திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல் தொகு

அதிகாரம் 65. சொல்வன்மை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரமுன்னுரை
அஃதாவது,தான் கருதிய வினை முடியுமாற்றால், அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்ல வல்லனாதல். மேல் "ஒருதலையாச் சொல்லலும் வல்லது" என்றதனையே சிறப்புப்பற்றி விரிக்கின்றமையின், இஃது அமைச்சின் பின் வைக்கப்பட்டது.
¶.குறள் 634.

குறள் 641 (நாநலமென்) தொகு

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்நா நலம் என்னும் நலன் உடைமை அந்நலம்

'யாநலத் துள்ளதூஉ மன்று. (01)'யா நலத்து உள்ளதூஉம் அன்று.

இதன்பொருள்
நா நலம் என்னும் நலன் உடைமை= அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது, சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று= அந்நலம் பிறர்க்கும் பிறநலமெல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கதாகலான்.
உரைவிளக்கம்
நாவால் உளதாய நலம் என விரியும். இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டுமென்னும் நீதிநூல் வழக்குப்பற்றி 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோற் சிறந்தது பிறிதின்மையான், அந்நலம் 'யாநலத்துள்ளதூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல், பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாதாய பின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.

குறள் 642 (ஆக்கமுங்) தொகு

ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

'காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (02)'காத்து ஓம்பல் சொல்லின் கண் சோர்வு.

இதன்பொருள்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்=தம் அரசற்கும், அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும்ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல்= அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை, அமைச்சர் தம்கண் நிகழாமற் போற்றிக் காக்க.
உரைவிளக்கம்
ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும், கேட்டிற்கு ஏதுவாகிய தீச்சொல்லையும் சொல்லாதல் ஒப்புமை பற்றி 'அதனால்' என்றார். செய்யுளாகலின் சுட்டுப்பெயர் முன்வந்தது. பிறர் சோர்வு போலாது, உயிர்கட்கெல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்தோம்பல்' என்றார்.
இவை இரண்டுபாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாது என்பது கூறப்பட்டது.

குறள் 643 (கேட்டார்ப்) தொகு

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்

'வேட்ப மொழிவதாஞ் சொல். (03)'வேட்ப மொழிவது ஆம் சொல்.

இதன்பொருள்
கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்= நட்பாய் ஏற்றுக்கொண்டாரைப் பின் வேறுபடாமற் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது= மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம்= அமைச்சர்க்குச் சொல்லாவது.
உரைவிளக்கம்
அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்று இவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது, சொல்லுவான் குறித்தனவேயன்றி, வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென் எச்சம், 'மொழிவது' என்னும் செயப்பாட்டுவினை கொண்டது. இனிக் 'கேட்டார்', 'கேளார்' என்பதற்கு, நூல் கேட்டார் கேளாதார் எனவும், வினவியார் வினவாதார் எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும் தகுதியையுடையவாய் என்றுரைத்தார், அவர், பன்மை 'மொழிவது' என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர்.
இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 644 (திறனறிந்து) தொகு

திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

'பொருளு மதனினூஉங் கில். (04)'பொருளும் அதனின் ஊஉங்கு இல்.

இதன்பொருள்
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக= அப்பெற்றித்தாய சொல்லை அமைச்சர் தம்முடையுவம் கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல்= அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும், பொருளும் இல்லையாகலான்.
உரைவிளக்கம்
அத்திறங்களாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதிவேறுபாடுகள். அவற்றை 'அறிந்து சொல்லுத'லாவது, அவற்றான் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத் தாழ்வுகளை அறிந்து, அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது, உலகத்தோடு ஒட்டஒழுகலையும், இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று; தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. 'அறனும் பொருளும்' எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.

குறள் 645 (சொல்லுக) தொகு

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லைசொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை

'வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (05)'வெல்லும் சொல் இன்மை யறிந்து.

இதன்பொருள்
சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து= தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக= பின் அச்சொல்லைச் சொல்லுக.
உரைவிளக்கம்
'பிறிதோர் சொல்' மாற்றாரது மறுதலைச் சொல். 'வெல்லுதல்' குணங்களான் மிகுதல். அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்தசொல்லும் மிக்கசொல்லும் உளவாகாமற் சொல்லுக என்று உரைப்பாரும் உளர்§. இது சொற்பொருட் பின்வருநிலை.
§. மணக்குடவர்.

குறள் 646 (வேட்பத்தாஞ்) தொகு

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்

'மாட்சியின் மாசற்றார் கோள். (06)'மாட்சியின் மாசு அற்றார் கோள்.

இதன்பொருள்
வேட்பத் தாம் சொல்லிப் பிறர்சொற் பயன் கோடல்= பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள்= அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
உரைவிளக்கம்
பிறர் சொற்களுள் குற்றம் உளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதியன்மையின், இதுவும் உடன் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.

குறள் 647 (சொலல்வல்லன் தொகு

சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனைசொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை

'யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (07)'இகல் வெல்லல் யார்க்கும் அரிது.

இதன்பொருள்
சொலல் வல்லன்= தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச்சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன்= அவைமிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்வு இலனாய்; அஞ்சான்= அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது= அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
உரைவிளக்கம்
ஏற்பச் சொல்லுதல், அவர்க்கு அவை காரியம் அல்லவாயினும் ஆம்எனத் துணியும்வகை சொல்லுதல். 'சோர்வு' சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமுடையானை, மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.

குறள் 648 (விரைந்து) தொகு

விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிதுவிரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது

'சொல்லுதல் வல்லார்ப் பெறின். (08)'சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

இதன்பொருள்
தொழி்ல் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின்= சொல்லப்படுங் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து தொழில் கேட்கும்= உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
உரைவிளக்கம்
'தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல்- முன் சொல்வனவும், பின்சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல், கேட்டார்க்கு இன்பம் பயத்தல். சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன் என்ற வடமொழிபற்றிப் 'பெறின்' என்றார். ஈண்டுங் கேட்டல் ஏற்றுக் கோடல்.
இவை இரண்டுபாட்டானும் அவ்வாற்றாற் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 649 (பலசொல்லக்) தொகு

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றபல சொல்லக் காமுறுவர் மன்ற மாசு அற்ற

'சிலசொல்லத் தேற்றா தவர். (09)'சில சொல்லத் தேற்றாதவர்.

இதன்பொருள்
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர்= குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றாற் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர்= பலவாய வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல விரும்புவர்.
உரைவிளக்கம்
குற்றம் மேற்சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர். அவர் இவ்வாறு சொல்லமாட்டாதாரே, வல்லார் அது செய்யார் என யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.

குறள் 650 (இணரூழ்த்து) தொகு

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றஇணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது

'துணர விரித்துரையா தார். (10)'உணர விரித்து உரையாதார்.

இதன்பொருள்
கற்றது உணர விரித்து உரையாதார்= கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க மாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்= கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவை ஒப்பர்.
உரைவிளக்கம்
செவ்விபெற மலர்ந்துவைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாரது இழிபு கூறப்பட்டது.