திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 123. பொழுது கண்டு இரங்கல்

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' என்பது பற்றிப் பகற்பொழுது ஆற்றியிருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1221 ( மாலையோ)

தொகு
(பொழுதொடு புலந்து சொல்லியது. )

மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் ( ) மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்

வேலைநீ வாழி பொழுது. (01) வேலை நீ வாழி பொழுது.

[தொடரமைப்பு: பொழுது, நீ மாலையோ அல்லை, மணந்தார் உயிர் உண்ணும் வேலை.]

இதன்பொருள்
பொழுது= பொழுதே!
நீ மாலையோ அல்லை= நீ முன்னாள்களின் வந்த மாலையோவெனின், அல்லை;
மணந்தார் உயிர் உண்ணும் வேலை= இருந்தவாற்றான் அந்நாட்காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய், எ-று.
உரைவிளக்கம்
முன்னாள்= கூடியிருந்தநாள். அந்நாள் மணந்தார் எனவே, பின் பிரிந்தாரதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச்சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங் காலை" (கலித்தொகை, நெய்தற்கலி-2)என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாய் இருந்தாய் என்பாரும் உளர்.

குறள் 1222 ( புன்கண்ணை)

தொகு
(தன்னுட் கையாற்றை அதன் மேலிட்டுச் சொல்லியது. )

புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் ( ) புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்

வன்கண்ண தோநின் றுணை. (02) வன்கண்ணதோ நின் துணை.

[தொடரமைப்பு: மருள்மாலை, புன்கண்ணை, நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ.]

இதன்பொருள்
மருண்மாலை= மயங்கிய மாலாய்;
புன்கண்ணை= நீயும் எம்போலப் புன்கண் உடையாய் இருந்தாய்;
நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ= நின் துணையும் எந்துணை போல வன்கண்மையுடையதோ, கூறுவாயாக, எ-று.
உரை விளக்கம்
மயங்குதல் பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண்-ஒளியிழத்தல். அதுபற்றித் துணயும் உண்டாக்கிக் கூறினாள். எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. எமக்குத் துன்பம் செய்தாய், நீயும் இன்பம் உற்றிலை என்னும் குறிப்பால் வாழி என்றாள்.

குறள் 1223 ( பனியரும்பிப்)

தொகு
( ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் ( ) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்

துன்பம் வளர வரும். (03) துன்பம் வளர வரும்.

[தொடரமைப்பு: பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்.]
]

இதன்பொருள்
பனி அரும்பிப் பைதல்கொள் மாலை= காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை;
துனி அரும்பித் துன்பம் வளர வரும்= இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்துதோன்றி அதற்குளதாம் துன்பம் ஒருகாலைக்கொருகால் மிக வாரா நின்றது, எ-று.
உரை விளக்கம்
குளிர்ச்சி தோன்ற மயங்கி வருமாலை என்னும் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி-உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.

குறள் 1224 ( காதலரில்வழி)

தொகு
( இதுவுமது)

காதல ரில்வழி மாலை கொலைக்களத் ( ) காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து

தேதிலர் போல வரும். (04) ஏதிலர் போல வரும்.

[தொடரமைப்பு: மாலை, காதலர் இல்வழி, கொலைக்களத்து ஏதிலர் போல வரும். ]

இதன்பொருள்
மாலை= காதலர் உள்ளபொழுதெல்லாம் என்னுயிர் தளிர்ப்ப வந்தமாலை;
காதலர் இல்வழி= அவரி்ல்லாத இப்பொழுது;
கொலைக்களத்து ஏதிலர் போல வரும்= அஃது ஒழிந்துநிற்றலேயன்றிக் கொல்லுங் களரியிற் கொலைஞர் வருமாறு போல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது, எ-று.
உரை விளக்கம்
ஏதிலர்- அருள்யாதும் இல்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்து வந்தபொழுதும், இன்று என்மேல் பகையாய்த் துன்பம்செய்து வாராநின்றது. இனி, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.

குறள் 1225 ( காலைக்குச்)

தொகு
(இதுவுமது )

காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் () காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்

மாலைக்குச் செய்த பகை. (05) மாலைக்குச் செய்த பகை.

[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]

இதன்பொருள்
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல்= (காலையும், மாலையும் அவர் கூடியஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன அவற்றுள்) யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது;
மாலைக்குச் செய்த பகை எவன்= மாலைக்குச் செய்த அபகாரம் யாது, எ-று.
உரை விளக்கம்
கூடியஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்' 'நன்று என்கொல்' என்றும், கூடியஞான்று இன்பம் செய்துவந்த மாலை, அஃதொழிந்து இஞ்ஞான்று அளவில் துன்பம் செய்யாநின்றது என்னும் கருத்தால், 'பகையெவன்கொல் என்றும் கூறினாள். பகை- ஆகுபெயர் தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.

