திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/105.நல்குரவு

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 105. நல்குரவு தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, நுகரப்படுவன யாவும் இல்லாமை.

குறள் 1041 ( இன்மையினின்) தொகு

இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி () இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்

னின்மையே யின்னா தது. (01) இன்மையே இன்னாதது.

தொடரமைப்பு: இன்மையின் இன்னாதது யாது எனின், இன்மையின் இன்னாதது இன்மையே.

இதன் பொருள்
இன்மையின் இன்னாதது யாது எனின்= ஒருவனுக்கு வறுமைபோல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே= வறுமைபோல இன்னாதது வறுமையே பிறிதில்லை.
உரை விளக்கம்
இன்னாதது- துன்பம் செய்வது. ஒப்பதில்லை எனவே, மிக்கது இன்மை சொல்லவேண்டா வாயிற்று.

குறள் 1042 (இன்மையென ) தொகு

இன்மை யெனவொரு பாவி மறுமையு () இன்மை என ஒரு பாவி மறுமையும்

மிம்மையு மின்றி வரும். (02) இம்மையும் இன்றி வரும்.

தொடரமைப்பு: இன்மை என ஒரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றி வரும்.

இதன் பொருள்
இன்மை என ஒரு பாவி= வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும்= ஒருவனுழை வருங்கால், அவனுக்கு மறுமை இன்பமும், இம்மையின்பமும் இல்லையாக வரும்.
உரை விளக்கம்
'இன்மை என ஒருபாவி' என்பதற்கு மேல் "அழுக்கா றெனஒரு பாவி"1 என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும், துவ்வாமையானும் அவை இலவாயின. இன்றி விடும் எனப் பாடம் ஓதிப் பாவியால்என விரித்துரைப்பாரும் உளர்.2
1. குறள், 168.திருக்குறள் அறத்துப்பால் 17.அழுக்காறாமை
2. மணக்குடவர்.

குறள் 1043 ( தொல்வரவுந்) தொகு

தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக () தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குர வென்னு நசை. (03) நல்குரவு என்னும் நசை.

தொடரமைப்பு: நல்குரவு என்னும் நசை, தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும்.

இதன் பொருள்
நல்குரவு என்னும் நசை= நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும்= தன்னாற் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும், அதற்கேற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்.
உரை விளக்கம்
நசை இல்வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியில் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும், இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். "குடிப்பிறப் பழி்க்கும் விழுப்பம் கொல்லும்"3 என்றார் பிறரும். தோலாவது, "இழுமென் மொழியால் விழுமியது நுவறல்"4 என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு உடம்பு என்று உரைப்பாரும் உளர்.5 அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கோர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.
3. மணிமேகலை- பாத்திரம்பெற்ற காதை, 76.
4. தொல்காப்பியம்-பொருளதிகாரம்: செய்யுளியல், 239.
5. மணக்குடவர்.

குறள் 1044 (இற்பிறந்தார்) தொகு

இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த () இல் பிறந்தார் கண்ணேயும் இன்மை இளி வந்த

சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (04) சொல் பிறக்கும் சோர்வு தரும்.

தொடரமைப்பு: இல் பிறந்தார் கண்ணேயும், இளிவந்த சொல் பிறக்கும் சோர்வு இன்மை தரும்.

இதன் பொருள்
இற்பிறந்தார் கண்ணேயும்= இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும்= அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
உரை விளக்கம்
சிறப்பும்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. 'இளிவந்த சொல்'- இளிவருதற்கு ஏதுவாகிய சொல்; அஃதாவது, எமக்கு ஈயவேண்டும் என்றல். 'சோர்வு', தாம் உறுகின்ற துன்பமிகுதி பற்றி, ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்லுவதாக நினைத்தல்.

குறள் 1045 (நல்குரவென்னு ) தொகு

நல்குர வென்னு மிடு்ம்பையுட் பல்குரைத் () நல்குரவு என்னும இடும்பையு்ள் பல் குரைத்

துன்பங்கள் சென்று படும். (05) துன்பங்கள் சென்று படும்.

