாராயோ!
(61)

பதினான்குசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

மண்ணிடைப் பிறவாத தங்கமே! அலைமிகும்
வாரி காணாத முத்தே!
மலையிடைப் பிறவாத மணியே! உயர்ந்திடும்
வரையில் தொங்காத தேனே!
விண்ணிடை உலவாத கொண்டலே! செடிகொடி
மரத்தில் மலராத மலரே!
விருட்சத்தில் கனியாத கனியே! கண்ணாளரின்
வெங்கை செய்யாத அணியே!
எண்ணிட முடியா இலக்கமே மூலிகை
எதுவுமில்லா மருந்தே!
எவர்கையும் தீண்டாது இன்னுயிர்க் களித்திடும்
இணையிலா மெய்வி ருந்தே!
வண்ணத்தூ ரிகையினால் வரையாத சித்ரமே!
வரையு ளிபடாச்சிற் பமே!
மதியே குறைந்திடா நிதியே! உயிர்க்கொரே
கதியே!இங் கண்வருக வே!
(62)

தாடியைவ ளர்த்துமே சடைமுடிக ளிட்டுதமைத்
தவசியென் றுளறு மொருசார்
தலைமுடி மழித்துமே சாதுவென் றேகூறும்
தறுகணர் கூட்டமொரு சார்
தேடிமெய் யறியவிழை செம்மனத் தார்தமைத்
திசைகெடச் செய்யு மொருசார்
திருமறைக ளுக்குப்பொய் யுரைகூறி மெய்ம்மைக்குத்
தீங்குபுரி வஞ்ச ரொருசார்
மோடிவித் தைகள்செய் தும்குறி சொல்லி யும்மக்கள்
மயங்கிடச் செய்யு மொருசார்
வேதவா! இக்கொடிய வஞ்சகரை வென்றுமெய்
வழிதுறை யுரைக்க வருக!
நீடுலகில் மெய்யே! நிலைக்கவருள் நித்யரே!
நின்மல சொரூப வருக!
நீதியரசே! வருக! ஆதியரனே! வருக!
ஆதிநாயக! வருகவே!
(63)

அன்றமரர் குழுவிடை அகிலமுறு வீர்நாமும்
அங்ஙணவ தாரம் செய்து
அருமறைகள் தெளியஉயர் அறநெறிகள் வளரவும்
அருளரசு புரியு மென்று
நன்றுவர மருளிய நாயகா உரைவண்ணம்
நற்றேவர் முனிவர் சித்தர்
நானிலத் திடைபிறந் தேங்கிநும் வருகையை
நனியெதிர் நோக்கியுளர் காண்!
மன்றில்நட மிடுபரா மெய்குண்ட வாசவா
வையகத் திடை வானக
வைப்புக ளளித்துமே மறலிகை தீண்டாத
மெய்ம்மத முற்ப விக்க
(64)

இன்றுவருக விதியை வென்றுவருக மதியை
நன்றுதரு நன்மார்க்க ரே!
இறைவருக! இறவாவ ரம்தருக! தெய்வமே!
இனிதுஅருள் தரவரு கவே!
தேயாத நிலவுநீர்! மறையாத கதிரும் நீர்!
சிறிதும்குறை யாத நிதிநீர்!
சிந்தையினின் றகலாத தெய்வம்நீர்! வையமிசை
தாள்படா உமாப்பட்சி நீர்!
காயாத மணம்சற்றும் குறையாத மலரும்நீர்!
கற்பகத் தாரு நீரே!
கற்புநீர் மேருவெனும் வெற்புநீர்! வெப்பமில்
கனலுநீர்! கண்ட மெய்யர்
ஓயா வணக்கமும் மாயாத கீதமும்
ஓதுவே தப்பொருளும் நீர்!
உம்மையன் றிப்புகல் யாரெனக் கையனே!
உவந்திங்ஙண் வந்தரு ளுக!
தூயோ ரனந்தர்தொழு மெய்வழித் தெய்வமே!
தோன்றலே வருக! வருக!
தனிகைமணி தருகுமர தகவுயரு தனிமுதல்வர்
சாலைஆண் டேவரு கவே
(65)

வாராது நின்றிடில் மன்னுயிர் மயங்குமே
மாதவத போதனர் களும்
வழங்கிய தீர்க்கமார் தரிசனம் யாவுமே
வாய்மையாய்த் துலங்க லெங்ஙன்
தீராத வெவ்வினை பிறவிப் பிணியெலாம்
ஜென்ம சாபல்ய மெங்ஙன்?-
தீருமோ முத்தாபம் மாறுமோ எமபயம்
சாவாவ ரம்ஏது காண்?
பேரான நாடுடைப் பெம்மானே! திருவுளம்
பெருந்தயவு கொண்டு வருக!
பெரியர்வருக!உயிர்க் குஉரியர்வருக! எழிற்
பொன்னரங் கையர் வருக!
சீரோங்கு மெய்வழித் தெய்வம் வருக! எங்கள்
சிந்தைகுளிர் ந்துய்ய வருக!
தென்னன் வருக! வானோர் மன்னர் வருக! சாலைத்
தெய்வமே! வருக! வருக!
(66)

பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

வாராய் மணியே! வளவரசே!
முழுமெய் மதியே! மிக்கொளிசேர்
வானின் கதிரே! மலர்மணமே!
வண்ணம் இலங்கும் ஓவியமே!
தாராய் வரங்கள் மன்னுயிர்க்கு
சாவா நிலையாம் நித்தியமே!
தன்னே ரில்லாத் தனிக்கருணைத்
தாயிற் சிறந்த பேரன்பே!
சீரோங் கரசே தேவாதி
தேவா! நின்தாள் அடைக்கலமே
சிந்தை களிக்க அமுதருளும்
திருவே! உம்மைச் சரணடைந்தேம்
பேராப் பிறவிப் பிணிதீர்க்கும்
பெம்மான் பொன்னின் அரங்கரசே!
பெரியீர்! சாலைத் தவமேரே!
பேதைக் கிரங்கி வாராயோ!
(67)

