திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/75.அரண்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
75. அரண்
தொகுதிருக்குறள் பொருட்பால்- அங்கவியல்
தொகுபரிமேலழகர் உரை
தொகுஅதிகாரம் 75.அரண்
தொகு- அதிகார முன்னுரை
- இனி, அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும் பகைவரால் தொலைவு வந்துழி அதுதனக்கும், அரசன் தனக்கும் ஏமம் ஆதல் சிறப்புப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தான் கூறுகின்றார்.
குறள் 741 (ஆற்றுபவர்க்கும் )
தொகுஆற்றுபவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் () ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சித் தன்
போற்று பவர்க்கும் பொருள். (03) போற்றுபவர்க்கும் பொருள்.
- இதன்பொருள்
- ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்= மூவகை ஆற்றலும் உடையராய்ப் பிறர்மேல் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித் தற் போற்றுபவர்க்கும் (அரண்) பொருள்= அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
- உரைவிளக்கம்
- பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறன் ஒருவன் வௌவாமல் வைத்துச் செல்லவேண்டும் ஆகலானும், அப்பெருமை தொலைந்து இறுதிவந்துழிக் கடன் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமம் காணாது இறுவர் ஆகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருள் ஆயிற்று. ஆற்றலுடையராயினும், அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார்.
- இதனால் அரணினது சிறப்புக் கூறப்பட்டது.
குறள் 742 (மணிநீரும் )
தொகுமணிநீருமண்ணு மலையு மணிநிழற் () மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடு முடைய தரண். (03) காடும் உடையது அரண்.
- இதன்பொருள்
- பணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்= மணிபோலும் நிறத்தினை உடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது.
- உரைவிளக்கம்
- எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார், 'மணிநீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார், 'மண்' என்றும், செறிந்த காடு என்பார், 'அணிநிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம், பகைவர் அரண் பற்றாமைப்பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையும் ஆய இந்நான்கு அரணும் சூழப்படுவது 'அரண்' என்பதாம்.
குறள் 743 (உயர்வகலந் )
தொகுஉயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி () உயர்வு அகலம் திண்மை அருமை இந் நான்கின்
னமைவர ணென்றுரைக்கு நூல். (03) அமைவு அரண் என்று உரைக்கும் நூல்.
- இதன்பொருள்
- உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவு= உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியை உடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல்= அரண் என்று சொல்லுவர் நூலோர்.
- உரைவிளக்கம்
- அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு ஏணி எய்தாதது. அகலம் புறத்தோர்க்கு அகழலாகா அடி அகலமும், அகத்தோர்க்கு நின்று வினைசெய்யலாம் தலைஅகலமும். திண்மை நல் இட்டிகைகளான் செய்தலின் குத்தப்படாமை. அருமை, பொறிகளான் அணுகற்கு அருமை. பொறிகளாவன: "வளைவிற் பொறியும் அயிற்செறி நிலையும், கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்/ பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்/ காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்/ தூண்டிலும் துடக்கும் ஆண்டலை அடுப்பும்/ கவையும் கழுவும் புதையும் புழையும்/ ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்/ சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்/ எழுவும் சீப்பும் முழுவிரற் கணையமும்/ கோலும் குந்தமும் வேலும் சூலமும்"‡ என்று இவை முதலாயின.
‡. சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை: வரிகள்- 207-216.
குறள் 744 (சிறுகாப்பிற் )
தொகுசிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை () சிறுகாப்பில் பேர் இடத்தது ஆகி உறு பகை
யூக்க மழிப்ப தரண். (04) ஊக்கம் அழிப்பது அரண்.
- இதன்பொருள்
- சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி= காக்கவேண்டும் இடம் சிறிதாய், அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண்= தன்னை வந்து முற்றிய பகைவரது மனஎழுச்சியைக் கெடுப்பதே அரணாவது.
- உரைவிளக்கம்
- வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்று இவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றிப் 'பேரிடத்ததாகி' என்றும், தம் வலி நோக்கி இது பொழுதே அழித்தும் என்று வரும் பகைவர், வந்து கண்டால் அவ் ஊக்கம் ஒழிதல் பற்றி 'ஊக்கம் அழிபபது' என்றும் கூறினார்.
