திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/120.தனிப்படர்மிகுதி
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்
தொகுபரிமேலழகர் உரை
தொகுஅதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
தொகு- அதிகார முன்னுரை
- அது தனியாகிய படர்மிகுதி என விரியும். அஃதாவது, படர் மிகுதி தலைவன்கணின்றித் தன்கண்ணேயாதல் கூறுதல். அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின், பசப்புறுபருவரலின் பின் வைக்கப்பட்டது.
குறள் 1191 ( தாம்வீழ்வார்)
தொகு- (காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின்வருவர் நீ அவரொடு பேரின்ப நுகர்தி என்ற தோழிக்குச் சொல்லியது. )
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே ( ) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. (01) காமத்துக் காழ் இல் கனி.
[தொடரமைப்பு:
தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழில் கனி. ]
- இதன்பொருள்
- தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர்= தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்;
- பெற்றாரே காமத்துக் காழ் இல் கனி= பெற்றார் அன்றே, காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை, எ-று.
- உரைவிளக்கம்
- காமம்- ஆகுபெயர். அத்து அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் பெற்றார் என்றும், அவரான் தடையின்றி நுகரப்படுதலின் காழ்இல் கனி என்றும் கூறினாள். நங்காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின், அக்கனி யாம் பெற்றிலேம் என்பதாயிற்று.
குறள் 1192 ( வாழ்வார்க்கு)
தொகு- (இதுவுமது )
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு ( ) வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கு மளி. (02) வீழ்வார் அளிக்கும் அளி.
[தொடரமைப்பு:
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால். ]
- இதன்பொருள்
- வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி= அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால் தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்துசெய்யும் தலையளி;
வாழ்வார்க்கு வானம் பயந்தற்று= தன்னையே நோக்கி உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற்போலும், எ-று.
- உரை விளக்கம்
- நங்காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார்போல இறந்துபடுதலே நமக்கு உள்ளது என்பதாம்.
குறள் 1193 (வீழுநர் )
தொகு- ( இதுவுமது)
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே ( ) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமை
வாழுந மென்னுஞ் செருக்கு. (03) வாழுநம் என்னும் செருக்கு.
[தொடரமைப்பு:
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, வாழுநம் என்னும் செருக்கு. ]
- இதன்பொருள்
- வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே= தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து;
வாழுநம் என்னும் செருக்கு= காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர், வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு, எ-று.
- உரை விளக்கம்
- நாம் அவரான் வீழப்படாமையின் நமக்கு அமைவது இறந்துபாடு என்பதாம்.
குறள் 1194 ( வீழப்படுவார்)
தொகு- (காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவர் அருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலிற் கற்புடைமகளிரால் நன்கு மதிக்கப்படுதி என்ற தோழிக்குச் சொல்லியது. )
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் ( ) வீழப்படுவார் கெழீஇஇலர் தாம் வீழ்வார்
வீழப் படாஅ ரெனின். (04) வீழப்படாஅர் எனின்.
[தொடரமைப்பு:
வீழப்படுவார், தாம் வீழ்வார் வீழப்படாஅரெனின் கெழீஇயிலர் ]
- இதன்பொருள்
- வீழப்படுவார்= கற்புடைமகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்;
- தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇ இலர்= தாம் விரும்பும் கணவரான் விரும்பப்படாராயின் தீவினையாட்டியர், எ-று.
- உரை விளக்கம்
- சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. கெழீஇயின்மை- நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியான் தீவினையுடைமையாயிற்று. தீவினை உடையேற்கு அந்நன்கு மதிப்பாற் பயனில்லை என்பதாம்.
குறள் 1195 ( நாங்காதல்)
தொகு- (அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது. )
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ () நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை. (05) தாம் காதல் கொள்ளாக்கடை.
[தொடரமைப்பு:
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ, தாம் காதல் கொள்ளாக்கடை. ]
- இதன்பொருள்
- நாம் காதல் கொண்டார் நமக்கு எவன்செய்பவோ= நம்மாற் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்;
- தாம் காதல் கொள்ளாக் கடை= அவ்வாறே தாமும் நங்கண் காதல் செய்யாவழி, எ-று.