தொடரமைப்பு:நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

இதன் பொருள்
நல்குரவு என்னும் இடும்பையுள்= நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல்குரைத் துன்பங்கள் சென்று படும்= பல் துன்பங்களும் வந்து விளையும்.
உரை விளக்கம்
'குரை' இசைநிறை. செலவு, விரைவின்கண் வந்தது. துன்பமும் தானும் உடனே நிகழ்தலின், நல்குரவைத் துன்பம் ஆக்கியும், அத்துன்பம் அடியாகச் செல்வர் கடைநோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டான் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தோறும் வேறு வேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார்.
இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.

குறள் 1046(நற்பொருள் ) தொகு

நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் () நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும். (06) சொல் பொருள் சோர்வு படும்.

தொடரமைப்பு: நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வுபடும்.

இதன் பொருள்
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும்= மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்= நல்கூர்ந்தார் சொல்லும் சொற்பொருள் இன்மையைத் தலைப்படும்.
உரை விளக்கம்
பொருளின்மையைத் தலைப்படுதலாவது, யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின், கண்ணோடி இவர் உறுகின்ற குறைமுடிக்க வேண்டும் என்றுஅஞ்சி, யாவரும் கேளாமையின் பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.

குறள் 1047 (அறஞ்சாரா ) தொகு

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் () அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

பிறன்போல நோக்கப் படும். (07) பிறன் போல நோக்கப் படும்.

தொடரமைப்பு: அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும்.

இதன் பொருள்
அறம் சாரா நல்குரவு= அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும்= தன்னை ஈன்ற தாயானும், பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
உரை விளக்கம்
அறத்தோடு கூடாமை,காரண காரியங்களுள் ஒன்றாய் இயையாமை. நல்குரவு ஆகுபெயர். சிறப்பும்மை அவளது இயற்கை அன்புடைமை விளக்கிநின்றது. கொள்வது இன்றாதலே அன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பார் என்பதாம்.

குறள் 1048 ( இன்றும்வரு) தொகு

இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் () இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு. (08) கொன்றது போலும் நிரப்பு.


தொடரமைப்பு: நெருநலும் கொன்றது போலும் நிரப்பு, இன்றும் வருவது கொல்லோ.

இதன் பொருள்
நெருநலும் கொன்றது போலும் நிரப்பு= நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ = இன்றும் என்பால் வரக்கடவதோ வந்தால் இனி யாது செய்வேன்?
உரை விளக்கம்
அவ் இன்னாதனவாவன: மேற் சொல்லிய துன்பங்கள்.7 நெருநல் மிகவருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.
7. குறள், 1045

குறள் 1049 (நெருப்பினுட் ) தொகு

நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள் () நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றுங் கண்பா டரிது. (09) யாது ஒன்றும் கண் பாடு அரிது.

தொடரமைப்பு: நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.

இதன் பொருள்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்= மந்திர மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண் பாடு அரிது= நிரப்பு வந்துழி யாதொன்றாமனும் உறக்கமில்லை.
உரை விளக்கம்
நெருப்பினும் நிரப்புக் கொடிது என்றவாறு ஆயிற்று. இதுவும் அவன் கூற்று.
இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.

குறள் 1050 (துப்புரவில்லார் ) தொகு

துப்புர வில்லார் துவரத் துறவாமை () துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

யுப்பிற்குங் காடிக்குங் கூற்று. (10) உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

தொடரமைப்பு: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை, உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

இதன் பொருள்
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை= நுகரப்படும் பொருள்கள் இல்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாது ஒழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று= பிறர் இல்லன் உளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
உரை விளக்கம்
மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல், சுற்றம் தானே விட்டமையின், ஒருவாற்றான் துறந்தார் ஆயினார் நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப்பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் 'கூற்று' என்றார். இனி முற்றத் துறத்தலாவது, துப்புரவில்லாமையின் ஒருவாற்றான் துறந்தார் ஆயினார், பின்னவற்றை மனத்தான் துறவாமை என்று உரைப்பாரும் உளர்.8
இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.
8. மணக்குடவர்.