திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/128.குறிப்பறிவுறுத்தல்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்
தொகுபரிமேலழகர் உரை
தொகுஅதிகாரம் 128. குறிப்பு அறிவுறுத்தல்
தொகு- அதிகார முன்னுரை
- அஃதாவது, தலைமகன், தலைமகள், தோழி என்றிவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல். இது, பிரிந்துபோய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின், அவர்வயின் விதும்பலின் பின் வைக்கப்பட்டது.
குறள் 1271 ( கரப்பினுங்)
தொகு- ( பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இதுவொன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ( ) கரப்பினும் கை இகந்து ஒல்லா நின் உண்கண்
ணுரைக்க லுறுவதொன் றுண்டு. (01) உரைக்கல் உறுவது ஒன்று உண்டு.
[தொடரமைப்பு: கரப்பினும் ஒல்லா கையிகந்து, நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு.]
- இதன்பொருள்
- கரப்பினும்= நீசொல்லாது மறைத்தாய் ஆயினும்;
- ஒல்லா கையிகந்து= அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து;
- நின் உண்கண் உரக்கலுறுவது ஒன்று ஒண்டு= நின் கண்களே எமக்குச் சொல்லல் உறுவது ஒருகாரியம் உண்டாய் இராநின்றது, இனியதனை நீயே தெளியச்சொல்வாயாக, எ-று.
- உரைவிளக்கம்
- கரத்தல்- நாணான் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்பு உளதாகக்கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக்குறிப்பு அறிவுறுத்தவாறு.
குறள் 1272 ( கண்ணிறைந்த)
தொகு- ( நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழி்க்குச் சொல்லியது.)
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் ( ) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (02) பெண் நிறைந்த நீர்மை பெரிது.
[தொடரமைப்பு: கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது.]
- இதன்பொருள்
- கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு= என்கண்நிறைந்த அழகினையும், வேயை ஒத்த தோளினையும் உடைய நின்பேதைக்கு;
- பெண்நிறைந்த நீர்மை பெரிது= பெண்பாலாரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது, எ-று.
- உரை விளக்கம்
- இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான் இவ்வாறு கூறினான்.
குறள் 1273 ( மணியிற்)
தொகு- (இதுவுமது )
மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை ( ) மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (03) அணியில் திகழ்வது ஒன்று உண்டு.
[தொடரமைப்பு: மணியில் திகழ் தரும்நூல் போல், மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு.]
- இதன்பொருள்
- மணியில் திகழ்தரும் நூல்போல்= கோக்கப்பட்ட பளிக்குமணி யகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல்போல;
- மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு= இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு, எ-று.
- உரை விளக்கம்
- அணி- புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். அதனை யான் அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும் என்பது கருத்து.
குறள் 1274 (முகைமொக்கு )
தொகு- (இதுவுமது )
முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற்பேதை ( ) முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. (04) நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.
[தொடரமைப்பு: முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.]
- இதன்பொருள்
- முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்= முகையது முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம்போல;
- பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு= நின் பேதை என்னொடு நகக்கருதும் நகையது முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்புண்டு, எ-று.
- உரை விளக்கம்
- முகிழ்ப்பு- முதிர்ச்சியாற்புடைபடுதல். நகை-புணர்ச்சியின்பத்தான் நிகழ்வது.
குறள் 1275 ( செறிதொடி)
தொகு- (இதுவுமது )
செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் () செறி தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து. (05) தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து.
[தொடரமைப்பு:செறி தொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர்தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து. ]
- இதன்பொருள்
- செறிதொடி செய்து இறந்த கள்ளம்= நெருங்கிய வளைகளை உடையாள் என்கண் இல்லாதது ஒன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப்போன குறிப்பு;
- உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து= என் மிக்கதுயரைத் தீர்க்கும் மருந்தாவது ஒன்றனை உடைத்து, எ-று.
- உரை விளக்கம்
- உட்கொண்டது- பிரிவு. கள்ளம்- ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர்- நன்று செய்யத் தீங்கு விளைதலானும், அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து- அப்பிரிவின்மை தோழியான் தெளிவித்தல். நீ அது செய்யல்வேண்டும் என்பதாம்.
குறள் 1276 ( பெரிதாற்றிப்)
தொகு- (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது. )
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி ( ) பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிது ஆற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து. (06) அன்பு இன்மை சூழ்வது உடைத்து.
