திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/118.கண்விதுப்பழிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 118. கண்விதுப்பு அழிதல்

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, கண்கள் தம் காட்சி விதுப்பான் வருந்துதல். காட்சிவிதுப்பு- தலைமகனைக் காண்டற்கு விரைதல். இது படரான் மெலிந்தவழி நிகழ்வதாகலின், படர்மெலிந்து இரங்கலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1171 ( கண்டாங்)

தொகு
(நின்கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )

கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் ( ) கண் தாம் கலுழ்வது எவன் கொலோ தண்டா நோய்

தாங்காட்ட யாங்கண் டது. (01) தாம் காட்ட யாம் கண்டது.

[தொடரமைப்பு: தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட, கண் தாம் கலுழ்வது எவன் கொல்.]

இதன்பொருள்
தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட= இத்தணியா நோயை யாம் அறிந்தது, தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ? கண்தாம் கழுல்வது எவன்கொல்= அன்று அத்தொழிலவாய கண்கள் இன்று எம்மைக் காட்டச்சொல்லி அழுகின்றது என்கருதி?
உரைவிளக்கம்
'காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இன்றும் தாமே காட்டுதல்அல்லது, யாம் காட்டுதல் யாண்டையது என்பதாம்.

குறள் 1172 ( தெரிந்துணரா)

தொகு
(இதுவுமது )

தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் ( ) தெரிந்து உணரா நோக்கிய உண் கண் பரிந்து உணராப்

பைத லுழப்ப தெவன் (02) பைதல் உழப்பது எவன்.

[தொடரமைப்பு: தெரிந்து உணரா நோக்கிய உண்கண், பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன். ]

இதன்பொருள்
தெரிந்து உணரா நோக்கிய உண்கண்= மேல்விளைவதனை ஆராய்ந்து அறியாது அன்று காதலரை நோக்கிநின்ற உண்கண்கள்;
பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன்= இன்று இது நம்மால் வந்ததுஆகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்து உணராது துன்பமுழப்பது என்கருதி?
உரை விளக்கம்
விளைவது- பிரிந்துபோயவர் வாராமையிற் காண்டற்கு அரியராய் வருத்துதல். முன்னே வருவதுஅறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றே உள்ளது; அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச்செய்கை என்பதாம்.

குறள் 1173 ( கதுமெனத்)

தொகு
(இதுவுமது )

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு ( ) கதும் எனத் தாம் நோக்கித் தாமே கலுழும்

மிதுநகத் தக்க துடைத்து. (03) இது நகத்தக்கது உடைத்து.

[தொடரமைப்பு:
தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது, நகத்தக்கது உடைத்து. ]

இதன்பொருள்
தாம் கதுமென நோக்கித் தாமே கழுலும் இது= இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்து அழுகின்ற இது;
நகத்தக்கது உடைத்து= நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.
உரை விளக்கம்
கண்கள் என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது'வென்றது, மேற்கூறிய கழிமடச்செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகைவிளைக்குமாகலின், 'நகத்தக்கதுடைத்து' என்றாள்.

குறள் 1174 ( பெயலாற்றா)

தொகு
( இதுவுமது)

பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா ( ) பெயல் ஆற்றா நீர் உலந்த உண் கண் உயல் ஆற்றா

வுய்வினோ யென்க ணிறுத்து. (04) உய்வு இல் நோய் என் கண் நிறுத்து.

[தொடரமைப்பு:
உண்கண், உயல் ஆற்றா உய்வு இல் நோய் என்கண் நிறுத்து, பெயல் ஆற்றா நீர் உலந்த]

இதன்பொருள்
உண்கண்= உண்கண்கள்;
உயல் ஆ்ற்றா உய்வுஇல் நோய் என்கண் நிறுத்து= அன்று யான் உய்யமாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என்கண்ணே நிறுத்தி;

பெயலாற்றா நீர் உலந்த= தாமும் அழுதலைமாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.

உரை விளக்கம்
நிறுத்தல்- பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச்செய்தல். முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன என்பதாம்.

குறள் 1175 ( படலாற்றா)

தொகு
(இதுவுமது )

படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் () படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றாக்

காமநோய் செய்தவென் கண். (05) காம நோய் செய்த என் கண்.

[தொடரமைப்பு:
கடல்ஆற்றாக் காமநோய் செய்த என்கண், படல் ஆற்றாப் பைதல் உழக்கும். ]

இதன்பொருள்
கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண்= எனக்குக்கடலும் சிறிதாகும்வண்ணம் பெரிதாய காமநோயைச் செய்த என்கண்கள்; படல் ஆற்றாப் பைதல் உழக்கும்= அத்தீவினையாற் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன.
உரை விளக்கம்
காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே நோய்செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது.