7. அம்புலிப் பருவம்

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அம்புலி நின்னையும் கதிர்தார கைக்குலம்
அகிலமண் டம்ப டைத்த
ஆதிப்பிரா னெங்கள் நீதிப்பிரான் வந்த
சேதியறி யாய்கொள் நீதான்
செம்பொருள் செந்தமிழ கத்திலவ தாரமாம்
சீரெழில் குழவி தன்றன்
திருமலர்ப்பொன் னிணையடிகள் சிறுநடைப யின்றுமே
திகழ்வானை நோக்கி நின்று
எம்பிரான் பொற்கரம் இனிதோங்க நீட்டியே,
இன்பநிலா வேஇங்க ணே
இன்பமொடு ஆடவா எனும்கிண் கிணிக்குரல்
இருசெவிதிட் டோர விலையோ
அம்புலிநின் முகமெங்கள் ஐயர்திரு முகம்போலும்
அழகொளிர இலகுகிற தால்
அமுதுகுமெய் மதியரசர் அகமிக மகிழ்ந்திட
அம்புலி ஆடவாவே!
(68)

சிலேடை

பாலர்முதல் அனைவரும் பிரியமுறல் நற்கலைகள்
பதினாறு கொண்டி லங்கல்
பண்புதண் ணளியாதல் இருள்விலக் கல்உயிர்ப்
பயிர்கள்விளை வுறஅருளு மெய்ப்
பாலொளி வழங்கிஉல கோர்க்கருள் புரியினும்
பரலோக மதிலி ருத்தல்
பொங்கிவரு மமுதருளல் பூங்குமுத மலர்மலர
பெருங்கா ரணம் அதாதல்
பூலோக மறியாஉ மாப்பட்சி வாழவே
பேருணவு தந்தரு ளுதல்
பேரறிவர் என்றுமெய் பெற்றோர் பெயருறப்
பெற்றனிர் இறையும் நீயும்
ஆலமில் அமுதருளும் அம்புலி எம்செல்வ
அருளரசு வாவா வென
அருகுவந் துறவாட மகிழ்வோடு விளையாட
அம்புலி ஆடவா வே!
(69)

சாமம்

முழுமையுறு கால்கடல் பொங்கிடச் செய்துதிரு
முகத்திற்கும் மூத றிஞர்
மேலோங்கு பண்புக்கும் உவமையா னீர்நீவீர்
வானமுது டன்பிறந் தீர்!
செழுமைதரு சீரினர் தென்பாலு தித்தனிர்
தெய்வமாய்த் திகழ்கின் றனிர்!
செங்குமுத மேஇனிமை பொங்கிவரு மேவளம்
சேர்ந்த பேரின்ப மிகுமே
அழகினுரு வேசுவைமி கமுதமடை யேபெரிய
ஆனந்த மருளும் வாழ்வே!
அன்புடனே நின்புடை யமர்ந்தவர்கள் தென்படைய
ஆகுநெறி நீவி ரானீர்
பழகுதமி ழின்பமே பரமமெய் வழியரசு
பக்கல்வா வென்ற ழைக்கப்
படிமிசைநின் மிடிமைதவிர் வடிவுடைய ரொடுமகிழ்ந்
தம்புலி ஆடவா வே!
(70)

பேதம்

வளர்வுதேய் வுற்குண்டு .05மாறாத கலையரசு
மெய்வழி தெய்வ மதலை
வான்முகக் கறையுனக் குண்டுவடுவில் எழில்
மாதவத் தோன்றலெ னவர்
தளர்வுண்டு விதிதனக் காட்படும் தன்மையும்
தாழ்வும் வாழ்வும் நிற்குள
தனித்தலைவர் தமிழமுதம் தனில்வளரு தவப்பெரியர்
தாழ்விலாச் செல்வ ரன்றே
தெளிவது மிகுந்தமணி சீரனந்தர்க் குஅணி
தேவதே வேசர் கனிகாண்
சாலைவள ரய்யராம் தருமதுரை மெய்யராம்
சனதங்க ளிலங்கு கையராம்
எளியர்க் கிரங்கிவரம் ஈகின்ற ஏந்தலார்
இனிதழைத் தல்கேண் மினே!
இனிமைதரு தனிமுதல்மெய் இன்பமுற அன்புடனே
அம்புலி ஆட வாவே!
(71)

தானம்

இறையெங்கள் கோமகன் சாலை மெய்யாண்டவர்
ஏந்தல்திரு வுளமி ரங்கி
இனியைநின் பாலன்பு கனியவொரு திருவரம்
ஈந்தநன் மாராயம் கேள்
பிறையன்றும் முழுமதிநின் நிறையன்றும் சாலையில்
பேருயர் கம்பமிசையே
புரிகுதவ மாட்சிமிக் கரியதிரு வரவுதான்
பேரனந் தாதியர் மகிழ்
நிறைகொண்டு கிள்நாம காவிவெண் கொடியேற்றம்
நீடுவர மருளு(ம்) தயவு
நீயறிந் தின்புறு நிலவேஎ மக்கினிய
நேசநா யகர்சா லையர்
துறைகண்டு நின்னெழில் துணைகொண்டு விளையாடத்
திருவுள் விழைந்து நிற்கும்
துன்பமறு இன்பமுற எம்பிரா னொடுமகிழ்ந்
தம்புலி ஆடவாவே!
(72)

இன்னும்கே ளம்புலி எங்கள்குரு கொண்டலர்
இணையில் கர்த்தாதி கர்த்தர்
ஈராறு திங்களுக் கிட்டபுது நாமமே
இனியை நிற்கரிய பாக்யம்
நன்மதி நாதமதி விண்மதி வீசுமதி
பண்மதி பாடும தியும்
மண்மதி மாரிமதி தண்மதி தனமதி
உண்மதி உபம தியென
முன்னைமுழு முதல்வராம் பின்னைப் பெரும்பொருள்
மெய்வழி தெய்வ மதலை
முழுமதி நினக்கரிய வெகுமதி கொடுத்ததனை
மிக்கெண்ணி இங்ஙண் வருக!
தென்னன்வா வா வெனச் சிறிதும்தா மதமின்றி
தேவரொடு விளையா டவே
திருமணிமெய் யருண்மணியர் தருபரிசு பெறுகவந்
தம்புலி ஆடவாவே!
(73)