குறள் 1226 ( மாலைநோய்)

தொகு
(இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவுக்கு உடம்பட்டது என்னை என்றாட்குச் சொல்லியது.)

மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத ( ) மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை யறிந்த திலேன். (06) காலை அறிந்தது இலேன்.

[தொடரமைப்பு: மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்.]

இதன்பொருள்
மாலை நோய் செய்தல்= முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்துபோந்த மாலை இன்று பகையாய்த் துன்பம்செய்தலை;
மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்= காதலர் பிரிதற்குமுன்னே அறியப்பெற்றிலேன், எ-று.
உரை விளக்கம்
இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன், அறிந்தேனாயின் அவர் பிரிவிிற்கு உடம்படேன் என்பதாம்.

குறள் 1227 ( காலையரும்பி)

தொகு
(மாலைப்பொழுதின்கண் இனையை ஆதற்குக் காரணம் என்னை என்றாட்குச் சொல்லியது.)

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி ( ) காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி

மாலை மலருமிந் நோய். (07) மாலை மலரும் இந் நோய்.

[தொடரமைப்பு: இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்.]

இதன்பொருள்
இந்நோய்= இக்காமநோயாகிய பூ;
காலை அரும்பி= காலைப்பொழுதின்கண் அரும்பி;
பகல் எல்லாம் போதாகி= பகற்பொழுதெல்லாம் பேர்அரும்பாய் முதிர்ந்து;
மாலைமலரும்= மாலைப்பொழுதின்கண் மலராநிற்கும், எ-று.
உரை விளக்கம்
துயில் எழுந்தபொழுதாகலின், கனவின்கண் கூட்டம்நினைந்து ஆற்றுதல் பற்றிக் 'காலையரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அதுமறந்து பிரிவு உ்ள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகல்எல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளிவந்து சேரும் விலங்குகளையும், மக்களையும்கண்டு, தான் அக்காலத்தில் நுகர்ந்தஇன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலைமலரும்' என்றும், கூறினாள். பூப்போல இந்நோய் காலவயத்தது ஆகாநின்றது என்பது உருவகத்தாற் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.

குறள் 1228 ( அழல்போலு)

தொகு
(இதுவுமது )

அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் ( ) அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்

குழல்போலுங் கொல்லும் படை. (08) குழல் போலும் கொல்லும் படை.

[தொடரமைப்பு: ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபோலும்.]

இதன்பொருள்
ஆயன் குழல்= முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன்குழல்;
அழல்போலும் மாலைக்குத் தூதாகி= இதுபொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்;
கொல்லும்படை= அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று, எ-று.
உரை விளக்கம்
பின்னின்ற போலும் என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று. கோறற்கருவியாகலின் படையாயிற்று. தானே சுடவல்ல மாலை இத்துணையும் பெற்றால் என்செய்யாது என்பதாம்.

குறள் 1229 ( பதிமருண்டு)

தொகு
( இதுவுமது )

பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு ( ) பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு

மாலை படர்தரும் போழ்து. (09) மாலை படர்தரும் போழ்து.

[தொடரமைப்பு:மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும். ]

இதன்பொருள்
மதி மருண்டு மாலைபடர்தரும் போழ்து= (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) இனிக் கண்டாரும் மதி மருளும்வகை மாலை வரும்பொழுது;
பதி மருண்டு பைதல் உழக்கும்= இப்பதி எல்லாம் மயங்கி நோயுழக்கும், எ-று.
உரை விளக்கம்
மதிமருள என்பது, மதிமருண்டு எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாள் ஆகலின், 'மாலைபடர்தரும் போழ்து' என்றாள். யான் இறந்து படுவல் என்பதாம். மாலை மயங்கி வரும்போழ்து, என் பதி மதி நிலைகலங்கி நோய் உழக்கும் என்று உரைப்பாரும் உளர்.

குறள் 1230 ( பொருண்மாலை)

தொகு
(இதுவுமது )

பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை () பொருள்மாலையாளரை உள்ளி மருள் மாலை

மாயுமென் மாயா வுயிர். (10) மாயும் என் மாயா உயிர்.

[தொடரமைப்பு: மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.]

இதன்பொருள்
மாயா என் உயிர்= காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்;
பொருண்மாலையாளரை உள்ளி மருண்மாலை மாயும்= இன்று பொருள் இயல்பே தமக்கு இயல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது, எ-று.
உரை விளக்கம்
குறித்த பருவம் கழியவும் பொருள்முடிவு நோக்கி வாராமையின், சொல் வேறுபடாமையாகிய தம் இயல்பு ஒழிந்தவர் அ்பபொருளியல்பே தம் இயல்பு ஆயினார், காலம் இதுவாயிற்று, இனி, நீ சொல்கின்றவாற்றாற் பயனில்லை என்பதாம்.