குறள் 1176 ( ஓஒவினிதே)

தொகு
(இதுவுமது )

ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் ( ) ஓஒ இனிதே எமக்கு இந்நோய் செய்த கண்

டாஅ மிதற்பட் டது. (06) தாஅம் இதற்பட்டது.

[தொடரமைப்பு:
எமக்கு இந்நோய் செய்த கண் தாஅம் இதற்பட்டது, ஓஒ இனிதே.]

இதன்பொருள்
எமக்கு இந்நோய் செய்த கண் தாஅம் இதற்படடது= எமக்கு இக்காமநோயினைச் செய்த கண்கள் தாமும், இத்துயிலாது அழுதற்கண்ணேபட்டது;
ஓஒ இனிதே= மிகவும் இனிதாயிற்று.
உரை விளக்கம்
ஓ வென்பது, மிகுதிப்பொருட்கண் வந்த குறிப்புச்சொல். தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது என்பதாம்.

குறள் 1177 ( உழந்துழந்து)

தொகு
(இதுவுமது )

உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து ( ) உழந்து உழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து

வேண்டி யவர்க்கண்ட கண். (07) வேண்டி அவர்க் கண்ட கண்.

[தொடரமைப்பு:
விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண், உழந்து உழந்து உள்நீர் அறுக. ]

இதன்பொருள்
விழைந்து விழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்= விழைந்து உண்ணெகிழ்ந்து, விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்;
உழந்து உழந்து உள்நீர் அறுக= இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை, உழந்து உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக!
உரை விளக்கம்
அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.

குறள் 1178 ( பேணாது)

தொகு
(காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டு உளர், அவரைக் காணும் அளவும் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. )

பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் ( ) பேணாது பெட்டார் உளர் மன்னோ மற்று அவர்க்

காணா தமைவில கண். (08) காணாது அமைவில கண்.

[தொடரமைப்பு:
பேணாது பெட்டார் உளர் மன்னோ, மற்று அவர்க் காணாது கண் அமைவில.]

இதன்பொருள்
பேணாது பெட்டார் உளர்= நெஞ்சத்தால் விழையாது வைத்துச் சொன்மாத்திரத்தால் விழைந்தவர் இவ்விடத்தே உளர்;
மற்று அவர்க் கண் காணாது அமைவில= அவ்வுண்மையாற் பயன் யாது? அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின.
உரை விளக்கம்
செயலாற் பிரிந்து நின்றமையிற் 'பேணாது என்றும், முன்நலம் பாராட்டிப் பிரிவச்சமும், வன்புறையும் கூறினார் ஆகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'ஓ'காரம் அசைநிலை. யான் ஆற்றவும், கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் கொண்கனை என்பது பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாது அமைகின்றனவில்லை; இவவாறே தம்மை ஒருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்து உளரோ என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை.

குறள் 1179 ( வாராக்கால்)

தொகு
(நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. )

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை ( ) வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை

யாரஞ ருற்றன கண். (09) ஆர் அஞர் உற்றன கண்.

[தொடரமைப்பு:
வாராக்கால் துஞ்சா, வரின் துஞ்சா, ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன. ]

இதன்பொருள்
வாராக்கால் துஞ்சா= காதலர் வாராத ஞான்று அவர் வரவுபார்த்துத் துயிலா;
வரின் துஞ்சா= வந்த ஞான்று அவர் பிரிவஞ்சித் துயிலா;
ஆயிடைக்கண் ஆர் அஞர் உ்ற்றன= ஆதலால் அவ்விரு வழியும் என் கண்கள் பொறுத்தற்கு அரிய துன்பத்தினை உடைய.
உரை விளக்கம்
'ஆயிடை எனச் சுட்டுநீண்டது. இனி அவற்றிற்குத் துயில் ஒருஞான்றும் இல்லை என்பதாம்.

குறள் 1180 ( மறைபெற)

தொகு
(காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர்கொடுமையை மறைக்க வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.)

மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ () மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்

லறைபறை கண்ணா ரகத்து. (10) அறை பறை கண்ணார் அகத்து.

[தொடரமைப்பு:
எம்போல் அறைபறை கண்ணார் அகத்து மறைபெறல், ஊரார்க்கு அரிதன்று. ]

இதன்பொருள்
எம்போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல்= எம்மைப்போலும் அறைபறையாகிய கண்ணினை உடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையை அறிதல்;
ஊரார்க்கு அரிதன்று= இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.
உரை விளக்கம்
மறை என்றது, ஈ்ண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின், 'அறைபறை' யாகிய கண்ணென்றாள். இங்ஙனம் செய்யுள்விகாரம் ஆக்காது, அறைபறைக் கண்ணார் என்று பாடம் ஓதுவாருமுளர், யான்மறைக்கவும் இவை வெளிப்படுத்தாநின்றன என்பதாம்.