தண்டம்

ஒருசூரி யன்னொளி ஒன்றிவாழ் அம்புலி!
ஒருகதிரில் பலதுளை கொடு
ஓடுகின் றதன்மை அறிகிலாய் நின்னுடை
ஒளிசிவந் திடுத லும்தேர்
வருகுயுக பிரளயம ததுபொழுது மதிகதிரும்
மாறுமெனு முரையுண் டுகேண்ம்
வளர்மதிமெய் யமுதரொடு உறவாடில் உனதுகதி
வழிமாற வரமருளு வார்
ஒருகோடி சூர்யப்ர காசரென் ஆண்டவர்
உயர்திருமெய்ச் சாலை யரசு
ஒருதனியர் முழுமுதல்வர் சிறுமதலை உருவுகொடு
உனைவிழையும் விளையாட வே
அருகோடி வந்துமகிழ் அறவாழி அருண்மணியொ
டம்புலி! ஆடவாவே!
அணிகொள்நிதி அமரர்துதி அனந்தர்பதி அருட்கதியொ
டம்புலி! ஆடவாவே!
(74)

உலகுகலை அறுபத்து நான்கென்பர் அதன்மேலொன்
னுளததனை உலக ருணரார்
உணவுடையில் உடல்வெறியில் அழிபெருமை தனிலுழல்வர்
உறுசாவு முடிவென் பர்காண்
அலகில்விளை யாட்டுடைய னந்தர்பதி உலகிடை
அவதாரம் செய்தரு ளியே
அகிலமுறு மனிதரினி சாகாத கலையொன்று
அழியாத நிதியரு ளினார்
நிலவுநினை வருகவென நேரியர்பொற் கரம்நீட்டி
நன்கழைத் தல்கேண்மின் நீ!
நனிவருக! இறைவர்தரும் அருள்வரம ததுபெறுக!
நித்யநல் வாழ்வு உறுக!
இலகுமரு ளமுதுபொழி எமதிறைவர் எழில்மதலை
இனிது மகிழ்வுற ஆடவா!
இனியமதி யேவருக! அழிவில்வர மே!பெறுக
அம்புலி! ஆடவாவே!
(75)

புரமூன் றெரித்தமெய்ப் பொருளான தெய்வமே
புவிமனுக் கிரங்கி வந்து
புரிந்தஇவ் வவதார மகிமையிற் கீடிலை
பொன்மதலை யாயி லங்கும்
பரனோடு விளையாட விரைவாக வருவாய்நீ
பாலொளிவ ழங்கு நிலவே!
பதிமெய்ம்மை நிதிநாளும் புதியோரென் கதியான
பொன்னரங் கையர் காணே
அரனார ழைக்கையில் அதுஓர் பெரும்பதம்
ஆர்வலார் இன்ப முறவே
அழுகுமதி யே!எமது ஐயருணை வேண்டியே
அழைக்கின்ற பாக்யமறிநீ
வரமே!வ ழங்குகொடை மாதேவ! தேவரொடு
மகிழ்வோங்க ஆட வருக!
மதியரசர் மகிழ்வுறவும் மதிநீநற் கதிபெறவு
மம்புலி ஆடவாவே!
(76)

முப்பத்து முக்கோடி தேவர்முனி ரிஷிமார்கள்
மூதறிஞர் சித்தர் முத்தர்
முழுமுதற் பொருளவர் வருகையெதிர் நோக்கியே
மொழி தீர்க்கதரிச னங்கள்
மெய்ப்பித்த மெய்வழிச் சாலைஆண்டவர்களே
மெய்வரம் அருளு மிதுநாள்
மாபெரிய பாக்கிய மாதரசி பெரியதாய்
மணிவயிறு தித்த மதலை
ஒப்பரிய பொற்கரம் உனைவருக எனநீட்டி
உவந்தழைத் தல்காண் மினே!
உயர்வானில் தாரகைக ளோடுலவு மதியமே!
உடன்வருக! விளையாட வே
செப்பரிய மேனிலையும் திருவரமும் அருளுவார்
சிந்தை மகிழ்ந்திங் கோடிவா
சீர்தனிகை யார்குமரர் பேர்புகழ்ப ராவிடவே
அம்புலி ஆடவாவே!
(77)

நம்பிடும் அடியவர் நமன்வா தனையற்று
நற்கதி பெறஇங் ஙணே
நாதாந்த நாயகர் நல்லருள் பாலிக்கும்
நற்றவர் குருகொண்டல் காண்!
வெம்பிட இருவினைப் பிறவியாம் பிணிகளால்
வீழ்ந்தழிந் திட்ட மனுவை
வெற்றிமுக டேறவே எற்றிடு தபோதனர்
மெய்வழிச் சாலை யரசு
தம்பதம் கண்டுமே இன்பம் திரண்டிடத்
தமியேற் கருள்செய் தங்கம்
தகவுடையார் அகமிய சுகநிதியை அருள்தருகு
தன்னேரி லாத இறைவர்
உம்பரின் பதம் என்னும் உயர்பதவி ஈந்திடும்
ஒருதனிமெய் முழுமுதல் வரின்
ஒண்கழல் பற்றியே உய்கதி யடைந்திட
அம்புலி ஆடவாவே!
(78)

8. புக்கில் பருவம்

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

தங்கப் பதுமைக் குயிரூட்டி
தரளம் முதலா நவரத்னம்
தளிரார் மேனிக் கணிவித்துத்
தரையில் நடையிட் டதுபோலும்
பொங்கும் புகழார் பெரியதாய்ப்
பொன்மான் வயிற்றிற் பிறந்தருள்செய்
பொன்னா ரரங்கர் எனுமதலாய்
புவியோர்க் கணிசெய் திருமணியே!
மங்கா மணியார் ஒளிவிளக்கே!
மதிமெய்த் திருவே உயிர்க்குயிரே!
மலர்த்தாள் நடமிட் டதுகண்டு
மனம்பூத் தினிதே பூரித்தேம்
சிங்கக் குருளைச் சீர்நடையீர்!
திருவார் புக்கில் அருள்வீரே!
தென் பாண்டிச்சீர் திருநாடா!
திருவார் புக்கில் அருள்வீரே!
(79)

