திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/85.புல்லறிவாண்மை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 85. புல்லறிவாண்மை தொகு

அதிகார முன்னுரை
இனி, ஏனைப் புல்லறிவாண்மை கூறுகின்றார். அது புல்லிய அறிவினை ஆடல்தன்மை என விரியும். அஃதாவது, தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச்சொல் கொள்ளாமை.

குறள் 841 (அறிவின்மை ) தொகு

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை ( ) அறிவு இன்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை

யின்மையா வையா துலகு. (01) இன்மையா வையாது உலகு.

தொடரமைப்பு: இன்மையுள் இன்மை அறிவின்மை, பிறிது இன்மை இன்மையா வையாது உலகு.

இதன்பொருள்
இன்மையுள் இன்மை அறிவின்மை= ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது, அறிவில்லாமை; பிறிதின்மை இன்மையா வையாது உலகு= மற்றைப் பொருள் இல்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார்.
உரைவிளக்கம்
'அறிவு' என்பது, ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின் அதனை 'இன்மையுள் இன்மை' என்றும், நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும், அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனால் புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.

குறள் 842 (அறிவிலான் ) தொகு

அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது ( ) அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்

மில்லை பெறுவான் றவம். (02) இல்லை பெறுவான் தவம்.

தொடரமைப்பு: அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல் பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை.

இதன்பொருள்
அறிவுடையான் நெஞ்சு உவந்து ஈதல்= புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை= அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை.
உரை விளக்கம்
ஒரோவழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் புல்லறிவாளரும் நல்வினை செய்ப என்பார்க்குப் பெறுவான் வீழ்பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர் எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. இதனால் அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தல் அறியாமை கூறப்பட்டது.

குறள் 843 (அறிவிலார் ) தொகு

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை ( ) அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்குஞ் செய்த லரிது. (03) செறுவார்க்கும் செய்தல் அரிது.

தொடரமைப்பு: அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை, செறுவார்க்கும் செய்தல் அரிது.

இதன்பொருள்
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை= புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது= அது செய்தற்கு உரியராய தம்பகைவர்க்கும் செய்தல் அரிது.
உரை விளக்கம்
பகைவர் தாம் அறிந்தது ஒன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும் எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் 'செய்தல் அரிது' என்றார். இதனால், அவர் தம்மாட்டும் தீயன செய்தல் அறிவர் என்பது கூறப்பட்டது.

குறள் 844 (வெண்மை ) தொகு

வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை ( ) வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை

யுடையம்யா மென்னுஞ் செருக்கு. (04) உடையம் யாம் என்னும் செருக்கு.

தொடரமைப்பு: வெண்மை எனப்படுவது யாது எனின், யாம் ஒண்மை உடையம் எனும் செருக்கு.

இதன்பொருள்
வெண்மை எனப்படுவது யாது எனின்= புலலறிவுடைமையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்;

யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு= அது தம்மைத்தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்குமதிக்கும் மயக்கம்.

உரை விளக்கம்
வெண்மையாவது, அறிவு முதிராமை. ஒண்மையெனக் காரியப்பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும், அவ்வாறு மதித்தலான் மயக்கம் என்றார்.

குறள் 845 (கல்லாத ) தொகு

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற () கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற

வல்லதூஉ மையந் தரும். (05) வல்லதூஉம் ஐயம் தரும்.

தொடரமைப்பு: கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும்.

இதன்பொருள்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல்= புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக்கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும்= கசடறக் கற்றதொரு நூலுண்டாயின், அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.
உரை விளக்கம்
'வல்லது' என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. உண்டாயின் என்பது அவாய்நிலையான் வந்தது. 'ஐயம்' அதுவல்லர் என்பதூஉம், இவ்வாறுகொல்லோ என்பது.

குறள் 846 (அற்றமறைத் ) தொகு

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் ( ) அற்றம் மறைத்தலோ புல் அறிவு தம் வயின்

குற்ற மறையா வழி. (06) குற்றம் மறையா வழி.

