திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/114.நாணுத்துறவுரைத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 114.நாணுத் துறவு உரைத்தல்

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும், அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம். இது, காதன் மிக்குழி நிகழ்வதாகலின், காதற்சிறப்புரைத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1131 (காமமுழந் )

தொகு
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.)

காம முழந்து வருந்தினார்க் கேம ( ) காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம

மடலல்ல தில்லை வலி. (01) மடல் அல்லது இல்லை வலி.

தொடரமைப்பு:
காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது வலி இல்லை.

இதன்பொருள்
காமம் உழந்து வருந்தினார்க்கு= அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அதுபெறாது துன்புற்ற ஆடவர்க்கு;
ஏம மடல் அல்லது வலி இல்லை = பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது இனி எனக்கு வலியாவது இல்லை.
உரைவிளக்கம்
ஏமமாதல்- அத்துன்பம் நீங்கும்வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். 'வலி' ஆகுபெயர். பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்தி வருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணையென்று கருதிக் கொன்னே முயன்ற யான், இதுபொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான் இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல் என்பது கருத்து.

குறள் 1132 (நோனாவுடம் )

தொகு
நாணுடைய நுமக்கு அது முடியாது என மடல் விலக்கலுற்றாட்குச் சொல்லியது.

நோனா வுடம்பு முயிரு மடலேறு ( ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து. (02) நாணினை நீக்கி நிறுத்து.

தொடரமைப்பு:
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும், நாணினை நீக்கி நிறுத்து.

இதன்பொருள்
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்= அவ்வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடன்மாவினை ஊரக் கருதாநின்றன;
நாணினை நீக்கி நிறுத்து= அதனை விலக்குவதாய நாணினை அகற்றி.
உரை விளக்கம்
வருந்தினார்க்கு என மேல்வந்தமையிற் செயப்படுபொருள் ஈண்டுக் கூறாராயினார். 'மடல்' ஆகுபெயர். 'நீக்கிநிறு்த்து' என்பது ஒருசொன்னீர்மைத்து. அறிவு, நிறை, ஓர்ப்புக் கடைப்பிடி முதலிய முன்னே நீங்கவும் நாண் நீங்காது நின்றது, அதுவும் இதுபொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான். அவைதாம் தம்முள் நீங்காமற் பொருட்டு 'மடல் ஏறும்' என்றது, அவள் தன் ஆ்ற்றைமை அறிந்து கடிதின் குறைநேர்தல் நோக்கி.

குறள் 1133 (நாணொடு )

தொகு
நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது என்றாட்குச் சொல்லியது.

நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் ( ) நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்

காமுற்றா ரேறு மடல். (03) காமுற்றார் ஏறும் மடல்.

தொடரமைப்பு:
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன், காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்.

இதன்பொருள்
நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன்= நாணும் மிக்க ஆண்தகைமையும் யான் பண்டு உடையேன்;
காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்= அவை காமத்தான் நீங்குதலான், அக்காமம் மிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.
உரை விளக்கம்
'நாண்'- இழிவாவன செய்தற்கண் விலக்குவது. 'ஆண்மை', ஒன்றற்கும் தளராது நிற்றல். அவை பண்டுள்ளன, இன்றுளது இதுவேயாகலின் கடிதின்முடியும் என்பதாம்.

குறள் 1134 (காமக்கடும் )

தொகு
நாணு நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகலின் அதனால் அவை நீங்குவனவல்ல என்றாட்குச் சொல்லியது.

காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு ( ) காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை யென்னும் புணை. (04) நல் ஆண்மை என்னும் புணை.

தொடரமைப்பு:
நாணொடு நல்லாண்மை என்னும் புணை, காமக் கடும் புனல் உய்க்குமே.

இதன்பொருள்
நாணொடு நல்லாண்மை என்னும் புணை= யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை;
காமக் கடும்புனல் உய்க்குமே= என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகாநின்றது.
உரை விளக்கம்
அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்குக் 'கடும்புனல்' என்றான். இப்புனற்கு அவை புணையாகா, அதனான் அவை நீங்கும் என்பதாம்.

குறள் 1135 (தொடலைக் )

தொகு
இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன என்றாட்குச் சொல்லியது.

தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு () தொடலைக் குறும் தொடி தந்தாள் மடலொடு

மாலை யுழக்குந் துயர். (05) மாலை உழக்கும் துயர்.

தொடரமைப்பு:
மாலை உழக்கும் துயர் மடலொடு, தொடலைக் குறும் தொடி தந்தாள்.

இதன்பொருள்
மாலை உழக்கும் துயர் மடலொடு= மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும் முன்னறியேன்;
தொடலைக் குறுந்தொடி தந்தாள்= இதுபொழுது, எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்.
உரை விளக்கம்
காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின் அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளைமையள் என்பது தோன்றத் 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. இவை அவள் தந்தனவாகலின் நின்னான் நீங்கும் என்பது கருத்து.