அன்பின் உருவே! அருள்வடிவே!
அறிவுச் சுடரே அமுதூற்றே!
அமரர் தலைவா! அணிதிகழும்
அஞ்செஞ் சீரார் அடியெடுத்து
இன்ப நடஞ்செய் எழில்காட்சிக்
கிணைதான் கூறற் கெளிதாமோ!
இனிய கனிதேன் கற்கண்டே!
எங்கள் உயிரார் பொற்குன்றே!
துன்பத் திருள்தீர் தூண்டாமெய்
துலங்கும் விளக்கே! தொல்பெருஞ்சீர்
தூய தமிழின் பக்குவையே!
திருவார் நடைகண் டின்புற்றோம்
தென்புற் றோம்மெய் வழித்தேவே!
திருவார் புக்கில் அருள்வீரே!
சீரார் அனந்தர் குலத்தேவே!
திருவார் புக்கில் அருள்வீரே!
(80)

மண்தீண் டாமெய்ம் மலர்தாள்கள்
மனுக்கள் உய்யத் தயவார்ந்து
மார்க்கப் பதியில் உதித்திங்கண்
மகிழ்வார்ந் தினிய நடஞ்செய்யும்
பண்பார் காட்சி கண்டுள்ளம்
பூரித் தினிதே உயிருய்ந்தேம்
பொன்னார் திருமெய்ப் பூம்பாதம்
பற்றி முத்தம் பொழிந்தார்த்தேம்
மண்ணூ ருலகில் வந்தெங்கள்
மரணம் தவிர்த்த மணவாளா!
மதியே நிதியே வான்மதியே!
மணித்தாள் நடங்கண் டின்புற்றேம்
தண்ணென் மதியார் திருவதனா
திருவார் புக்கில் அருள்வீரே!
தவமே ரெங்கள் தனித்தலைவா!
திருவார் புக்கில் அருள்வீரே!
(81)

தாள்கண் டார்மெய்த் திருவுற்றார்
தங்கள் பிறவிப் பிணியற்றார்
தனிநா யகரின் நடைகண்டார்
தயவால் ஏமன் படைவென்றார்
நாளின் றேநன் நாளென்றார்
நவிலும் வினைதம் குவைவென்றார்
நல்லா ருயிரின் இயல்கண்டார்
நற்பே ரின்பத் துறைவிண்டார்
ஆளென் றண்ணல் எமைக்கொண்டார்
அமுதத் தேனின் சுவைதந்தார்
அமரர் ஏறே! அருளாளா!
அழகார் நடைகண் டின்புற்றோம்
தாளே தஞ்சம் எனவந்தோம்
திருவார் புக்கில் அருள்வீரே!
தனிகை வள்ளல் தருபரிசே!
திருவார் புக்கில் அருள்வீரே!

(82)

அருளார் மணியே! மணியொளியே
அமுதின் சுவையே! சுவைப் பயனே!
அழகே! உயிர்க்கு அணிகலனே!
அகிலத் தண்டத் திணையில்மெய்ப்
பொருளே பொங்கும் வான்கங்கைப்
பேரா றே!மெய்ப் பெருஞ்சுகமே!
பென்னம் பெரிய பேராளா!
பெரியோய்! எமக்கு உரியோயே!
குருவே தனிகைக் குமரேசா!
கோதில் ஞானப் பெட்டகமே!
குலதெய் வம்மெய்க் குலமணியே!
கனிவார் பொற்றாள் நடமிட்டீர்!
திருவே! தனிகைச் சீதனமே!
திருவார் புக்கில் அருள்வீரே!
தென்பாண் டிப்பொன் னரங்கையா
திருவார் புக்கில் அருள்வீரே!
(83)

வண்ண மயில்கள் நடமாடும்
வரியார் குயில்கள் இசைபாடும்
வானோர் உத்யோ வனம்நாடும்
மகிழ்வோட னந்தர் கனிந்தாடும்
எண்ணம் கனிந்த மறைவல்லார்
இயல்பே ரின்பத் துறைவல்லார்
இணையில்மெய் தே டும்நல்லார்
எல்லோ ரும்நின் தாளுற்றார்
தண்ணென் கதிரே! தவமேரே!
தனிப்பேர் கருணைத் தயவாளா!
தளிர்பூங் கமலத் தாள்கண்டோம்
சாலைத் தமிழ் மெய்யமுதுண்டோம்
திண்ணங் கொள்சிந் தைத்திருவே!
திருவார் புக்கில் அருள்வீரே!
தரும துரையே தவமேரே!
திருவார் புக்கில் அருள்வீரே!
(84)

உலகம் படையுண் டன்னாள்தொட்
டுயிர்கள் காணாப் பெருநிதியம்
உவந்தே அருளி உலகுய்ய
ஓங்கும் தவஞ்செய் ஓரிறையே!
இலகும் சமயம் மதம்சாதி
இணைந் தொன்றாகிப் பூரிக்க
ஈயும் வானின் கொடைவள்ளால்!
எம்மான் பெம்மான் தவவானே!
அலகில் சோதி அரங்கத்தே
ஆடும் திருவார் நடங்கண்டோம்
அளவில் இன்பத் தாழ்கின்றோம்
அரன்உம் தாளின் நிழல்நின்றோம்
திலகத் தனிகைத் திருமகவே!
திருவார் புக்கில் அருள்வீரே!
தென்பாண் டிப்பொன் னரங்கையா!
திருவார் புக்கில் அருள்வீரே!
(85)

புக்கில் அமைந்தின் றுயிர்க்கென்றே
புலம்பித் திரிந்த உலகோர்க்கு
பொருண்மெய் தந்து அருளார்ந்து
புதுமெய் தந்த பெருந்தேவே!
சொக்கத் தங்கச் சுடர்மேனிச்
சோதித் திருவார் நடம்கண்டு
சொக்கிச் சிந்தை களிப்புற்றோம்
திருவார் மறைகள் தெளிவுற்றோம்
துக்கம் துயரம் இனியற்றோம்
சுகமே ருங்கள் துணைபெற்றோம்
திகழும் மெய்யார் வழிச்சாலை
தெய்வ மணியே! சரணார்ந்தோம்
திக்கற்றோம் மெய்த் திசையானீர்!
திருவார் புக்கில் அருள்வீரே!
தெய்வ மணியே! தென்னரங்கா!
திருவார் புக்கில் அருள்வீரே!
(86)

