திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/100.பண்புடைமை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்
தொகுபரிமேலழகர் உரை
தொகுஅதிகாரம் 100.
தொகு- அதிகார முன்னுரை
- அஃதாவது, பெருமை, சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே, எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல். "பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்"Ĵ என்றார் பிறரும். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
- Ĵ. கலித்தொகை, 133.
குறள் 991 (எண்பதத்தா )
தொகுஎண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் () எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு. (01) பண்பு உடைமை என்னும் வழக்கு.
தொடரமைப்பு: யார் மாட்டும் எண் பதத்தால், பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப.
- இதன்பொருள்
- யார்மாட்டும் எண் பதத்தால்= யாவர்மாட்டும் எளிய செவ்வியர் ஆதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப= அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்.
- உரை விளக்கம்
- குணங்களான் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண் பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் நன்னெறியாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர்மேல் வைத்தும் கூறினார்.
குறள் 992(அன்புடைமை )
தொகுஅன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் () அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் இவ் இரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு. (02) பண்பு உடைமை என்னும் வழக்கு.
தொடரமைப்பு: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும், பண்புடைமை என்னும் வழக்கு.
- இதன்பொருள்
- அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்= பிறர்மேல் அன்புடையன் ஆதலும், உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்புடைமை என்னும் வழக்கு= ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.
- உரை விளக்கம்
- அமைதல்- ஒத்துவருதல். குடிப்பிறத்தல் என்பது, பிறந்தார் செயலை. தனித்தவழி ஆகாது, இரண்டும் கூடியவழியே ஆவது என்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன.
- இவை இரண்டு பாட்டானும் பண்புடையர் ஆதல் காரணம் கூறப்பட்டது.
குறள் 993 (உறுப்பொத்த )
தொகுஉறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க () உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு. (03) பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.
தொடரமைப்பு: உறுப்பொத்தல் மக்கள் ஒப்பு அன்று, ஒப்பதாம் ஒப்பு வெறு்த்தக்க பண்பு ஒத்தல்.
- இதன்பொருள்
- உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று= செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவது அன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல்= இனிப் பொருந்துவதாய ஒப்பாவது, செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
- உரை விளக்கம்
- வடநூலார் அங்கம் என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல்இல்லா உடம்பு ஒத்தலன்று, வேறன்றி நிலையுதல்உடைய பண்பு ஒத்தல் ஆகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினை உடையன் ஆக என்பதாம்.
குறள் 994 ( நயனொடு)
தொகுநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் () நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்புபா ராட்டு முலகு. (04) பண்பு பாராட்டும் உலகு.
தொடரமைப்பு: நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு, உலகு பாராட்டும்.
- இதன்பொருள்
- நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு= நீதியையும் அறத்தையும் விரும்புதலான், பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும்= உலகத்தார் கொண்டாடாநிற்பர்.
- உரை விளக்கம்
- 'புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப்பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும், பயனுடைமையும், பண்பு காரணமாக வந்தமையின் அதனைப் 'பாராட்டும்' என்றார்.
குறள் 995 (நகையுள்ளு )
தொகுநகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் () நகை உள்ளும் இன்னாது இகழ்ச்சி பகை உள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (05) பண்பு உள பாடு அறிவார் மாட்டு.
தொடரமைப்பு: இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது, பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள.
- இதன்பொருள்
- இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது= தன்னை இகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள= ஆகலான், பிறர் பாடு அறிந்து ஒழுகுவார்மாட்டுப் பகைமை உள்வழியும், அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
- உரை விளக்கம்
- 'பாடறிவார்' எனவே, அவ்வின்னாமை அறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார், இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம், இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரும் ஆயினார்.
குறள் 996(பண்புடையார்ப் )
தொகுபண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன் () பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (06) மண் புக்கு மாய்வது மன்.
தொடரமைப்பு: பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு, இன்றேல் அது மண் புக்கு மாய்வது மன்.
- இதன்பொருள்
- பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு= பண்பு உடையார்கண்ணே படுதலால், உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாராநின்றது; இன்றேல், அது மண்புக்கு மாய்வது மன்= ஆண்டுப் படுதல் இல்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.
- உரை விளக்கம்
- பட என்பது திரிந்துநின்றது. 'உலகு' ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பின்மையின், ஓர்சார்பும் இன்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.
- இவை நான்கு பாட்டானும் அதனை உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.
குறள் 997 (அரம்போலு )
தொகுஅரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் () அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். (07) மக்கள் பண்பு இல்லாதவர்.
தொடரமைப்பு: மக்கட்பண்பு இல்லாதவர், அரம்போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்.
- இதன்பொருள்
- மக்கட்பண்பு இல்லாதவர்= நன்மக்கட்கே உரிய பண்பு இல்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும்= அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரே ஆயினும்; மரம் போல்வர்= ஓரறிவிற்றாய மரத்தினை ஒப்பர்.
- உரை விளக்கம்
- 'அரம்' ஆகுபெயர். ஓரறிவு ஊற்றினை அறிதல். உவமை இரண்டனுள், முன்னது தான் மடிதலின்றித் தன்னையு்ற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில்பற்றி வந்தது. ஏனையது விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ் விசேடஅறிவிற்குப் பயனாய மக்கட்பண்பு இன்மையின், அதுதானும் இல்லையென்பது ஆயிற்று.
குறள் 998 (நண்பாற்றா )
தொகுநண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் () நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை. (08) பண்பு ஆற்றார் ஆதல் கடை.
தொடரமைப்பு: நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும், பண்பு ஆற்றாராதல் கடை.
- இதன்பொருள்
- நண்பு ஆற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்= தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்து ஒழுகுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை= தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க்கு இழுக்காம்.
- உரை விளக்கம்
- 'நயம்'- ஈரம். சிறப்பும்மை, அவர் பண்பாற்றாமைக்கு இடனாதல் தோன்றநின்றது. அதனைச் செய்யின் தாமும் அவர்தன்மையர் ஆவர் என்பார், 'கடை' என்றார்.
குறள் 999(நகல்வல்ல )
தொகுநகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் () நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (09) பகலும்பாற் பட்டன்று இருள்.
தொடரமைப்பு: நகல் வல்லர் அல்லார்க்கு, மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று.
- இதன்பொருள்
- நகல் வல்லர் அல்லார்க்கு= பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உள் மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பால் பட்டன்று= மிகவும் பெரிய ஞாலம், இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்தாம்.
- உரை விளக்கம்
- எல்லாரோடும் கலந்து அறியப் பெறாமையின், பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், உலகம் இருளின்கட் பட்டது என்றார். பாழ்பட்டன் றிருள் என்று பாடம் ஓதி, இருள் நீங்கிற்றன்று என்று உரைப்பாரும் உளர்.
குறள் 1000 (பண்பிலான் )
தொகுபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பாற் ()|| பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று. (10) || கலம் தீமையால் திரிந்து அற்று.
தொடரமைப்பு: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால் கலம் தீமையால் திரிந்தற்று.
- இதன்பொருள்
- பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம்= பண்புஇல்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெருஞ்செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலம் தீமையால் திரிந்தற்று= நல்ல ஆன் பால், ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தது ஆகாது கெட்டாற்போலும்.
- உரை விளக்கம்
- கலத்தீமை என்பது மெலி்ந்து நின்றது. தொழிலுவமம் ஆகலின், பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்றப் 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கோடற்கு ஏற்ற இடன் உடைமை தோன்றப் 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான், வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது.
இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது