திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/63.இடுக்கணழியாமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- இயல் 01. அரசியல்

தொகு

அதிகாரம் 63. இடுக்கண் அழியாமை

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகார முன்னுரை:

அஃதாவது, வினையின்கண் முயல்வான், தெய்வத்தானாக, பொருள்இன்மையானாக, மெய்வருத்தத்தானாகத் தனக்கு இடுக்கண் வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 621 (இடுக்கண்)

தொகு

இடுக்கண் வருங்கா னகுக வதனைஇடுக்கண் வருங்கால் நகுக அதனை

'யடுத்தூர்வ தஃதொப்ப தில். (01)'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

இதன்பொருள்
இடுக்கண் வருங்கால் நகுக= ஒருவன் வினையான் தனக்கு இடுக்கண் வருமிடத்து அதற்கு அழியாது உள்மகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்= அவ் இடுக்கணை மேன்மேல் அடரவல்லது அம்மகிழ்ச்சி போல்வது பிறிது இல்லையாகலான்.
உரைவிளக்கம்
வினை இனிது முடிந்துழி, நிகழற்பாலதாய மகிழ்ச்சியை அதற்கிடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி மனஎழுச்சியான் அதனைத் தள்ளி அக்குறைமுடிக்கும் ஆற்றல் உடையனாம் ஆகலின், 'அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பதி்ல்' என்றார்.

குறள் 622 (வெள்ளத்தனைய)

தொகு

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையாவெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான்

'னுள்ளத்தி னுள்ளக் கெடும். (02)'உள்ளத்தின் உள்ளக் கெடும்.

இதன்பொருள்
வெள்ளத்து அனைய இடும்பை= வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்= அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
உரைவிளக்கம்
'இடும்பை' யாவது, உள்ளத்து ஒருகோட்பாடே அன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக் கொள்ள நீங்கும் எனவும் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்உபாயத்து எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும், ஊழினானாய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.

குறள் 623 (இடும்பைக்)

தொகு

இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

'கிடும்பை படாஅ தவர். (03)'இடும்பை படாஅதவர்.

இதன்பொருள்
இடும்பைக்கு இடும்பை படாதவர்= வினைசெய்யுங்கால் அதற்கிடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்= அத்துன்பந்தனக்கு தாம் துன்பம் விளைப்பர்.
உரைவிளக்கம்
வருந்துதல் இளைத்து விட நினைத்தல். மனத்திட்பம் உடையராய் விடாது முயலவே, வினை முற்றுப் பெற்றுப் பயன்படும்; படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கிடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.

குறள் 624 (மடுத்த)

தொகு

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்றமடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற

'விடுக்க ணிடர்ப்பாடு டைத்து. (04)'இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

இதன்பொருள்
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்= விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும் சகடம் ஈர்க்கும் பகடுபோல வினையை எடுத்துக்கொண்டு உய்க்கவல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து= வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
உரைவிளக்கம்
'மடுத்தவாயெல்லாம்' என்பது, பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்றுநிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு' மருங்கு ஒற்றியும், மூக்கூன்றியும், தாள்தவழ்ந்தும் அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய்வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார், 'பகடன்னான்' என்றார்.

குறள் 625 (அடுக்கி)

தொகு

அடுக்கி வரினு மழிவிலா னுற்ற// அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற

'விடுக்க ணிடுக்கட் படும். (05)'// இடுக்கண் இடுக்கண் படும்.

இதன்பொருள்
அடுக்கி வரினும்= இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட்படும்= தன் உள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
உரைவிளக்கம்
ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க அடுக்கிவரினும் என்றார். அழிவு என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது.
இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.

குறள் 626 (அற்றேமென்)

தொகு

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேம் என்று

'றோம்புத றேற்றா தவர். (06)'ஓம்புதல் தேற்றாதவர்.

இதன்பொருள்
அற்றேம் என்று அல்லல் படுபவோ = வறுமைக்காலத்து யாம் வறியம் ஆயினேம் என்று மனத்தான் துயர் உழப்பாரோ? ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர்= செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை அறியாதார்.
உரைவிளக்கம்
பெற்றவழி இவறாமை நோக்கி, அற்றவழியும் அப்பகுதி விடாதாகலின் அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருள் இன்மையான் ஆயதற்கு அழியாமையும், அதற்கு உபாயமும் கூறப்பட்டன.

குறள் 627 (இலக்கமுடம்)

தொகு

இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதா மேல். (07)/B>கையாறாக் கொள்ளாதாம் மேல்.

இதன்பொருள்
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று= நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்= தம்மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
உரைவிளக்கம்
ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப்பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒருசொல்; இதற்கு ஒழுக்கநெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக்கொள்வர் என்பது குறிப்பெச்சம்.

குறள் 628 (இன்பம்விழை)

தொகு

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்|| இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்

'றுன்ப முறுத லிலன்.' || துன்பம் உறுதல் இலன்.

இதன்பொருள்
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்= தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்துதல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்= தன் முயற்சியான் துன்பம் உறான்.
உரைவிளக்கம்
இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும், துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் 'துன்பம் உறுதல்இலன்' என்றார்.

குறள் 629 (இன்பத்துளின்ப)

தொகு

இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்|| இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

'டுன்ப முறுத லிலன். (09)'|| துன்பம் உறுதல் இலன்.

இதன்பொருள்
இன்பத்துள் இன்பம் விழையாதான்= வினையால் தனக்கின்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்= துன்பம் வந்துழியும், அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
உரைவிளக்கம்
துன்பம் முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒருதன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.

குறள் 630 (இன்னாமை)

தொகு

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்

'னொன்னார் விழையுஞ் சிறப்பு. (10)'ஒன்னார் விழையும் சிறப்பு.

இதன்பொருள்
இன்னாமை இன்பம் எனக்கொளின்= ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பம்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும்= அதனான் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய கவர்ச்சி உண்டாம்.
உரைவிளக்கம்
துன்பந்தானும், உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவின்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தேவிடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து.
இவை நான்கு பாட்டானும் மெய் வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும், அதற்கு உபாயமுங் கூறப்பட்டன.