பேரில் வீடு பேறென்று
புகல்வார் சாவின் பின்னென்று
மாறில் பேரின் பத்தில்லம்
வாணா ளுளபோ தருள்வள்ளால்!
சீரா ரில்லக் குடியேற்றம்
சிந்தை கனியச் செய்தந்தாய்!
தெய்வத் தாயாய் சற்குருவாய்
திருவாய் வருவாய் அருள்வாயே!
பாரில் விண்ணில் புகழோங்கும்
பண்ணா ரிசையே! பரமேசா!
பதுமப் பொற்றாள் நடங்கண்டு
பணிந்தோம் பிறவிப் பிணியற்றோம்
தீராப் பவத்தின் தேவாதி
திருவார் புக்கில் அருள்வீரே!
தருமச் சாலை வளர்மேரே!
திருவார் புக்கில் அருள்வீரே!
(87)

அருளார் மணியே! அனந்தர்குலத்
தலைவா! ஞான நடத்தரசே!
அகிலத் தண்டத் தனைவோர்க்கும்
அயர்வில் வரந்தந் தாள்தேவே!
திருவார் மணிப்பொற் றாள்தன்னைச்
சிறியேம் முத்த மிடவேண்டித்
தெண்டன் செய்து விழைகின்றேம்
தயவாய் இணங்கித் தந்தருள்வீர்!
குருவாய் வந்தெம் குலமுய்யக்
கோடி செல்வம் தந்தாயெண்
குணத்தோய் அமரர்க் குயர்பதியே!
குறைதீர்த் தாளும் தவநிதியே!
திருவே! சாலை ஆண்டவரே!
திருவார் புக்கில் அருள்வீரே!
தென்பொன் னரங்கத் தவமேரே
திருவார் புக்கில் அருள்வீரே!
(88)

தெய்வக் கனியே! தென்பாண்டித்
திருநாட் டரசே! திருவோங்கத்
திகழும் ஞானத் தேன்மலரே!
தெளிவார் மதியின் முழுவடிவே!
அன்பாண் டுள்ளம் கனிதேனே!
அமுதே! அழகின் பெட்டகமே!
அறிவின் உருவே! எங்கட்கு
அனைத்தும் ஆன ஆண்டவரே!
இன்பம் பொங்கும் இணைதாளில்
எளியேம் தஞ்சம் அடைந்தேமால்
இணையில் வரங்கள் அருள்சாமி
எமனை வெல்லும் அருள்நேமி
தென்பும் திடனார் ஆசானே!
திருவார் தயவு மிக்கோங்கு
திங்கள் வதனத் தேனாறே!
திருவார் புக்கில் அருள்வீரே!
(89)

9. திருமுரசு பருவம்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சீராரும் முழுமுதல் தெய்வமே! இப்பெருஞ்
செகமுய்ய வேண்டி யினிதே
திருவாரும் மெய்வழிச் சாலைஆண்டவரெனும்
திருநாம மேற்றிங் ஙணே
பேராரும் புண்ணிய மாதரசி பெரியதாய்
பொன் வயிற் றில்பிறந்து
புவிவந்து வளர்வுற்றுப் பேர்தனிகை வள்ளலார்
பொற்கரத் துற்று ஞானத்
தேராரும் செங்கோலை இனிதோச்சும் திருச்செய்தி
செகத்தீர்கள் கேண்மின் களே
திருவதன தரிசனைகொள் மனுவுடல ரெவரெனினும்
ஜென்மசா பல்ய முறுவர்
நேராரும் இல்லாத மாட்சிமையர் குருகொண்டல்
நித்தியா னந்தர் வருகை
நிலமிசையு ளோரறிய நற்றவ! மகிழ்ந்தினிது
திருமுரசு இசைத்திடு கவே!
(90)

திருமா மணிதங்கள் தனிக்கருணைத் திருவுளம்
சற்றிரங்கி எண்ணிடில்
சகலவுயிர் தித்திக்கும் யோகத்திலாழ்த்திடும்
சற்சனர்கள் வம்மின்களே!
பெரும்வா னவர்திருப் பொற்கரங் கள்தனில்
பெற்றசன் னதமாண்பு கேண்ம்
பேருடுக் கைசங்கு சக்கரம் சூலம்வேல்
பட்டயம்பா ராங்கு சம்வில்
திருமிகு கங்கணம் தண்டாயுதம் மெலாம்
சீரோங்கப் பெற்றுளார்அத்
தெய்வப் பதாம்புயம் சார்ந்தபேர் வெற்றியும்
திருஞான சம்பந்த மும்
தருமமிகும் மெய்வழிச் சாலை யாண்டவர்தயவு
தருகுமது பெறவம்மி னே
சகத்தீர்களே! என்று சாற்றுமின் தீரமாய்த்
திருமுர(சு) இசைந்திடுகவே!
(91)

அகிலமிசை வந்தமெய் ஆண்டவர்கள் சர்வபூ
தங்களின் அந்தர்யாமி
அருள்பெருகு வாரிதி அந்தக னெனும்ஏமன்
அவஸ்தைகெட வரமருளு வார்
சகலஞா னவித்து சற்சனர்கள் அண்ணலைத்
தாம்தொடர்ந் தென்றும் வருவர்
சாலையுத் யோவனம் சார்ந்தபேர்க் கென்றுமே
சித்திக்கும் முத்தி தானே
புகழ்பெருகு கருணையர் பொற்பதி இதுவென்று
பூதலத் தோர்க ளறிமின்!
பொன்னரங் கையர்பதம் என்று(ம்)மற வாமலே
போற்றி செய்துய்ம் மினய்ய!
திகழுமனு பிரணவப் பட்சியா சனமேறத்
திருவருள் புரியு மிறைகாண்
தேஜோம யானந்த தெய்வகுரு கொண்டலே!
திருமுர(சு) இசைத் தருள்கவே!
(92)