தொடரமைப்பு: தம் வயின் குற்றம் மறையா வழி, அற்றம் மறைத்தலோ புல் அறிவு

இதன்பொருள்
தம் வயின் குற்றம் மறையா வழி= புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு= ஆடையால் அற்றம் மறைத்தாராகத் தம்மைக் கருதுதலும் புல்லறிவாம்.
உரை விளக்கம்
குற்றம் மறைத்தலாவது அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றையெல்லாம் மறையாது தாழ்ந்ததொன்றனையே மறைத்து அவ்வளவான் தம்மையும் உலகஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவு என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தல் குற்றம் கூறப்பட்டது.

குறள் 847 (அருமறை ) தொகு

அருமறை சோரு மறிவிலான் செய்யும் ( ) அரு மறை சோரும் அறிவு இலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு. (07) பெரும் மிறை தானே தனக்கு.

தொடரமைப்பு: அருமறை சோரும் அறிவு இலான் தானே தனக்குப் பெரும் மிறை செய்யும்.

இதன்பொருள்
அருமறை சோரும் அறிவிலான்= பெறுதற்குரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும்= அவ்வுறுதி அறியாமையான் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும்.
உரை விளக்கம்
'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. மிக்கவருத்தம் பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி 'அருமறை சோரும்' என்பதற்குப் பிறர் எல்லாம், உள்ளத்துஅடக்கப்படும் எண்ணத்தை வாய்சோர்ந்து பிறர்க்கு உரைக்கும் என்று உரைத்தார்; அது பேணாமை என்னும் பேதைமை ஆவதன்றிப் புல்லறிவாண்மை அன்மை அறிக.

குறள் 848 (ஏவவுஞ் ) தொகு

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் ( ) ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்

போஒ மளவுமோர் நோய். (08) போஒம் அளவும் ஓர் நோய்.

தொடரமைப்பு: ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் நோய்.

இதன்பொருள்
ஏவவும் செய்கலான்= புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லாநிற்கவும் செய்யான்; தான் தேறான்= அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயி்ர் போஒம்அளவும் ஓர்நோய்= அவ்வுயிர் யாக்கையின் நீங்கும் அளவும் நிலத்திற்குப் பொறுத்தற்குஅரியதொரு நோயாம்.
உரை விளக்கம்
உயிர் தான் உணர்தல் தன்மைத்தாய் இருந்தும், நின்ற யாக்கை வயத்தான் மருடல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயி்ர்' என்றும், அதனின் நீங்கியபொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின், 'போஒமளவும்' என்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும்பொறையாய்த் துன்பஞ்செய்தலின் ஒரு 'நோய்' என்றும் கூறினார்.

குறள் 849 (காணாதாற் ) தொகு

காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் ( ) காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்

கண்டானாந் தான்கண்டா வாறு. (09) கண்டானாம் தான் கண்டவாறு.

தொடரமைப்பு: காணாதான் காட்டுவான் தான் காணான், காணாதான் தான் கண்டவாறு கண்டானாம்.

இதன்பொருள்
காணாதான் காட்டுவான் தான் காணான்= தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றுஅறியும் தன்மை இலாதானை, அறிவிக்கப்புகுவான் அவனால் பழிக்கப்பட்டுத் தான் அறியானாய் முடியும்; காணாதான் தான் கண்டவாறு கண்டானாம்= இனி அவ்வறியுந்தன்மை இல்லாதான், கொண்டது விடாமையான், தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்.
உரை விளக்கம்
புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.

குறள் 850 (உலகத்தார் ) தொகு

உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் () உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

தலகையா வைக்கப் படும். () அலகையா வைக்கப் படும்.

தொடரமைப்பு: உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து அலகையா வைக்கப்படும்.

இதன்பொருள்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்= உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத் தன் புல்லறிவான் இல்லையென்று சொல்லுவான்; வையத்து அலகையா வைக்கப்படும்= மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
உரை விளக்கம்
கடவுளும், மறுபிறப்பும், இருவினைப்பயனும் முதலாக அவர் உளவென்பன பலவேனும், சாதிபற்றி உண்டென்பது என்றும், தானே வேண்டிய கூறலால் ஒப்பும், வடிவால் ஒவவாமையும் உடைமையின், தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல் வல்ல 'அலகை' என்றும் கூறினார்.
இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.