[தொடரமைப்பு: பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து.]
- இதன்பொருள்
- பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல்= காதலர் வந்து தம்பிரிவினான் ஆய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி;
- அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து= இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவர் அன்பின்மையை நினையும் தன்மை உடைத்து எ-று.
- உரை விளக்கம்
- பிரிதல் குறிப்பினால் செய்கின்றதாகலான், முடிவில் இன்னாதாகநின்றது என்பதாம்.
குறள் 1277 ( தண்ணந்)
தொகு- (இதுவுமது )
தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு ( ) தண் அம் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்ன முணர்ந்த வளை. (07) முன்னம் உணர்ந்த வளை.
[தொடரமைப்பு: தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் வளை முன்னம் உணர்ந்த.]
- இதன்பொருள்
- தண்ணந் துறைவன் தணந்தமை= குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த= அவன் குறி்பபான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன, எ-று.
- உரை விளக்கம்
- கருத்து நிகழ்ந்ததாகலின் 'தணந்தமை' என்றும், யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கண் மெலிந்தன என்பாள் அதனை வளைமேல் ஏற்றி, அதுதன்னை உணர்வுடைத்தாக்கியும் கூறினாள்.
குறள் 1278 (நெருநற்றுச் )
தொகு- ( இதுவுமது )
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு ( ) நெருநற்றுச் சென்றார் எம் காதலர் யாமும்
மெழுநாளே மேனி பசந்து. (08) எழு நாளேம் மேனி பசந்து.
[தொடரமைப்பு: எம் காதலர் சென்றார்நெருநற்று, நாமும் மேனி பசந்து எழு நாளேம்]
- இதன்பொருள்
- எங் காதலர்சென்றார்நெருநற்று= எங்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே;
- யாமும் மேனி பசந்து எழுநாளேம்= அப்பிரிவிற்கு யாமும் மேனிபசந்து ஏழுநாளுடையம் ஆயினேம் எ-று.
- உரை விளக்கம்
- நெருநற்றுச்செய்த தலையளியான் பிரிவு துணியப்பட்டது என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாள் உண்டாகலின் அன்றே மேனி பசந்து 'எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.
குறள் 1279 ( தொடிநோக்கித்)
தொகு- ( தலைமகள் குறிப்பறிந்த தோழி, அதனைத் தலைமகற்கு அறிவித்தது. )
தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி ( ) தொடி நோக்கி மெல் தோளும் நோக்கி அடி நோக்கி
யஃதாண் டவள்செய் தது. (09)
[தொடரமைப்பு: தொடி நோக்கி, மென்தோளும் நோக்கி, அடி நோக்கி, ஆண்டு அவள் செய்தது அஃது. ]
- இதன்பொருள்
- தொடி நோக்கி= (யானது தெளிவித்தவழித் தெளியாது) அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லாவெனத் தன் தொடியை நோக்கி;
- மென் தோளும் நோக்கி= அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன்மென் தோள்களையும் நோக்கி;
- அடி நோக்கி= பின் இவ்விரண்டும் நிகழாமல்நீர் நடந்து காத்தல் வேண்டும் என்த் தன் அடியையும் நோக்கி;
- ஆண்டு அவள் செய்தது அஃது= அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன்போக்காயிருந்தது, எ-று.
- உரை விளக்கம்
- செய்த குறிப்பு- செய்தற்கு ஏதுவாய குறிப்பு. அஃதென்றாள் "செறிதொடி செய்திறந்த கள்ளம்" என்றான் ஆகலின். பிரிதற்குறிப்பு உண்டாயின் அஃது அழுங்கல் பயன்.
குறள் 1280 (பெண்ணினாற் )
தொகு- ( தலைமகன், பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது. )
பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் () பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப கண்ணினால்
காமநோய் சொல்லி யிரவு. (10) காம நோய் சொல்லி இரவு.
[தொடரமைப்பு: காமநோய் கண்ணினால் சொல்லி இரவு, பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப.]
- இதன்பொருள்
- காமநோய் கண்ணினாற் சொல்லி இரவு= மகளிர், தம் காமநோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்;
- பெண்ணினால் பெண்மை உடைத்து= தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஓர் பெண்மைஉடைத்தென்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.
- உரை விளக்கம்
- தலைமகளது உடன்போதல் துணிபு தோழியான் தெளிந்தான் ஆகலின், தன்பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான் அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.