அல்பகலு மோயாது ஆதிமூ லந்தனை
அனந்தர்கள் போற்றி செய்யும்
ஐயரரு ளமுதருள அதுபருகு மமரர்கள்
ஆனந்த மிக்குறு வர்காண்
எல்லைதிசை யற்றகரு ணாமூர்த்தி ஆண்டவர்கள்
இனியதரி சனைபெற் றதால்
எழில்மயில்கள் நடனமிடும் எம்முயிர்கள் களிபெருகும்
இன்பவா ரிக்கு ளாழும்
இல்லையெம படரச்சம் முத்தாபம் எங்களுக்
கென்றனந் தாதி தேவர்
இனிமைகனி பண்பாடி கர்த்தாதி கர்த்தரை
ஏற்றி போற்றித்து திக்கும்
தில்லையமு தந்தந்து ஜீவரட்சிப் பருளும்
தெய்வமே சாலையரசே!
திருவருள்செய் தருமதுரை தெய்வமணி யே!இன்பத்
திருமுர(சு) இசைத் தருள்கவே!
(93)

தருமநெறி குறைகாலம் சகமிதனில் வருகைதரு
சற்குணா நிதியர் தெய்வம்
தகையுடையர் வாழ்வுறவும் தகுதியலர் தாழ்வுறவும்
தருகுவரம் காண்மின் களே!
அருமைமிகு மெய்வழியில் அகலாது நின்றவர்க்
கருளுமுத் திநித் தியம்
அருண்மெய்நிதி பெறுமினிய அமரர்மறு படிவருகு
அனந்தர்வாழ் சாலையிது காண்
பெருமைமிகு பூலோக கயிலாய மெய்குண்டம்
பொன்னரங் கம்தில்லை காண்
பதிக்கெலாம் பெரும்பதிமெய்ப் பரபோக நிதியீயும்
பரமர்மும் மூர்த்தி கரமே!
திருமறைகள் தெளிவுபெற அருள்தருகு கருணையீர்!
திருமுர(சு)இசைத் திடுகவே!
திமிரமத இருளகல வருபரிதி கரமினிது
திருமுர(சு) இசைத்தருள்கவே!
(94)

வேறு பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

அருள்வளர் பொழிலில் அறம்வளர் இறைவர்
அமுதர்மெய் யரசோச் சும்
அவரருள் வரமே பெறுகுல அனந்தர்
அழகொளிர் அடிபோற் றும்
பொருள்பெரு நிதியம் பெருகிட இறவாப்
பதமது பெறுகாலம்
புதியவர் தினமும் பழம்பெரு மதியர்
பொற்பதம் பணிந்தேத் தும்
மருள்கெட வினைகள் மறலியின் கொடுமை
விலகிட அருள்வேந்தே!
மதிகதிர் உடுக்கள் வையகம் வானம்
வணங்கிடும் உமைப்போற்றி!
திருவொளிர் மணியே! தவமிகு அணியே!
திருமுர(சு) இசைத்தருள்க!
தென்னகம் வந்த விண்ணக வேந்தே!
திருமுர(சு) இசைத்தருள்க!
(95)

மனுவின மினிதே உயிருய வேண்டி
வருதிரு இறைசூலே!
மகிதல மிதனில் திருவவ தாரம்
மெய்வழி தருசாலை
தனிப்பதி உதயம் தவமுனி யரசு
தனிகையர் சுதனாகி
தரணியில் வருநாள் மரணமும் தவிரத்
தருபெரு வரமாட்சி
இனிக்கதி உயிர்க்கென் றெழுந்தருள் கோவே!
இமையவர் திருநாட!
எமக்கருந் துணையே இலையுமக் கிணையே
எனும் பெருந் தவமேரே!
தனித்தய வருள துந்துமி என்னும்
திருமுர(சு) இசைத்தருள்க!
திருமணி தனிகை தருபெரு பரிசே!
திருமுர(சு) இசைத்தருள்க!
(96)

மறைமலை பிளந்து மெய்ப்பொருள் தெளிய
மணிமொழி அருள்நாவர்
மந்திர மனைத்தின் செந்திரு வடிவர்
மதிநிறை பெருந்தேவர்
நிறைதவ வேந்தர் நிலமிசைப் போந்த
நிர்மலர் குலதெய்வம்
நினதிரு பதமே கதியெனப் பணிவோர்
நல்லுயி ரினிதுய்வர்
குறைதவிர்த் தாளும் குருமணி யுமது
குணமிளிர் பதம் போற்றும்
கொழுமுனை கதிரில் நடமிடு மரசே!
கனிதய வருளோங்க
சிறைவிடுத் தெமக்கே சுதந்திர மளித்தீர்
திருமுர(சு) இசைத்தருள்க
திருமணி தனிகை தருபெரு பரிசே!
திருமுர(சு) இசைத்தருள்க!
(97)

கலைபல துறைபோ கியரெனு மவரும்
கருதிட அரிதென்னும்
கலைகளின் தலைவர் நிலைபெறும் வாழ்வு
கனிந்தருள் தவமேரு
மலைநிகர் திண்மை மலர்நிகர் மென்மை
மதிமிகு குருதேவர்
வளர்திருப் புகழ்சேய் மனுவின முயவே
மகிதலத் தவதாரம்
துலையெனும் அறங்கூர் திருமதி யரசர்
துயர்கெட வரமீயும்
துதிபெறு மருண்மெய் கரமுடை ஒற்றைத்
திருக்கோ டுடைபெம்மான்
தலைவர் களரசே! தவமுயர்ந் தோங்க
திருமுர(சு) இசைத்தருள்க!
தனிப்பெருநிதியே! தமர்க்குயர் கதியே!
திருமுர(சு) இசைத்தருள்க!
(98)