- உரை விளக்கம்
- எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே என்பதாம்.
குறள் 1196 ( ஒருதலையா)
தொகு- (இதுவுமது )
ஒருதலையா னின்னாது காமங்காப் போல ( ) ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
விருதலை யானு மினிது. (06) இருதலையானும் இனிது.
[தொடரமைப்பு:
காமம் ஒருதலையான் இன்னாது, காப்போல இருதலையானும் இனிது. ]
- இதன்பொருள்
- காமம் ஒருதலையான் இன்னாது= மகளிர் ஆடவர் என்னும் இருதலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின் அஃது இன்னாது;
- காப்போல இருதலையானும் இனிது= காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின், அஃது இனிது, எ-று.
- உரை விளக்கம்
- மூன்றன் உருபுகள் ஏழன்பொருண்மைக்கண் வந்தன. கா- ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர்மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பம் உழத்தல் கூடுமோ என்பதாம்.
குறள் 1197 ( பருவரலும்)
தொகு- (இதுவுமது )
பருவரலும் பைதலுங் காணான்கொல் காம ( ) பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
னொருவர்க ணின்றொழுகு வான். (07) ஒருவர்கண் நின்று ஒழுகுவான்.
[தொடரமைப்பு:
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான் கொல். ]
- இதன்பொருள்
- ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன்= காமம் நுகர்தற்குரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழித்து, ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக்கடவுள்;
- பருவரலும் பைதலும் காணான்கொல்= அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர்மிகுதியும் அறியான்கொல்லோ, எ-று.
- உரை விளக்கம்
- விழைவும் வெறு்ப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை என்பதாம்.
குறள் 1198 ( வீழ்வாரின்)
தொகு- (தலைமகன் தூது வரக் காணாது சொல்லியது. )
வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து ( ) வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா ரில். (08) வாழ்வாரின் வன்கணார் இல்.
[தொடரமைப்பு:
வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின், வன்கணார் உலகத்து இல். ]
- இதன்பொருள்
- வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின்= தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்று ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல;
- வன்கணார் உலகத்து இல்= வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை, எ-று.
- உரை விளக்கம்
- காதலர் திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது என்னும் கருத்தால், 'இன்சொல்' என்றாள். இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேன் ஆகலின், அதுவும் பெறாது உயிர்வாழாநின்றேன் என்பதாம்.
குறள் 1199 ( நசைஇயார்)
தொகு- ( இதுவுமது )
நசைஇயார் நல்காரெனினு மவர்மாட் ( ) நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
டிசையு மினிய செவிக்கு. (09) இசையும் இனிய செவிக்கு.
[தொடரமைப்பு:
நசைஇயார் நல்கார் எனினும், அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய ]
- இதன்பொருள்
- நசைஇயார் நல்கார் எனினும்= என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரே ஆயினும்;
- அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய= அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம், எ-று.
- உரை விளக்கம்
- இழிவுசிறப்பும்மை, அவர் வாரலர் என்னும் சொல்லாயினும் அமையும் என்பதுபட நின்றது. அதுவும் பெற்றிலேன் என்பதாம்.
குறள் 1200 ( உறார்க்குறு)
தொகு- ( தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது )
உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் () உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு. (10) செறாஅஅய் வாழிய நெஞ்சு.
[தொடரமைப்பு:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு, கடலைச் செறாஅஅய் வாழிய. ]
- இதன்பொருள்
- உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு= நின்னொடு உறாதார்க்கு நின்னுறுநோயை உரைக்கலுற்ற நெஞ்சே;
- கடலைச் செறாய்= நீ ஆற்றாய் ஆயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரம்செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது, எ-று.
- உரை விளக்கம்
- உரைக்கலுற்றது அளவிறந்தநோய் ஆகலானும், கேட்பார் உறவிலர் ஆகலானும், அது முடிவது ஒன்றன்று, முடிந்தாலும் பயனில்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான் 'வாழிய' என்றாள்.