குறள் 1136 (மடலூர்தல் )

தொகு
மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது, என்றாட்குச் சொல்லியது.

மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற ( ) மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண். (06) படல் ஒல்லா பேதைக்கு என் கண்.

தொடரமைப்பு:
பேதைக்கு என் கண் படல் ஒவ்வா, யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உள்ளுவேன்.

இதன்பொருள்
பேதைக்கு என் கண் படல் ஒல்லா= நின்பேதை காரணமாக என்கண்கள் ஒருகாலும் துயிறலைப் பொருந்தா;
யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உ்ளளுவேன்= அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பன்.
உரை விளக்கம்
'பேதை' என்பது பருவம் பற்றியன்று, மடமை பற்றி. இனிக் குறைமுடிப்பது, நாளையெனவேண்டா என்பதாம்.

குறள் 1137 (கடலன்ன )

தொகு
(பேதைக்கு என்கண் படல் ஒல்லா என்பது பற்றி அறிவிலராய மகளிரினும், அஃதுடையராய ஆடவர் அன்றே ஆற்றற்பாலர் என்றாட்குச் சொல்லியது.)

கடலன்ன காம முழந்து மடலேறாப் ( ) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில். (07) பெண்ணின் பெருந்தக்கது இல்.

தொடரமைப்பு:
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின், பெருந் தக்கது இல்.

இதன்பொருள்
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின்= கடல்போலக் கரையற்ற காமநோயினை அனுபவித்தும், மடல் ஊர்தலை்ச்செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புபோல;
பெருந்தக்கது இல்= மிக்க தகுதியினை உடைய பிறப்பு உலகத்தில் இல்லை.
உரை விளக்கம்
பிறப்பு விசேடத்தால் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகிலை என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.

குறள் 1138 (நிறையரி )

தொகு
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.)

நிறையரியர் மன்னளிய ரென்னாது காம ( ) நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும். (08) மறை இறந்து மன்று படும்.

தொடரமைப்பு:
நிறை அரியர், மன் அளியர் என்னாது, காமம் மறை இறந்து மன்று படும்.

இதன்பொருள்
நிறை அரியர் (என்னாது)= இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது;
மன் அளியர் என்னாது= மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது;
காமம் மறை இறந்து மன்றுபடும்= மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின்கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.
உரை விளக்கம்
'என்னாது' என்பது, முன்னும் கூட்டி, மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. 'மன்று' என்பது, தந்தை தன்ஐயரை நோக்கி. உலகத்துப் பெண்பாலார் காமத்து இயல்பு கூறுவாள்போன்று, தன்காமம் பெருகியவாறும், இனி அறத்தொடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பாற் கூறியவாறாயிற்று.

குறள் 1139 (அறிகிலா )

தொகு
(இதுவுமது)

அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம ( ) அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்

மறுகின் மறுகு மருண்டு. (09) மறுகின் மறுகு மருண்டு.

தொடரமைப்பு:
எல்லாரும் அறிகிலார் என்று, என் காமம் மறுகில் மருண்டு மறுகும்.

இதன்பொருள்
எல்லாரும் அறிகிலார் என்று= யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளி்ப்பட அறிவிப்பல் என்று கருதி;
என் காமம் மறுகில் மருண்டு மறுகும்= என்காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
உரை விளக்கம்
மயங்குதல்- அம்பலாதல். மறுகுதல்-அலராதல். அம்பலும் அலரும் ஆயிற்று. இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பதாம். அறிவிலார் என்பதூஉம் பாடம்.

குறள் 1140 (யாங்கண்ணிற் )

தொகு
(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து, யான் நிற்குமாறு என்னையென்று நகையாடிய தோழியொடு புலந்து தன்னுள்ளே சொல்லியது.)

யாம் கண்ணிற் காண அறிவில்லார் நகுப () யாம் கண்ணின் காண அறிவு இல்லார் நகுப

யாம்பட்ட தாம்படா வாறு. (10) யாம் பட்ட தாம் படாவாறு.

தொடரமைப்பு:
யாம் கண்ணின் காண அறிவில்லார் நகுப, யாம் பட்ட தாம் படாவாறு.

இதன்பொருள்
யாம் கண்ணிற்காண அறிவில்லார் நகுப= யாம் கேட்குமாறும் அன்றிக் கண்ணாற்காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; :யாம்பட்ட தாம் படாவாறு= அவர் அங்ஙனம் செய்கின்றது யாம் உற்றநோய்கள் தாம் உறாமையான்.
உரை விளக்கம்
'கண்ணின்' என்றது, முன்கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமையறியாது, வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாள் ஆக்கிக் கூறினாள்.