திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/115.அலரறிவுறுத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 115.அலர் அறிவுறுத்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, களவொழுக்கம் வேண்டிய தலைமகள் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவாற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும், வரைவாக உடன்போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ் அலரை அவன்றனக்கு அறிவுறுத்தலுமாம். இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலின், நாணுத்துறவுரைத்தலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1141 ( அலரெழ) தொகு

(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர்கூறி வரைவுகடாயவழி அவன் சொல்லியது.)

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் ( ) அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். (01) பலர் அறியார் பாக்கியத்தால்.

தொடரமைப்பு:
அலர் எழ ஆருயிர் நிற்கும், அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார்.

இதன்பொருள்
அலர் எழ ஆருயிர் நிற்கும்= மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராய் எழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றது போன்று நிலைபெறும்;
அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார்= அந்நிலைபேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
உரைவிளக்கம்
அல்லகுறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தம் எல்லாம் தோன்ற அரியவுயிர் என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றதென்பான் 'அலரெழ ஆருயிர் நிற்கும்' என்றும், பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர், ஒழியவே ஆருயிர் போகும் ஆகலான், அவர் அறியாது ஒழிகின்றது தெய்வத்தான் என்றும் கூறினான். முற்றும்மை விகாரத்தான் தொக்கது.

குறள் 1142 (மலரன்ன ) தொகு

(இதுவுமது)

மலரன்ன கண்ணா ளருமை யறியா ( ) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

தலரெமக் கீந்ததிவ் வூர். (02) அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர்.

தொடரமைப்பு:
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது, இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது.

இதன்பொருள்
மலர் அன்ன கண்ணாள் அருமையறியாது= மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது;
இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது= இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர்கூறலை எமக்கு உபகரித்தது.
உரை விளக்கம்
'அருமை' அல்லகுறிப்பாட்டானும், இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான் தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவிபற்றி 'இவ்வூர்' என்றான்.

குறள் 1143 ( உறாஅதோ) தொகு

(இதுவுமது)

உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் ( ) உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (03) பெறாஅது பெற்று அன்ன நீர்த்து.

தொடரமைப்பு:
ஊர் அறிந்த கௌவை உறாஅதோ, அதனைப் பெறாஅது பெற்று அன்ன நீர்த்து.

இதன்பொருள்
ஊர் அறிந்த கௌவை உறாதோ= எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவது ஒன்று அன்றோ;
அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து= அது கேட்ட என் மனம், அக்கூட்டத்தைப் பெறாது இருந்தே பெற்றாற் போலும் நீர்மை உடைத்தாகலான்.
உரை விளக்கம்
'பெற்றன்ன' நீர்மை- பெற்றவழி உளதாம் இன்பம்போலும் இன்பம் உடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற மனம் என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.

குறள் 1144 (கவ்வையாற் ) தொகு

(இதுவுமது)

கவ்வையாற் கவவிது காம மதுவின்றேற் ( ) கவ்வையால் கவ்விது காமம் அது இன்றேல்

றவ்வென்னுந் தன்மை யிழந்து. (04) தவ் என்னும் தன்மை இழந்து.

தொடரமைப்பு: காமம் கவ்வையால் கவ்விது, அது இன்றேல் தன்மை இழந்து தவ் என்னும்.

இதன்பொருள்
காமம் கவ்வையால் கவ்விது= என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை உடைத்தாயிற்று;
அது இன்றேல் தன்மை இழந்து தவ் என்னும்= அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து சுருங்கும்.
உரை விளக்கம்
அலர்தல்- மேன்மேல் மிகுதல். செவ்வை உடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு- இன்பம் பயத்தல். தவ்வென்னும் என்பது, குறிப்புமொழி. "நூல்கால் யாத்த மாலை வெண்குடை/ தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்ப" (நெடுநல்வாடை, அடி 184-185) என்புழியும் அது.

குறள் 1145 (களித்தொறுங் ) தொகு

(இதுவுமது)

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் () களித்தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்

வெளிப்படுந் தோறு மினிது. (05) வெளிப்படும் தோறும் இனிது.

தொடரமைப்பு:
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந்தோறும் இனிது.

