திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/84.பேதைமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


84. பேதைமை.

தொகு

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 84. பேதைமை

தொகு
அதிகார முன்னுரை
இனி, அந்நட்பினை எதிர்மறுத்துப் பகைமுகத்தான் கூறியதொடங்கினார், அப்பகைதான் முற்றக்கடியும் குற்றம் அன்மையின் உளவாய வெகுளியானும், காமத்தானும் வருவதாம். அவற்றுள் வெகுளியான் வருவன ஐந்து அதிகாரத்தானும், காமத்தான் வருவன ஐந்து அதிகாரத்தானும் கூறுவார், அதற்கு அடியாய மயக்கத்தை இருவகைப் படுத்து, இரண்டுஅதிகாரத்தான் கூறுவான் தொடங்கி, முதற்கண் பேதைமை கூறுகின்றார். அஃதாவது, யாதும் அறியாமை.


குறள் 831 (பேதைமையென் )

தொகு

பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் () பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு

டூதியம் போக விடல். (01) ஊதியம் போக விடல்.

தொடரமைப்பு: பேதைமை என்பது ஒன்று, யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்.

இதன்பொருள்
பேதைமை என்பது ஒன்று = பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைக் குற்றங்களெல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்= அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடுபயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.
உரைவிளக்கம்
கேடு: வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம்: செல்வம், புகழ், அறங்கள். தானே தன்னிருமையும் கெடுத்துக்கோடல் என்பதாம்.

குறள் 832 (பேதைமையுளெல் )

தொகு

பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை () பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல். (02) கையல்ல தன்கண் செயல்.

தொடரமைப்பு: பேதைமையுள் எல்லாம் பேதைமை கையல்ல தன்கண் காதன்மை செயல்.

இதன்பொருள்
பேதைமையுள் எல்லாம் பேதைமை= ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல்= தனக்கு ஆகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்.
உரைவிளக்கம்
இருமைக்கும் ஆகாவென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.


குறள் 833 (நாணாமை )

தொகு

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் () நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்

பேணாமை பேதை தொழில். (03) பேணாமை பேதை தொழில்.

தொடரமைப்பு: நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் பேணாமை பேதை தொழில்.

இதன்பொருள்
நாணாமை= நாணவேண்டும் அவற்றுக்கு நாணாமையும்; நாடாமை= நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை= யாவர்மாட்டும் முறிந்தசொல், செயல்உடைமையும்; யாதொன்றும் பேணாமை= பேணவேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில்= பேதையது தொழில்.
உரைவிளக்கம்
நாணவேண்டுமவை: பழி, பாவங்கள். நாடவேண்டுமவை: கருமங்களிற் செய்வன, தவிர்வன. முறிதல்:கண்ணறுதல். பேணவேண்டுமவை= குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.

குறள் 834 (ஒதியுணர்ந்தும் )

தொகு

ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் () ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்

பேதையிற் பேதையா ரில். (04) பேதையின் பேதையார் இல்.

தொடரமைப்பு: ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையின் பேதையார் இல்.

இதன்பொருள்
ஓதி= மனமொழி மெய்கள் அடங்குவதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும்= அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும்= அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின்= தான் அவையடங்கி ஒழுகாத பேதை போல; பேதையார் இல்= பேதையார் உலகத்தில்லை
உரைவிளக்கம்
உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்தின்மையானும் 'பேதையிற் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனி்ச் சிறப்பு வகையாற் கூறுப.

குறள் 835 (ஒருமைச் )

தொகு

ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் () ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்து மளறு. (05) தான் புக்கு அழுந்தும் அளறு.

தொடரமைப்பு: பேதை எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு, ஒருமைச் செயல் ஆற்றும்.

இதன்பொருள்
பேதை= பேதையாயினான்; எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு= வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும்= இவ்வொரு பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லனாம்.
உரைவிளக்கம்
எல்லாப் பிறப்பு ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்றும்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம்; ஈண்டைப் பிறப்புக்களினும் கொடுவினை வயத்தால் அந்நிரயத் துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான்புக்குஅழுந்தும் அளறு' என்றார்.முடிவில் காலம்எல்லாம் தான் நிரயத்துன்ப முடித்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.

குறள் 836 (பொய்படு )

தொகு

பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப் () பொய்படும் ஒன்றோ புனை பூணு்ம் கை அறியாப்

பேதை வினைமேற் கொளின். (06) பேதை வினை மேற்கொளின்.

தொடரமைப்பு: கை அறியாப் பேதை வினை மேற்கொளின், பொய்படும் ஒன்றோ புனை பூணும்.

இதன்பொருள்
கையறியாப் பேதை வினைமேற்கொளின்= செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வனாயின்; பொய்படும் ஒன்றோ புனை பூணும்= அதுவும் புரைபடும், தானும் தளை பூணும்.
உரைவிளக்கம்
புரைபடுதல்: பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.

குறள் 837 (ஏதிலாராரத் )

தொகு

ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை () ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை

பெருஞ்செல்வ முற்றக் கடை. (07) பெரும் செல்வம் உற்றக் கடை.

தொடரமைப்பு: பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை, ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்.

இதன்பொருள்
பேதை பெரும் செல்வம் உற்றக்கடை= பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்தியவழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்= தான்னோடு ஒரியைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர்.
உரைவிளக்கம்
எல்லா நன்மையும் செய்துகோடற் கருவி என்பது தோன்றப் 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.

குறள் 838 (மையலொரு )

தொகு

மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் () மையல் ஒருவன் களித்தற்றால் பேதை தன்

கையொன் றுடைமை பெறின். (08) கை ஒன்று உடைமை பெறின்.

தொடரமைப்பு: பேதை தன் கைஒன்று உடைமை பெறின், மையல் ஒருவன் களித்தற்றால்.

இதன்பொருள்
பேதை தன் கைஒன்று உடைமை பெறின்= பேதையாயினான், தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று= அவன் மயங்குதல், முன்னே பித்தினையுடையான் ஒருவன் அம்மயக்கத்தின் மேலே மதுவுண்டு மயங்கினாற் போலும்.
உரைவிளக்கம்
'பெறின்' எனவே, தெய்வத்தான்அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதையும், செல்வக்களிப்பும் ஒருங்கு உடைமையால், அவன் செய்வன மையலும், மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலைதடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், அவன் செல்வம் எய்தியவழிப் பயன்கொள்ளுமாறு கூறப்பட்டது.

குறள் 839(பெரிதினிது )

தொகு

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் () பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில். (09) பீழை தருவது ஒன்று இல்.

‘’’தொடரமைப்பு:’’’ பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல், பேதையார் கேண்மை பெரிது இனிது.

இதன்பொருள்
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்= பின் பிரிவுவந்துழி, அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பமில்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது = ஆதலாற் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிகவினிது.
உரைவிளக்கம்
நாடோறும் தேய்ந்து வருதலின், துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனால் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.

குறள் 840 (கழாஅக்கால் )

தொகு

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் () கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல். (10) குழாஅத்துப் பேதை புகல்.

‘’’தொடரமைப்பு:’’’ சான்றோர் குழாஅத்துப் பேதை புகல், கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று.

இதன்பொருள்
சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்= சான்றோர் அவையின்கண் பேதையாயினான் புகுதல்; கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று= தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும்.
உரைவிளக்கம்
கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. அதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனால் அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.