வணக்கம திரவும் பகலன வரதம்
மகிழ்வொடு நிகழ்சோலை
மாதவர் செல்வர் மதிமணி அனந்தர்
மறைபல உவந்தோதும்
இணக்கமிக் குடையோர் இதமதிக் கூர்மை
எழில்பெற அருள்கோனே!
எமதருட் சாலை மெய்வழி தெய்வம்
எனும் பெருந் தவமேரே!
கணக்கினி லடங்காக் காட்சிக ளருள்செய்
கலையர சருளாளா!
கமழ்நறு மணமார் செண்பக மேனி
குருமணி அருள்நாதர்
கணக்கமின் றெமையாள் திருப்பதம் போற்றி
திருமுர(சு) இசைத்த ருள்க!
துரியமும் கடந்த சோதிவிண் ணரசே!
திருமுர(சு) இசைத் தருள்க!
(99)

அருண்மணி ஒளிரும் ஆண்டவர் தங்கள்
அம்புயத் தாளேஎம்
ஆருயிர் படிந்து உய்கதி கொள்ளும்
அழகிய துறைகாணே!
இருண்மத பேதம் இலையென வாக
இகமதி லவதாரம்
எங்களு யிர்க்கென பொங்கும ருட்குல
செங்கந திக்கரையின்
கரும்பென இனிக்கும் கருணையின் உருவே!
கற்பகப் பொற்பூவே!
கசடறு ஞானம் கனிந்தருள் மோனம்
கலைநிறை மதித்தானம்
திருப்பெருந் துறையே தெய்வநன் மறையே!
திருமுர(சு) இசைத்தருள்க!
துரியமும் கடந்த சோதிவிண் ணரசே!
திருமுர(சு) இசைந்தருள்க!
(100)

10. அருட்தேர்ப் பருவம்

பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

பாரெங்கும் பவமிகுந் தழிகலிக் கொடுமையால்
பண்பாளர் வாட்ட முறுகால்
பரமனே அவதாரம் புரிகுவேன் என்றன்று
பகர்வாக்யம் நிறைவே றவே
சீர்பொங்கு தீர்க்கமார் தரிசியர் விழைவண்ணம்
திருமிகும் மார்க்க நகரில்
திருஜமால் பெரியதாய்த் தம்பதிய ருக்கெழிற்
செல்வமாய் வந்து தித்தீர்
நேர்மைக் கிலக்கணம் பண்பிற் கிலக்கியம்
நற்றவர் தனிகை வள்ளல்
நற்கரத் துற்றுமெய்ஞ் ஞானமார் செங்கோல்செய்
நல்லரசு தவமா மணி
ஆர்கலி ஞாலத்தின் அறவாழி இங்ஙணே
அருட்தேர் நடத்தி யருளே
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தி யருளே!
(101)

தெய்வப்பி ரான்தாங்க ளேயென்று மாய்கையான்
தெரியாமல் தாம்தம்மையே
தேடி மிகவாடியே சிந்தைமிக நொந்தது
செப்பத் தகுந்த தரமோ
உய்வைப் பெறும்வழி என்றெவ ருரைக்கினும்
ஓடியன் னோருரை வழி
ஓய்வற்றுக் கானல் நீர்க் கோடுமான் போலவே
உயிர்களைத் திட்ட தந்தோ
மெய்வைத்த சிந்தையர் பாட்டையர் தங்களை
மிக்கெடுத் தேயணைத் து
வல்லிருளில் மாழ்கிடும் மதலைக்குத் தாயென
வாடுபயி ருக்கு மழைபோன்ம்
ஐய!நீ ரமுதுதந் தெங்களுயி ருய்ந்ததே
அருட்தேர் நடத்தியருள்வீர்!
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தி யருளே!
(102)

இணையில்மெய்ப் பரிசென்று எங்களுக் குங்களை
ஈந்தமெய்ஞ் ஞான வள்ளல்
இனியர்திருப் பாட்டையர் தனிகைமணி ஐயனார்
ஏன்றுமைக் கொண்ட அன்றே
பிணைபற்று விட்டவர்தம் பின்தொடர்ந் தேகியே
பெற்ற பெருநிதியம் கோடி
பெரியரொடு துறவுகொடு செலுவழியில் எந்தையே
பட்டசள மதுவும் கோடி
துணையெங்க ளாருயிர்க் கென்றுவரு நாள்முனர்
செய்தவம் கோடி கோடி
திருத்தவம் பலன்பெறும் மாணாக்கர் தேடுகால்
செறிதுன்ப மதுவும் கோடி
அணையுடை வெள்ளமாய் அருள்பெருகு மையனே
அருட்தேர் நடத்தியருளே!
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தியருளே!
(103)

அகிலவலம் புரிகாலை ஐயரும் தாங்களும்
அயர்வலுப் பெண்ணாமலே
அம்புயத் தாள்மலர்க ளம்புவி மிசைநடந்
தடைந்திட்ட துயர் கொஞ்சமோ
பகலிலும் இரவிலும் படுகர்வே டுவரிடையும்
பல்விலங் குறை கானினும்
பனி,மழை, குளிர், வெயில் பசிபெருங் காற்றிடைப்
படுதுயர்க் களவில்லை காண்
சகலமெய் வரங்களும் சாயுச்ய பதவியும்
சற்சனர்க் கென்று சேர்க்க
தவம்புரிந் தேசர்வ சன்னதம் பெறுபாடு
சாமிதிரு வுளமறியுமே!
அகலாது றைந்துசெவி யுணவால்வ ளர்ந்திடவே
அருட்தேர் நடத்தியருளே
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தியரு ளே!
(104)

ஆவாஇவ் வகிலவர்கள் அழிதுயர் தவிர்த்திடவே
அரனேஇ ரங்கி யருளி
அவதாரம் செய்துவெம் பவமாறவே நிகரில்
அருள்மேரு தயை பெருகியே
சாவா வரந்தருகு தருமதுரையே! மகாச்
சக்ரவர்த் தீவான் கொடைச்
செல்வக் குபேரரே! தலைமைப் பெரும்பதி
சாலைத் தமிழ் அன்னையே!
ஓவாது பேரின்ப அமுதமழை பொழிகொண்டல்
உயர்வுமிகு தனிகை மகவே!
உயிர்ச்சுக முணர்ந் தினிது ஓங்கிவள ரனந்தர்தம்
ஒருதனிமெய்த் தயையி னுருவே!
ஆவிநின் றொளிர் ஈசர் அன்பருக் குயிர்நேசர்
அருட்தேர் நடத்தி யருளே!
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தியருளே!
(105)

