திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/56.கொடுங்கோன்மை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 56. கொடுங்கோன்மை
தொகுபரிமேலழகர் உரை
தொகுஅதிகார முன்னுரை:அஃதாவது, அம்முறையினது கோடுதல் தன்மை. ஈண்டும் உவமையின் பெயர் பொருள்மேலாயிற்று. செங்கோன்மைக்கு மாறாகலின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
குறள் 551 (கொலைமேற்)
தொகுகொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
'டல்லவை செய்தொழுகும் வேந்து. (01)'அல்லவை செய்து ஒழுகும் வேந்து.
- இதன்பொருள்
- கொலை மேற்கொண்டாரின் கொடிது= பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலை தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து= பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற்கொண்டு முறையல்லவற்றைச் செய்தொழுகும் வேந்தன்.
- உரைவிளக்கம்
- அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பது பற்றி, அவரினும் 'கொடியன்' என்றார். பான்மயக்குறழ்ச்சி(பால்மயக்கு உறழ்ச்சி). 'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச்சொல். 'அலை' கொலையினும் கொடிது என்பதாயிற்று.
குறள் 552 (வேலொடு)
தொகுவேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்வேலொடு நின்றான் இடு என்றது போலும்
'கோலொடு நின்றா னிரவு. (02)'கோலொடு நின்றான் இரவு.
- இதன்பொருள்
- வேலொடு நின்றான்= ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல்கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்= ஆறுசெல்வானை நின் கைப்பொருள் தாவென்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்றான் இரவு= ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள்வேண்டுதல்.
- உரைவிளக்கம்
- வேலொடு நின்றான் என்றதனான் பிறரொடு நில்லாமையும், இரவு என்றதனால் இறைப்பொருள்அன்மையும் பெற்றாம். தாராக்கால் ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின், இரவான் கோடலும் கொடுங்கோன்மையாயிற்று.
- இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.
குறள் 553 (நாடொறு)
தொகுநாடொறு நாடி முறைசெய்ய மன்னவநாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
'னாடொறு நாடு கெடும். (03)'நாள்தொறும் நாடு கெடும்.
- இதன்பொருள்
- நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்= தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கொக்க முறைமையைச் செய்யாத அரசன்; நாள்தொறும் நாடு கெடும்= நாள் தோறும் நாடு இழக்கும்.
- உரைவிளக்கம்
- அரசனுக்கு நாடு உறுப்பாகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்- பயன் எய்தாமை. மன்னவனோடு நாடோறும்கெடும் என்று உரைப்பாரும் உளர்.1
- 1. மணக்குடவர்.
குறள் 554 (கூழுங்)
தொகுகூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடிச்
'சூழாது செய்ய மரசு. (04)'சூழாது செய்யும் அரசு.
- இதன்பொருள்
- சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு= மேல்விளைவு எண்ணாது, முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்= செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
- உரைவிளக்கம்
- கோட என்பது திரிந்துநின்றது. முன்ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது வரும்பாட்டான் கூறுப.
குறள் 555 (அல்லற்பட்)
தொகுஅல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேஅல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
'செல்வத்தைத் தேய்க்கும் படை. (05)'செல்வத்தைத் தேய்க்கும் படை.
- இதன்பொருள்
- அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே= அரசன் முறைசெய்யாமையான் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்கமாட்டாது அழுதகண்ணீ்ர் அன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை= அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
- உரைவிளக்கம்
- 'அழுத கண்ணீர்' அழுதலான் வந்த கண்ணீர். செல்வமாகிய மரத்தை என்னாமையின், இஃது ஏகதேச உருவகம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக்கண்ணீரிற் கொடியது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.
குறள் 556 (மன்னர்க்குமன்)
தொகுமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
'மன்னாவா மன்னர்க் கொளி. (06)'மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
- இதன்பொருள்
- மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை= அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலைபெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம்= அச்செங்கோன்மை இல்லையாயின், அவர்க்கு அப்புகழ்கள்தான் உளவாகா.
- உரைவிளக்கம்
- விகாரத்தான் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக"2 என்பதனானும் அறிக. 'மன்னா'மை ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம். ஆகவே தாமும் மன்னார் என்பது ஆயிற்று. வென்றி, கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையாற் கூறினார். அவை எல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம்.
- இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலன் ஆயினான் எய்தும் குற்றம் கூறப்பட்டது.
- 2. நான்மணிக்கடிகை, 15.
குறள் 557 (துளியின்மை)
தொகுதுளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்ததுளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
'னளியின்மை வாழு முயிர்க்கு. (07)'அளி இன்மை வாழும் உயிர்க்கு.
- இதன்பொருள்
- துளியின்மை ஞாலத்திற்கு எற்று= மழையில்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு= அவ்வகைத் துன்பம் பயக்கும், அரசன் தண்ணளி இல்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
- உரைவிளக்கம்
- சிறப்புப்பற்றித் 'துளி'யென்றது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேன் நின்றது. மேல் 'வான்நோக்கி வாழும்'3 என்றதனை எதிர்மறை முகத்தாற் கூறியவாறு.
- 3.குறள், 542.
குறள் 558 (இன்மையின்இன்)
தொகுஇன்மையி னி்ன்னா துடைமை முறைசெய்யாஇன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
'மன்னவன் கோற்கீழ்ப் படின். (08)'மன்னவன் கோல் கீழ்ப் படின்.
- இதன்பொருள்
- முறை செய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்= முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது= யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
- உரைவிளக்கம்
- தனக்குரிய பொருளோடு அமையாது, மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவ யாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று.
- இவை இரண்டு பாட்டானும் அவன்நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.
குறள் 559 (முறைகோடி)
தொகுமுறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடிமுறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
'யொல்லாது வானம் பெயல். (09)'ஒல்லாது வானம் பெயல்.
- இதன்பொருள்
- மன்னவன் முறை கோடிச் செய்யின்= மன்னவன் தான்செய்யும் பொருளை முறைதப்பச் செய்யுமாயின்; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது= அவன்நாட்டுப் பருவமழை இன்றாம்வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
- உரைவிளக்கம்
- இரண்டிடத்தும் கோட என்பன திரிந்துநின்றன. 'உறை' கோடுதலாவது, பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது வருகின்ற பாட்டாற் கூறுப.
குறள் 560 (ஆபயன்)
தொகுஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்ஆ பயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
'காவலன் காவா னெனின். (10)'காவலன் காவான் எனின்
- இதன்பொருள்
- காவலன் காவான் எனின்= காத்தற்குஉரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்; ஆபயன் குன்றும்= அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர்= அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.
- உரைவிளக்கம்
- 'ஆ பயன்', ஆவாற் கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவிஇன்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.
- இவை இரண்டு பாட்டானும், அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.