இதன்பொருள்
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று= கள்உண்பார்க்குக் களிக்குந்தொறும் கள்ளுண்டல் இனிதாமாறுபோல;
காமம் வெளிப்படுந்தோறும் இனிது= எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகாநின்றது.
உரை விளக்கம்
வேட்கப்பட்டற்றால் என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கைமிகுதியால், அலரும் இன்பம்செய்யாநின்றது என்பதாம்.

குறள் 1146 (கண்டதுமன் ) தொகு

(இடையீடுகளானும் அல்லகுறியானும் தலைமகனை எய்தப்பெறாத் தலைமகள் அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலர் அறிவுறீஇ வரைவு கடாயது.)

கண்டது மன்னு மொருநா லலர்மன்னுந் ( ) கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று. (06) திங்களைப் பாம்பு கொண்டு அற்று.

தொடரமைப்பு:
கண்டது ஒருநாள், அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டு அற்று.

இதன்பொருள்
கண்டது ஒருநாள்= யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே;
அலர் மன்னும் திங்களைப் பாம்புகொண்டற்று= அதனின் ஆய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போன்று உலகெங்கும் பரந்தது.
உரை விளக்கம்
காரியத்தைக் காரணமாக உபசரித்துப் 'பாம்புகொண்டற்று' என்றாள். இருவழியும் 'மன்'னும் 'உம்'மையும் அசைநிலை. காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும் என்பதாம்.

குறள் 1147 (ஊரவர் ) தொகு

(வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும், அன்னைசொல்லும் நோக்கி ஆற்றல்வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.)

ஊரவர் கௌவை எருவாக வன்னைசொன் ( ) ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்

னீராக நீளுமிந் நோய். (07) நீர் ஆக நீளும் இந் நோய்.

தொடரமைப்பு:
இந்நோய், ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்.

இதன்பொருள்
இந்நோய்= இக்காம நோயாகிய பயிர்;
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்= இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அதுகேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.
உரை விளக்கம்
'ஊரவர் என்பது, தொழிலான் ஆண்ஒழித்துநின்றது. ஏகதேச உருவகம். சுருங்குவதற்கு ஏதுவாவன தாமே, விரிதற்கு ஏதுவாகாநின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.

குறள் 1148 (நெய்யாலெரி ) தொகு

(இதுவுமது)

நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற் ( ) நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையால்

காம நுதுப்பே மெனல். (08) காமம் நுதுப்பேம் எனல்.

தொடரமைப்பு:
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல், நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்று.

இதன்பொருள்
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்= ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்;
நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று= நெய்யால் எரியை அவித்தும் என்று கருதுதலோடு ஒக்கும்.
உரை விளக்கம்
மூன்றன் உருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.

குறள் 1149 (அலர்நாண ) தொகு

(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தான் ஆதல் அறிந்து அலர் அஞ்சி ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.)

அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார் ( ) அலர் நாண் ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை. (09) பலர் நாண நீத்தக் கடை.

தொடரமைப்பு:
அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை, அலர் நாண ஒல்வதோ.

இதன்பொருள்
அஞ்சல் ஒம்பு என்றார் பலர்நாண நீத்தக்கடை= தம்மை எதிர்ப்பட்டஞான்று நின்னிற்பிரியேன் அஞ்சல் ஓ்ம்பு என்றவர்தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின்;
அலர் நாண ஒல்வதோ= நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக்கூடுமோ, கூடாது.
உரை விளக்கம்
'நாண' என்னும் வினையெச்சம், 'ஒல்வது' என்னும் தொழிற்பெயருள், ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. கண்டார் நாணும் நிலைமயமாய யாம், நாணுதல் யாண்டையது என்பதாம்.

குறள் 1150 (தாம்வேண்டி ) தொகு

(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலர் அறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.)

தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங் () தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்

கௌவை யெடுக்குமிவ் வூர். (10) கௌவை எடுக்கும் இவ் ஊர்.

தொடரமைப்பு:
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடு்க்கும், காதலர்தாம் வேண்டின் நல்குவர்.

இதன்பொருள்
யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும்= உடன்போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர் தானே எடாநின்றது;
காதலர்தாம் வேண்டின் நல்குவர்= இனிக் காதலர்தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.
உரை விளக்கம்
எ்சசவும்மை விகாரத்தான் தொக்கது. நங்கட் காதலுடைமையின் மறார் என்பது தோன்றக் காதலர் என்றாள்.
இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.

களவியல் முற்றிற்று தொகு