திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/52.தெரிந்துவினையாடல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 52. தெரிந்து வினையாடல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை: அஃதாவது, அத்தெளியப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து அவற்றின்கண்ணே ஆளும்திறம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 511 (நன்மையுந்) தொகு

நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்தநன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த

'தன்மையா னாளப் படும். (01)'தன்மையான் ஆளப் படும்.

இதன்பொருள்
நன்மையும் தீமையும் நாடி= அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்தறிந்து; நலம்புரிந்த தன்மையான்= அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினை உடையான்; ஆளப்படும்= பின் அவனாற் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
உரைவிளக்கம்
தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண்வைத்தவழி, அதன்கண் ஆம்

செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினன் ஆதல்பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பது ஆயிற்று. 'புரிந்த' என்ற இறந்தகாலத்தான், முன்னுரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.

குறள் 512 (வாரிபெருக்கி) தொகு

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைவாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை

'யாராய்வான் செய்க வினை. (02)'ஆராய்வான் செய்க வினை.

இதன்பொருள்
வாரி பெருக்கி= பொருள் வரு வாயில்களை விரியச் செய்து; வளம்படுத்து= அப்பொருளாற் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான்= அவ்வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினைசெய்க= அரசனுக்கு வினைசெய்க.
உரைவிளக்கம்
வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் 'இயற்றலும்' (குறள் 385) என்புழி உரைத்தனவும், உழவு பசுக்காவல் வாணிகம் என்னும் வார்த்தையுமாம். (வார்த்தை- தொழில்) செல்வங்களாவன: ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. 'இடையூறு'களாவன: அரசன், வினைசெய்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.

குறள் 513 (அன்பறிவு) தொகு

அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்குஅன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இந்நான்கும்

'நன்குடையான் கட்டே தெளிவு. (03)'நன்கு உடையான் கட்டே தெளிவு.

இதன்பொருள்
அன்பு= அரசன்மாட்டு அன்பும்; அறிவு= அவனுக்காவன அறியும் அறிவும்; தேற்றம்= அவை செய்தற்கண் கலங்காமையும்; அவாவின்மை= அவற்றாற் பொருள் கையுற்றவழி அதன்மேல் அவா இன்மையுமாகிய; இந்நான்கும் உடையான்கட்டே தெளிவு= இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
உரைவிளக்கம்
'இந்நான்கும் நன்குஉடைமை' இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவது இல்லை என்று அரசன் தெளிதற்கு ஏதுவாகலின், அதன் அதன் பிறப்பிடன் ஆக்கிக் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் ஆடற்கு (ஆடற்கு உரியான்-ஆளுதற்கு உரியவன்)உரியானது இலக்கணம் கூறப்பட்டது.

குறள் 514 (எனைவகையாற்) தொகு

எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்எனை வகையான் தேறியக் கண்ணும் வினை வகையான்

'வேறாகு மாந்தர் பலர். (04)'வேறு ஆகும் மாந்தர் பலர்.

இதன்பொருள்
எனை வகையான் தேறியக் கண்ணும்= எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்= அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
உரைவிளக்கம்
கட்டியங்காரன் (சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத்தலைவன் சீவகன். அவனுடைய தந்தை சச்சந்தன், அம் மன்னனின் தலைமை அமைச்சன் கட்டியங்காரன்.)போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவது அல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகு மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்குமுன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப் படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒருவகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.

குறள் 515 (அறிந்தாற்றிச்) தொகு

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

'சிறந்தானென் றேவற்பாற் றன்று. (05)'சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.

இதன்பொருள்
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்= செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானை அல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று= வினைதான் இவன்நம்மாட்டு அன்புடையன் என்று பிறன்ஒருவனை ஏவும் இயல்புடைத்துஅன்று.
உரைவிளக்கம்
'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது, அன்பான் முடியாது என இதனால் வினையினது இயல்பு கூறப்பட்டது.

குறள் 516 (செய்வானை) தொகு

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோசெய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு

'டெய்த வுணர்ந்து செயல். (06)'எய்த உணர்ந்து செயல்.

இதன்பொருள்
செய்வானை நாடி= முதற்கண்ணே செய்வானது இலக்கண்த்தை ஆராய்ந்து; வினை நாடி= பின்செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தோடு எய்த உணர்ந்து செயல்= பின் அவனையும் அதனையும், காலத்தொடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
உரைவிளக்கம்
செய்வானது இலக்கணமும்♣, வினையினது இயல்பும்¶ மேலே கூறப்பட்டன. காலத்தோடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினைமுடியும் என்று கூ்ட்டி உணர்தல்.
திருக்குறள், 511, 512, 513.
திருக்குறள், 515.

குறள் 517 (இதனையிதனா) தொகு

இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

'ததனை யவன்கண் விடல். (07)'அதனை அவன்கண் விடல்.

இதன்பொருள்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து= இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல்= மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
உரைவிளக்கம்
கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினைமுதலும், கருவியும், வினையும் தம்முள் இயைதலாவது, ஓர் ஒன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல் அதற்கு அவனை உரியன் ஆக்குதல்.

குறள் 518 (வினைக்குரிமை) தொகு

வினைக்குரிமை நாடிய பின்றை யவனைவினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை

'யதற்குரிய னாகச் செயல். (08)'அதற்கு உரியனாகச் செயல்.

இதன்பொருள்
வினைக்கு உரிமை நாடிய பின்றை= ஒருவனை அரசன், தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்; அவனை அதற்கு உரியனாகச் செயல்= பின் அவனை அதற்கு உரியனாக உயரச் செய்க.
உரைவிளக்கம்
உயரச்செய்தலாவது, அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன் ஆக்குதல். அதுசெய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.

குறள் 519 (வினைக்கண்) தொகு

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகவினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக

'நினைப்பானை நீங்குந் திரு. (09)'நினைப்பானை நீங்கும் திரு.

இதன்பொருள்
வினைக்கண் வினை உடையான் கேண்மை= எப்பொழுதும் தன்வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும்= அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.
உரைவிளக்கம்
கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது, தான் பிறனாய் நில்லாது கேளிர் செய்யும் உரிமையெல்லாம் செய்து ஒழுகுதல். அவனை அவமதிப்பாகக்கொண்டு செறக் கருதுமாயின் பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம்; ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து.
இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும்திறம் கூறப்பட்டது.

குறள் 520 (நாடோறு) தொகு

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்

'கோடாமை கோடா துலகு. (10) 'கோடாமை கோடாது உலகு.

இதன்பொருள்
வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது= வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாடோறும் நாடுக= ஆதலான் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.
உரைவிளக்கம்
அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகமெல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.