வெட்டாத சக்கரத் தேரிலே வாசியாம்
வேகமிகு பரிபூட் டிய
வேகாத காலினர் சாகாத தலையினர்
வேறெவர்க் கும்என் றுமே
எட்டாத புஷ்பமார் எழிலோங்கு மாலையை
இனிதணிந் திட்ட பெருமான்
இறையாத தீர்த்தத்துள் நீராடி எவருமே
ஏகாத பெருவெளியில் கை
முட்டாத பூசைகொள் மெய்வழி தெய்வமே!
மாதவா! தவவான் மணி
மூமூச்சு மார்போற்றும் மோகனா! வேதவா!
மூதுரைமெய் நாதமுனியே!
அட்டதிக் கும்செங்கோ லோச்சிடும் அறவாழி
அருட்தேர் நடத்தி யருள்க!
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல்லமுதுதர
அருட்தேர் நடத்தியருளே!
(106)

பாராதி யண்டம் அகண்டம் படைத்தனிர்!
பார்மிசைப் போந்து இந்தப்
பாரோர்கள் உயிருய்யச் சீரோங்கு மெய்வழி
பண்போங்க உற்பவித் தீர்!
சீராவணிந்த மெய்ச் சென்மசா பல்யர்கள்
திருவேதம் ஓத னந்தர்
செந்தாமரைக் காடு பூத்தனைய பேரெழில்
சீர்பொன் னரங்க முன்றில்
பேரோங்க மெய்வணக் கம்செய்தி ராவிலே
பெரியபா ராவணக் கம்
புரியஉம தருள்தயவும் திருவரமும் பெருகிவரும்
பெற்றபேர் சாயுச்யர் காண்
ஆராமெய் அமுதரே! அனந்தர்குல தெய்வமே!
அருட்தேர் நடத்தியரு ளே!
அறிவறி மெய்ப் பரிசுபர சுகமருள் நல்லமுதுதர
அருட்தேர் நடத்தியரு ளே!
(107)

எங்களின் உயிரெலாம் இணைந்ததோர் திருவுருவர்
எழில்மூல மந்தி ரங்கள்
இனியவே தங்களும் ஆகமங் கள்எலாம்
இயன்ற பேரழகின் வடிவர்
தங்கமக மேருநீர்! சிந்தைவிழை மெய்வரம்
தருகற்ப கத்தருவு நீர்!
தரணியில்மெய்ப் பாலமுதந் தருகாம தேனுநீர்!
சாயுச்ய பதவி நீரே!
பொங்கிவரு மாகாய கங்கையும் சரவணப்
பொய்கையும் பாரி ஜாதப்
புஷ்பமும் ஜீவசி ரோரத்ன மணிகள்நீர்
பொன்னரங் கத்தரச ரே!
அங்கமதில் எமையேற்ற அறவாழி அருள்மாரி
அருட்தேர் நடத்தி யருள்வீர்
அறிவறிமேய் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தி யருள்வீர்!
(108)

அன்றுபார்த்தீபருக் கருட்தேர் நடத்தியே
அருளு காண்டீபர் கீதை
அரக்கர்பண் பதுமாறி அமரர்கள் எனவாக
ஆண்டருள் உபதேச மே
நன்றாறு முகம்கொண்டு நரகன்சூ ரர்பதுமன்
நன்குதிரு வடிகொண் டுய
நற்றலை நல்கிய நாதநா தாந்தரே
நன்மார்க்க ராஜரிஷியே!
பொன்றாத வாழ்வருள் பொன்னரங் கத்துவளர்
போதமார் மாதவ முனி
பொங்கிவரு மாகாய கங்கைபொழி யமுதமே
போற்றிநின் பொன் மலர்த்தாள்
அன்றாதி மனுமகன் அவதாரமே தங்கள்
அம்புயத் தாள்கள் தஞ்சம்
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தி யருளே!
(109)

சரணார விந்தமே கதியன்றி வேறிலை
சாலையர சே!எமக் கு
சாகாத கல்விதந் தாண்டசா யுச்யரே!
தனிப் பெருங்கருணை யமுதே!
மரணாவஸ் தைதனில் மங்காமல் முத்தாப
மின்றிவர மருள்செய் தயவே!
மணியே! உயிர்க்கினிய அணியே! அணிக்கழகு
மாற்றுரையி லாத பொன்னே!
தரணியில் லாததனிப் பெருஞ்செயற் பதியில்
தனியரசு புரியு மன்னே!
தன்னேரி லாப்பெரும் தருமநாயகர் தம்மைத்
தந்தெம்மைக் கொண்ட வள்ளால்
அரனே!ஓ ருருவான ஐயனே! மெய்யனே!
அருட்தேர் நடத்தி யருள் வீர்!
அறிவறிமெய்ப் பரிசுபர சுகமருள்நல் லமுதுதர
அருட்தேர் நடத்தியருள்வீர்!
(110)

வாழிநின் பொற்பதம் வாழிநின்னார் புகழ்
வாழி செங்கோல் மெய்மாட்சி
வாழிநின் மணிவயிறு ஈன்றமெய் யனந்தர்கள்
வாழிநின் கொடை வான்கரம்
வாழிநின் பூரண வேதாந்தம் ஆதியார்
மான்மியம் திருவாக் கியம்
வாழியிவை ஓதினோர் கேட்டபேர் வாழ்த்தினோர்
மரணமில் வாழ்வில் வாழி!
வாழிநின் புகழ்பேசு மாந்தர்கள் திசைநோக்கி
வணங்கிய பேர்கள் வாழி!
வாழிநின் திருநாமம் வாழ்த்திய துரைத்தபேர்
வழிவழி யோங்கவாழி!
வாழியென் னுயிர்க்குயி ரானமெய்த் தெய்வமே!
வானோர்கள் போற்ற வாழி!
வாழிவை யம்எங்கும் மெய்வழியென் றென்றுமே
பல்லூழி வாழி வாழி!
(111)

அருள்ஞானப் பிள்ளைத் தமிழ் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!