குறள் 745 (கொளற்கரி )
தொகுகொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் () கொளற்கு அரிதாய்க் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண். (05) நிலைக்கு எளிதாம் நீரது அரண்.
- இதன்பொருள்
- கொளற்கு அரிதாய்= புறத்தாரான் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி= உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண்= அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையை உடையதே அரணாவது.
- உரைவிளக்கம்
- கோடற்கருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும், இடங்கொள்ளுவதற்கு அருமை. உணவு நிலைமை பற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. 'நிலைக்கு எளிதாம் நீர்மை'யாவது, அகத்தார் விட்ட ஆயுத்ம முதலிய புறத்தார்மேல் எளிதின் சேறலும், அவர்விட்டன அகத்தார் மேல் செல்லாமையும், பதணப் பரப்பும் முதலாயின.
குறள் 746(எல்லாப்பொரு )
தொகுஎல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு () எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல்லா ளுடைய தரண். (06) நல் ஆள் உடையது அரண்.
- இதன்பொருள்
- எல்லாப் பொருளும் உடைத்தாய்= அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண்= புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண், அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.
- உரைவிளக்கம்
- அரசன் மாட்டு அன்பும், மானமும், மறமும், சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமைபற்றி 'நல்லாள்' என்றார்.
குறள் 747 (முற்றியு )
தொகுமுற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் () முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப் படுத்தும்
பற்றற் கரிய தரண். (07) பற்றற்கு அரியது அரண்.
- இதன்பொருள்
- முற்றியும்= புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும்= அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும்= அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண்= புறத்தோரான் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
- உரைவிளக்கம்
- இம்மூன்று உபாயத்துள்ளும், முதலாவது 'எல்லாப்பொருளும் உடைமை'யானும், ஏனைய 'நல்லாள் உடைமை'யானும் வாயாவாயின.
குறள் 748 (முற்றாற்றி )
தொகுமுற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் () முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றிப்
பற்றியார் வெல்வ தரண். (08) பற்றியார் வெல்வது அரண்.
- இதன்பொருள்
- முற்று ஆற்றி முற்றியவரையும்= தானைப்பெருமையாற் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றியார் பற்று ஆற்றி வெல்வது அரண்= தன்னைப் பற்றிய அகத்தோர், தாம்பற்றிய இடம் விடாதே நின்று, பொருது வெல்வதே அரணாவது.
- உரைவிளக்கம்
- உம்மை சிறப்பும்மை. பற்றின்கண்ணே ஆற்றி என விரியும். 'பற்று' ஆகுபெயர். 'வெல்வது' என உடையார்தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிதுரைப்பாரும் உளர்.
- இவை ஏழுபாட்டானும், அதனது இலக்கணம் கூறப்பட்டது.
குறள் 749(முனைமுகத்து )
தொகுமுனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து () முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறெய்தி மாண்ட தரண். (09) வேறு எய்தி மாண்டது அரண்.
- இதன்பொருள்
- முனை முகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி= போர் தொடங்கின அளவிலே, பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினைவேறுபாடுகளான் வீறுபெற்று; மாண்டது அரண்= மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது.
- உரை விளக்கம்
- தொடக்கத்திற் கெட்டார் பின்னும் கூடிப் பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினைவேறுபாடுகள் ஆவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். மற்றும் வேண்டும் மாட்சி என்றது, புறத்தோர் அறியாமல் புகுதல், போதல் செய்தற்குக் கண்ட சுருங்கைவழி முதலாயின உடைமை.
குறள் 750 (எனைமாட்சித் )
தொகுஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி () எனை மாட்சித்து ஆகியக் கண்ணும் வினை மாட்சி
யில்லார்க ணில்ல தரண். (10) இல்லார் கண் இல்லது அரண்.
- இதன் பொருள்
- அரண்= அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும்= மேற்சொல்லப்பட்ட மாட்சி எல்லாம் உடைத்தாய இடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது= வினைசெய்தற்கண் மாட்சி இல்லாதார்மாட்டு அவை இலதாம்.
- உரை விளக்கம்
- வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க 'வினைமாட்சி இல்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம் மாட்சிகளாற் பயனின்றி அழியும் என்பார் அவை உடைத்தன்று என்றும் கூறினார்.
- இவை இரண்டு பாட்டானும் காப்பாரையின்றி அமையாது என்பது கூறப்பட்டது.